search the site
 daily menu » rate the banner | guess the city | one on oneforums map | privacy policy | DMCA | news magazine | posting guidelines

Go Back   SkyscraperCity > Asian Forums > India > South > South India Projects > Tamil Nadu > Madurai



Global Announcement

As a general reminder, please respect others and respect copyrights. Go here to familiarize yourself with our posting policy.


Reply

 
Thread Tools
Old March 22nd, 2017, 08:13 AM   #12861
bikebullet72
Registered User
 
Join Date: Aug 2012
Posts: 10
Likes (Received): 9

How does one upload photos in this site ? Last week when i tried it was asking for an URL.
bikebullet72 no está en línea   Reply With Quote

Sponsored Links
Old March 22nd, 2017, 10:53 AM   #12862
Jeba
Registered User
 
Join Date: Oct 2016
Location: Madurai and Chennai
Posts: 108
Likes (Received): 88

13 மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க வேண்டும் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தல்

மதுரை: தென் இந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் சார்பில், வெள்ளி விழா மாநாடு மதுரையில் நடந்தது. அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் மணவாளன் தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் வீரபத்திரன் வரவேற்றார். மாநாட்டில் இயக்குநர்கள் சமுத்திரகனி, சீனு ராமசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பொதுச்செயலாளர் சிங்கராசு, மாநில தலைவர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். மாநாட்டில், எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க வேண்டும். இதனால், தென்னகத்தை சேர்ந்த 13 மாவட்ட மக்கள் பயன்பெறுவார்கள். இதுதொடர்பாக தொடர் போராட்டம் நடத்துவது. மதுரையில் நுகர்வோர் குறைதீர் ஆணையம் அமைக்க வேண்டும் அரசு தலையீட்டு சூடான உணவுப்பொருள்களை பாலிதீன் பைகளில் பார்சல் செய்யும் உணவு விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் கலாச்சாரம் மற்றும் கட்டிடம் தொடர்பான ஆராய்ச்சிகளை தொகுத்து நூலாக மதுரையில் வெளியிட வேண்டும். ரியல் எஸ்டேட் தொழிலை பாதுகாக்க தமிழக அரசு புதுச் சட்டம் கொண்டு வர வேண்டும். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் சீமைக்கருவேலம் மரத்தை முற்றிலும் அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Source:
http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=696908
__________________
Make Madurai Great Again ...

siva mdu liked this post
Jeba no está en línea   Reply With Quote
Old March 25th, 2017, 04:11 PM   #12863
athens of east
Registered User
 
Join Date: Nov 2007
Posts: 285
Likes (Received): 75

Quote:
Originally Posted by bikebullet72 View Post
How does one upload photos in this site ? Last week when i tried it was asking for an URL.
Upload pics in Flickr and copy the link from BBCODE and paste it in the message area.
athens of east no está en línea   Reply With Quote
Old March 30th, 2017, 03:03 AM   #12864
esma
Registered User
 
Join Date: Aug 2011
Location: Madurai
Posts: 230
Likes (Received): 118

தமிழக அரசின் அனுமதிக்காக காத்திருக்கும&a

தமிழக அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் நியூட்ரினோ ஆய்வகம்:

மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல்
தேனியில் நியூட்ரினோ ஆய்வுக் கூடத்துக்காக தேர்வு செய்யப்பட்ட இடம்.|

தமிழகத்தின் தேனியில் மத்திய அரசு அமைக்க முயலும் நியூட்ரினோ ஆய்வகம், தமிழக அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது. இந்த தகவலை மத்திய அணுசக்தித்துறை அமைச்சர் ஜிதேந்தர்சிங் இன்று மக்களவையில் தகவல் கூறியுள்ளார்.

இது குறித்து தனது எழுத்து மூலமாக தெரிவித்த பதிலில் அமைச்சர் ஜிதேந்தர்சிங் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு போதி மலையில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் பணியை துவங்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதற்காக, தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற கோரியிருந்தது. ஆனால், இந்த அனுமதி கிடைக்காமல் அது நிலுவையில் உள்ளது. தற்போது, இதன் மீது ஒரு நிபுணர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இதற்கான பொதுமக்கள் ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியரால் கடந்த ஜூலை 8, 2010-ல் நடத்தப்பட்டது. இதில் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 1200 பேர் கலந்து கொண்டனர். அதன் தொகுதி எம் எல் ஏ, துணை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் மற்றும் பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டனர். இதில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இந்திய நியூட்ரினோ ஆய்வக விஞ்ஞானிகள் பொறுமையுடன் விளக்கம் அளித்தனர். இதன் இறுதியில் பொதுமக்கள் அனுமதியுடன் அதன் ஆட்சியர் நியுட்ரினோ ஆய்வகத்தை அமைக்க ஆதரவளித்திருந்தார்.

மதுரை மற்றும் தேனியில் தங்கியபடி நியூட்ரினோ விஞ்ஞானிகள் பொட்டிபுரம் மக்களிடம் அவ்வப்போது ஆய்வகம் குறித்து உரையாடினர். அப்பகுதியை சுற்றியுள்ள பள்ளிகளிலும் இதன் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தும்

அறிவியல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தற்போது, இந்த ஆய்வகத்தை வேறு இடத்திற்கு மாற்றும் திட்டம் இல்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்டை மாநிலங்களில் இருந்து யாரும் அரசை அணுகவில்லை. எனினும், இதை எதிர்த்து இருபொதுநல வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. மதிமுக தலைவர் வைகோவால் மதுரை உயர் நீதிமன்ற கிளையிலும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் பிராந்தியதியக் கிளையில் ஜி.சுந்தர்ராஜனும் மனு அளித்துள்ளனர்.

இதில், தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் அனுமதி இன்றி தொடரக் கூடாது என உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. எனவே, கடந்த மே 22, 2015-ல் தமிழக அரசின் அனுமதிக்காக விண்ணப்பித்து காத்திருக்கிறோம். இந்த விஷயத்தில் தமிழக அரசு ஒரு நிபுணர் குழுவை கடந்த சில தினங்களுக்கு முன் அமைத்துள்ளது. பசுமை தீர்பாயத்திற்கு நீண்ட காலமாக தமிழக அரசின் மாசு கட்டுப்பாடு வாரியம் பதில் அளிக்காமையால் அதன் வழக்கு தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. இதன் நீதிபதி உத்தரவின்படி, எம்.ஒ.இ.எப் அளித்த மாசுக்கட்டுபாடு அனுமதி காலாவதியாகி விட்டதால், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த பதிலில் கூறியுள்ளார்.

http://m.tamil.thehindu.com/tamilnad...cle9606520.ece
esma no está en línea   Reply With Quote
Old March 30th, 2017, 09:26 AM   #12865
ANANTH
Registered User
 
Join Date: Oct 2007
Location: madurai, muscat, toronto
Posts: 4,546
Likes (Received): 1523

போதிய படுக்கை வசதியில்லாமல் கர்ப்பிணிகள், குழந்தைகள் தவிப்பு: முதல்வருக்காக காத்திருக்கும் ரூ.40 கோடியில் கட்டப்பட்ட சீமாங் கட்டிடம்

மதுரை அரசு ராஜாஜி மருத்து வமனையில் ரூ.40 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த தாய், சேய் மருத்துவக் கட்டிடம் (சீமாங் மருத்துவ நிலையம்) முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகைக்காக திறப்புவிழா காணாமல் காத்திருக்கிறது. கோடை வெயிலில் மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகள், குழந்தைகள் போதிய படுக்கை வசதி இல்லாமல் தவிக்கின்றனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்து வமனைக்கு மதுரை மட்டு மின்றி, தென் மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் நாளொன்றுக்கு 2,600 உள்நோயாளிகள், 9 ஆயிரம் வெளி நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். மொத்தம் 45 சிகிச்சை பிரிவுகள் செயல்படுகின்றன.

தினமும் 200-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் இங்கு நடக்கின்றன. 50 பிரசவங்கள் நடைபெறுகின்றன. ஆனால், மகப்பேறு சிகிச்சைப் பிரிவும், பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவும் போதிய அடிப்படை வசதியில்லாமல் மிகுந்த இடநெருக்கடியில் செயல் படுகின்றன.

இதற்காக ரூ.40 கோடியில் மருத்துவமனை வளாகத்தில் ஒருங்கிணைந்த தாய் சேய் மருத்துவச் சிகிச்சை மையம் (சீமாங் மையம்) கட்டப்பட்டு, திறப்புவிழாவுக்காக தயார் நிலையில் இருக்கிறது. ஆனால், திறப்பு விழாவில் பங்கேற்க முதல்வரும், சுகாதார அமைச்சரும் இன்னமும் ஒப்புதல் வழங்காமல் உள்ளனர். இதனால் கட்டி முடிக்கப்பட்டும் முதல்வரின் வருகைக்காக திறக்கப்படாமல் உள்ளது. தற்போது அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் வருகைக்கு ஏற்றார் போல் படுக்கைகள் இல்லாததால் நோயாளிகள் தவிக்கின்றனர்.

குறிப்பாக தாய், சேய் சிகிச்சை மையத்தில் அடிப்படை கட்ட மைப்பு வசதிகள் இல்லாமல் கோடை வெயிலில் கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இது ஒருபுறம் இருக்க, இடநெருக்கடி காரண மாக முழுமையான சிகிச்சை முடியும் முன்பே, வெளியேற அறிவுறுத்தப்படுகின்றனர். இதுகுறித்து மருத்துவமனை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சீமாங் மருத்துவ நிலையத்தில் ஒரே நாளில் 150 பிரசவங்களை கவனிக்கக்கூடிய அளவு வசதிகள் உள்ளன. 400 படுக்கை வசதிகள் உள்ளதால், இடநெருக்கடி என்ற பேச்சுக்கே இடமிருக்காது. அனைத்து வார்டுகளும் ஏசி வசதியுடன் நவீனப்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகள் இருக்கின்றன. மொத்தம் 6 மாடிகள் உள்ளன. 6-வது மாடியில் பச்சிளம் குழந்தை கள் சிகிச்சை பிரிவு செயல்பட உள்ளது.

மே முதல் வாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு வரவுள்ளார். அப்போது, இந்தக் கட்டிடத்தை அவர் திறந்துவைக்க வாய்ப்புள்ளது. எனினும், அது வரை காத்திருக்காமல் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவை மட்டும் ஏப்ரல் 15-ம் தேதி சீமாங் கட்டிடத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

http://tamil.thehindu.com/tamilnadu/...cle9607274.ece

CM has time only for visiting Parpana Agraharam in banglore but not for this. I really dont know why we need to have such formalities. Else, let him open it through video conference
__________________
Our Dead are never Dead to us, Until we have forgotten them
ANANTH no está en línea   Reply With Quote
Old March 31st, 2017, 10:35 PM   #12866
IdeaMaster
Registered User
 
IdeaMaster's Avatar
 
Join Date: May 2015
Location: Madurai, Bangalore
Posts: 305
Likes (Received): 127

மாநகராட்சி உபரி பட்ஜெட் தாக்கல் மத்திய அரசு நிதியை நம்பி திட்டங்கள்
மதுரை மாநகராட்சி 2017 -18 ம் ஆண்டின் பட்ஜெட்டில் 1.89 கோடி ரூபாய் உபரி பட்ஜெட் தாக்கல் செய்தது. கடந்த ஆண்டு 6 கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட்டில் தாக்கல் செய்தது. இந்த ஆண்டு தாக்கல் செய்யப் பட்டுள்ள உபரி பட்ஜெட்டில் முக்கிய திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசின் நிதியை நம்பி உள்ளது.

தனி அதிகாரி கமிஷனர் சந்தீப் நந்துாரி நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். துணை கமிஷனர் சாந்தி, நகர் பொறியாளர் மதுரம், நகர்நல அலுவலர் சதீஷ் ராகவன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
  • மாநகராட்சியின் மொத்த வரவு 2,543.76 கோடி ரூபாய். செலவினம் 2,541.87 கோடி ரூபாய். உபரி 1.89 கோடி ரூபாய்.
  • துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 247.56 கோடியில் பல பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் ஒரு பகுதியாக தற்போது 56 வார்டுகள் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாதவையாக உள்ளது. இதை 100 வார்டுகளாக மாற்றப்படும்.
  • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 1,342 கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 200 கோடி ரூபாய் பெறப்பட்டு மீனாட்சி அம்மன் கோயில் பகுதி மற்றும் தெப்பக்குளம் பகுதிகள் மேம்பாடு செய்யப்படும்..
  • மத்திய, மாநில அரசின் மானியத்தில் 320 கோடி ரூபாயில் வைகை அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் வழங்கும் திட்டம். அம்ரூட் திட்டத்தில் ஏற்கனவே உள்ள குடிநீர் வினியோகத்தை மறு சீரமைப்பு திட்டத்திற்கு 444 கோடி ரூபாய் மற்றும் விரிவாக்கப்பகுதிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் 617 கோடி ரூபாய்க்கு பாதாளசாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
  • 2.64 கோடி ரூபாயில் 5 பூங்காக்கள் மேம்படுத்தப்படும்.
  • நகரில் குடிசை பகுதிகளில் 58 கோடி ரூபாயில் குடிநீர் வினியோக திட்டம்.
  • ஓபுளாபடித்துறை, குருவிக்காரன் சாலையில் 45 கோடியில் புதிய பாலங்கள்,
  • மூன்றுமாவடியில் இருந்து தபால் தந்தி நகர் வரை 15 கோடி ரூபாயில் ரோடு உள்ளிட்ட பல திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

கமிஷனர் கூறியதாவது:
  • மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றிய பகுதிகளில் துாய்மை பணி செய்வதற்கு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் 11.36 கோடி ரூபாய்க்கு பணி ஒப்பந்தம் செய்துள்ளது. இப்பணிகள் இந்த ஆண்டு முடிக்கப்படும்.
  • 50 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்திகரிக்கும் திட்டம், குடியிருப்பு பகுதிகளில் பயோ காஸ் தயாரிப்பு, மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் உள்ளிட்ட திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
  • நகரில் கருவேல மரங்கள் 80 சதவீதம் தனியார் நிலங்களில் தான் இவை உள்ளது. உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  • நகரில் மாதம் முதல் ஞாயிறு நடத்தப்படும் ேஹப்பி ஸ்டிரீட் நிகழ்ச்சியில் ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
  • இந்த வாரம் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பாலிதீன்ன்தீன் தடை குறித்த விழிப்புணர்வு நடத்தப்படும், என்றார்.

Source: Dinamalar
IdeaMaster no está en línea   Reply With Quote
Old April 7th, 2017, 06:04 AM   #12867
IdeaMaster
Registered User
 
IdeaMaster's Avatar
 
Join Date: May 2015
Location: Madurai, Bangalore
Posts: 305
Likes (Received): 127

மதுரை நகர் ரவுண்டானாக்களின் தோற்றம் மாறுகிறது....! நீரூற்று, கலைச்சிற்பங்கள் அமைக்க திட்டம்
மதுரை நகர் ரவுண்டானாக்களில் பயனின்றி இடத்தை வீணடிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் பூத்களை அகற்றி, அங்கு நீரூற்றுடன் கூடிய புல்வெளிகள், கலைச் சிற்பங்கள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் புராதனமிக்க நகரங்களின் பட்டியல் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலும் மதுரை இடம்பெற்றுள்ளது. இதனால் மீனாட்சி அம்மன் கோயில் சார்ந்த பகுதிகளை அழகுபடுத்தும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக ரவுண்டானாக்களை அழகுபடுத்தும் நடவடிக்கைகள் துவங்கி உள்ளன.இதுவரை இத்திட்டத்தில் 9 வங்கிகள் மற்றும் ஒரு மருத்துவமனை குறிப்பிட்ட
சில ரவுண்டானாக்களை அழகுபடுத்தி தொடர்ந்து பராமரிக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன் ரவுண்டானாக்களில் போலீஸ் பூத்கள் தொடர்ந்து அமைக்கப்பட்டன. சில பூத்கள் தவிர மற்றவை வீணாக உள்ளன. இதை மாநகராட்சி கணக்கெடுத்துள்ளது. இவற்றை அகற்றி, நீரூற்றுடன் கூடிய புல்வெளிகள் மற்றும் கலைச்சிற்பங்கள் அமைக்க முடிவு செய்துள்ளது.

இதே போன்று ஆரப்பாளையம் வைகை ஆற்றுப்பாலம் பகுதியில் மெகா ரவுண்டானா அமைக்கப்பட்டு வருகிறது. இதில் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையப்படுத்தும் வகையில் காளை மற்றும் அதனை அடக்கும் வீரரின் சிலை அமைக்கப்படுகிறது. தவிர, சில ரவுண்டானாக்களில் பத்து துாண், மகால், காந்திமியூசியம், மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட பல மாதிரிகளையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ''பயனில்லாத போலீஸ் பூத்கள் அகற்றுவது தொடர்பாக ஏற்கனவே போலீஸ் துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரவுண்டானாக்களை பராமரிக்கவும், புனரமைப்பு செய்யவும் அரசு அல்லது தனியார் அமைப்புகள் முன்வரும் போது, அப்பகுதி போலீஸ் பூத்கள் அகற்றப்படும். நகரை அழகுபடுத்த ஆர்வம் உள்ள தனியார் நிறுவனங்கள் மாநகராட்சியை தொடர்பு கொள்ளலாம்,'' என்றனர்.

Source: Dinamalar
IdeaMaster no está en línea   Reply With Quote
Old April 12th, 2017, 04:23 PM   #12868
esma
Registered User
 
Join Date: Aug 2011
Location: Madurai
Posts: 230
Likes (Received): 118

Corporation has mega plans for waste management.

Focus is on improving the area around Meenakshi temple
The civic body has rolled out mega plans for handling its ever increasing garbage, which currently revolved around 650 to 700 tonnes a day.

Roping in state-of-the-art technology from the country’s premier institution — IIT-Madras —, officials have planned to introduce “cycle-activated sludge technology,” with which recycling is possible to a great extent after treatment without affecting the environment.
Recently, technocrats, accompanied by the civic body’s engineers, visited the Avaniapuram and Sakkimangalam sites, near here, where segregation of waste is being done.

Suggesting transformation from the British instituted “French Drainage Treatment System,” the officials were told about the need for preserving the environment and lessen pollution. Right from modernisation of fleets to improvement of transfer station and compost yard figured in the discussions, officials said.

Presently, Madurai Corporation spends close to ₹40 lakh every month in lifting garbage from across the 100 wards.

Though the national average of per capita garbage generation is around 400 grams, the Madurai Corporation claims that it lifts 425 grams per person.

It deploys 2800 conservancy workers and transports garbage in 150 vehicles, including trucks, push carts and tri-cycles from different locations.

Speaking to The Hindu, Corporation Commissioner Sandeep Nanduri said that for segregation purpose, the Corporation had 32 acres of land on the outskirts, but considering the rise in population and newly added wards, an additional 119.27 acres of land had been identified.

After the Corporation expanded from 72 to 100 wards by adding extension areas, its jurisdiction too had expanded from 51.82 square kilometres to 147.99 square kilometres, he added.

Stakeholders’ support


With the Smart City project taking shape, focus is now on improving the area around the Meenakshi Temple. The civic body has planned to introduce not only eco-friendly toilets, but state-of-the-art technology in disposing garbage. “The dumper bins are to be placed underground, so that there is less scope for pollution. Only when the devotees and shopkeepers cooperate, the objective will be fulfilled,” he said.

Special squads would be deployed round-the-clock to clear garbage in and around the Meenakshi Temple.

The authorities were also examining extension of night cleaning to streets situated close to the temple (Avanimoola, Chithirai and Masi Streets) so that movement of garbage hauling trucks is minimum during daytime.

Central funds


While the Union government will provide ₹100 crore as first instalment towards Smart City project and an equal sum is expected from the State government before this end of this fiscal, the civic body is also looking for funds from the Centre for the sewer project to cover newly added areas, for which a proposal for ₹229.36 crore had been submitted. “The project is expected to be approved soon,” a senior official in the accounts section said.

Not without problems


A section of the conservancy workers employed on contract basis have threatened to go on strike if their demands are not fulfilled soon. According to union representatives, wage agreement with different types of workers had been violated and they also alleged that there were malpractices.

For instance, a worker who was to get ₹450 per day, was getting ₹325 only. Similarly, a woman conservancy worker said that ₹4500 was credited to her account per month against ₹7500. Another worker said that she had not got her wages for the last three months.

Corporation officials, however, said that they had taken action against the contractor concerned and claimed that the issue would be sorted out soon.

http://www.thehindu.com/todays-paper...le17940861.ece
esma no está en línea   Reply With Quote
Old April 20th, 2017, 05:46 AM   #12869
Jeba
Registered User
 
Join Date: Oct 2016
Location: Madurai and Chennai
Posts: 108
Likes (Received): 88


Reply for my RTI:
[email protected] status - Fund allocation, the reason for non starter..
Current stage is with EFC.
__________________
Make Madurai Great Again ...
Jeba no está en línea   Reply With Quote


Reply

Tags
madurai, madurai city, madurai developments

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Related topics on SkyscraperCity


All times are GMT +2. The time now is 08:47 PM.


Powered by vBulletin® Version 3.8.11 Beta 4
Copyright ©2000 - 2017, vBulletin Solutions Inc.
Feedback Buttons provided by Advanced Post Thanks / Like (Pro) - vBulletin Mods & Addons Copyright © 2017 DragonByte Technologies Ltd.

vBulletin Optimisation provided by vB Optimise (Pro) - vBulletin Mods & Addons Copyright © 2017 DragonByte Technologies Ltd.

SkyscraperCity ☆ In Urbanity We trust ☆ about us | privacy policy | DMCA policy

Hosted by Blacksun, dedicated to this site too!
Forum server management by DaiTengu