SkyscraperCity banner

1001 - 1020 of 1046 Posts

·
The Boss
Joined
·
246 Posts
வெள்ளலூா் குளக்கரையில் பனை நாற்றுப் பண்ணை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கம்...

கோவை, வெள்ளலூரில் 280 ஏக்கரில் அமைந்துள்ள வெள்ளலூா் குளம் பொதுப்பணித்துறைற கட்டுப்பாட்டில் உள்ளது. இக்குளத்துக்கு நொய்யல் ஆறு மூலம் தண்ணீா் கிடைத்து வருகிறது. பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாமல் புதா்செடிகள் நிறைந்துக் காணப்பட்ட, இக்குளத்தை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மீட்டெடுக்கும் பணிகளில் ஈடுபட்டனா். வரத்துக் கால்வாய்களில் காணப்பட்ட ஆக்கிரமிப்பு, குளங்களில் முளைத்திருந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல் உள்பட பல பணிகளை மேற்கொண்டனா்.

இதன்பின் புத்துயிா் பெற்ற வெள்ளலூா் குளம் கடந்தாண்டு பருவமழையின் போது நிறைந்தது. தவிர வெள்ளலூா் குளத்தைப் பல்லுயிா்கள் பெருக்க மண்டலமாக உருவாக்கும் வகையில், குளக்கரையில் 4 ஆயிரம் மரக்கன்றுகள் அடா் நடவு முறையில் நடவு செய்யப்பட்டுள்ளன. கனிகள், பூக்கள், நிழல் தரக்கூடிய அனைத்து வகையான மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பனை மரம் வளா்ப்புக் குறித்த விழிப்புணா்வு அதிகரித்து வரும் நிலையில் பனை நாற்றுகள் உருவாக்கத் திட்டமிட்டு பனை நாற்றுப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றற களப்பணியில் 120 தன்னாா்வலா்கள் கலந்துகொண்டு 7 ஆயிரத்து 500 பனை விதைகள் நாற்று உற்பத்திக்காக பதியன் போடப்பட்டது.

More News:
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/sep/22/படம்-உண்டுவெள்ளலூா்-குளக்கரையில்-பனை-நாற்றுப்-பண்ணைகோவை-குளங்கள்-பாதுகாப்பு-அமைப்பு-உருவாக்கம்-3240006.html
 
·
The Boss
Joined
·
246 Posts
நனவாகிறது 60 ஆண்டு கனவு! ஆறாவது நீர் உந்து நிலைய பணி துவக்கம்

அன்னுார்:அத்திக்கடவு திட்டத்திற்கான, ஆறாவது நீர் உந்து நிலையம் அமைக்கும் பணிகள் அன்னுாரில் துவங்கின. இந்த திட்டத்திற்காக போராடிய ஆர்வலர்களும், அன்னுார் சுற்று வட்டாரப் பகுதி மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.என்றும் வற்றாத பவானி ஆறு பாய்ந்தும், கோவை மாவட்டத்தின் வடக்கு பகுதியான அன்னுார், காரமடை, எஸ்.எஸ்.குளம் ஒன்றியங்கள் வறட்சியின் பிடியில் தான் உள்ளன.
திருப்பூர், மாவட்டத்தின் வடக்கு பகுதி, ஈரோடு மாவட்டத்தின் மேற்கு பகுதி என, மூன்று பகுதிகளும் பருவ மழை இல்லாமல் வறண்டுள்ளன. நிலத்தடி நீர் மட்டம் 1,500 அடிக்கு கீழ் சென்று விட்டது.விவசாய பரப்பு, 20 ஆண்டுகளில் பாதியாக குறைந்து விட்டது. கால்நடை வளர்ப்பும் குறைந்து விட்டது. பல ஆயிரம் விவசாய தொழிலாளர்கள் விவசாய வேலையை விட்டு, 'ஸ்பின்னிங்' மில் மற்றும் திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு செல்கின்றனர்.அன்னுார் ஒன்றியத்தில், பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில், புதிதாக, 400 லே அவுட்கள் போடப்பட்டு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சைட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குளம், குட்டைகள், தடுப்பணைகள் நீர் இல்லாமல், விளையாட்டு மைதானங்களாக காட்சி தருகின்றன. இதற்கு தீர்வாக, அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என, கொங்கு மண்டல விவசாய அமைப்புகள், சர்வ கட்சியினர், மக்கள் தொடர்ந்து போராடினர்.இதன் விளைவாக மூன்று ஆண்டுகளுக்கு முன், 3.27 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதன்பின், கடந்த ஆண்டு, 1,562 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஜனவரியில் டெண்டர் விடப்பட்டது. எல் அண்ட் டி நிறுவனம் பிப்ரவரியில் வேலையை எடுத்தது. நான்கு மாதங்களாக சர்வே பணியில் ஈடுபட்டது.
தற்போது குழாய் அமைப்பதற்கான அடிப்படை பணிகள் துவங்கியுள்ளன.இந்த திட்டத்தில்

More News & Pictures:
https://www.dinamalar.com/news_detail.asp?id=2379110
 
·
The Boss
Joined
·
246 Posts
Coimbatore NGO desilts 50pc of Kunnathur lake; seeks more support

Kovai Kuzhangal Padukappu Ammaipu has restored the arid Kunnathur lake in a record four days, and is now looking for more support to complete the mission.A group engaged in the rejuvenation of water bodies has desilted about 50 per cent of the Kunnathur lake in a Coimbatore village with the aim of converting the banks into farmable land.

The Kovai Kuzhangal Padukappu Ammaipu (KKPA), a Coimbatore-based NGO of nearly 10,000 members, has been de-silting the lake in Kattampatti village in northern part of Coimbatore that has been arid for the past 30 years.T Suresh, a member of KKPA told The Covai Post, “There are three water sources to this canal, each about 6-6.5 kilometres long. We have cleared about 50 per cent of one of the water sources mostly through private donations.”He said the group put earth moving equipment on the job, enabling them to complete the task in four days, which otherwise would have taken longer.“This work of clearing canals throughout Coimbatore has been going on for 17 weeks,” Suresh said.He said, “The debris and silt after clearing has been piled up on both sides of the canal to be converted into farmable land and also strengthen the river banks.

This step is within the scope of work prescribed by the Coimbatore Corporation, he said.KKPA’s next step would be to canvass for more sponsors for complete de-silting of the remaining portions and the other two canals.“The northern part of Coimbatore is quite arid not like the southern part of the city”, whose water bodies are nourished by the Noyyal river and streams fed by periodic rains from the Western Ghats.
“Here, the groundwater tables are nearly 1,000 feet below the ground,” Suresh said.

More News & Pictures:
https://www.covaipost.com/coimbatore/coimbatore-ngo-desilts-50pc-of-kunnathur-lake-seeks-more-support/
 
·
The Boss
Joined
·
246 Posts
அன்னூர் அருகே வையாளிபாளையத்தில் குலம் வாழ... குளம் மீட்பு!

அன்னுார்:அரசின் குடிமராமத்து திட்டத்தில், ஊர் பொதுமக்களும் தன்னார்வலர்களும் இணைந்து பங்களிப்பு செலுத்தியதால், மழை நீர் வரும் பாதைகள் சீரமைப்பு; கரையின் உயரம், 4 அடி அதிகரிப்பு; குளத்திற்குள் நான்கு சிறு குளங்கள் அமைப்பு; பறவைகள் அமரும் வகையில் சிறு தீவுகளுடன் முன்மாதிரியாக மாறியுள்ளது, வையாளிபாளையம் குளம்.அன்னுார் ஒன்றியத்தின், வடக்கு எல்லை ஊராட்சி அக்கரை செங்கப்பள்ளி. இங்கு, 26 ஏக்கர் பரப்பளவுள்ள வையாளிபாளையம் குளம் உள்ளது.
இந்த குளத்திற்கு அருகிலுள்ள காரனுார், கரியனுார், வாக்கனாங்கொம்பு, ராமேகவுண்டனுார் ஆகிய ஊர்களிலிருந்து, பள்ளங்கள் வழியாக மழை நீர் வரும்.இந்த குளத்தில் நீர் நிரம்பினால், சுற்று வட்டாரத்தில் பல கி.மீ., துாரத்திற்கு நிலத்தடி நீர் மட்டம் உயரும். ஆனால் இக்குளம் துார்வாரப்பட்டு, 30 ஆண்டுகள் ஆகி விட்டது.இந்நிலையில், கடந்த ஆகஸ்டில், குடிமராமத்து மற்றும் நீர்வள ஆதாரம் பாதுகாப்பு திட்டத்தில், அரசு ஐந்து லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. இதையடுத்து, விவசாயிகள் கமிட்டி அமைத்தனர். ஆர்வமுள்ள உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் நிதி அளித்தனர்.இதையடுத்து, குளத்திற்கு மழை நீர் வரும் பாதையில் இருந்த முற்செடிகள், புதர்கள், மண் மேடுகள் அகற்றப்பட்டன. ஏற்கனவே ஒழுங்கற்று இருந்த கரை ஒழுங்குபடுத்தப்பட்டு, கரையின் உயரம் மேற்கே நான்கரை அடி உயரமும், மற்ற பகுதிகளில் மூன்றரை அடி உயரமும் அதிகரிக்கப்பட்டது. குளத்தில் இருந்த புதர்களும், மண் மேடுகளும் அப்புறப்படுத்தப்பட்டன. குளத்தின் நடுப்பகுதியில் மழை நீர் அதிகம் தேங்கும் வகையில், 130 அடி நீளமும், 110 அடி அகலமும், ஆறு அடி ஆழமும் கொண்ட சிறு குளம் ஏற்படுத்தப்பட்டது. மேலும் 50 அடி நீளமும், 30 அடி அகலமும் மூன்றரை அடி ஆழமும் கொண்ட மூன்று சிறு குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பறவைகள் அமரும் வகையில் சிறு தீவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.சிறந்த முறையில் புனரமைக்கப்பட்ட இந்த குளத்தில்,

More news & Pictures:
https://www.dinamalar.com/news_detail.asp?id=2388706
 
·
KCP Chandra Prakash
Joined
·
2 Posts
The mind-blowing transformation of Coimbatore - Ukkadam Lake

In Ukkadam Periyakulam the renovation work is progressing very fast as it has to be completed by end of December, Footpaths, Site seeing points for the public, seating’s for visitors are some highlights which can be seen from the ongoing work. It’s said that an Island has been planned in the center of the pool and the Island is all set to receive birds like Pelicans, Rosy Pelicans, Sarus cranes, Painted Stork etc. As the first phase of development, the renovation work has been started in an area of 1.2 KM in the pool and the proposed amenities include Children’s play area, boat rides, Canteen, and bicycle riding lanes for the public

·
Registered
Joined
·
198 Posts

I hope they plant a lot of trees along the banks.
 
·
cbe admirer
Joined
·
361 Posts
In Ukkadam Periyakulam the renovation work is progressing very fast as it has to be completed by end of December, Footpaths, Site seeing points for the public, seating’s for visitors are some highlights which can be seen from the ongoing work. It’s said that an Island has been planned in the center of the pool and the Island is all set to receive birds like Pelicans, Rosy Pelicans, Sarus cranes, Painted Stork etc. As the first phase of development, the renovation work has been started in an area of 1.2 KM in the pool and the proposed amenities include Children’s play area, boat rides, Canteen, and bicycle riding lanes for the public

All of the big cities are not blessed and surrounded with such wonderful water bodies but we are..Hope it will be designed and maintained well for a long period ...Hope it wont go wasted like singanallur ..
 
·
The Boss
Joined
·
246 Posts
பாழாகிப்போன சிங்காநல்லூர் படகுத்துறை: மூழ்கிப்போனது பல லட்சம் அரசுப்பணம்

கோவை சிங்காநல்லூர் படகுத்துறை 17 ஆண்டாக பயன்பாடின்றி முடங்கி கிடக்கிறது. மாநகராட்சி பணம் பல லட்சம் ரூபாய் வீணாகியுள்ளது. சுற்றுலா அனுபவிக்க முடியாமல் மாநகர மக்கள் அவதியடைந்துள்ளனர். கோவை நகரில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்று சிங்காநல்லூர் குளம். தமிழகத்தில் நகர்ப்புறங்களில் உள்ள பெரிய ஏரிகளுள் இதுவும் ஒன்று. சுமார் 288 ஏக்கர் பரப்பளவில் சோழர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட இந்த குளம், கோவையின் சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் அமைந்துள்ளது. இங்கு, நீர் காக்கை, நாமக்கோழி போன்ற பறவைகள் காணப்படுகின்றன. அக்டோபர் மாதத்தில் கூழைக்கடா பறவைகளும் வருகின்றன. 110-க்கும் அதிகமான பறவையினங்கள் இங்கு காணப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குளம் அமைந்துள்ள பகுதியில் தாவரங்கள், பறவைகள் உள்ளிட்ட 720 வகையான பல்லுயிர்கள் நிறைந்திருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, 396 வகை தாவரங்கள், 160 வகையான பறவைகள், 62 வகையான பட்டாம்பூச்சிகள், 22 வகையான பாலூட்டிகள் என பல்வேறு உயிரினங்கள் இந்த குளத்தை நம்பி உயிர் வாழ்கின்றன. கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. மிக முக்கியமாக 200 வகையான மூலிகை செடிகள், வெளிநாட்டு பறவையினங்கள் ஆகியவற்றுக்கு, சிங்காநல்லூர் குளம் அடைக்கலம் கொடுக்கும் பூமியாக உள்ளது. பல்லுயிர் பெருக்கத்தின் முன்மாதிரியாக திகழும் சிங்காநல்லூர் குளம், தமிழகத்தின் முதல் நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நொய்யல் ஆறு, இதன் நீராதாரமாக விளங்குகிறது. கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை இக்குளத்தை ஒட்டிச் செல்கிறது. மேலும், போத்தனூர்-இருகூர் இருப்புப்பாதை இக்குளத்தின் நடுவில் செல்கிறது. இக்குளத்தில், மழைநீர் நிறைந்திருக்கும் நாட்களில் மீன் பிடித்தல் நடக்கிறது.

சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, கோவை மாநகராட்சி சார்பில் கடந்த 2002ம் ஆண்டில் இங்கு முதல் முறையாக படகுத்துறை அமைக்கப்பட்டது. அழகான பூங்கா, நீரூற்று, குழந்தைகள் விளையாட்டு மைதானம் என பல்வேறு வசதிகளுடன் படகுத்துறை அமைக்கப்பட்டது. படகு சவாரி துவங்கிய சில நாட்களில், படகுத்துறை மூடப்பட்டது. பல லட்சம் ரூபாய் செலவில் அமைந்த இந்த படகுத்துறையை திடீரென மூடியதால் மக்கள் அதிருப்தியடைந்தனர். குளத்தில் முழு அளவில் சாக்கடை நீர் தேங்கியதால் துர்நாற்றம் வீசுவதாலும், ஆகாய தாமரைகள் படர்ந்து விட்டதாலும் படகு சவாரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது என மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மேற்கண்ட குறைகளை நிவர்த்தி செய்து, மீண்டும் மிதி படகு, மோட்டார் படகு என நடவடிக்கையை தொடர மாநகராட்சி அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை.

சாக்கடை நீரை நம்பி, பணத்தை கொட்டிய மாநகராட்சி நிர்வாகம், படகுத்துறையை மேம்படுத்த எந்த முயற்சியும் செய்யவில்லை. சமூக ஆர்வலர்களின் தொடர் கோரிக்கைக்கு பிறகு, கடந்த 2015ம் ஆண்டில், 29 லட்சம் ரூபாய் செலவில் குளத்தை சீரமைத்து, மீண்டம் படகு சவாரி துவக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த பணத்தை, ஆகாய தாமரை அகற்ற செலவிட்டதால், படகு சவாரி திட்டம் மீண்டும் முடக்கப்பட்டது.
இப்படகுத்துறை கடந்த 17 ஆண்டாக மூடிக்கிடக்கிறது. இங்கு, பகல் நேரத்தில் விபச்சார கும்பல் சல்லாப லீலைகளில் ஈடுபட்டு வருகிறது. போதை கும்பல் நடமாட்டமும் அதிகமாகி விட்டது. படகுத்துறை மூடப்பட்ட பின், சிங்காநல்லூர் குளம் ஆபத்தான பகுதியாக மாறிவிட்டது. குளத்தின் மறைவான பகுதியில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களும் நடக்கிறது. இதை தடுக்கும் வகையில், குளக்கரையில் வேலி போடப்பட்டுள்ளது.

More News & Pictures: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=534867
 
·
Registered
Joined
·
1,720 Posts

·
Coimbatore Well-Wisher
Joined
·
4,882 Posts
https://www.covaipost.com/coimbatore/ponds-revived-due-to-efforts-of-siruthuli-coimbatore/

Ponds revived due to efforts of Siruthuli, Coimbatore

The work on the revival of water bodies in Coimbatore was taken up with full vigour by the Siruthuli group, Coimbatore.

For the past two years the water bodies under the supervision of Siruthuli namely “Kumaran kuttai”, “Kannimaar kuttai”, and “Ayyan kuttai” are filled with water due to the south-west and the northeast monsoons.

According to Thangavelu, a farmer from Maadhampaati, “The Kumaran puddle had dried up for over 30 years and just remained as a heap of mud. It used to be sad to see it all drying up. The number of borewells has been increasing to meet agricultural demands. The groundwater level had begun to deplete. It was a very worrisome sight. There are 7 layers of water bodies spread over 9 acres.

Approximately 10 villages used to depend on those water bodies. After the revival work was taken up by Siruthuli, the depth of these water bodies has increased.

The river banks have been strengthened and around 60% has been filled up. Due to the rains, it is almost filled up completely. Can there be anything more than this to bring happiness to a farmer? There has also been an increase in the groundwater level.

This has made the region a very fertile land for agriculture and we remain indebted to Siruthuli”.

“This was possible because of the cooperation from the District administration. Honourable Minister S P Velumani who is in charge of development and special plans, has supported us in this mission, also deserves a special mention.

We are extremely grateful to him. The ponds Kumaran kuttai, Kannimaar kuttai and Ayyan kuttai are the resources for several villages. The soil in these parts is very fertile.

But as the ponds were not maintained, conservation and storage of water were not possible earlier. But now with the increase of rainfall and with the efforts of Siruthuli, the faces of the farmers are gleaming with happiness which brings a lot of satisfaction. Rs.70 lakhs was spent for desilting Kumaran Kuttai.

Furthermore, organisations like Robert Bosch Engineering India, Baker Huges Roots Organisation, Craftsmen automation, Rotary club of Coimbatore Metropolis, Maadhampatti Farmers Association rendered their financial support.

Wow ...Happy to see the fully filled Pond. Kudos to Siruthuli :cheer: Today most of organisations started to revive the lakes due to inspiration from Siruthuli & Kovail Kulagal.
 
1001 - 1020 of 1046 Posts
Top