SkyscraperCity banner

101 - 108 of 108 Posts

·
Registered
Joined
·
11,050 Posts
Discussion Starter #103
ரயில்வே மேம்பால பணிகள் தீவிரம்: தேர்தலுக்குள் நிறைவு செய்ய அறிவுைர​


பொள்ளாச்சி;பொள்ளாச்சி, பாலக்காடு ரோட்டில், ரயில்வே மேம்பால கட்டுமான பணிகளை, சட்டசபை தேர்தலுக்கு முன்பாக நிறைவு செய்ய, பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.பொள்ளாச்சி --- பாலக்காடு ரோட்டில், வடுகபாளையம் பிரிவில், பொள்ளாச்சி -- போத்தனுார் ரயில்பாதை குறுக்கிடுகிறது. ரயில்கள் செல்லும் போது, கேட் அடைக்கப்படுவதால் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டது.மேலும், தமிழகம் -- கேரளாவை இணைக்கும், முக்கிய நெஞ்சாலை என்பதால், கனரக வாகன போக்குவரத்து அதிகமுள்ளது. போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வாக, ரயில்பாதையை கடந்து செல்லும் வகையில் மேம்பாலம் கட்டப்படுகிறது. கடந்த, 2019 செப்., மாதம் மேம்பால பணி துவங்கப்பட்டது. மொத்தம், 17.2 மீ., அகலத்தில் நான்கு வழிப்பாதை பாலமாக அமைக்கப்படுகிறது. பாலத்தின் இருபுறமும், 5.5 மீ., அகலத்தில் சர்வீஸ் ரோடும். அவற்றையொட்டி, 1.5 மீ., அகலத்தில் வடிகாலும் அமைக்கப்படுகிறது. இதன் திட்ட மதிப்பு, 55.17 கோடி ரூபாயாகும்.பணிகள் துவங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அவ்வழித்தடத்தில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. பாலக்காட்டு ரோட்டில் இருந்து பொள்ளாச்சி வரும் வாகனங்கள், மாற்று வழியே சுற்றி வருகின்றன. மேலும், ஒன்றரை கி.மீ., தொலைவுக்கு அமைந்துள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், விரைவில் சட்டசபை தேர்தல் வர உள்ளதால், பொதுமக்களின் அதிருப்தியை போக்க, தேர்தலுக்கு முன் பாலம் கட்டுமான பணிகளை முடிக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு, ஆளுங்கட்சி தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப பணிகள் தீவிரப்படுத்தியுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

·
Registered
Cbe Citizen
Joined
·
267 Posts
திண்டுக்கல் அதிவிரைவு சாலை பணி மெல்ல நடக்குது!இரு மாவட்ட எல்லையில் விரிவாக்கம்
1088083

பொள்ளாச்சி:பொள்ளாச்சி - திண்டுக்கல் இடையிலான, 3,649 கோடி ரூபாய் மதிப்பிலான, நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான திட்டப்பணிகள், பொள்ளாச்சி, உடுமலை பகுதியில் மித வேகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், குறித்த காலக்கெடுவுக்குள் பணி நிறைவடைவது கேள்விக்குள்ளாகியுள்ளது.மத்திய அரசின், 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தின் கீழ், கடந்த, 2018ல், பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் இருந்து, திண்டுக்கல் கமலாபுரம் வரையில், 131.96 கி.மீ.,க்கு நான்கு வழி அதிவிரைவு சாலை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.இத்திட்டத்தில் போக்குவரத்து நெரிசல், விபத்துகளை தவிர்க்கும் வகையில், 106.693 கி.மீ., (80 சதவீதம்) புறவழிச்சாலையாக அமைக்கப்படுகிறது. பழநி சண்முகநதி மற்றும் அமராவதி ஆறுகளை கடக்க, இரண்டு உயர் மட்ட பாலங்கள், இரண்டு ரயில்வே பாலங்கள், 46 சிறு பாலங்கள், 490 மிகச்சிறு பாலங்கள் அமைக்கப்படுகின்றன.இதில், சாலையை கடந்து, விளைநிலங்களுக்கு பாசன குழாய் கொண்டு செல்ல, ஒவ்வொரு, 250 மீ., இடைவெளியிலும், 600 மி.மீ., விட்டத்தில், குழாய்கள் அமைக்கப்படுகின்றன. 47 கி.மீ.,க்கு அணுகுசாலை, 146 பஸ் ஸ்டாப்கள், நான்கு கனரக வாகன ஓய்விடங்கள் அமைக்கப்படுகின்றன.நான்கு வழிச்சாலையில், கிராம சாலைகள் குறுக்கிடும் இடங்களில், மேம்பாலங்கள் அமைக்கப்படுவதால், போக்குவரத்து குறுக்கீடு, விபத்துகளுக்கான வாய்ப்பு தவிர்க்கப்படும். சாலை அமைக்கப்பட்ட பின், கோவை - மதுரை இடையிலான பயண நேரம், இரண்டு மணி நேரமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இத்திட்டம், மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, தனியாருக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. அரசு, 40 சதவீதம்; தனியார், 60 சதவீதம் என்ற பங்களிப்பில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒட்டுமொத்த திட்ட மதிப்பு, 3,649 கோடி ரூபாய். திட்ட பணிகள் கடந்த, 2019 மார்ச்சில் துவங்கியது.பணி நடக்கும் கால கட்டம், இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, முதல் ஆறு மாதங்கள், கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் உள்ள மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள், குடிநீர் குழாய்கள், மரங்கள் அகற்றப்படும். கட்டுமான பொருட்கள் தயாரிப்பு மற்றும் தரப்பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.அடுத்த இரு ஆண்டுகளில், சாலை அமைப்பு, பாலங்கள் கட்டுமான பணி மேற்கொள்ளப்படும் என, தெரிவித்தனர். ஆனால், பணி துவங்கிய இரண்டு ஆண்டுகள் நெருங்கியும், பொள்ளாச்சி பகுதியில் அதிவிரைவு சாலை பணிகளில் முன்னேற்றம் காணப்படவில்லை. தற்போது, கோமங்கலம், கோலார்பட்டி பகுதிகளில் ரோட்டின் பக்கவாட்டு பகுதிகள் விரிவாக்கப்பட்டு, மின்கம்பிகள் ரோட்டை கடந்து செல்ல 'பேபி டவர்'கள் அமைக்கப்படுகின்றன.இந்த வேகத்தில் பணி நடந்தால், அதிவிரைவுச்சாலை பயன்பாட்டுக்கு வர, மேலும் சில ஆண்டுகளாகும் என தெரிகிறது.பணியில் சிக்கலும் இருக்கு!பொள்ளாச்சி - திண்டுக்கல் அதிவிரைவுச் சாலை பணிக்காக, பொள்ளாச்சி தாலுகாவுக்கு உட்பட்ட, 10 கிராமங்களில், 259 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. அதில் உள்ள, 10,095 தென்னைகள் உட்பட, 11,936 மரங்கள், நுாற்றுக்கணக்கான வீடுகள், தொழிற்சாலைகள், கட்டடங்கள் அகற்றப்பட வேண்டியுள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி, உடுமலையை சேர்ந்த, 23 விவசாயிகள், பணிக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.வழக்கு முடிவடையும் வரை, சம்பந்தப்பட்ட, 23 பேர் நிலங்களில் பணி மேற்கொள்ள நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே, திட்டப்பணி குறித்த காலத்துக்குள் நிறைவு பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.

திண்டுக்கல் அதிவிரைவு சாலை பணி மெல்ல நடக்குது!இரு மாவட்ட எல்லையில் விரிவாக்கம்
 

·
Registered
Cbe Citizen
Joined
·
267 Posts
மேற்கு புறவழிச்சாலை திட்டப்பணிகள் துவக்கம்: நகர நெரிசல் குறையும் என எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி;பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலை திட்டப் பணிக்காக, கிராம ரோடுகளை அகலப்படுத்தும் பணி துவங்கியுள்ளது.பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கிழக்கு மற்றும் மேற்கு புறவழிச்சாலை திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதில், சில ஆண்டுகளுக்கு முன், கிழக்கு புறவழிச்சாலை திட்டப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு, தற்போது பயன்பாட்டில் உள்ளது.அடுத்ததாக, மேற்கு புறவழிச்சாலை, மீன்கரை ரோடு, பாலக்காடு ரோட்டின் வழியே, நகரில் நுழைந்து கோவை ரோட்டுக்கு செல்லும் வாகனங்கள், நகருக்குள் செல்லாமல், கோவை ரோட்டை அடையும் வகையில் திட்டமிடப்படப்பட்டது.ஆ.சங்கம்பாளையத்தில் கோவை ரோடு, ஆர்.பொன்னாபுரம் பிரிவில் வடக்கிபாளையம் ரோடு, நல்லுார், ஜமீன் ஊத்துக்குளியை இணைக்கும் வகையில், 8.90 கி.மீ.,க்கு அமைக்கப்படுகிறது.இந்த வழித்தடத்தில் உள்ள கிராமத்து ரோடுகளை, 3.5 மீட்டர் அகலத்தில் இருந்து, 16 மீட்டர் அளவுக்கு அகலப்படுத்தி, புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதில், 10 மீட்டருக்கு ரோடு, இரு பக்கமும் தலா, 3 மீட்டருக்கு வடிகால் அமைக்கப்படுகிறது. இதற்காக, தனியார் நிலம், 32,408 சதுர மீட்டர்; புறம்போக்கு நிலம், 89,397 சதுர மீட்டர் கையகப்படுத்தப்பட்டது.இதன் திட்ட மதிப்பு, 50.35 கோடி ரூபாய் ஆகும். நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்து, கடந்த மாதம் பூமி பூஜை நடத்தப்பட்டது. தேர்தல் நெருங்கும் நிலையில், பணிகளை உடனடியாக துவங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக, கிராம ரோடுகளை தோண்டி அகலப்படுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது.நெடுஞ்சாலை துறை திட்டங்கள் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் இப்பணி, ஆறு மாதங்களுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ரோடு பயன்பாட்டுக்கு வந்தால், நகருக்குள் வாகன நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

·
Registered
Cbe Citizen
Joined
·
267 Posts
பொள்ளாச்சியில் ரூ.9 கோடியில் தென்னை நார் கூட்டுக்குழுமம்: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி துவக்கினார்

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், ஒன்பது கோடி ரூபாய் மதிப்பிலான பாரம்பரிய பொருட்கள் உற்பத்தி செய்யும், தென்னை நார் கூட்டுக் குழுமத்தை, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி காணொளியில் துவக்கி வைத்தார்.மத்திய அரசு, தென்னை நார் உற்பத்தியாளர்கள் அடங்கிய கூட்டுக்குழுமங்கள் துவங்கி, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க மானியம் வழங்குகிறது. தமிழகத்தில், ஒன்பது கூட்டுக்குழுமங்கள் துவங்க அனுமதி அளிக்கப்பட்டது.இதில், பல்லடம், காங்கேயம் கூட்டுக்குழுமங்கள் செயல்படுகின்றன. பொள்ளாச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, ஈத்தாமொழி, சேலம், தர்மபுரி கூட்டுக்குழுமங்கள் துவங்க மானியம் வழங்கப்பட்டது. ஏழு குழுமங்களின் மொத்த திட்ட செலவு, 29.22 கோடி ரூபாய்.தமிழகத்தில் இந்த கூட்டுக்குழுமங்களை, மத்திய சிறு, குறு நடுத்தர தொழில்கள் மற்றும் சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, காணொளியில் துவக்கி வைத்தார்.பொள்ளாச்சியில் கூட்டுக்குழும துவக்க விழாவில் பங்கேற்ற, கயிறு வாரிய உறுப்பினர் கவுதமன் கூறியதாவது:பொள்ளாச்சியில் பாரம்பரிய கூட்டுக்குழுமம் மொத்தம், ஒன்பது கோடி ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்டுள்ளது. அதில், 5.75 கோடி ரூபாய் மானியமாக மத்திய அரசு வழங்கியுள்ளது. இதில், தென்னை நார் உற்பத்தியாளர் 52 பேர் உள்ளனர். இங்கு, கால் மிதியடி, காயர்ஓவன் ஜியோ டெக்ஸ்டைல்ஸ் தயாரிக்கப்படுகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும், 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.கயிறு வாரிய மண்டல அலுவலர் பூபாலன், கூட்டுக்குழுமம் தலைவர் பழனிசாமி, துணைத் தலைவர் நாகராஜன், செயலாளர் ஆதித்யா ஜெயராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
 

·
Registered
Cbe Citizen
Joined
·
267 Posts
அதிவிரைவு சாலை பணிக்கு தென்னை மரங்கள் அகற்றம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி - திண்டுக்கல் அதிவிரைவு சாலை பணிக்காக, கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களில், தென்னை மரங்களை வெட்டி அகற்றும் பணி நடக்கிறது.பொள்ளாச்சி - திண்டுக்கல் இடையே, 3,649 கோடி ரூபாய் மதிப்பிலான அதிவிரைவு சாலை அமைக்கும் பணிகளுக்காக, பொள்ளாச்சி பகுதியில் கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களில் இருந்து தென்னை மரங்களை வெட்டி அகற்றும் பணி வேகமடைந்துள்ளது.மத்திய அரசின், 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் இருந்து, திண்டுக்கல் கமலாபுரம் வரையில், 131.96 கி.மீ.,க்கு நான்கு வழி அதிவிரைவு சாலை அமைக்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.இந்த சாலை பணிகளுக்காக, பொள்ளாச்சி தாலுகாவுக்கு உட்பட்ட, 10 கிராமங்களில், 259 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. அதில் உள்ள, 10,095 தென்னை மரங்கள் வெட்டி அகற்றப்பட உள்ளன. தற்போது, திருப்பூர் - கோவை மாவட்ட எல்லையில் உள்ள, கோமங்கலம், கோலார்பட்டி பகுதிகளில் தென்னை மரங்களை வெட்டி அகற்றும் பணி தீவிரமடைந்துள்ளது. அடுத்தடுத்து, ரோடு அமையும் கிராமங்களில், ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலங்களில் உள்ள மரங்கள், கட்டுமானங்கள் அகற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
101 - 108 of 108 Posts
Top