Joined
·
1,303 Posts
மருதமலைக்கு வருது ரூ.5 கோடியில் புதிய பேருந்து நிலையம்..!
View attachment 541482
View attachment 541484
கோவை: மருதமலை அடிவாரத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல்லை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நாட்டினார்.
கோவையின் பிரதான சுற்றுலாத்தலங்களுள் ஒன்றாகத் திகழ்வது மருதமலை. முருகப்பெருமானின் கோவில் அமைந்துள்ள இந்த மலைக்கு தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்தும்,
அண்டை மா நிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு பேருந்து நிலையம் முறையாக இல்லாமல் சகதிக்குள் பேருந்துகள் சென்று வரும் சூழல் இருந்தது.
இந்த நிலையில், மருதமலை அடிவாரத்தில் ரூ.5 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமையவிருக்கிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
இதில், அமைச்சர் வேலுமணி கலந்து கொண்டு புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல்லை நாடினார்.
இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார் மற்றும் ஆறுக்குட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
![]()
மருதமலைக்கு வருது ரூ.5 கோடியில் புதிய பேருந்து நிலையம்..! - Newsclouds
கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களின் அனைத்து செய்திகள், தமிழக அரசியல், சினிமா உள்ளிட்ட அனைத்து செய்திகளையும் அறிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம். குழுவில் இணைய கீழே உள்ள இடுகையை கிளிக் செய்யவும். https://chat.whatsapp.com/BECRyb4cFcSLk2dVyBE1vu கோவை: மருதமலை அடிவாரத்தில் 5 கோடி...newsclouds.in
Many people asked for it. Many people had directly requested to SPV. Glad to see this news. High time to concentrate on tourism in any form.