SkyscraperCity banner

1041 - 1046 of 1046 Posts

·
The Boss
Joined
·
246 Posts
நொய்யல் தூர்வார ரூ.230 கோடி..


மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களின் வழியே, 151 கி.மீ., பயணித்து, காவிரியில் கலக்கிறது. நொய்யல் பயணிக்கும் வழியெங்கும், மழைநீர் வடிகால் வழியே சாக்கடை கழிவுநீர், சாயக்கழிவு நீர் கலக்கிறது.இத்துடன், ஆக்கிரமிப்பு, குப்பை கொட்டுதல் உள்ளிட்டவற்றால் வழித்தடங்கள் மாயமாகி, கனமழை காலங்களில் மட்டுமே தென்படக்கூடிய ஆறாக மாறி விட்டது.ஜீவ நதியாக விளங்கிய நொய்யலை மீட்டெடுக்க, அரசு ரூ.230 கோடி ஒதுக்கியுள்ளது. இது, விவசாயிகள் மத்தியில், மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதே சமயம், நிதி முறையாக பயன்படுத்தப்படுமா என்ற அச்சமும், அவர்களிடம் எழுந்துள்ளது.விவசாயிகள் சிலரின் ஆக்கப்பூர்வ கருத்துக்கள் இங்கே...!சும்மா துார்வாருவது வேஸ்ட்!நொய்யலை துார்வாரும் முன், 500 மீ.,க்கு, ஒன்று வீதம், பழைய நொய்யலின் அகலத்துக்கு தடுப்பு சுவர் கட்டினால், நொய்யல் பழைய நிலைக்கு திரும்பும். வெறுமனே துார்வாருவது வீண் செலவு. மத்திய அரசு உத்தரவின்படி, தன்னார்வலர்கள், சூழல் ஆர்வலர்கள் என, கூறிக் கொண்டு வருவோரை நிராகரித்து, அந்தந்த பகுதி விவசாயிகள் ஆதரவுடன், திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

More News: https://www.dinamalar.com/district_detail.asp?id=2462457
 

·
Coimbatore Well-Wisher
Joined
·
4,882 Posts
https://www.dinamalar.com/district_detail.asp?id=2462457

நொய்யல் தூர்வார ரூ.230 கோடி.. 'ஏப்பம்' விடாமல் இருந்தால் சரி!

பேரூர்:நொய்யல் ஆற்றை துார்வார அறிவிக்கப்பட்டுள்ள, ரூ.230 கோடியை லஞ்ச, லாவண்யங்களுக்கு இடமளிக்காமல், ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, நிதியை சூழல் ஆர்வலர்களிடம் ஒப்படைக்காமல், விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு, அரசே பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களின் வழியே, 151 கி.மீ., பயணித்து, காவிரியில் கலக்கிறது. நொய்யல் பயணிக்கும் வழியெங்கும், மழைநீர் வடிகால் வழியே சாக்கடை கழிவுநீர், சாயக்கழிவு நீர் கலக்கிறது.இத்துடன், ஆக்கிரமிப்பு, குப்பை கொட்டுதல் உள்ளிட்டவற்றால் வழித்தடங்கள் மாயமாகி, கனமழை காலங்களில் மட்டுமே தென்படக்கூடிய ஆறாக மாறி விட்டது.ஜீவ நதியாக விளங்கிய நொய்யலை மீட்டெடுக்க, அரசு ரூ.230 கோடி ஒதுக்கியுள்ளது. இது, விவசாயிகள் மத்தியில், மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதே சமயம், நிதி முறையாக பயன்படுத்தப்படுமா என்ற அச்சமும், அவர்களிடம் எழுந்துள்ளது.விவசாயிகள் சிலரின் ஆக்கப்பூர்வ கருத்துக்கள் இங்கே...!
...
 

·
Registered
Joined
·
1,090 Posts
https://www.dinamalar.com/district_detail.asp?id=2481378

சிங்காநல்லூர் குளத்துக்கு வாராயோ 'வான்மதி!'...பழம் அளித்து வரவேற்பு!கோவை:கோவை சிங்காநல்லுார் குளத்தில், பட்டாம்பூச்சிகளை வரவேற்று அவற்றின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பழங்களை தட்டுகளில் வைத்து தொங்க விட்டுள்ளனர். பள்ளி மாணவர்களுக்கு, இங்கு சூழல் பாதுகாப்பு குறித்த வகுப்பும் நடக்கிறது.கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட, சிங்காநல்லூர் குளம், பல்லுயிர் பெருக்கத்துக்கு ஆதாரமாக விளங்குகிறது.நொய்யல் ஆற்றின் நீராதாரத்தை கொண்டுள்ள இந்த குளம், 16-ம் நூற்றாண்டில் கொங்கு சோழர்களால், 288 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டதாகும். இந்த குளத்துக்கு, 100க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இளைப்பாற வருகின்றன. இதன் கரைகளில், 390 வகை தாவரங்கள் உள்ளன. இவற்றில், 200 மேற்பட்டவை மூலிகை செடிகள் என, அறியப்பட்டுள்ளன. 72 வகை பட்டாம்பூச்சிகளும், பூச்சி இனங்களும் குளக்கரையில் வாழ்கின்றன.இந்த குளத்தை ஆய்வு செய்த சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள், 720 வகையான பல்லுயிர்களுக்கு இக்குளம் வாழ்வாதாரமாக இருப்பதை கண்டறிந்தனர்.அதனால், சிங்காநல்லூர் குளத்தை பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக, கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், சிங்காநல்லூர் குளத்தை பாதுகாத்து, பல்லுயிர் பெருக்கத்துக்கு உகந்த குளமாக மாற்றும் வகையில், பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய, கியூப் எனும் சூழல் அமைப்பினர், பழத்தட்டுகளை தொங்க விட்டுள்ளனர். அந்த அமைப்பின் சதீஷ் மற்றும் வின்னி ஆகியோரிடம் பேசியபோது, 'பட்டாம்பூச்சி, தும்பி, உள்ளிட்ட பல பூச்சிகள், கனிந்த பழங்கள் அல்லது அழுகிய பழங்களில் இருந்து வெளியேறும் சாற்றை, விரும்பி உறிஞ்சி குடிக்கும். சர்க்கரை தண்ணீர், உப்பு போன்ற மினரல் சத்துள்ள பொருட்களையும் வைத்து இருக்கிறோம்.இதில் உள்ள ஊட்டச்சத்து, பூச்சிகள் பல்கி பெருக உதவும்' என்றனர். வாரத்தில் மூன்று நாட்கள், பள்ளி மாணவர்கள் இங்கு வந்து பார்வையிடுகின்றனர். அவர்களுக்கு சுற்றுச்சூழலியல் குறித்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விளக்கம் அளிக்கும், ஆரோக்கிய நிகழ்வும் இங்கு நடந்து வருகிறது.சிங்காநல்லுார் குளத்துக்கு, 100க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இளைப்பாற வருகின்றன.குளத்தின் கரைகளில், 390 வகை தாவரங்கள் உள்ளன. இவற்றில், 200 மேற்பட்டவை மூலிகை செடிகள் என, அறியப்பட்டுள்ளன. 72 வகை பட்டாம்பூச்சிகளும், பூச்சி இனங்களும் குளக்கரையில் வாழ்கின்றன. குளத்தை ஆய்வு செய்த சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள், 720 வகையான பல்லுயிர்களுக்கு, இக்குளம் வாழ்வாதாரமாக இருப்பதை கண்டறிந்தனர்.
 

·
The Boss
Joined
·
246 Posts
கொல்லப்படுகிறதா நொய்யல் ஆறு? கொத்து கொத்தாக சாகும் மீன்கள்

'கோவையின் முக்கிய நீராதாரமான நொய்யல் நதி இன்றைக்கு பிளாஸ்டிக் மற்றும் தொழிற்சாலை கழிவுகளால் மாசடைந்து காணப்படுகிறது. இதனால், நதி நீர் விவசாயத்திற்கு பயன்படாத நிலையில் உள்ளது. நதியின் வழித்தடத்தில் உள்ள நீர்நிலைகளில் வாழும் உயிரினங்கள் இறந்து மிதக்கின்றன. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.

சாயக்கழிவு, தொழிற்சாலைக்கழிவு மற்றும் ரசாயணக்கழிவுகளை நீரில் கலப்பது ஓர் முக்கிய காரணம். மற்றொரு காரணம், பாரம்பரிய மீன்களை தவிர்த்துவிட்டு, வளர்ப்பு மீன்களின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பது. அவை, அவ்வப்போது ஏற்படும் தட்பவெப்ப நிலை மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் இறந்துவிடுகின்றன என்கிறார் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இரா.மணிகண்டன்மேலும் அவர் ,நஞ்சுண்டாபுரம் தடுப்பணையில் மீன்கள் இறந்து மிதந்த காட்சி வேதனையளிப்பதாக இருந்தது. ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கணக்கானவர்கள் இணைந்து குளக்கரையில் கிடக்கும் திடக்கழிவுகளை அகற்றி வருகிறோம். ஆனால், நீர்நிலைகளில் சேரும் கழிவும் குப்பைகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது, நீரின் தரமும் குறைந்து கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த நதியின் கிளை ஓடைகளை ஒட்டி அமைந்துள்ள சாயப்பட்டறைகள் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும்' என்கிறார்

இந்த அமைப்பினர் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களையும், இளைஞர்களையும் ஒருங்கிணைத்து கோவை மாநகரில் உள்ள குளங்களை வாரந்தோறும் சுத்தம் செய்து வருகின்றனர்.

மீன்கள் இறந்து மிதந்த தடுப்பணையிலிருந்து நீர் மாதிரிகளை சேகரித்து சென்ற மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம், மீன்கள் இறந்ததற்கான காரணம் குறித்து கேட்டபோது, ”கோவையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நொய்யல் நதி மற்றும் அதன் ஓடையை ஒட்டி அமைந்திருந்த சாயப்பட்டறைகளும், ரசாயனத்தொழிற்சாலைகளும் அகற்றப்பட்டுவிட்டன,” என்றனர்

More Pictures & information : https://www.bbc.com/tamil/india-51428106
 
1041 - 1046 of 1046 Posts
Top