View Full Version : Tamilnadu - Literature and books
kongutamizhan February 5th, 2012, 07:10 PM Use this thread to discuss the state's contribution to literature and news/reviews of recent/old publications.
Primarily intended for Tamil books, any worthwhile publishing in other languages that originates out of TN are also welcome.
kongutamizhan February 5th, 2012, 07:51 PM Let me begin with Jeyamohan's travelogues which has wealth of documented information available in his site. He named it as அருகர்களின் பாதை (Arugargalin Paadhai). Nice set of info. Given below are the links to all 23 parts that he managed to write so far.
Apart from being a travelogue, it the series of articles also gives excellent insights to the culture and architecture, their commonality, and differences across the country.
Feel free to keep updating the parts as and when he updates it
Part 1 (http://www.jeyamohan.in/?p=23969) - கனககிரி, சிரவண பெலகொலா
Part 2 (http://www.jeyamohan.in/?p=24008) - சந்திரகிரி, தர்மஸ்தலா, ரத்னகிரி
Part 3 (http://www.jeyamohan.in/?p=24073) - மூடுபிதிரி, வேணூர், கர்க்களா, வரங்கா
Part 4 (http://www.jeyamohan.in/?p=24098) - குந்தாதிரி, ஹும்பஜ்
Part 5 (http://www.jeyamohan.in/?p=24126) - ஹங்கல், பனவாசி, லட்சுமேஸ்வர்
Part 6 (http://www.jeyamohan.in/?p=24127) - மூல்குந்த், லக்குண்டி, டம்பால், ஹலசி
Part 7 (http://www.jeyamohan.in/?p=24207) - பெல்காம், கித்ராபூர், கும்போஜ்
Part 8 (http://www.jeyamohan.in/?p=24243) - கோலாப்பூர், நந்திகிரி, கட்ரஜ்
Part 9 (http://www.jeyamohan.in/?p=24254) - கார்லே, ஃபாஜா, ஃபெட்சா
Part 10 (http://www.jeyamohan.in/?p=24272) - லென்யாத்ரி, நானேகட்
Part 11 (http://www.jeyamohan.in/?p=24296) - மகாஸ்ருல், தௌலதாபாத், எல்லோரா
Part 12 (http://www.jeyamohan.in/?p=24331) - எல்லோரா
Part 13 (http://www.jeyamohan.in/?p=24396) - அஜந்தா
Part 14 (http://www.jeyamohan.in/?p=24436) - சூரத், தாபோய்
Part 15 (http://www.jeyamohan.in/?p=24479) - அகமதாபாத்,லோதல்
Part 16 (http://www.jeyamohan.in/?p=24513) - பலிதானா, ஹஸ்தகிரி, தலஜா
Part 17 (http://www.jeyamohan.in/?p=24543) - கிர்நார்
Part 18 (http://www.jeyamohan.in/?p=24580) - டோலாவீரா
Part 19 (http://www.jeyamohan.in/?p=24633) - படான், மேஹ்சானா, மோதேரா
Part 20 (http://www.jeyamohan.in/?p=24655) - தரங்கா, கும்பாரியா
Part 21 (http://www.jeyamohan.in/?p=24672) - அசல்கர், தில்வாரா
Part 22 (http://www.jeyamohan.in/?p=24721) - மிர்பூர், உதய்புர்-நகடா
Part 23 (http://www.jeyamohan.in/?p=24753) - ரணக்பூர்,கும்பல்கர்
kongutamizhan February 6th, 2012, 02:07 AM What's going on among modern tamil literature writers? Rajini oru kadhai sonnadhukkum ivvalavu arasiyala?
http://www.maamallan.com/2012/02/blog-post_04.html
http://idlyvadai.blogspot.com/2012/02/blog-post_06.html
http://idlyvadai.blogspot.com/2012/02/blog-post_05.html
madurakarenda February 6th, 2012, 11:01 AM தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்
அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்
Source : facebook page http://www.facebook.com/tamilarivom
kongutamizhan February 7th, 2012, 03:36 PM ஞானி at exile meeting. Harsh criticism on charu's exile.
சுஜாதா இலக்கியவாதி இல்லையா? He mentioned that too...
8BsUnlpadZ8
satishanu February 7th, 2012, 03:50 PM http://i.imgur.com/up0fk.jpg
பிரமாண்டமான ஓர் அணையைப் பற்றி வந்திருக்கும் சிறு புத்தகம்... சிறப்பான புத்தகம். கம்பம் பகுதியைச் சேர்ந்த கே.எம்.அப்பாஸ் எழுதி இருக்கிறார்.
அரசியல் கட்சிகளின் அறிக்கைகளிலும் பொதுமக்களின் போராட்டங்களிலும் தவிர்க்க முடியாத பிரச்னையாக இன்று இருக்கிறது முல்லைப் பெரியாறு. இந்த அணையை இதுவரை இடிக்க விடாமல் காப்பாற்றிய மனிதர்களில் ஒருவர் கே.எம்.அப்பாஸ். முல்லைப் பெரியாறு அணைக்கும் தமிழ்நாட்டுக்குமான உரிமைகளை, அதற்குரிய அசைக்க முடியாத ஆதாரங்களுடன் தொடர்ந்து பேசிவந்தவர் இவர். தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்கள்தான் முல்லைப் பெரியாறு நீரால் பாசன வளம் பெறும் பகுதிகள். இந்த மாவட்டங்களைச் சேர்ந்த பெரியாறு மற்றும் வைகைப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவராக இருந்த இவர்தான், அணை தொடர்பாக நடந்த அனைத்து வழக்குகளுக்கும் தமிழக அரசுக்கே ஆவணங்களை வழங்கியவர். 2006-ம் ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கொடுத்த மகத்தான தீர்ப்புக்கு இவரது ஆதாரங்கள்தான் அடிப்படையாக அமைந்தன. இந்த தரவுகளை எளிய தமிழில் கேள்வி - பதில் வடிவத்தில் அப்பாஸ் எழுதி இருக்கிறார்.
ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமாக அதை உண்மை ஆக்க முடியும் என்ற பெரிய நம்பிக்கையில் இருக்கிறது கேரளா. அணை உடைந்தால் மூன்று மாவட்டங்களுக்குச் சேதம் ஏற்படும், 999 ஆண்டு ஒப்பந்தம் என்பதே போலியானது, நீர்மட்டத்தை உயர்த்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், 136 அடிக்கு மேல் தண்ணீர் மட்டத்தை உயர்த்தினால் வனம் அழிந்து விடும்... என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லப்படும் அனைத்தையும் ஆழமாக மறுக்கிறார் அப்பாஸ். 'முல்லைப் பெரியாறு அணை உடைந்தால், அதனுடைய நீர் நேரடியாக இரண்டு மலைகளுக்கு இடையே சுமார் 48 கி.மீட்டர் தூரம் ஓடி முல்லைப் பெரியாறு அணையைவிட (15 டி.எம்.சி.) பல மடங்கு பெரிய பரப்பளவு உள்ள இடுக்கி அணையில் (70 டி.எம்.சி.) யாருக்கும் ஆபத்து இன்றிக் கலந்து விடும்’ என்று சொல்லி அனைத்து ஆபத்துக்களையும் மறுக்கிறார் அப்பாஸ்.
தமிழகத்தின் நியாயம் பேச மறுக்கும் சிலர், 'இரண்டு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ என்று அறிவுரை சொல்வதை அப்பாஸ் நிராகரிக்கிறார். 'கடந்த 27 ஆண்டுகளில் தமிழக அரசு, கேரளாவுக்கு 32 கடிதங்கள் எழுதி விட்டது. தமிழக அமைச்சர்கள் திருவனந்தபுரத்தில் நான்கு முறை பேசித் தோல்வி அடைந்துவிட்டனர். டெல்லியிலும் போய் பேசிவிட்டோம். 136 அடிக்கு மேல் நிலைநிறுத்த விட மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள கேரள அரசியல்வாதிகளிடம் பேசி இனி பயன் இல்லை. கேரளாவில் அனைவரும் மலையாளிகளாகப் போராடுகிறார்கள். நாம் தமிழர்களாக ஒன்றுபட்டுப் போராடினால்தான் அணையின் நீர் மட்டத்தை 152 அடிகளாக நிலைநிறுத்த முடியும்’ என்று தெளிவாய்ச் சொல்கிறார்.
கேரள அரசியல்வாதிகளின் பொய் முகங்களையும் தமிழக விவசாயிகளின் மெய்முகத்தையும் காட்டும் கண்ணாடியாய் திகழ்கிறது இந்தப் புத்தகம்!
Courtesy: Vikatan.
kongutamizhan February 12th, 2012, 07:35 PM Source (http://gnani.net/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/)
எழுத்துலக அரசியல்
அண்மைக்காலமாக கடுமையாக தாக்கிப் பேசுவது, நையாண்டி செய்வது, போட்டி விளம்பர உத்திகளைக் கையாள்வது என்று சில எழுத்தாளர்களும் அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுப்பது வியாபாரத்துக்கு உதவும் என்று கருதும் சில பதிப்பாளர்களும் களமிறங்கியிருக்கிறார்கள்.இந்த சர்ச்சைகளில் இப்போது அடிபடும் பெயர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, சு.வெங்கடேசன்,மனுஷ்யபுத்திரன், பத்ரி சேஷாத்ரி. (ஜெயமோகன் சமண தலயாத்திரை போய்விட்டதால், அவர் தொடர்பான சர்ச்சை எதுவும் இந்த சீசனில் எழவில்லை.)
இந்த சீசனில் அதிக சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்கக்கூடியவர் இதுவரை சர்ச்சைகளில் சிக்காத எஸ்.ராமகிருஷ்ணன்தான்( எஸ்ரா). சங்கீத சீசனுக்கு முன்பாக இலக்கிய சீசன் ஒன்றை சென்னையில் ஸ்தாபிக்கவேண்டும் என்ற கருத்தில் அவர் உலகப் புகழ் பெற்ற சில படைப்புகள் பற்றிய இலக்கியப் பேருரையை ஒரு வாரம் தொடர்ந்து நடத்தினார்.அதில் அவர் காந்தி-டால்ஸ்டாய் பற்றி சொன்னதில் சர்ச்சை ஏற்பட்டது. டால்ஸ்டாய் காந்திக்கு எழுதிய கடிதத்தில் திருக்குறளையும் வள்ளுவரையும் குறிப்பிட்டிருப்பதாகவும் அதிலிருந்துதான் காந்திக்கு குறள் மீது கவனம் ஏற்பட்டதாகவும் எஸ்ரா பேசியிருந்தார். அடுத்து காந்திக்கு கணிதத்தில் பேரார்வம் இருந்ததாகச் சொல்லியிருந்தார். தன் வாழ்நாளில் காந்தி சத்தியசோதனை, ஹிந்த் ஸ்வராஜ் இரு நூல்கள் மட்டுமே எழுதியதாக்வும் தெரிவித்தார். இந்த மூன்று கருத்துக்களுக்கும் கடுமையான மறுப்புகள் வந்தன. ஆனால் எஸ்ரா பல வாரம் பதில் சொல்லவே இல்லை.
கடைசியாக தன் இணையதளத்தில், “பொதுவாக நான் அவதூறுகள், அருவருப்பான கேலிகளுக்கு பதில் சொல்வதே கிடையாது, ஒரு நண்பர் தினமணியில் காந்தி பற்றிய எனது உரை தவறானது என்று வெளியிடப்பட்டுள்ள செய்தியைச் சுட்டிக்காட்டி இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். இது போன்ற அவதூறுகள், எதையும் ஆழ்ந்து படிக்காதவர்களால் உருவாக்கப்படுவது என்று பதில் சொல்ல தயங்கிவிட்டுவிட்டேன், அதே அவதூறு தற்போது மறுபடியும் கிளம்பும் போது பதில் சொல்லியாக வேண்டிய அவசியமிருக்கிறது “ என்று எழுதி பதில் சொன்னார். தான் வாசித்த ஒரு கட்டுரையில் இருந்து தான் டால்ஸ்டாய் திருக்குறளை வாசித்த தகவலை தெரிவித்ததாக்ச் சொன்னவர், அது என்ன கட்டுரை, யார் எழுதியது , எப்போது எழுதியது என்பதையெல்லாம் சொல்லவில்லை.
ஆனால் தன் மீதான அவதூறுகள் “எதையும் ஆழ்ந்து படிக்காதவர்களால் உருவாக்கப்படுவது என்று பதில் சொல்ல தயங்கிவிட்டுவிட்டேன்” என்று எஸ்ரா சொன்னது மிகவும் தவறானது. ஏனென்றால் தினமணியில் எஸ்ராவை மறுத்து விவரமாக எழுதியவர் காந்தியின் எழுத்துகள் அனைத்தையும் தொகுக்கும் பணியில் பல்லாண்டுகள் பணியாற்றிய ஆசிரியர் குழு உறுப்பினர் லா.சு.ரங்கராஜன். காந்தியும் டால்ஸ்டாயும் பரிமாறிக் கொண்ட கடிதங்கள் எத்தனை, ஒவ்வொன்றிலும் என்ன எழுதப்பட்டிருந்தது என்ற விவரங்களுடன், ஒரு இடத்தில் கூட டால்ஸ்டாய் வள்ளுவரையோ, குறளையோ சொல்லவில்லை என்பதை நிறுவியிருந்தார் லா.சு.ரா. காந்தியின் கணித ஆர்வத்துக்கு ஆதாரமாக எஸ்ரா காட்டிய ஒரே சான்று 1944ல் வீட்டுச் சிறையில் இருந்தபோது மனு காந்திக்கு கற்பிப்பதற்காக காந்தி வரைந்த ஜியாமெட்ரி படம். இந்த லாஜிக்படி ஒவ்வொரு நடுத்தர வர்க்கக் குடும்பத்திலும் கணிதத்தில் பேரார்வம் உடையவர்கள் நிறைந்திருப்பதாக சொல்லிவிடலாம். தங்கள் வீட்டுக் குழந்தைக்கு கணக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது ஒரு துறை ஆர்வமாகிவிடாது.
லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான மார்க்வெஸ் சொன்ன ஒரு மேற்கோள் எனக்குப் பிடித்தமானது. ஒரு கற்பனைக் கதை ஒரே ஒரு உண்மையை முன்வைத்தாலே அது இன்னும் மேலான பரிமாணத்தை அடைந்துவிடும். ஒரு கட்டுரையில் ஒரே ஒரு பொய்( தவறு) இருந்தால் கூட அது அந்த முழு கட்டுரையையும் சிதைத்துவிடும் என்கிறார் மார்க்வெஸ்.
எஸ்.ராமகிருஷ்ணன் தன் எழுத்திலும் பேச்சிலும் உலகின் பல மூலைகளிலும் இருகக்க்கூடிய நூல்கள், சினிமாக்கள் ஆகியவற்றில் இருந்து மேற்கோள்களை அள்ளிக் குவிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர். அது அவர் எழுத்துக்கு மெருகூட்டுபவை. எனவே அதில் ஒரு சிலவற்றில் கடும் தவறுகள் ஏற்படும்போது அவர் எழுத்தின் முழு நம்பகத்தன்மையே குலைந்து போய்விடுகிறது. இந்த ஆபத்தை அவர் சரியாக உணரவில்லை எனப்தையே காந்தி-டால்ஸ்டாய் சர்ச்சையில் அவர் எதிர்வினை காட்டுகிறது.
இலக்கியப் பேருரை சீசன் முடிந்து சென்னைப் புத்தகக் காட்சி தொடங்கிய சமயத்தில் சாகிதய அகாதமி விருது அறிவிக்கப்பட்டது.சாகித்ய அகாதமி விருதுகள் பெரும்பாலான நேரம் சர்ச்சைக்குள்ளாகக் கூடியவைதான். எழுத்தாளருடைய மொத்தமான பங்களிப்புக்காக விருதா, அவருடைய குறிப்பிட்ட நூலுக்கு விருதா என்பதே இன்னும் குழப்பமானது. ஏனென்றால் பல எழுத்தாளர்களுக்கு அவர்களுடைய சுமாரான நூல்களுக்கே பரிசு தரப்பட்டிருக்கிறது.
தன் முதல் நாவலான காவல் கோட்டத்துக்காகப் பரிசைப் பெற்ற சு.வெங்கடேசன் எஸ்ராவின் பழைய நண்பர். நாவல் வெளியான சமயத்தில் அதை குப்பை என்று கடுமையாக விமர்சித்தார் எஸ்.ரா. இல்லை, அது ஒரு முக்கியமான படைப்பு என்று பதில் கட்டுரை எழுதினார் ஜெயமோகன். அது ஒரு திருட்டுப் படைப்பு என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடன் சுற்றிக் கொண்டிருந்த நணபனும் எழுத்தாளனாக மாறி பெரிய நாவல் எழுதிவிட்டான் என்பதை தாங்கமுடியாத் உளவியல் சிக்கலில் எஸ்.ரா இருப்பதாக வெங்கடேசன் கருத்து சொன்னார்.
உளவியல் சிக்கலில் எழுத்தாளர்கள் இருப்பது உண்மைதான். பல எழுத்தாளர்கள் இப்போது பாராட்டுவிழாக்கள், வெளியீட்டு விழாக்களை பிரும்மாண்டமாகவும் கட் அவுட், ப்ளெக்ஸ் பலகைகளோடும், சினிமா மீடியா பிரபலங்களின் ஆசியோடும் நடத்துவது என்பது வாடிக்கையாகிவிட்டது. மதுரையில் வெங்கடேசனுக்கு நடத்திய பாராட்டில் மலர் கிரீடம் சூட்ட்ப்பட்டு கையில் வீரவாள் தரப்பட்டதாக அதைக் கண்டித்து பெத்தானியாபுரம் முருகானந்தம் என்பவர் இணைய தளத்தில் எழுதியிருக்கிறார். ஒரு மார்க்சிஸ்ட் இப்படியெல்லாம் செய்யலாமா என்பது அவர் கேள்வி.
இன்னொரு பக்கம் சென்னையில் ’சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த், ’கவிப்பேரரசு’ வைரமுத்து முதலிய பிரபலங்கள் இயல் விருது பெற்றதற்காக எஸ்ராவைப் பாராட்ட அழைக்கப்பட்டனர். எஸ்ராவைப் பாராட்ட ரஜினி அழைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை இணைய தளத்தில் ஏற்படுத்தியது. ரஜினியை அழைப்பதில் எனக்கு எந்த எதிர்ப்புமில்லை. ஒரு எழுத்தாளனை சமூகத்தில் யார் வேண்டுமானாலும் பாராட்டலாம். ரஜினியும் பாராட்டலாம். ஆனால் அழைப்பிதழில் ரஜினி படத்தைப் பெரிதாகப் போட்டு எஸ்ரா படத்தை சிறியதாக அச்சடித்தது எழுத்தாளனை செருப்பாலடிப்பது போல அவமானப்படுத்துவதாகும் என்று நான் எழுதியிருந்தேன். விழா அன்று எஸ்ராவுக்கு ரஜினிக்கு சமமான சைசில் ஃப்ளெக்ஸ் கட் அவுட் வைத்து கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிவிட்டார்கள்.
ரஜினியை அழைத்து எஸ்ராவைப் பாராட்டியதை சாரு நிவேதிதாவால் தாங்கவே முடியவில்லை. நான் கல்ந்துகொண்ட அவருடய எக்சைல் புத்தக விமர்சனக்கூட்டத்தில் அவர் தன் நாவல் பற்றி பேசாமல் இதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். இணைய தளத்திலும் எழுதித் தள்ளினார். “ ரஜினி… இயல் விருதை சர்வதேச விருது என்கிறார்களே, இதைப் பற்றி விசாரித்து அறிந்தீர்களா? கனடாவில் உள்ள ஒரு தமிழ் அமைப்பு தமிழ் எழுத்தாளருக்கு ஒரு விருது கொடுத்தால் அதற்குப் பெயர் சர்வதேச விருதா? மெல்பேர்ன் நகரில் (ஆஸ்திரேலியா) உள்ள தமிழர்கள் ஒரு ரெக்ரியேஷன் கிளப் வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் என்னுடைய நண்பர்கள். என்னை அங்கே அழைத்து ஒரு பொங்கல் தினத்தில் முயல் படம் ஸாரி கங்காரு படம் போட்ட ஒரு மெமண்டோவைக் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். உடனே நான் சர்வதேச விருது கொடுத்து விட்டதாக சொல்லிக் கொள்ளலாமா? சினிமா நடிகர்களைக் கொண்டு, பாராட்டு விழா நடத்திக் கொள்ளும் அளவுக்கு, தமிழ் இலக்கியவாதிகள் தரம் தாழ்ந்து வருகிறார்கள்.இலக்கியம் சார்ந்த அறம் வீழ்ச்சியடைந்துவிட்டது ”
பதிலுக்கு மனுஷ்யபுத்திரன் எழுதினார்: “ ஜோதிர்மயி என்று ஒரு கவிஞர் ஒரு முறை சாருவின் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு இலக்கிய சொற்பொழிவாற்றினார். குஷ்பு என்ற ஒரு நாவலாசிரியர் சாருவின் ஒரு புத்தக வெளியீட்டுக் கூட்டத்தில் கலந்துகொள்வதாக ஊரெல்லாம் பத்திரிகை வைத்து கடைசிநிமிடத்தில் வராமல் போனார். சாருநிவேதிதா என்ற நடிகர் ஒரு படத்தில் தனது விரல்கள் பத்து செகண்டுகள் நடித்தற்காக அந்த இயக்குனரைப் புகழ்ந்து அவர் பத்துப் பதிவுகள் எழுதினார்… அதிகபடியான குடி மட்டுமல்ல, அதிகபபடியான வயிற்றெரிச்சலும் கடும் memory loss ஏற்படுத்தும்…”
சர்ச்சைகளும் விழாக்களும் எழுத்தாளர்கள் திட்டமிட்டே விளம்பரம் தேடுகிறார்கள் என்பதன் அடையாளம்தான். ஏன் இப்படி? இது பற்றி பதிப்பாளர்கள் தெளிவாக இருக்கிறார்கள். கவிஞர் அய்யனார் கேட்டார்: கவிஞர் .தேவதச்சனுக்கு விளக்கு விருது மதுரையில் ரகசியமாகக் கொடுக்கப்பட உள்ளது. கவிஞர் .தேவதச்சன் நூல்களை வெளியிட்டு வருவது மனுஷயபுத்திரனின் வெளியீட்டு நிறுவனம்தான். அவருக்கும் ஒரு பிரபல சினிமா நடிகரின் தலைமையில் பாராட்டு விழா நடத்தலாமே. எஸ்ராவின் பதிப்பாளர் உயிர்மை மனுஷ்யபுத்திரன் பதில் : இதுவும் வெளி நாட்டு விருதுதான். ஆனால் அதைக் கொடுப்பவர்கள் பிரபலமில்லாதவர்கள். தேவதச்சனும் பிரபலமில்லாதவர். அவருக்கு எந்த சினிமா நடிகரையும் தெரியாது. கூட்டம் போட்டால் 50 பேருக்குமேல் வரமாட்டார்கள் . என் பதிப்பக நூல்களை விற்க முடியாது. ராமகிருஷ்ணன் ஸ்டார் எழுத்தாளர். அவர் புத்தகம் மட்டுமல்லாது , என் பதிப்பக நூல்கள் எல்லாவற்றையும் விற்க ஒரு வாய்ப்பு.
சாருவின் பதிப்பாளர் கிழக்கு பத்ரி சேஷாத்ரி எழுதிய ஒரு கட்டுரையில் அப்பட்டமாகவே சொல்கிறார்.: “நான் புத்தகங்களை வெறும் பண்டமாகத்தான் பார்க்கிறேன். இதை வெளிப்படையாகச் சொல்வதில் எனக்கு வெட்கமே இல்லை. தமிழின் இலக்கிய வானில் சில பதிப்பாளர்கள் அற்புதமான பணியாற்றி, சிறந்த இலக்கியத்தை வெளியே கொண்டுவர உதவுகிறார்கள். நான் அப்படிப்பட்டவன் அல்லன். புத்தகம் உருவாக்கி விற்பது எனக்கு ஒரு தொழில் மட்டுமே. நான் ஒரு வணிகன். எல்லாவிதமான புத்தகங்களையும் பதிப்பிக்க விரும்புகிறேன். அவை நன்றாக விற்கும் என்றால். காசு கொடுத்துப் பெரும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்வது ஒரு பதிப்பாளனுக்கு இயலாத காரியம். அப்படிச் செய்யும் செலவை, விற்பனையால் ஈடுகட்டவே முடியாது. எனவே வேறு வழிகளையே ஒரு பதிப்பாளனும் எழுத்தாளனும் கையாளவேண்டியுள்ளது.அங்குதான் இணையம் வருகிறது. தமிழின் சில எழுத்தாளர்களே இதனை ஒழுங்காகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரைச் சொல்வேன். அதிலும் சாரு நிவேதிதா, ஃபேஸ்புக் தளத்தை மிக அற்புதமாகப் பயன்படுத்திவருகிறார். அவருடைய வாசகர்கள் தம் சொந்த செலவில் சமீபத்தில் அவருடைய எக்ஸைல் நாவல் வெளியீட்டை காமராஜர் அரங்கத்தில் வைத்துக் கொண்டாடினார்கள். போஸ்டர் அடித்துத் தெருவில் ஒட்டுவதுமுதல், துண்டுப் பிரசுரங்களைப் பல இடங்களில் விநியோகிப்பதுவரை, அனைத்தையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தார்கள். ஓர் இலக்கிய நிகழ்வுக்கு இதைவிடப் பெரிய கூட்டம் வந்ததில்லை. அதேபோல ஜெயமோகன் வாசகர்கள் தீவிரமான ஒரு குழுவாக இயங்குகிறார்கள். இலக்கியக் கூட்டங்கள், விருது வழங்கும் விழா என்று அமர்க்களப்படுத்துகிறார்கள். இம்மாதிரியான நிகழ்வுகளே நாற்பது, ஐம்பது என்பதிலிருந்து நானூறு, ஐந்நூறு என்று வாசகர் வட்டத்தை விரிவாக்குபவை.நான் பதிப்பிக்கும் சில எழுத்தாளர்களை ( சேத்தன் பகத் போன்ற) பிராண்டுகளாக ஆக்குவதற்கு எந்தவகையில் பங்களிக்கலாம் என்று முயற்சி செய்வதே என் வேலை. அப்போதுதான் தமிழில் 25,000 அல்லது 50,000 என்று புத்தகங்களை விற்கவைக்க முடியும். நானும் பணம் பண்ணமுடியும்”
நாற்பது வருடங்களுக்கு முன்பு இந்த சிக்கல்கள் இல்லை. சர்ச்சைகள் இருந்தன. ஜெயகாந்தன் கதையையும் இந்திரா பார்த்தசாரதி கதையையும் பத்திரிகைகள் பாதியில் நிறுத்தியபோது நடந்த சமரசங்கள் பற்றி வெங்கட் சாமிநாதன் ‘யாருக்காக அழுவது ?” என்று எழுதினார். அதற்கு அசோகமித்திரன் “ யாருக்காகவும் அழவேண்டாம். வாயை மூடிக் கொண்டு இருந்தால் போதும்” என்று பதில் எழுதினார். பிரமிளும், செல்லப்பாவும், வெ,.சாவும் க.நா.சுவும் ஜெயகாந்தனும் நிறைய சர்ச்சித்திருக்கிறார்கள். அவையெல்லாம் கோட்பாடு, மதிப்பீடு , ரசனை பற்றிய விவாதங்கள்.
இப்போது நடப்பவை முழுக்க முழுக்க வணிக நோக்கம் சார்ந்தவை., ஏனென்றால் இப்போது எந்த கோட்பாடு, கொள்கை பிரச்சினைகளும் எழுத்தாளர்களுக்கு முக்கியமாக இல்லை. உலக மயமாக்கலும் தாராளப் பொருளாதார அமைப்பும் சினிமா உலகப் பிரவேசமும்தான் இந்த சிக்கலை ஏற்படுத்தியிருக்கின்றன. அவற்றின் அரசியல் கலாச்சாரம் எழுத்துலகின் அரசியலை பாதித்திருக்கிறது.
இந்த வாரக் கேள்வி:
அடையாறு புற்று நோய் நிலையத்தை பல வருடங்களாக நிர்வகித்துவரும் புகழ் பெற்ற மருத்துவர் வி. சாந்தாவை தங்கள் பிரசாரத்துக்கு அணுசக்திதுறை பயன்படுத்துகிறது. ‘ கதிரியக்கத்தால் புற்று நோய் வராது’ என்று சாந்தா சொல்லும் டி.வி. விளம்பரங்களை அணுசக்தித் துறை வெளியிட்டுள்ளது. இதே சாந்தாவின் அடையாறு புற்று நோய் நிலையத்தின் இணைய தளத்தில் புற்று நோய்க்கான காரணங்கள் பட்டியலில் ‘அயனைசிங் ரேடியேஷன்’ குறிப்பிடப்பட்டிருக்கிறது ! (http://www.cancerinstitutewia.org/abtcancer.htm).
எது உண்மை ? சாந்தா அணுசக்தி விளம்பரத்தில் சொல்வதா? தன் கேன்சர் செண்ட்டரின் இணையதளத்தில் சொல்வதா? இரண்டில் ஒன்றுதானே உண்மையாக் இருக்க முடியும் ?
kongutamizhan February 12th, 2012, 07:43 PM Jeyamohan's Arugargalin paathai series contd...
Part 24 (http://www.jeyamohan.in/?p=24778) - ஜெய்சால்மர், சாம் மணல் திட்டு
Part 25 (http://www.jeyamohan.in/?p=24811) - லொதுர்வா, ஜெய்சால்மர்
Part 26 (http://www.jeyamohan.in/?p=24838) - பிக்கானீர்
Part 27 (http://www.jeyamohan.in/?p=24862) - சங்கானீர், ஜெய்ப்பூர்
Part 28 (http://www.jeyamohan.in/?p=24890) - சவாய்மாதோப்பூர், ராதம்போர்
Part 29 (http://www.jeyamohan.in/?p=24947) - ஜாலர்பதான்
Part 30 (http://www.jeyamohan.in/?p=24977) - நீண்ட பயணம் (I think this will be his final part on this series)
Excellent, commendable writeups /info. Thanks JeMo
Leo_r February 12th, 2012, 07:57 PM All literature loving Tamils....Please mark this site as Favourite and spend your life time reading all the digital books available in Unicode as well as TSCII fonts .
Pl expose this site to your near and dear also, helping future generations in keeping touch with our rich literature.
http://www.projectmadurai.org/
kongutamizhan February 12th, 2012, 08:02 PM ^^ +1 and this too
http://www.tamilvu.org/library/libindex.htm
kongutamizhan July 19th, 2012, 05:47 AM After insulting Gandhi @ FETNA (http://www.skyscrapercity.com/showpost.php?p=93260001&postcount=20437) now tamizhachi thangapandiyan insults Vu.Ve.Sa and spreads few more lies. Where is FETNA heading into?
http://contrarianworld.blogspot.com/2012/07/thamizhachis-fetna-speeches-uvesa.html
Jeyamohan's response - http://www.jeyamohan.in/?p=28969
kannan infratech July 19th, 2012, 06:27 PM I see a design in many such writings and some times well coordinated too by various writers.
kongutamizhan July 19th, 2012, 08:44 PM ^^ I don't know what you mean by that. What Tamizhachi spoke is true. I know a few who attended it. Of-course tamil writer circle is so small and is highly divisive [edhanaala avanga avangallukkulle adichikirangannu avangalukkae theriyaathu :), so no surprise that it spreads like a fire].
kannan infratech July 19th, 2012, 08:52 PM After insulting Gandhi @ FETNA (http://www.skyscrapercity.com/showpost.php?p=93260001&postcount=20437) now tamizhachi thangapandiyan insults Vu.Ve.Sa and spreads few more lies. Where is FETNA heading into?
http://contrarianworld.blogspot.com/2012/07/thamizhachis-fetna-speeches-uvesa.html
Jeyamohan's response - http://www.jeyamohan.in/?p=28969
Please post this in All India Chai Bar. We will have interesting replies.
What I meant is that Writers seek publicity through deliberately opposing or supporting controversial issues.
kongutamizhan July 19th, 2012, 09:26 PM ^^ It is about FETNA and tamil community, so I think this is the better place for discussion. Not everyone in Indian chaibar knows about the speaker, her background, JeMo or the tamil writer politics. But we can move this to AA. Writer / speaker fights are not literature :)
Just wanted to clarify one more thing from my previous post
What Tamizhachi spoke is true.
Just so that I clarify this point, I didn't mean to say that what Tamizhachi spoke about Vu.Ve.Sa or Gandhi is true. What I meant was tamizhachi (sumathy) did insult Vu.Ve.Sa and Gandhi in FETNA speeches.
jaish July 19th, 2012, 09:34 PM We need to have such discussion. What Tamizhachi spoke is her view we can oppose her view point. This is place where even lord Shiva views were refuted.
Sangam vaithu tharmana vivadhathai valrtha nadu. Namma Eppa ippadi surungi ponoam
contrary / Opposite view points need to be countered on the basis of facts.
kongutamizhan July 19th, 2012, 10:07 PM contrary / Opposite view points need to be countered on the basis of facts.
That's the point. Sumathy speech'la adha thedinaalum kidaikaathu
jaish July 19th, 2012, 10:41 PM Tell me what is not fact in all this!!!.
Attaching motives with out understanding the context is as per their ideological belief.
kannan infratech July 25th, 2012, 11:02 AM Pulavar Keeran's Kamba Ramayanam and other discourses in Tamil.
http://manoranjitam.wordpress.com
Sujathavin Siru Kathaigal
http://xa.yimg.com/kq/groups/12727135/358530479/name/Sujathavin_Sirukathaigal.pdf
kannan infratech July 25th, 2012, 01:31 PM May be a repeat post. For many novels & poetry in Tamil Font.
http://www.tamilcube.com/res/tamil_ebooks.html
kannan infratech July 30th, 2012, 03:37 PM Very Informative Blog;
http://karkanirka.org/
Porumayaga Padikkavam. :)
kannan infratech July 30th, 2012, 03:43 PM The Tamil concept of Love, Love Making and Divinity
http://karkanirka.org/2009/03/15/love-making-divinity/
I am amazed by the reference to sex and related topics in most of the ancient Tamil literature.
Many of them were written by sages or monks.
My School Tamil Pandit said that even Thol Kappiyam refers sexual scenerios while quoting Grammar Suthras , probably then only the pupils will easily memorise them and will be able to recall when needed.
kannan infratech July 30th, 2012, 03:55 PM http://www.ancientscripts.com/tamil.html
About the Author
Hi there!
So you wanna know who's this guy who looks up ancient writing systems and writes about them on the Internet? Well, my name is Lawrence Lo. I'm NOT a linguist or an archaeologist, but instead I'm a software engineer in the San Francisco Bay Area.
I am very interested in archaeology and linguistics, and even though I do not hold any formal degrees in these fields, I have taken many classes in college and have tried to keep up with the latest developments. Unfortunately since leaving university it has become difficult to access research material in my former alma maters (UC Berkeley is too far away and Stanford charges $$$ for non-students to enter their libraries!), but thankfully the Internet has itself provided me with more resource than possible when I started.
Ancient Scripts is a hobby of mine, originally to keep me from going insane while in Purgatory...I mean Engineering school...but has become a quite passion of mine. I still wouldn't leave computer science (I am pretty compulsive about programming, and has been since 8 years of age), but it's a nice change to do some different and unrelated.
I love to travel to interesting places that are full of history, where hopefully I also get to take nice pictures to put on Ancient Scripts. As a result I end up in museums a lot (thankfully my camera hasn't been confiscated yet). I also like nature, especially deserts, volcanoes, and cuddly animals. The slide show above illustrates some of the places I've been.
Please see 2nd, 3rd & 4th part also.
Then proceed to read his blog.
kannan infratech July 30th, 2012, 04:13 PM Ancient Tamil country: its social and economic structure
http://books.google.co.in/books/about/Ancient_Tamil_country.html?id=T3puAAAAMAAJ
venkyinblr July 31st, 2012, 07:46 AM Ancient Tamil country: its social and economic structure
http://books.google.co.in/books/about/Ancient_Tamil_country.html?id=T3puAAAAMAAJ
I would like to Add Merchants of Tamilakam by Kanakalatha Mukund to this list..
Vasu July 31st, 2012, 12:12 PM Good Thread Thanks kt
kannan infratech August 1st, 2012, 10:27 AM The following Tamil Scholars / Pulavars & their works were deliberately neglected and they are not quoted or referred much by TN Govt backed programs.
The main reason being that they were religiously inclined. Saivam & Vainavam have given great poetry to Tamil but they are ignored.
Agasthyar, who received Tamil language from Shiva himself.
Tolkappiyar (Thruna dumagni), who wrote grammar after Agaththiyam became obsolete.
Amur Gowthaman Sathevanar (Sahadevan)
Kadiyalur uruththiran Kannanar ( Rudra Aksha)
Kodimangalam Vathula (Gothra) Narsenthan
Sellur Kosikan (Kausika Gothra) kannanar
Madurai Teacher Nalanthuvan
Madurai Ilam kausikanar
Madurai Kanakkayanar
Nakkiran,son of Madurai Kanakkayanar
Madurai gownian daththnar
Mamulanar
Uraiyur enicheri mudamosi
Perunkundrur Perungkausikan
Kumattur kannan
Gowthaman
Valmiki
Vadamavannakkan damodaran
Vembathur kumaran
12 Azhwarkal
64 Nayanmarkal
Thiru Gnana Sambandhar
Sundarar
Manikka Vasagar
Andal
Periyalvar
Madura kavi alvar
Tondaradippodi alvar
Jayamkondar
Ramanujar
Parimel Azkar: Though ten scholars wrote commentaries on the most famous Tamil ethics Tirukkural, Parimel Azakar’s was the best and most popular.
Nachinarkiniyar:
Senavaraiyar
Bharathiyar
Parithimar Kalaigna
Books / Poetry written which are neglected:
Tolkappiyam (Pre Cankam period)
Kurinji pattu (lines 261)
Thiru murugatruppadai (lines 317)
Pattinap palai (Lines 301)
Perumpanatrup padai (Lines 500)
Malaipadukadam (lines 583)
Nedunal vadai (lines 188)
Pathitrup pathu (all except one)
Ainkurunuru (Kapilar’s 100)
Another Interesting Study:
http://sih.sagepub.com/content/26/2/227.full.pdf
Vasu August 1st, 2012, 11:49 AM ^^^^ Thiruvalluvar?
kannan infratech August 7th, 2012, 03:43 PM A great book. Very simple explanation.
Part 1 :
http://www.kamakoti.org/tamil/part1index.htm
Part 2:
http://www.kamakoti.org/tamil/part2index.htm
Part 3:
http://www.kamakoti.org/tamil/3dkindex.htm
Part 4 :
http://www.kamakoti.org/tamil/part4index.htm
Part 5 :
http://www.kamakoti.org/tamil/5index.htm
Part 6 :
http://www.kamakoti.org/tamil/part6index.htm
Part 7 :
http://www.kamakoti.org/tamil/part7index.htm
kannan infratech August 7th, 2012, 03:49 PM Written by Kanchi Maha Periyavar - Sri CHandrasekara Sarawathi
ஒருமை -
இறையுணர்வு
மலைநாட்டு சிவாலயம் - திருவஞ்சைக்களம்
இரண்டு
அயனம் - தட்சணாயனம், உத்ராயனம்
அறம் - இல்லறம், துறவறம்
ஆன்மா - ஜீவான்மா, பரமான்மா
இடம் - செய்யுளிடம், வழக்கிடம்
இதிகாசம் - பாரதம், இராமாயணம்
முதுகுரவர் - தாய், தந்தை
இருமை - இம்மை, மருமை
உலகம் - இகலோகம், பரலோகம்
எச்சம் - பெயரெச்சம், வினையெச்சம்
எழுத்து - உயிரெழுத்து, மெய்யெழுத்து
கலை - சூரியகலை, சந்திரகலை
கந்தம் - நற்கந்தம், துர்கந்தம்
கிரகணம் - சூரிய கிரகணம், சந்திரகிரகணம்
சுடர் - சூரியன், சந்திரன்
திணை - உயர்திணை, அஃறிணை
போது - பகல், இரவு
மரபு - தாய் மரபு, தந்தை மரபு
வினை - நல்வினை, தீவினை
மூன்று
அரசர் - சேர, சோழ, பாண்டியர்
இடம் - தன்மை, முன்னிலை, படர்க்கை
உயிரிலுள்ள b - உதரத்தீ, விந்துத்தீ, சினத்தீ
உலகம் - பூலோகம், பரலோகம், பாதாளம்
கடுகம் - சுக்கு, மிளகு, திப்பிலி
காலம் - இறப்பு, நிகழ்வு, எதிர்வு
குணம் - சாத்வீகம், இராஜசகுணம், தாமச குணம்
குற்றம் - காமம், வெகுளி, மயக்கம்
சக்தி - இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி
சாத்திரம் - சாங்கியம், பதஞ்சலியம், வேதாந்தம்
சீவதேகம் - தூலம், சூக்குமம், காரணம்
சுடர் - சூரியன், சந்திரன், அக்கினி
தமிழ் - இயல், இசை, நாடகம்
b - அகவனீயம், தக்கிணாக்கிளீயம், காருகபத்யம்
தொழில் - ஆக்கல், காத்தல், அழித்தல்
நூல் - முதல், வழி, சார்பு
பொறி - மனம், வாக்கு, காயம்
மலம் - ஆணவம்மலம், கன்மமலம், மாயாமலம்
முக்கனி - மா, பலா, வாழை
பொருள் - பதி, பசு, பாசம்.
நான்கு
அரண் - மலை, காடு, மதில், கடல்
அளவு - எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல்
அழகை - இளிவு, இழவு, அசைவு, வறுமை
ஆச்சிரமம் - பிரமசரியம், இல்வாழ்க்கை, வானப்பிரத்தம், சந்நியாசம்
இழிச்சொல் - குறளை, பொள், கடுஞ்சொல், பயனில் சொல்
உண்டி - உண்டல், தின்னல், நக்கல், பருகல்
உபாயம் - சாமம், தானம், பேதம், தண்டம்
உரை - கருத்துரை, பதவுரை, பொழிப்புரை, அகலவுரை
கதி - தேவகதி, மக்கள்கதி, விலங்குகதி, நாகர்கதி
கணக்குவகை - தொகை, பிரிவு, பெருக்கு, கழிவு
கவிகள் - ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி
சதுரங்கம் - தேர், கரி, பரி, காலாள்
சொல்வகை - பெயர், வினை, இடை, உரி
தோற்றம் - பை, முட்டை, நிலம், வியர்வை
நிலம் - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்
பண் - பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி
பதவி - சாலோகம், சாமீபம், சாருபம், சாயுச்சியம்
பா - வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
பூ - கொடிப்பூ, கோட்டுப்பூ, நீர்ப்பூ, புதர்ப்பூ
பொருள் - அறம், பொருள், இன்பம், வீடு
பொன்வகை - ஆடகம், கிளிச்சிறை, சாதகம், சாம்பூநதம்
பெண் குணம் - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
மார்க்கம் - சரியை, கிரியை, யோகம், ஞானம்
யுகங்கள் - கிரிதம், திரேதம், துவாபரம், கலியுகம்
ஐந்து
அகிற்கூட்டு - சந்தனம், கற்பூரம், எரிகாசு, தேன், ஏலம்
அங்கம் - FF, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்
அரசர்க்குழு - மந்திரி, புரோகிதர், சேனாதிபதியர், தூதர், சாரணர்
அவத்தை - சாக்கிரம், சொப்பனம், துருத்தி, துரியம், துரியாதீதம்
இலக்கணம் - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
ஈஸ்வரன்முகம் - ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்தியோசாதம்
உலோகம் - பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம்
ஐங்காயம் - கடுகு, ஓமம், வெந்தயம், உள்ளி, பெருங்காயம்
ஐம்புலநுகர்ச்சியில்
இறப்பன - மீன், வண்டு, யானை, அகணம், விட்டில்
கன்னிகை - அகலிகை, திரௌபதி, சீதை, தாரை, மண்டோதரி
குரவர் - அரசன், உபாத்தியாயன், தந்தை, தேசிகன், மூத்தோன்
குற்றம் - கொட்டாவி, நெட்டை, குறுகுறுப்பு, மூச்சிடல், அலமரல்
சத்தி - இச்சாசத்தி, கிரியாசத்தி, ஞானசத்தி, பராசத்தி, ஆதிசத்தி
திருமால் ஆயுதம் - சக்கரம், தனு, வாள், தண்டு, சங்கம்
தேவர் - பிரமன், விஷ்ணு, உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன்
புலன் - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்
யாகம் - பிரமம், தெய்வம், பூதம், பிதிர், மானுடம்
வண்ணம் - வெண்மை, கருமை, செம்மை, பசுமை
வாசம் - இலவங்கம், ஏலம, கருப்பூரம், சாதிக்காய், தக்கோலம்
விரை - கோட்டம், துருக்கம், தகரம், அகில், சந்தனம்
சுத்தி - ஆன்மசுத்தி, தானசுத்தி, திரவியசுத்தி, மந்திரசுத்தி, இலிங்கசுத்தி
முடிஅழகு - கொண்டை, பனிச்சை, குழல், முடி, சுருள்
ஆறு
அங்கம் - படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண்
அந்தணர் தொழில் - ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல்
ஆதாரம் - மூலம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை
உட்பகை - காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம்
சக்கரவர்த்திகள் - அரிச்சந்திரன், நளன், முசுகுந்தன், புருகுச்சன், புரூரவன், கார்த்தவீரியன்
சுவை, - இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கார்ப்பு, துவர்ப்பு, கைப்பு
தானை - தேர், பரி, கரி, ஆள், வேல், வில்
பருவகாலம் - கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்
ஏழு
அகத்தினை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை,
பெருந்திணை
இசை - குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்
இடைஏழு
வள்ளல்கள் - அக்குறன், சந்திமான், அந்திமான், சிசுபாலன்,
தந்த வக்கிரன், கர்ணன், சந்தன்
உலகம் - பூலோகம், புவலோகம், மகாலோகம், சனலோகம்,
தவலோகம், சத்தியலோகம்
கடல் - உவர்நீர், நன்னீர், பால், தயிர், நெய், கருப்பஞ்சாறு, தேன்
கடைஏழு
வள்ளல்கள் - எழினி, ஓரி, காரி, நள்ளி, பாரி, பேகன், மலையன்
உலோகம் - செம்பொன், வெண்பொன், இரும்பு, ஈயம், வெங்கலம், தரா
முதல் ஏழு
வள்ளல்கள் - குமணன், சகரன், சகாரன், செம்பியன், துந்துமாரி, நளன், நிருதி
கீழ்ஏழ் உலகம் - அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், ரசாதலம், பாதாளம்
சப்தவிடத்தலம் - திருவாரூர், நாகப்பட்டினணம், திருநள்ளாறு, திருமறைக்காடு, திருக்காறாயில் திருவாய்மூர், திருக்குவளை
சீரஞ்சீவியர் - அசுவத்தாமன், மகாபலி, வியாசன், அனுமான், வீடணன், மார்க்கண்டன், பரசுராமன்
நதி - கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, குமரி, கோதாவரி
தாதுக்கள் - இரதம், உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலம்
தாளம் - துருவம், மட்டியல், ரூபகம், சம்பை, திரிபுடை, அடதாளம்,
ஏகதாளம்
பாதகம் - ஆங்காரம், உலோபம், காமம், பகை, போஜனப்பிரியம், காய்தல், சோம்பல்
பிறப்பு - தேவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, நிற்பன
மோட்ச புரி - காஞ்சி, காசி, அவந்திகை, துவாரகை, மதுரை, அயோத்தி,மாயை
பெண்கள் பருவம் - பேதை, பெதும்மை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை,
பேரிளம்பெண்
மண்டலம் - வாயு, வருணன், சந்திரன், சூரியன், நட்சத்திரம், அக்னி, திரிசங்கு
மாதர் - அபிராபி, மகேஸ்வரி, கௌமாரி, நாராயணி, வாராகி, இந்திராணி, காளி
முனிவர் - அத்திரி, குச்சன், கௌதமன், பிருகு, காசிபன், அங்கிரா, வசிட்டன்
வித்யா தத்துவம் - காலம், நியதிகலை, வித்தை, கிராகம், புருடன், மாயை
எட்டு
அட்டவீரட்டம் - கண்டியூர், திருக்கடவூர், திருஅதிகை, வழுவூர், திருப்பறியலூர், திருக்கோவலூர், திருக்குறுக்கை, திருவிற்குடி
அளவை - காட்சி, அனுமானம், ஆகமம், அருத்தாபத்தி, உபமானம்,
அபாவம், சம்பவம், ஐதீகம்
அஷ்டபந்தனம் - சுக்கான்கல், ஜாதிலிங்கம், செம்பஞ்சு, தேன்மெழுகு, எருமைவெண்ணெய், குங்கிலியம், நற்காவி, கொம்பரக்கு
எட்டுத்தொகை - நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு
எண்சுவைத்தமிழ் - சிங்காரம், வீரியம், பெருநகை, கருணை, ரவுத்திரம், குற்சை, அற்புதம், பயம்
எண்வகைவிடை - சுட்டு, மறை, நேர், ஏவல், வினா, உற்றுதுரைத்தல், உறுவதுகூறல், இனமொழி
ஐஸ்வரியம் - தனம், தானியம், GF, பசு, புத்திரர், வாகனம், சத்தம், தைரியம்
சித்தி - அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிரார்த்தி, பிராகமியம், வசித்துவம்
மெய்ப்பாடு - நகை, அழுகை, அச்சம், இளிவரல், மருட்கை, பெருமிதம்,
வெகுளி, உவகை
ஒன்பது
நவ GF - சங்கம், பதுமம், மகாபதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம்
ராட்சதகணம் - கார்த்திகை, அயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டம்,
மூலம், அவிட்டம், சதயம்
நவமணி - கோமேதகம், நீலம், பவளம், புஷ்பராகம், வைடூரியம், மரகதம், மாணிக்கம், முத்து, வைரம்,
ஒரெழுத்து ஒருமொழி
ஆ - பசு, கோ - தலைவன், ஈ - கொடு, பூ - மலர்,
நா - நாக்கு, கா - காப்பாற்று, மா - பெரிய, ஐ - சளி,
சா - மடி, சே - எருது, பா - பாடல், கை - கரம், தை - மாதம்
ஆதாரம் - அபிதான சிந்தாமணி
Thangaselvan February 11th, 2013, 10:08 AM One super book I recently read was "Yennai Sethikkia Yennangal" by Dr. M. S. Udhayamoorthy. It is a biography of Dr. M.S. and makes interesting reading. Writes about his family, his town Vila nagar, his studies in school and college,his teachers his job in college, his marriage, his friends A.C. Muthaiah, Manian and others, Doctorate in US.
His life in US is very interesting with challenges and rising to the top with sheer determination, intelligence and hard work. In between he writes about TN politicians and their visit to USA. (Annadurai, MGR) Later he decides to return to TN He starts Makkal Sakthi Iyakkam and inspires people on many topics including Linking of Rivers.
Must read when you get time.
Book is from Vanathi Pathipagam
|
|