search the site
 daily menu » rate the banner | guess the city | one on oneforums map | privacy policy | DMCA | news magazine | posting guidelines

Go Back   SkyscraperCity > Asian Forums > India > South > South India Projects > Tamil Nadu > Madurai



Global Announcement

As a general reminder, please respect others and respect copyrights. Go here to familiarize yourself with our posting policy.


Reply

 
Thread Tools
Old March 22nd, 2017, 08:13 AM   #12861
bikebullet72
Registered User
 
Join Date: Aug 2012
Posts: 10
Likes (Received): 9

How does one upload photos in this site ? Last week when i tried it was asking for an URL.
bikebullet72 no está en línea   Reply With Quote

Sponsored Links
Old March 22nd, 2017, 10:53 AM   #12862
Jeba
Registered User
 
Join Date: Oct 2016
Location: Madurai and Chennai
Posts: 122
Likes (Received): 100

13 மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க வேண்டும் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தல்

மதுரை: தென் இந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் சார்பில், வெள்ளி விழா மாநாடு மதுரையில் நடந்தது. அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் மணவாளன் தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் வீரபத்திரன் வரவேற்றார். மாநாட்டில் இயக்குநர்கள் சமுத்திரகனி, சீனு ராமசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பொதுச்செயலாளர் சிங்கராசு, மாநில தலைவர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். மாநாட்டில், எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க வேண்டும். இதனால், தென்னகத்தை சேர்ந்த 13 மாவட்ட மக்கள் பயன்பெறுவார்கள். இதுதொடர்பாக தொடர் போராட்டம் நடத்துவது. மதுரையில் நுகர்வோர் குறைதீர் ஆணையம் அமைக்க வேண்டும் அரசு தலையீட்டு சூடான உணவுப்பொருள்களை பாலிதீன் பைகளில் பார்சல் செய்யும் உணவு விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் கலாச்சாரம் மற்றும் கட்டிடம் தொடர்பான ஆராய்ச்சிகளை தொகுத்து நூலாக மதுரையில் வெளியிட வேண்டும். ரியல் எஸ்டேட் தொழிலை பாதுகாக்க தமிழக அரசு புதுச் சட்டம் கொண்டு வர வேண்டும். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் சீமைக்கருவேலம் மரத்தை முற்றிலும் அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Source:
http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=696908
__________________
Make Madurai Great Again ...

siva mdu liked this post
Jeba no está en línea   Reply With Quote
Old March 25th, 2017, 04:11 PM   #12863
athens of east
Registered User
 
Join Date: Nov 2007
Posts: 306
Likes (Received): 93

Quote:
Originally Posted by bikebullet72 View Post
How does one upload photos in this site ? Last week when i tried it was asking for an URL.
Upload pics in Flickr and copy the link from BBCODE and paste it in the message area.
athens of east no está en línea   Reply With Quote
Old March 30th, 2017, 03:03 AM   #12864
esma
Registered User
 
Join Date: Aug 2011
Location: Madurai
Posts: 272
Likes (Received): 167

தமிழக அரசின் அனுமதிக்காக காத்திருக்கும&a

தமிழக அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் நியூட்ரினோ ஆய்வகம்:

மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல்
தேனியில் நியூட்ரினோ ஆய்வுக் கூடத்துக்காக தேர்வு செய்யப்பட்ட இடம்.|

தமிழகத்தின் தேனியில் மத்திய அரசு அமைக்க முயலும் நியூட்ரினோ ஆய்வகம், தமிழக அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது. இந்த தகவலை மத்திய அணுசக்தித்துறை அமைச்சர் ஜிதேந்தர்சிங் இன்று மக்களவையில் தகவல் கூறியுள்ளார்.

இது குறித்து தனது எழுத்து மூலமாக தெரிவித்த பதிலில் அமைச்சர் ஜிதேந்தர்சிங் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு போதி மலையில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் பணியை துவங்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதற்காக, தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற கோரியிருந்தது. ஆனால், இந்த அனுமதி கிடைக்காமல் அது நிலுவையில் உள்ளது. தற்போது, இதன் மீது ஒரு நிபுணர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இதற்கான பொதுமக்கள் ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியரால் கடந்த ஜூலை 8, 2010-ல் நடத்தப்பட்டது. இதில் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 1200 பேர் கலந்து கொண்டனர். அதன் தொகுதி எம் எல் ஏ, துணை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் மற்றும் பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டனர். இதில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இந்திய நியூட்ரினோ ஆய்வக விஞ்ஞானிகள் பொறுமையுடன் விளக்கம் அளித்தனர். இதன் இறுதியில் பொதுமக்கள் அனுமதியுடன் அதன் ஆட்சியர் நியுட்ரினோ ஆய்வகத்தை அமைக்க ஆதரவளித்திருந்தார்.

மதுரை மற்றும் தேனியில் தங்கியபடி நியூட்ரினோ விஞ்ஞானிகள் பொட்டிபுரம் மக்களிடம் அவ்வப்போது ஆய்வகம் குறித்து உரையாடினர். அப்பகுதியை சுற்றியுள்ள பள்ளிகளிலும் இதன் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தும்

அறிவியல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தற்போது, இந்த ஆய்வகத்தை வேறு இடத்திற்கு மாற்றும் திட்டம் இல்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்டை மாநிலங்களில் இருந்து யாரும் அரசை அணுகவில்லை. எனினும், இதை எதிர்த்து இருபொதுநல வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. மதிமுக தலைவர் வைகோவால் மதுரை உயர் நீதிமன்ற கிளையிலும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் பிராந்தியதியக் கிளையில் ஜி.சுந்தர்ராஜனும் மனு அளித்துள்ளனர்.

இதில், தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் அனுமதி இன்றி தொடரக் கூடாது என உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. எனவே, கடந்த மே 22, 2015-ல் தமிழக அரசின் அனுமதிக்காக விண்ணப்பித்து காத்திருக்கிறோம். இந்த விஷயத்தில் தமிழக அரசு ஒரு நிபுணர் குழுவை கடந்த சில தினங்களுக்கு முன் அமைத்துள்ளது. பசுமை தீர்பாயத்திற்கு நீண்ட காலமாக தமிழக அரசின் மாசு கட்டுப்பாடு வாரியம் பதில் அளிக்காமையால் அதன் வழக்கு தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. இதன் நீதிபதி உத்தரவின்படி, எம்.ஒ.இ.எப் அளித்த மாசுக்கட்டுபாடு அனுமதி காலாவதியாகி விட்டதால், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த பதிலில் கூறியுள்ளார்.

http://m.tamil.thehindu.com/tamilnad...cle9606520.ece
esma no está en línea   Reply With Quote
Old March 30th, 2017, 09:26 AM   #12865
ANANTH
Registered User
 
Join Date: Oct 2007
Location: madurai, muscat, toronto
Posts: 4,621
Likes (Received): 1579

போதிய படுக்கை வசதியில்லாமல் கர்ப்பிணிகள், குழந்தைகள் தவிப்பு: முதல்வருக்காக காத்திருக்கும் ரூ.40 கோடியில் கட்டப்பட்ட சீமாங் கட்டிடம்

மதுரை அரசு ராஜாஜி மருத்து வமனையில் ரூ.40 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த தாய், சேய் மருத்துவக் கட்டிடம் (சீமாங் மருத்துவ நிலையம்) முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகைக்காக திறப்புவிழா காணாமல் காத்திருக்கிறது. கோடை வெயிலில் மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகள், குழந்தைகள் போதிய படுக்கை வசதி இல்லாமல் தவிக்கின்றனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்து வமனைக்கு மதுரை மட்டு மின்றி, தென் மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் நாளொன்றுக்கு 2,600 உள்நோயாளிகள், 9 ஆயிரம் வெளி நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். மொத்தம் 45 சிகிச்சை பிரிவுகள் செயல்படுகின்றன.

தினமும் 200-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் இங்கு நடக்கின்றன. 50 பிரசவங்கள் நடைபெறுகின்றன. ஆனால், மகப்பேறு சிகிச்சைப் பிரிவும், பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவும் போதிய அடிப்படை வசதியில்லாமல் மிகுந்த இடநெருக்கடியில் செயல் படுகின்றன.

இதற்காக ரூ.40 கோடியில் மருத்துவமனை வளாகத்தில் ஒருங்கிணைந்த தாய் சேய் மருத்துவச் சிகிச்சை மையம் (சீமாங் மையம்) கட்டப்பட்டு, திறப்புவிழாவுக்காக தயார் நிலையில் இருக்கிறது. ஆனால், திறப்பு விழாவில் பங்கேற்க முதல்வரும், சுகாதார அமைச்சரும் இன்னமும் ஒப்புதல் வழங்காமல் உள்ளனர். இதனால் கட்டி முடிக்கப்பட்டும் முதல்வரின் வருகைக்காக திறக்கப்படாமல் உள்ளது. தற்போது அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் வருகைக்கு ஏற்றார் போல் படுக்கைகள் இல்லாததால் நோயாளிகள் தவிக்கின்றனர்.

குறிப்பாக தாய், சேய் சிகிச்சை மையத்தில் அடிப்படை கட்ட மைப்பு வசதிகள் இல்லாமல் கோடை வெயிலில் கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இது ஒருபுறம் இருக்க, இடநெருக்கடி காரண மாக முழுமையான சிகிச்சை முடியும் முன்பே, வெளியேற அறிவுறுத்தப்படுகின்றனர். இதுகுறித்து மருத்துவமனை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சீமாங் மருத்துவ நிலையத்தில் ஒரே நாளில் 150 பிரசவங்களை கவனிக்கக்கூடிய அளவு வசதிகள் உள்ளன. 400 படுக்கை வசதிகள் உள்ளதால், இடநெருக்கடி என்ற பேச்சுக்கே இடமிருக்காது. அனைத்து வார்டுகளும் ஏசி வசதியுடன் நவீனப்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகள் இருக்கின்றன. மொத்தம் 6 மாடிகள் உள்ளன. 6-வது மாடியில் பச்சிளம் குழந்தை கள் சிகிச்சை பிரிவு செயல்பட உள்ளது.

மே முதல் வாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு வரவுள்ளார். அப்போது, இந்தக் கட்டிடத்தை அவர் திறந்துவைக்க வாய்ப்புள்ளது. எனினும், அது வரை காத்திருக்காமல் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவை மட்டும் ஏப்ரல் 15-ம் தேதி சீமாங் கட்டிடத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

http://tamil.thehindu.com/tamilnadu/...cle9607274.ece

CM has time only for visiting Parpana Agraharam in banglore but not for this. I really dont know why we need to have such formalities. Else, let him open it through video conference
__________________
Our Dead are never Dead to us, Until we have forgotten them
ANANTH no está en línea   Reply With Quote
Old March 31st, 2017, 10:35 PM   #12866
IdeaMaster
Registered User
 
IdeaMaster's Avatar
 
Join Date: May 2015
Location: Madurai, Bangalore
Posts: 319
Likes (Received): 142

மாநகராட்சி உபரி பட்ஜெட் தாக்கல் மத்திய அரசு நிதியை நம்பி திட்டங்கள்
மதுரை மாநகராட்சி 2017 -18 ம் ஆண்டின் பட்ஜெட்டில் 1.89 கோடி ரூபாய் உபரி பட்ஜெட் தாக்கல் செய்தது. கடந்த ஆண்டு 6 கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட்டில் தாக்கல் செய்தது. இந்த ஆண்டு தாக்கல் செய்யப் பட்டுள்ள உபரி பட்ஜெட்டில் முக்கிய திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசின் நிதியை நம்பி உள்ளது.

தனி அதிகாரி கமிஷனர் சந்தீப் நந்துாரி நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். துணை கமிஷனர் சாந்தி, நகர் பொறியாளர் மதுரம், நகர்நல அலுவலர் சதீஷ் ராகவன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
  • மாநகராட்சியின் மொத்த வரவு 2,543.76 கோடி ரூபாய். செலவினம் 2,541.87 கோடி ரூபாய். உபரி 1.89 கோடி ரூபாய்.
  • துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 247.56 கோடியில் பல பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் ஒரு பகுதியாக தற்போது 56 வார்டுகள் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாதவையாக உள்ளது. இதை 100 வார்டுகளாக மாற்றப்படும்.
  • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 1,342 கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 200 கோடி ரூபாய் பெறப்பட்டு மீனாட்சி அம்மன் கோயில் பகுதி மற்றும் தெப்பக்குளம் பகுதிகள் மேம்பாடு செய்யப்படும்..
  • மத்திய, மாநில அரசின் மானியத்தில் 320 கோடி ரூபாயில் வைகை அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் வழங்கும் திட்டம். அம்ரூட் திட்டத்தில் ஏற்கனவே உள்ள குடிநீர் வினியோகத்தை மறு சீரமைப்பு திட்டத்திற்கு 444 கோடி ரூபாய் மற்றும் விரிவாக்கப்பகுதிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் 617 கோடி ரூபாய்க்கு பாதாளசாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
  • 2.64 கோடி ரூபாயில் 5 பூங்காக்கள் மேம்படுத்தப்படும்.
  • நகரில் குடிசை பகுதிகளில் 58 கோடி ரூபாயில் குடிநீர் வினியோக திட்டம்.
  • ஓபுளாபடித்துறை, குருவிக்காரன் சாலையில் 45 கோடியில் புதிய பாலங்கள்,
  • மூன்றுமாவடியில் இருந்து தபால் தந்தி நகர் வரை 15 கோடி ரூபாயில் ரோடு உள்ளிட்ட பல திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

கமிஷனர் கூறியதாவது:
  • மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றிய பகுதிகளில் துாய்மை பணி செய்வதற்கு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் 11.36 கோடி ரூபாய்க்கு பணி ஒப்பந்தம் செய்துள்ளது. இப்பணிகள் இந்த ஆண்டு முடிக்கப்படும்.
  • 50 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்திகரிக்கும் திட்டம், குடியிருப்பு பகுதிகளில் பயோ காஸ் தயாரிப்பு, மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் உள்ளிட்ட திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
  • நகரில் கருவேல மரங்கள் 80 சதவீதம் தனியார் நிலங்களில் தான் இவை உள்ளது. உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  • நகரில் மாதம் முதல் ஞாயிறு நடத்தப்படும் ேஹப்பி ஸ்டிரீட் நிகழ்ச்சியில் ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
  • இந்த வாரம் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பாலிதீன்ன்தீன் தடை குறித்த விழிப்புணர்வு நடத்தப்படும், என்றார்.

Source: Dinamalar
IdeaMaster no está en línea   Reply With Quote
Old April 7th, 2017, 06:04 AM   #12867
IdeaMaster
Registered User
 
IdeaMaster's Avatar
 
Join Date: May 2015
Location: Madurai, Bangalore
Posts: 319
Likes (Received): 142

மதுரை நகர் ரவுண்டானாக்களின் தோற்றம் மாறுகிறது....! நீரூற்று, கலைச்சிற்பங்கள் அமைக்க திட்டம்
மதுரை நகர் ரவுண்டானாக்களில் பயனின்றி இடத்தை வீணடிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் பூத்களை அகற்றி, அங்கு நீரூற்றுடன் கூடிய புல்வெளிகள், கலைச் சிற்பங்கள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் புராதனமிக்க நகரங்களின் பட்டியல் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலும் மதுரை இடம்பெற்றுள்ளது. இதனால் மீனாட்சி அம்மன் கோயில் சார்ந்த பகுதிகளை அழகுபடுத்தும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக ரவுண்டானாக்களை அழகுபடுத்தும் நடவடிக்கைகள் துவங்கி உள்ளன.இதுவரை இத்திட்டத்தில் 9 வங்கிகள் மற்றும் ஒரு மருத்துவமனை குறிப்பிட்ட
சில ரவுண்டானாக்களை அழகுபடுத்தி தொடர்ந்து பராமரிக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன் ரவுண்டானாக்களில் போலீஸ் பூத்கள் தொடர்ந்து அமைக்கப்பட்டன. சில பூத்கள் தவிர மற்றவை வீணாக உள்ளன. இதை மாநகராட்சி கணக்கெடுத்துள்ளது. இவற்றை அகற்றி, நீரூற்றுடன் கூடிய புல்வெளிகள் மற்றும் கலைச்சிற்பங்கள் அமைக்க முடிவு செய்துள்ளது.

இதே போன்று ஆரப்பாளையம் வைகை ஆற்றுப்பாலம் பகுதியில் மெகா ரவுண்டானா அமைக்கப்பட்டு வருகிறது. இதில் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையப்படுத்தும் வகையில் காளை மற்றும் அதனை அடக்கும் வீரரின் சிலை அமைக்கப்படுகிறது. தவிர, சில ரவுண்டானாக்களில் பத்து துாண், மகால், காந்திமியூசியம், மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட பல மாதிரிகளையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ''பயனில்லாத போலீஸ் பூத்கள் அகற்றுவது தொடர்பாக ஏற்கனவே போலீஸ் துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரவுண்டானாக்களை பராமரிக்கவும், புனரமைப்பு செய்யவும் அரசு அல்லது தனியார் அமைப்புகள் முன்வரும் போது, அப்பகுதி போலீஸ் பூத்கள் அகற்றப்படும். நகரை அழகுபடுத்த ஆர்வம் உள்ள தனியார் நிறுவனங்கள் மாநகராட்சியை தொடர்பு கொள்ளலாம்,'' என்றனர்.

Source: Dinamalar
IdeaMaster no está en línea   Reply With Quote
Old April 12th, 2017, 04:23 PM   #12868
esma
Registered User
 
Join Date: Aug 2011
Location: Madurai
Posts: 272
Likes (Received): 167

Corporation has mega plans for waste management.

Focus is on improving the area around Meenakshi temple
The civic body has rolled out mega plans for handling its ever increasing garbage, which currently revolved around 650 to 700 tonnes a day.

Roping in state-of-the-art technology from the country’s premier institution — IIT-Madras —, officials have planned to introduce “cycle-activated sludge technology,” with which recycling is possible to a great extent after treatment without affecting the environment.
Recently, technocrats, accompanied by the civic body’s engineers, visited the Avaniapuram and Sakkimangalam sites, near here, where segregation of waste is being done.

Suggesting transformation from the British instituted “French Drainage Treatment System,” the officials were told about the need for preserving the environment and lessen pollution. Right from modernisation of fleets to improvement of transfer station and compost yard figured in the discussions, officials said.

Presently, Madurai Corporation spends close to ₹40 lakh every month in lifting garbage from across the 100 wards.

Though the national average of per capita garbage generation is around 400 grams, the Madurai Corporation claims that it lifts 425 grams per person.

It deploys 2800 conservancy workers and transports garbage in 150 vehicles, including trucks, push carts and tri-cycles from different locations.

Speaking to The Hindu, Corporation Commissioner Sandeep Nanduri said that for segregation purpose, the Corporation had 32 acres of land on the outskirts, but considering the rise in population and newly added wards, an additional 119.27 acres of land had been identified.

After the Corporation expanded from 72 to 100 wards by adding extension areas, its jurisdiction too had expanded from 51.82 square kilometres to 147.99 square kilometres, he added.

Stakeholders’ support


With the Smart City project taking shape, focus is now on improving the area around the Meenakshi Temple. The civic body has planned to introduce not only eco-friendly toilets, but state-of-the-art technology in disposing garbage. “The dumper bins are to be placed underground, so that there is less scope for pollution. Only when the devotees and shopkeepers cooperate, the objective will be fulfilled,” he said.

Special squads would be deployed round-the-clock to clear garbage in and around the Meenakshi Temple.

The authorities were also examining extension of night cleaning to streets situated close to the temple (Avanimoola, Chithirai and Masi Streets) so that movement of garbage hauling trucks is minimum during daytime.

Central funds


While the Union government will provide ₹100 crore as first instalment towards Smart City project and an equal sum is expected from the State government before this end of this fiscal, the civic body is also looking for funds from the Centre for the sewer project to cover newly added areas, for which a proposal for ₹229.36 crore had been submitted. “The project is expected to be approved soon,” a senior official in the accounts section said.

Not without problems


A section of the conservancy workers employed on contract basis have threatened to go on strike if their demands are not fulfilled soon. According to union representatives, wage agreement with different types of workers had been violated and they also alleged that there were malpractices.

For instance, a worker who was to get ₹450 per day, was getting ₹325 only. Similarly, a woman conservancy worker said that ₹4500 was credited to her account per month against ₹7500. Another worker said that she had not got her wages for the last three months.

Corporation officials, however, said that they had taken action against the contractor concerned and claimed that the issue would be sorted out soon.

http://www.thehindu.com/todays-paper...le17940861.ece
esma no está en línea   Reply With Quote
Old April 20th, 2017, 05:46 AM   #12869
Jeba
Registered User
 
Join Date: Oct 2016
Location: Madurai and Chennai
Posts: 122
Likes (Received): 100


Reply for my RTI:
[email protected] status - Fund allocation, the reason for non starter..
Current stage is with EFC.
__________________
Make Madurai Great Again ...
Jeba no está en línea   Reply With Quote
Old June 13th, 2017, 12:14 PM   #12870
kannadacheluva
Registered User
 
kannadacheluva's Avatar
 
Join Date: Feb 2016
Location: ಹೊಸೂರು / Hosur
Posts: 37
Likes (Received): 33

Mega neutrino lab likely to be in Vizag

The prestigious India-based Neutrino Observatory (INO) is likely to be located at Kothapalem village near Narsipatnam in Visakhapatnam district. A team of officials inspected a parcel of land in the village on Sunday. The state government has not yet officially announced the project as another site in Chittoor-Nellore region is also being scouted.

The new development comes in the wake of reports that the Centre has mooted to shift the INO site from its present location at Pottipuram village in Bodi West hills of Theni district of Tamil Nadu. The reports gained significance as the National Green Tribunal (NGT) recently suspended the clearance given by the Union ministry of environment and forests and climate change. The ambitious project mooted many years ago was scheduled to be operational by 2015. But due to environmental hurdles and strong opposition from locals, the project could not progress further.

According to reliable sources, the Centre is now looking for an alternative site in Andhra Pradesh and Karnataka. The AP government has reportedly agreed for location of the major scientific research centre in the state. As part of the process of identification of a suitable site, a team of officials including those from the revenue department inspected vacant parcels of land at Kothapalem village abutting the ecologically fragile Eastern Ghats. Local revenue officials are tight-lipped over the proposed project as it is likely to spark environmental controversy .

The INO is aimed at studying nuclear particles called neutrinos. It is an important area of research in particulate physics. The laboratory will be constructed at a level 1.3 km under the earth. It will ultimately have a 50,000 tonne magnet, the largest in the world. For comparison, the INO magnet will be four times bigger than the one now available in CERN, Switzerland, where experiments on the so-called God Particle are underway .

The proposed new location in AP is likely to kick off environmental controversy once again as the Eastern Ghats are highly fragile. An experimental nuclear reactor has already been proposed in Visakhapatnam.The controversy over location of a mega nuclear power plant in nearby Srikakulam district is yet to die down.

Source: http://timesofindia.indiatimes.com/c...w/59119959.cms
kannadacheluva no está en línea   Reply With Quote
Old June 15th, 2017, 10:56 AM   #12871
MaduraiMannan
Registered User
 
Join Date: Apr 2015
Posts: 214
Likes (Received): 130

நியுட்ரினோ திட்டத்தை ஆந்திராவுக்கு அனுப்பல.. இங்கேயேதான் இருக்கு.. திட்ட அதிகாரி விவேக் திட்டவட்டம்

சென்னை: தமிழகத்தில் நியுட்ரினோ திட்டம் கைவிடப்படவில்லை என்று நியுட்ரினோ திட்ட அதிகாரி விவேக் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் நியுட்ரினோ திட்டம் 1200 கோடி ரூபாய் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்பு தமிழகத்தில் எழுந்தது.

அதே வேளையில் இதற்கு அனுமதி பெறுவதில் தொடர்ந்து கால தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் ஆந்திராவிற்கு இந்தத் திட்டத்தை கொண்டு செல்ல ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து ஆந்திராவிற்கு இந்தத் திட்டம் சென்று விட்டதாக தகவல் பரவியது. இந்நிலையில், தமிழகத்தில் நியுட்ரினோ அமைக்கும் திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அதன் திட்ட அதிகாரி விவேக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தேசிய பசுமை தீர்ப்பாயம் சொன்னபடி சுற்றுச்சூழல் அனுமதிக்கு மீண்டும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரி விவேக் தெரிவித்துள்ளார். நியுட்ரினோ திட்டம் குறித்து தமிழக அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பதால் அதிகாரிகள் அரசின் முடிவிற்காக காத்திருக்கின்றனர். அதே போன்று தேனியில் திட்டத்தை நிறைவேற்ற நிலம் கையகப்படுத்துவதிலும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. அதனையும் தமிழக அரசு நீக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாகத்தான் ஆந்திராவிற்கு செல்லாம் என்று ஆலோசித்து வந்ததாகவும், ஆனால் தமிழகத்தில் இருந்து வெளியேற முடிவு எதுவும் எடுக்கவில்லை என்றும் அதிகாரி விவேக் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

http://tamil.oneindia.com/news/tamil...ra-286129.html
__________________

IdeaMaster, esma liked this post
MaduraiMannan no está en línea   Reply With Quote
Old June 16th, 2017, 04:36 AM   #12872
esma
Registered User
 
Join Date: Aug 2011
Location: Madurai
Posts: 272
Likes (Received): 167

Will Tamilnadu step in to retain INO ?

Will Tamil Nadu step in to retain INO?

Madurai: Scientists and academicians actively involved in preparatory work for setting up the India-based Neutrino Observatory (INO) at Pottipuram village in Bodi Hills in Theni district expressed regret that the project might move away from the Western Ghats to the Eastern Ghats in Andhra Pradesh.

Ever since the ministry of environment and forest gave approval for both environment and forest clearance for setting up the observatory at the proposed site on October 18, 2010, it has been running into serious trouble. “For the last two years, we have been waiting to get clearance from Tamil Nadu Pollution Control Board, for setting up the project on the site,” said Satyanarayana Bheesette, Scientific Officer (H), Tata Institute of Fundamental Research, Mumbai, to DC over the phone.

Satyanarayana Bheesette was part of a team which had inspected lands at Kothapalem village in the Eastern Ghats in Andhra Pradesh recently.

The khondalite rocks found in the Eastern Ghats were as harder and dense as Charnockite rocks of Bodi Hills, said the scientific officer admitting that the place was suitable for establishing an underground laboratory with a rock cover of around 1,200 m for non-accelerator based high energy and nuclear physics research.

The Indian government has sanctioned `1,600 crore for the project, but so far we couldn’t even begin the construction activities in the proposed site. “For instance, we have purchased 37 acres of land at Nagamalai Pudukottai near Madurai for setting up an Inter-institutional Centre for High Energy Physics from the Tamil Nadu Government, but the authorities have been delaying for the past few years to give approval for the construction of the centre,”

Meanwhile, Satyanarayana and his team had brought positive change in the mindsets of local communities and students through outreach programme they had conducted for the last 7 years in the southern districts. However, they faced a major blow after the Madurai high court bench restrained the Central government from commencing the work on the site till it gets clearance from the TNPCB in March 2015. It was followed by the National Green Tribunal southern bench order on March 20, 2017, directing the INO to file a fresh application for environmental clearance.

“We have filed a fresh application for environment clearance on June 1 following the new guidelines,” said Satyanarayana.

The scientists are not keen on shifting the project from TN after having spent years together doing ground work there. But the state government is not taking any positive steps to clear the files pending with TNPCB and other departments, he added

http://www.deccanchronicle.com/natio...etain-ino.html

Last edited by esma; June 16th, 2017 at 04:41 AM.
esma no está en línea   Reply With Quote
Old June 16th, 2017, 08:16 AM   #12873
madhan
Registered User
 
madhan's Avatar
 
Join Date: Jul 2007
Location: Chennai
Posts: 777
Likes (Received): 126

Horrible red tapism!! they should either say yes or no. dragging does not help
madhan no está en línea   Reply With Quote
Old June 23rd, 2017, 05:02 PM   #12874
jayak914
Registered User
 
Join Date: May 2010
Posts: 677
Likes (Received): 284

மதுரையில் விதைப்பந்து திருவிழா நடைபெறுமா?
jayak914 no está en línea   Reply With Quote
Old July 7th, 2017, 10:22 PM   #12875
jayak914
Registered User
 
Join Date: May 2010
Posts: 677
Likes (Received): 284

Bio Technology Center will be set up at Chennai and Madurai Kamaraj University.
__________________

hi2aravind liked this post
jayak914 no está en línea   Reply With Quote
Old July 20th, 2017, 01:11 PM   #12876
IdeaMaster
Registered User
 
IdeaMaster's Avatar
 
Join Date: May 2015
Location: Madurai, Bangalore
Posts: 319
Likes (Received): 142

முழுவீச்சில் நடைபெறும் உச்சப்பட்டி-தோப்பூர் துணைகோள் நகர் பணி
உச்சப்பட்டியில் மதுரை நகரின் துணைகோள்நகர் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. மதுரை மாநகரில் ஏற்பட்டு வரும் கடும்நெரிசலை போக்கும் வகையில் உச்சப்பட்டி- தோப்பூரில் பகுதியில் துணைகோள் நகரம் அமைக்கப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதற்காக திருமங்கலம் ஒன்றியம் உச்சப்பட்டி, திருப்பரங்குன்றம் ஒன்றியம் தோப்பூரில் 573.83 ஏக்கர் வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தினை தேர்வு செய்து கடந்த 2015ல் பணிகள் துவங்கின. துணைகோள் நகரின் திட்டமதிப்பீடு 289.3 கோடியாகும். மதுரை-விருதுநகர் நான்குவழிச்சாலையில் கப்பலூர் சிட்கோவிற்கு எதிராக ஆரம்பிக்கும் துணைகோள் நகரமானது உச்சப்பட்டி கிராமம் வழியாக சென்று தோப்பூரில் நான்கு வழிச்சாலையையொட்டி நிறைவடையும் வகையில் பணிகள் நடைபெற்றுவருகிறது. கப்பலூர் சிட்கோவிற்கு எதிராக உச்சப்பட்டி-தோப்பூர் துணைகோள்நகரம் என்ற பிரமாண்டமான போர்டு வைக்கப்பட்டு துணைகோள் நகரத்திற்கு செல்லும் சாலை துவங்குகிறது. 60 அடி சாலையாக இருபுறமும் 120 அடியில் நல்ல அகலமான சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தின் குறுக்கே மழைகாலங்களில் ஓடும் கட்டாற்றினை தடுக்காமல் அதன் போக்கிலே போக ஏதுவாக கட்டாறு செல்லும் பாதையில் இருபுறமும் இடம் ஒதுக்கப்பட்டு தடுப்புசுவர் கட்டப்பட்டுள்ளது.

தவிர மழைநீர் சேகரிப்பு, பாதாளசாக்கடை, கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த துணைகோள்நகரம் அமைய உள்ளது. மொத்தம் 9557 பிளாட்டுகள் இந்த நகரில் அமைகின்றன. இதில் 2000 பிளாட்டுகள் தோப்பூர் ஊராட்சியிலும் மீதமுள்ள 7557 பிளாட்டுகள் உச்சப்பட்டி ஊராட்சியிலும் அமைகின்றன. பொதுமக்கள், சிறுவர்களுக்கு பொழுபோக்க வசதியாக பிரமாண்டமான பூங்காவும் அமைய உள்ளது. மதுரையிலிருந்து திருமங்கலம் செல்லும் பஸ்களில் குறிப்பிட்ட பஸ்களை துணைகோள்நகருக்குள் வந்து செல்லவும் வீட்டுவசதி வாரியம் தமிழக அரசிடம் அனுமதி பெற்றுள்ளது. தற்போது சாலைபணிகள் மற்றும் வாறுகால் தடுப்புசுவர் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் பயனாளிகள் தேர்வு குழுக்கல் முறையில் நடந்து அதன்பின் துணைகோள் நகரில் வீடுகள் கட்டும் பணி துவங்கும் என வீட்டுவசதிவாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source: Dinakaran
__________________

hi2aravind liked this post
IdeaMaster no está en línea   Reply With Quote
Old July 24th, 2017, 04:36 AM   #12877
esma
Registered User
 
Join Date: Aug 2011
Location: Madurai
Posts: 272
Likes (Received): 167

Sivarakottai ryots feel sword of Damocles handing over their head

It has been a long fight for farmers of these villages to hold on to their farmlands that were earmarked for an industrial estate.

The sword of Damocles hangs over the heads of the farmers of about 1,500 acres for the last eight years. Their fear was again triggered last week, when Industries Minister M.C. Sampath announced in the Assembly that people of Usilampatti can make use of the ‘industrial park’ facility in Sivarakottai for their economic development.


He was responding to Usilampatti MLA P. Neethipathi who sought industrial estate in his economically-backward constituency. “We are shocked by the Minister’s statement on the proposed SIPCOT industrial estate on our farmland,” said M. Ramalingam president of District Farmers’ Welfare Association.

The then DMK Government proposed to set up the industrial estate on the farmland in Sivarakottai, Karisalkalampatti and Swamimallampatti under Kalligudi block in 2008.

Barren land, this?

“Is this a barren land?” asked an elderly farmer, S. Alagesan. “The entire State has seen crop failures for the third consecutive season now. But farming in our rain-fed region has not stopped in this period. After two or three successful harvests of millets and cotton in the last two seasons, even now all the farmers are ready with our lands ploughed to sow the seed in ‘Aadi Pattam’ (18th day of Tamil month Aadi),” he said.

Ploughing has given the vast tract of land here a picturesque look with the black cotton soil turning darker. “This is in sharp contrast to thousands of acres under Periyar-Vaigai irrigation system left untouched with wild growth, even 45 days after the scheduled irrigation season,” said former Joint Director of Agriculture A.J.A. Jeyasingh Gnanadurai.

Sivarakottai land is fertile with phosphorous and potash and more suitable for millets and minor millets. The farmers here grow about 18 varieties of crops, including millets, minor millets, pulses and cotton.

While paddy farmers under assured irrigation system had lost time, energy and money on failed crops, these farmers are making profit with repeated harvests owing to the practice of inter-cropping and crop rotation. “We have a wide range of crop that give yield from 60 days to 180 days — like green gram (60 days), black gram (65 days), Barnyard millet (90 days). Two spells of rain is enough to reap a good yield,” said another farmer, K. Chinnasamy (74).

“The black cotton soil has higher water retention capacity. The moisture content lasts for weeks even after one spell of showers,” Mr. Jeyasingh said. “None of the farmers have any borewell, well or even electric supply for lift irrigation. That shows how nature has blessed us with a fertile land,” Mr. Ramalingam said.

Contradicting claims

The farmers strongly feel that the very proposal of SIPCOT on farmland was flawed and contradicted the government’s own claims.

After having declared the land barren, the government has spent at least Rs. 4 crore on renovating some 10 ooranis and waterbodies in the proposed industrial unit site. Why should the government develop these ooranis in the secluded places?

In 2013-14, the State Agriculture Department had allocated handsome subsidy for raising ‘varagu’ on 300 acres of land in the these villages. It did not stop there. The government also gave subsidy for setting up a millet processing unit.

Besides, a few farmers, including Mr. Alagesan, received subsidy from the Forest Department to raise teak trees on over four acres in Sivarakottai. “If it is not fertile, why did the government spend so much on agricultural activities here,” Mr. Ramalingam asked.

Not only different crops grow here. The thick farms are breeding grounds for wildlife such as deer and wild boars. Their population is so high that the Forest Department has put up a caution board on the National Highway about “deer crossing.” Wild cats are also found here in large numbers, Mr. Ramalingam said.

Besides, thousands of goats, sheep and milch animals are dependent on this land. The government has given free goats to at least 300 beneficiaries in Sivarakottai alone. “If the land is taken away for industrial development, it will spell doom for us. Besides, where will the cattle and wild animals go?” farmer Adimoolam asked.

Millets promotion

With increased awareness among people of benefits of millets to fight diabetes and obesity, the demand for millets has grown. When the government itself was promoting millet cultivation, taking over a large tract of millet-growing land was tantamount to defeating its own agricultural policy, Mr. Jeyasingh said.

Mr. Adimoolam, who is also the secretary of a farmers’ group that runs the processing unit, said that after value addition to millets, income was doubled.

Water problem

Mr. Jeyasingh said the industrial park would not succeed as it envisaged drawing four million litres of water a day (MLD) from Vaigai river. “When Vaigai dam is struggling to meet even drinking water needs of the city, how can it reserve 4 MLD for the industrial estate. Then, what will happen to irrigation of double and single crop areas. We will oppose the project not only to save farmlands of Sivarakottai, but also to save farming in Madurai district per se,” he added.

Now or never

In the last eight years, the AIADMK has promised twice to restore the farmland to the farmers. But did not keep the promise.

“Former Chief Minister Jayalalithaa, during the 2006 election to the Assembly, promised us that the industrial park proposal will be scrapped. The then MLA M. Muthuramalingam raised the issue in the Assembly. But nothing happened,” Mr. Ramalingam said.

Then again in 2011, AIADMK candidate R.B. Udhayakumar promised the same. “On his successful election, he said Kalligudi block had given him ‘thai mama veetu seethanam’ as our people gave him votes en masse. To our delight, he became the Revenue Minister who can handle our land issue with full authority. We hope he keeps his word and save our livelihood,” Mr. Ramalingam said.

Not only different crops grow here. The thick farms are breeding grounds for wildlife such as deer and wild boars.

M. Ramalingam

President, District Farmers’ Welfare Association

The black cotton soil has higher water retention capacity. The moisture content lasts for weeks even after one spell of showers.



http://www.thehindu.com/todays-paper...le19339396.ece
esma no está en línea   Reply With Quote
Old August 20th, 2017, 07:06 AM   #12878
chandru1234
Registered User
 
chandru1234's Avatar
 
Join Date: Aug 2013
Location: Madurai, surat
Posts: 26
Likes (Received): 25

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்



‘வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது..’ நேரு காலத்தில் ஒட்டுமொத்த இந்தியாவுடன் ஒப்பிட்டு இப்படி உரிமைக்குரல் எழுப்பியது திமுக. கடந்த பத்து ஆண்டுகளாக தமிழகத்துக்குள்ளேயே, தெற்கு, வடக்கு பாரபட்சம் வளர்வதாக குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. அதைக் காதுகொடுத்துக் கேட்கத்தான் எந்தக் கட்சிக்கும் நேரமில்லை!

ஒரு பயணம் போதும்

தெற்கு எந்தளவுக்குப் பின்தங்கியுள்ளது என்பதை அறிய ஊர் ஊராகப்போய் ஆய்வு நடத்தவேண்டிய அவசியமில்லை. ஒரே ஒரு ரயில் பயணம் போதும். சென்னையிலிருந்து திருச்சி வரையில் இரட்டை ரயில் பாதையில் சூப்பர் ஃபாஸ்ட்டில் பயணிப்போர், அதே வேகத்தில் தெற்கே கன்னியாகுமரிக்கோ, ராமேஸ்வரத்துக்கோ போய்வர முடியாது. காரணம், இரட்டை ரயில் பாதை இடையிலேயே நின்றுவிடும். சென்னைக்குத் திரும்பிச் செல்ல, ஒரு மாதத்துக்கு முன்பே ரயிலில் முன்பதிவு செய்தால்தான் உண்டு.

சாலை மார்க்கமாக சென்னை - கன்னியாகுமரிக்கு நான்குவழிச் சாலையில் செல்வோர், மதுரைக்கு வந்ததும் ‘எங்கே ரோட்டக்காணோம்?’ என்று தேட வேண்டிய நிலை. காரணம் என்.எச் - 47-ல் மதுரையிலிருந்து திருமங்கலம் வரை சாலை துண்டு விழுந்துவிட்டது. இன்று நேற்றல்ல கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் சாலை இப்படித்தான் சபிக்கப்பட்டுக் கிடக்கிறது. சமீபத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத்தில், ‘தயவுசெய்து முதல்வர் அவர்கள், மதுரை ரிங்ரோட்டில் காரில் பயணிக்க வேண்டும்’ என்று திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கெஞ்சிக்கேட்டதன் அர்த்தம் நேரில் பார்த்தால்தான் புரியும்.

ப.சிதம்பரம் ஊருக்கே ரயில் இல்லை

திருச்சி - ராமேஸ்வரம் இருவழிச் சாலையும் கடந்த நான்கு வருடங்களாக காரைக்குடியைக் கடக்கமுடியாமல் நிற்கிறது. இத்தனைக்கும் இந்தப் பகுதியானது முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் பாராளுமன்றத் தொகுதிக்குள் வருகிறது. இதைவிட அவலம், ப.சிதம்பரத்தின் சொந்த ஊரான கண்டனூர் வழியாக காரைக்குடி - சென்னைக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணி வாஜ்பாஜ் காலத்தில் அறிவிக்கப்பட்டு, இன்னமும் பணிகள் முடிந்தபாடில்லை. சென்னை - கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரைச் சாலைகூட தென் மாவட்டங்களில் தேய்ந்தேதான் கிடக்கிறது.

சென்னை, கோவை, மதுரைக்கு ஒரே நேரத்தில்தான் மோனோ ரயில் திட்டத்தை அறிவித்தார் ஜெயலலிதா. சென்னையில் அது மெட்ரோ ரயில் திட்டமாக மாற்றப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. கோவைக்கும் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் தொடங்கிவிட்டன. மதுரையிலோ, ‘என்னது மோனோவா அப்படின்னா?’ என்று கேட்கிறார்கள் அமைச்சர்கள். தென் தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சேதுசமுத்திரத் திட்டத்தை அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் மத மற்றும் வெறுப்பரசியல் காரணமாக முடக்கிவிட்டன. ஆபத்தானவை என்று சொல்லப்படும் ஸ்டெர்லைட், கூடங்குளம் போன்ற திட்டங்களை மட்டும் நைசாக தெற்கே தள்ளிவிட்டவர்கள், எய்ம்ஸ் மருத்துவமனையை மட்டும் இழுத்துப் பிடிக்கிறார்கள்.

சென்னைக்கு அருகே இருந்திருந்தால், கொடைக்கானலும் குற்றாலமும் அகில இந்திய சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டிருக்கும். குமரி, தேனியின் பல கிராமங்கள் மாநில அளவில் சுற்றுலா முக்கியத்துவம் பெற்றிருக்கும். ராமநாதபுரமும் சிவகங்கையும் தொழில் பூமியாகியிருக்கும். சிவகாசி உலக வரைபடத்தில் இடம்பெற்றிருக்கும்.

வளர்ச்சிப் பணிகளைத்தான் செய்யவில்லை. பிரச்சினைகளையாவது கவனிக்கிறார்களா என்றால், அதுவும் கிடையாது. கம்பம் பகுதியில் கேரள ஆக்கிரமிப்பை மீட்க முயன்ற தமிழக வனத்துறை அதிகாரியை தமிழக அரசே தூக்கியடித்துவிட்டது. பிரச்சினைக்குரிய இடத்தை கேரள முன்னாள் முதல்வரே நேரில் வந்து பார்க்கிறார். தமிழகத்திலோ எதிர்க்கட்சிகளுக்குக்கூட அதற்கெல்லாம் நேரமில்லை. கேரளாவுடனான முக்கிய நதிநீர்ப் பிரச்சினைகளில் ஒன்றான, குமரி மாவட்டத்தின் நெய்யாற்றங்கரை பிரச்சினை மாநிலப் பிரச்சினையாக கருதப்படுவதேயில்லை. மேட்டூர் அணை தூர்வாரப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் மதுரை மாவட்ட விவசாயிகள், ‘இனி, உங்களை நம்பிப் பிரயோஜனம் இல்லை, வைகை அணையை எங்களிடமாவது ஒப்படைங்கள்; நாங்களே தூர் வாருகிறோம்" என்று ஆட்சியரிடமே ஆவேசப்பட்டிருக்கிறார்கள்.

அறிவிப்புகளுக்குப் பஞ்சமில்லை

மதுரையிலிருந்து மேலூர், திருப்பத்தூர் வழியாக காரைக்குடிக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என்று 2008 ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 2011 பட்ஜெட்டில் மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு புதிய ரயில் பாதை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதற்கு முன்பாகவே, ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு புதிய ரயில் பாதை அமைப்பதாக மத்திய அரசு வாக்குறுதி தந்தது. இதில் எந்தத்திட்டத்திற்கும் இன்னமும் அடிக்கல்கூட நாட்டப்படவில்லை. அதாவது பரவாயில்லை, மதுரை போடிநாயக்கனூர் இடையே அகல ரயில் பாதை அமைக்கப் போவதாகக் கூறி, ஏற்கெனவே இருந்த மீட்டர்கேஜ் பாதையை பிரித்துப்போட்டு 7 ஆண்டுகள் ஆகியும் எந்த வேலையும் நடக்கவில்லை.

மதுரைக்குத் தெற்கே செல்லச் செல்ல தமிழக அரசு மீதான அதிருப்தி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குமரி மக்களோ வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறார்கள். "1956-ல் குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது. தமிழர் என்பதற்காக, வெறும் 70 கிலோ மீட்டர் தொலைவில் தலைநகர் திருவனந்தபுரம் இருக்கிற கேரளத்தைவிட்டுவிட்டு, 700 கி.மீட்டர் தள்ளி தலைநகர் இருக்கிற தமிழ்நாட்டுடன் வந்திணைந்தோம். ஆனால், எங்களை மிக மோசமாக நடத்துகிறது தமிழக அரசு. பேருந்து விஷயத்தில்கூட தமிழக அளவில் ஓடி, உருக்குலைந்த ஓட்டை, உடைசல்களே இங்கே இயக்கப்படுகின்றன.

எல்லா விஷயங்களிலும் இப்படி புறக்கணிக்கப்படுவதற்கா உயிரைக்கொடுத்து தமிழகத்தோடு இணைந்தோம்?" என்று கொந்தளிக்கிறார்கள் குமரி மக்கள்!

ஏன் மவுனம் காக்கிறார்கள்?

புதிதாக தொழில் தொடங்க வரும் நிறுவனங்கள் அனைத்தும் சென்னையைச் சுற்றியே வட்டமடிக்கின்றன. அவர்களை தென் மாவட்டங்களுக்குத் தள்ள வேண்டியதும் அங்கே அவர்களுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதும் அரசின் கடமை. இதையெல்லாம் அரசு கவனத்தில் கொள்ளாததால் புதியவர்கள் தெற்கில் வரவே தயங்குகிறார்கள். ‘அங்கே தொழில் தொடங்கினால் சலுகைகள் தருகிறோம்’ என்ற அரசின் வாக்குறுதிகளிலும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.

சுவற்றில் தொங்கும் மாநில வரைபடத்தைப் பார்த்தால், தென் மாவட்டங்கள் சென்னைக்குக் கீழே ரொம்பக் கீழே கிடப்பதைப் போல தோன்றலாம். ஆட்சியாளர்கள், அதை மேஜையில் விரித்து வைத்துப் பார்த்தால்தான் உண்மை புரியும். குமரியைப் போலவே சென்னையும் விளிம்பில் உள்ள மாவட்டம் தான் என்று. இதெல்லாம் நன்றாகப் புரிந்திருந்தும், மத்திய, மாநில அரசுகளில் அங்கம் வகிக்கும் தென்மாவட்டப் பிரதிநிதிகளெல்லாம் ஏன் மவுனம் காக்கிறார்கள்?

தென் தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளில் சில..

1. சேது சமுத்திரத்திட்டம்

2. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை

3. மதுரை விமான நிலையத்திலிருந்து வெளி நாடுகளுக்கு<DP> சரக்கு ஏற்றுமதிக்கு அனுமதி.

4. மதுரை வடபழஞ்சி, நாங்குநேரி தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை முழுமையாக செயல்படுத்துதல்.

5. தென்காசி, திருநெல்வேலியில் சுற்றுச்சாலை. மதுரையில் வெளிவட்டச்சாலை.

6. ராமநாதபுரம் - திருச்சி நான்கு வழிச்சாலை. தென்காசி - மதுரை, தென்காசி - காவல்<DP>கிணறு, திண்டுக்கல் - கோவை நான்கு வழிச்சாலைகள்.

7. கன்னியாகுமரி ரப்பர் தொழிற்சாலை.மார்த்தாண்டத்தில் தேனீ ஆராய்ச்சி மையம்.

8. மதுரைக்கு மெட்ரோ ரயில். அனைத்து தென்மாவட்ட தலைநகரங்களில் இருந்தும்<DP> <DP>சென்னைக்கு நேரடி ரயில்.

9. வைகை, பாபநாசம் அணைகளைத் தூர் வாருதல்

10. மதுரை - தூத்துக்குடி தொழில் பெருவழிச்சாலை (இன்டஸ்ட்டிரியல் காரிடார்) திட்டம்

11. மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்கள், கேந்திரிய (அ) நவோதய

பள்ளிகள். ஆயுதத் தொழிற்சாலை உள்ளிட்ட மத்திய தொழில் நிறுவனங்கள்.

12. மதுரையில் மண்டல அறிவியல் மையம். குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, 13. தேனி, திண்டுக்கல், விருதுநகரில் மாவட்ட அறிவியல் மையங்கள்.

14. மலர் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் தோவாளையிலும்,

நிலக்கோட்டையிலும் சென்ட் தயாரிக்கும் தொழிற்சாலை.

15. நத்தம் அல்லது அழகர்கோவிலில் மாம்பழக்கூழ் தொழிற்சாலை.

16. மதுரையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம். மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக்கென நிரந்தர ஸ்டேடியங்கள்.

17. சிவகங்கை கிராஃபைட் ஆலை விரிவாக்கம். மானாமதுரை

சிப்காட்டில் தொழில் நிறுவனங்கள்.

18. ராமநாதபுரம் உச்சிப்புளியில் பயணிகள் விமான நிலையம்.

19. குமரி, கீழக்கரை, சிங்கம்புணரி பகுதிகளில் தென்னை நார் தொழிற்சாலைகள்.

20. கீழடியில் தொல்பொருள் துறையின் நிரந்தரக் கண்காட்சி மையம்.

21. ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல்லில் மருத்துவக் கல்லூரிகள்.

22. கடலாடி, கமுதி பகுதிகளுக்கு காவிரி தண்ணீர். விருதுநகர் மாவட்டம்

முழுமைக்கும் தாமிரபரணித் தண்ணீர்.

23. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்புத் தொழில் ஊக்குவிப்பு.

ராமேஸ்வரத்தில் அரசு கலைக்கல்லூரி.

24. கொடைக்கானலில் சுற்றுலா மேம்பாடு, ரோப் கார் திட்டம்.

25. ஒட்டன்சத்திரம் காய்கனி மார்க்கெட்டில் குளிர்பதனக்கிடங்கு அமைத்தல்.

மதுரை விமான நிலையமும் தொழில் வளர்ச்சியும்

தொழில் வளர்ச்சியில் தமிழகம் பின்தங்கியதுக்கு, 2 கோடி மக்களைக் கொண்ட 9 தென்மாவட்டங்களும் பின்தங்கியிருப்பதே முக்கிய காரணம். தென்தமிழகம் புறக்கணிக்கப்படுவதை தட்டிக்கேட்கும் அளவுக்கு துணிச்சலான ஆளுமையும் இங்கே இல்லை. இதுபற்றிப்பேசும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் முதுநிலைத் தலைவர் எஸ்.ரத்தினவேல், "அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்க்கவும் சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகரிக்கவும் மதுரையிலிருந்து வெளிநாடுகளுக்கு நேரடி விமான சேவை முக்கியம். அதற்கு, பிற நாடுகளுடனான இருவழி விமான சேவை ஒப்பந்தங்களில் மதுரை விமான நிலையத்தையும் சேர்க்கவேண்டும். அப்படிச் சேர்க்காததால், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், டைகர் ஏர்வேஸ், ஏர் அரேபியா உள்ளிட்ட பல வெளிநாட்டு விமான நிறுவனங்கள் மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகளில் இருந்து மதுரைக்கு நேரடிய விமான சேவையைத் தொடங்க முடியவில்லை. அந்த ஒப்பந்தத்தில் மதுரையைச் சேர்க்கவும், மதுரை விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி பெறவும் தமிழக எம்.பி-க்கள் கூட்டாக கடும் முயற்சியெடுக்க வேண்டும்." என்கிறார் அவர்.

மின் உற்பத்தி இங்கே, தொழிற்சாலைகள் எங்கே?

‘‘கூடங்குளம் அணு மின்நிலையம், நெல்லை, குமரி, தேனி மாவட்ட காற்றாலைகள், நெல்லை, தேனி மாவட்ட அணைக்கட்டுக்களில் செயல்படும் நீர்மின் நிலையங்கள், தூத்துக்குடி அனல் மின் நிலையம், ராமநாதபுரத்தில் வழுதூர் இயற்கை எரிவாயு மின்நிலையம் என தென்மாவட்டங்களில்தான் நிறைய மின் உற்பத்தி நடக்கிறது. ஆசியா விலேயே மிகப்பெரிய சூரியமின்சக்தி திட்டமும் அண்மையில் கமுதியில் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. உற்பத்தி மின்சாரத்தை தொலை தூரத்துக்கு கொண்டு செல்வதால் அதிகமான மின் இழப்பு ஏற்படும். இதைத் தவிர்க்க, அந்தந்த ஊர்களிலேயே அவற்றைப் பயன்படுத்தும் வகையில் தொழிற்சாலைகளை ஏற்படுத்துவதுதான் புத்திசாலித்தனம். இதன் மூலம் மின்சிக்கனம், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு என்று ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்கலாம் அரசு என்கிறார் மதுரை ‘மடீசியா’ மணிமாறன்.

சாதிக் கலவரங்கள் சொல்வது என்ன?

‘‘தென்மாவட்ட சாதிக் கலவரங்களின்போது அரசு அமைத்த விசாரணைக் கமிஷன்கள் எல்லாமே, 'போதிய வேலைவாய்ப்பின்மையும் கலவரங்களுக்கு முக்கியக் காரணம்' என்று திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்டியது. அப்படியிருந்தும் இதுவரையில் உருப்படியாக ஒரு தொழிற்சாலைகூட தென்னகத்தில் அமைக்கப்படவில்லை. பிறகு, யாரை ஏமாற்ற இந்த விசாரணைக் கமிஷன்களை அமைத்தார்கள் என்பதும் புரியவில்லை. நாங்குநேரி, வடபழஞ்சி தொழில்நுட்ப பூங்காக்கள் அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. கங்கை கொண்டான் தொழிற்பேட்டையில், ஏற்கெனவே நெல்லை மாநகரத்தில் இருந்த தொழிற்கூடங்கள்தான் செயல்படுகின்றனவே தவிர, புதிய, பெரிய நிறுவனங்கள் எதுவும் வரவில்லை. வீரவநல்லூர் கைத்தறி, சங்கரன் கோவில் விசைத்தறி என இங்கு காலங்காலமாக இருந்து வந்த தொழில்களும்கூட நசிந்துவிட்டன. நெல்லை மாவட்டத்தில் மட்டுமே 3 லட்சம் பேரும் ஒட்டுமொத்தமாக தென் மாவட்டங்களில் சுமார் 1 கோடிப் பேரும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பெயர்களைப் பதிவுசெய்துவிட்டு வேலைக்குக் காத்திருக்கிறார்கள்" என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் பாஸ்கரன்.

கேட்டது வர்த்தக துறைமுகம்: ஆனால் வந்தது?

குமரி மாவட்டம் குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைக்க வேண்டும் என்பதே குமரி மீனவர்களின் நெடுநாளைய கோரிக்கை. ஆனால், இனயத்தில் 28,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துறைமுகம் அமைக்க முயன்று வருகிறது மத்திய அரசு. அது வர்த்தக துறைமுகம் அல்ல. பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனையம். எனவே, இத்திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரம், வாழ்விடங்கள் அழியும் என்று மீனவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். "இத்திட்டத்தால் வேலைவாய்ப்பு எதுவும் கிடைக்காது என்பதால், இனயம் துறைமுக திட்டத்தை ரத்து செய்து இதனை குளச்சலிலேயே மேற்கொள்ள வேண்டும்" என்கிறார் தெற்கு எழுத்தாளர் இயக்க மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் திருத்தமிழ் தேவனார்.

தூத்துக்குடிக்கு ஒரே ரயில்

தொழில் மாநகரமான தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு ஒரே ஒரு ரயில்தான் இயக்கப்படுகிறது. லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு விழுவதும் இங்கிருந்து சென்னைக்கு டிக்கெட் கிடைப்பதும் ஒன்றுதான். "தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், வி.வி.டி. சிக்னல் மேம்பாலம் போன்ற திட்டங்கள் கிடப்பில் உள்ளன. கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், கப்பல் கட்டும் தளம், குலசேகரப்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் எல்லாம் அறிக்கைகளில் மட்டுமே இருக்கிறது. தமிழகத்தின் ஐந்தாவது பெரிய விமான நிலையமான, தூத்துக்குடி விமான நிலைய விரிவாக் கமும் கண்டுகொள்ளப்படவில்லை" என்கிறார் துத்துக்குடியைச் சேர்ந்த இந்திய நுகர்வோர் உரிமை அமைப்பின் தலைவர் ஆ.சங்கர்.

தேவை நெல்லை கோட்டம்

“கன்னியாகுமரி மாவட்டம் முழுவதிலுமான ரயில்வே வழித்தடங்களும், நெல்லை மாவட்டத்தின் ஒரு பகுதி வழித்தடங்களும் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் கீழ் உள்ளன. குமரியிலிருந்து சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரத்திலிருந்து சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் இவைகளின் வருவாய் ரயில்வே துறைக்கு பொன்முட்டையிடும் வாத்து. இந்த வருவாயை முழுமையாகப் பெற்றுக்கொள்ளும் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம், தமிழக ஆளுகையில் உள்ள ரயில் நிலையங்களின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோன்ற சிக்கல்கள் தீர, நெல்லை கோட்டம் உருவாக வேண்டும். அல்லது குமரி மாவட்ட ரயில்வே வழித்தடங்களை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும்” என்கிறார் குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம்.
chandru1234 no está en línea   Reply With Quote


Reply

Tags
madurai, madurai city, madurai developments

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Related topics on SkyscraperCity


All times are GMT +2. The time now is 09:31 AM.


Powered by vBulletin® Version 3.8.11 Beta 4
Copyright ©2000 - 2017, vBulletin Solutions Inc.
Feedback Buttons provided by Advanced Post Thanks / Like (Pro) - vBulletin Mods & Addons Copyright © 2017 DragonByte Technologies Ltd.

vBulletin Optimisation provided by vB Optimise (Pro) - vBulletin Mods & Addons Copyright © 2017 DragonByte Technologies Ltd.

SkyscraperCity ☆ In Urbanity We trust ☆ about us | privacy policy | DMCA policy

Hosted by Blacksun, dedicated to this site too!
Forum server management by DaiTengu