SkyscraperCity banner

19981 - 20000 of 20059 Posts

·
Registered
Joined
·
1,303 Posts
பசுமைக்கு 'பச்சைக்கொடி!' பக்கா கட்டமைப்பு ஏற்படுத்தி காத்திருக்கு ரயில்வே ஸ்டேஷன்

கோவை:இயற்கை, தொழில்நுட்பம், கட்டமைப்பு அம்சங்களுடன்,'பசுமை' சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ள கோவை ஸ்டேஷன், வருவாய் மட்டுமின்றி வளாக சுற்றுச்சூழலையும் பராமரித்து, 'சபாஷ்' பெற்றுள்ளது.சென்னைக்கு அடுத்தபடியாக சேலம் கோட்டத்தில், அதிக வருவாய் ஈட்டும் ஸ்டேஷனாக கோவை ஸ்டேஷன் உள்ளது.'ஏ1' அந்தஸ்து பெற்ற இந்த ஸ்டேஷன், ஐ.எஸ்.ஓ., 9001 தர மேலாண்மை சான்றிதழ், ஐ.எஸ்.ஓ., 14001 சுற்றுச்சூழல், ஐ.எஸ்., 18001 பாதுகாப்பு சான்றிதழ்கள் என மூன்றையும் தக்கவைத்துள்ளது.'கிரீன் ரேசியோ' (பசுமை தரம்) முனைப்பில், 2018ம் ஆண்டு முதல்,மழைநீர் சேகரிப்பு அமைப்பு, 'மியா வாக்கி' முறையில் மரம் நடுதல், 100 சதவீதம் எல்.இ.டி., விளக்குகள், சூரிய மின்சாரம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், குட்டி பூங்காக்கள்என ஏராளமான அம்சங்களைஏற்படுத்தி,பசுமை தரத்துக்கு தயாராகியுள்ளது கோவை ஸ்டேஷன்.இது குறித்து, சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:பசுமை தரம் என்பது ஸ்டேஷன் வளாகத்தில், ஆரோக்கியமான சுற்றுச்சூழல் ஏற்படுத்துவது, சமூக ரீதியாக பயணிகளிடம் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தும்நோக்கில் மேம்படுத்தப்படுவது. தெற்கு ரயில்வே, சேலம் கோட்டத்தில் எந்த ஸ்டேஷனும் பசுமை தரம் பெறவில்லை.கோவை ஸ்டேஷனில் சுத்தமான காற்றோட்டம், துாய்மை,பராமரிப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.தென்னக ரயில்வேயில் முதல் முறையாக, பார்வையற்றோருக்கு 'பிரெய்லி போர்டு' நிறுவப்பட்டது.ரயில் பெட்டிகளில்'பயோ டாய்லெட்' பொருத்தப்பட்டது.மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், முதியோர் சென்று வர தனி சாய்வு தளம், லிப்ட், எஸ்கலேட்டர் வசதி,பெண்களுக்கு பாதுகாப்பு, தாய்ப்பால் ஊட்டும் அறை என, ஏராளமான அம்சங்கள், இரு ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இதன் வாயிலாக, பசுமை தரத்துக்கும் மேலான அம்சங்களை உருவாக்கியுள்ள நிலையில், இதற்கான அமைப்பிடம் பசுமை தர சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். ஆய்வுக்கு பிறகு சான்று கிடைத்து விட்டால், கோவை ரயில்வே ஸ்டேஷனின் பெருமை, தேசிய அளவில் கொடி கட்டி பறக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

·
Registered
Joined
·
1,303 Posts
Nilgiris demand for medical college and hospital fulfilled: CM

Chief Minister Edappadi K. Palaniswami said here on Friday that the long-pending demand of the people of the Nilgiris for a medical college and hospital in the district had finally been met, with ₹.447.32 crore being sanctioned for its construction.


Addressing government officials and presspersons after a COVID-19 review meeting, Mr. Palaniswami said residents of the Nilgiris residents would no longer have to travel to neighbouring Coimbatore to get access to good healthcare.

He said 150 students would be enrolled in the medical college once it was constructed. The government was also looking at an air ambulance service.

Mr. Palaniswami said that following demands from the tea industry, a tea testing laboratory would be set up in the Nilgiris.

The Chief Minister said 800 houses had been constructed for residents who were repatriated from Sri Lanka, and 1,726 houses had been constructed for Adivasis in Gudalur at ₹ 15.7 crore. He inaugurated new buildings and projects and handed over welfare assistance worth ₹520 crore.

₹50 cr. for Udumalpet

In Tiruppur, Mr. Palaniswami said the State government will offer ₹50 crore to Udumalpet Municipality for the development of its infrastructure. The Chief Minister reviewed the COVID-19 precautionary measures and other projects that were under way in Tiruppur district.

Noting that Udumalpet is a historic town, he said the special fund will be used for facilities such as drinking water supply, street lights, underground drainage and parks. He also announced that the State government will take steps to install a statue of the Kangeyam bull at Kangeyam soon, a press release said. Following this, he met with the representatives of farmers, industrialists and self-help groups.

Apparel Export Promotion Council Chairman A. Sakthivel, who was one of the industry representatives at the meeting, said the Chief Minister had agreed to bring out a separate export policy for the State and to set up three industrial parks in Tiruppur district.

Prior to the review meeting, Mr. Palaniswami laid foundation stones for 12 new projects in Tiruppur district, including the Veterinary College and Research Institute in Udumalpet taluk.

The 12 projects that were under way in departments such as Department of School Education, Revenue and Disaster Management and Tamil Nadu Water Supply and Drainage Board were worth ₹ 287.39 crore, according to the release. He inaugurated projects worth ₹ 31.68 crore in departments including Animal Husbandry, Fire and Rescue Services and Health and Family Welfare Department and issued welfare assistance worth around ₹ 66.73 crores to 5,592 beneficiaries from the district.
 

·
Registered
Joined
·
224 Posts
I dont think there will be any issue for Metro on Avinashi road, even if Bridge is constructed now.

It seems there is possibility for new railway line from Irukur to connect with Coimbatore junction, which reduces the 5KM.

I got below link from the website.
https://www.morgenstadt.de/content/dam/morgenstadt/en/images/projects/coimbatore/Mobility City Lab Coimbatore.pdf

710155


Existing train line: Irukur to Coimbatore Via Peelamedu -17Km
New train Line: Irukur to Coimbatore Via New Line[near Vellalore]-12 Km [It is exisitng line connects irukur to Podanur, but line to laid before 1km of podanur junction]

So in this case, i beleive there is possbility for new train station near Vellalore which will be less than 3 Km from Vellalore bus stand. So all trains ending at coimbatore junction can stop at Vellalore and reach main junction. kerala trains can stop at Vellalore & skip main Junction. In this case all trains from/towards coimbatore junction will pass near Vellalore [12km].

And future Coimbatore airport international terminal is at L&T bypass road[Highways] which is 10.5Km from Vellalore bus stand. So in this case all Airport, bus stand and railway[Small terminal] can be within 10km. So traffic with the city will be reduced. And Metro/EMU train on Avinashi road can be on existing train track till irukur, as it will not be used by normal trains, once new route is executed. Mettupalayam train only will be using from Coimbatore North junction to Coimbatore junction, all trains will be towards Podanur[before 1km of Podanur junction route will turn towards irukur junction as per map]. As per google map, Its only vacant land on this route near exisitng track, so there will not be any issue on laying new track. I believe, Metro on Avinashi road and Mettupalayam road[Near existing track line] will not be any issue till Coimbatore main junction. So Coimbatore North,Peelamedu, Tidel Park[new station], Singanallur, Irukur can be made as MRTS Stations.

And coimbatore main junction has 6 platforms as of now and it can be made to 10 platforms, by moving the exisitng maintanance/works to NTC & Kaleeswara Mills vacant lands.
 

·
Registered
Cbe Citizen
Joined
·
145 Posts
கிலோ மீட்டருக்கு வெறும் 10 பைசா தான்! கோவையில் மின்சார வாகனம் அறிமுகம்!!
713989

கோவை : கிலோ மீட்டருக்கு ரூ.10 பைசா செலவில் பயணம் செய்யும் வகையில் மின்சார இரு சக்கர வாகனங்களை திருப்பூரை சேர்ந்த நிறுவனம் கோவையில் அறிமுகம் செய்துள்ளது.

திருப்பூரை சேர்ந்த நிறுவனம் சி.கே.மோட்டார்ஸ். இந்த நிறுவனம் மின்சார வாகன தொழிற்சாலையை கோவை தெக்கலூர் பகுதியில் நிறுவி மின்சார வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வாகனத்தின் அறிமுக நிகழ்ச்சி கோவை சரவணம்பட்டி பகுதியில் இன்று நடைபெற்றது. அப்போது சி.கே மோட்டார்ஸ்-ன் வணிக தலைவர் குணசேகரன் கூறியதாவது:

சரவ்தேச பிரச்சனையான சுற்றுச்சூழல் மாசுபாடுவதை கருத்தில் கொண்டு எங்கள் நிறுவனம் லித்தியம் பேட்டரியால் இயங்கும் ஸ்கூட்டர்கள், மொபட்டுகள் மற்றும் சைக்கிள்களை தயாரித்துள்ளது.

713997

இதுவரை சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து மின்சார வாகனங்களையும் தீவிரமாக ஆராய்ந்து அதில் காணப்படும் அனைத்து தொழில்நுட்ப மற்றும் இயக்கத்தில் உள்ள இன்னல்களை தவிர்த்து இந்த வாகனங்களை தயாரித்துள்ளோம்.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கிலோ மீட்டார் வரை செல்லும் வாகனம், 80 கிலோ மீட்டர் மற்றும் 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு செல்லும் வாகனங்களை தயாரித்துள்ளோம். சைக்கிள் ஆரம்பவிலை ரூ.38 ஆயிரம், ஸ்கூட்டர் ரூ.59 ஆயிரத்தில் இருந்து ரூ.93 ஆயிரம் வரை சந்தைப்படுத்த உள்ளோம். இந்த மின்சார வாகனங்கள் மூலம் கிலோ மீட்டருக்கு ரூ.10 பைசாவுக்கும் குறைவான செலவில் பயணம் செய்ய முடியும்.
714001


ஸ்பார்க் இவி என்ற பிரத்யேக ஷோரூம் மூலம் வாகனங்கள் விற்பனை செய்ய உள்ளோம். ஷோரூம் திறப்பு விழா வரும் 11ம் தேதி நடைபெறுகிறது. நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் கலந்து கொண்டு ஷோரூமை திறந்து வைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

 

·
Registered
Cbe Citizen
Joined
·
145 Posts
கோவை மாநகரில் அதிக விபத்து ஏற்படும் 15 இடங்களை ‘பிளாக் ஸ்பாட்’ பகுதிகளாக வகைப்படுத்திய காவல்துறையினர்
717463

கோவை மாநகரில் அதிக அளவில் விபத்து ஏற்படும் இடங்களில், 15 இடங்கள் கண்டறியப்பட்டு, அவை பிளாக் ஸ்பாட் இடங்களாகக் காவல் துறையினரால் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து முக்கிய மாநகரங்களில் ஒன்றாக உள்ள கோவையில் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப மாநகரில் போக்குவரத்து நெரிசல், சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.

போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்க்கவும், விபத்துகளைத் தடுக்கவும் மாநகரக் காவல்துறையினர் சார்பில் முக்கிய இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. தவிர, மாநகரின் முக்கிய இடங்களில் வாகனத் தணிக்கை மேற்கொண்டு, விதிகளை மீறும் வாகன ஓட்டுநர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மாநகரில் பதிவாகும் விபத்து, உயிரிழப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்கக் காவல்துறையினர் மாநகர் முழுவதும் ஆய்வு செய்தனர். கடந்த மூன்று ஆண்டுகளாக மாநகரில் பதிவான விபத்துகள், விபத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை, அது நிகழ்ந்த பகுதிகள் போன்றவை குறித்து ஆய்வு செய்தனர்.
அதன்படி, மாநகரில் அதிக அளவில் விபத்து ஏற்படும் 15 இடங்களை ‘பிளாக் ஸ்பாட்’ இடங்கள் என வகைப்படுத்தியுள்ளனர். அந்த இடங்களில் விபத்துகளைக் குறைக்க அரசுத் துறைகளுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்.
மாநகரக் காவல்துறையின் புள்ளிவிவரப்படி, கடந்த 2018-ம் ஆண்டு 149 உயிரிழப்பு விபத்துகள், 987 உயிரிழப்பற்ற சாலை விபத்துகள், 2019-ம் ஆண்டு 126 உயிரிழப்பு விபத்துகள், 936 உயிரிழப்பற்ற சாலை விபத்துகள், நடப்பாண்டு ஜனவரி முதல் அக்டோபர் இறுதி வரை 52 உயிரிழப்பு விபத்துகள், 494 உயிரிழப்பற்ற சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
15 பிளாக் ஸ்பாட்கள்
இந்நிலையில் மாநகரப் போக்குவரத்துக் காவல்துறை துணை ஆணையர் முத்தரசு இன்று (9-ம் தேதி) கூறும்போது, ''அவிநாசி சாலையில் அண்ணா சிலை சந்திப்பு, ஹோப்காலேஜ், கே.எம்.சி.ஹெச் சந்திப்பு, சிட்ரா, கோல்டு வின்ஸ், திருச்சி சாலையில் வசந்தாமில் சந்திப்பு, சிங்காநல்லூர் சந்திப்பு, எல் அன்ட் டி பைபாஸ் சாலை, கிளாசிக் டவர் சந்திப்பில் இருந்து உக்கடம் - சுங்கம் பைபாஸ் சாலை இணையும் பகுதி, போத்தனூர் பொங்காளியம்மன் கோயில் சாலை, ஜி.டி.டேங்க் ஏரியா, மேட்டுப்பாளையம் சாலையில் பூ மார்க்கெட், அழகேசன் சாலை, சத்தி சாலையில் காந்திபுரம், சரவணம்பட்டி அருகேயுள்ள தனியார் மால் வளாகம் சந்திப்பு ஆகிய இடங்கள் அதிக அளவில் உயிரிழப்பு, உயிரிழப்பற்ற விபத்துகள் ஏற்படும் பகுதியாகக் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த இடங்களில் மாநகரக் காவல்துறையினர், வட்டாரப் போக்குவரத்துத் துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் ஆகியோர் இணைந்து ஆய்வு நடத்த உள்ளோம். அங்கு விபத்து ஏற்படுவதற்கு என்ன காரணம், அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என முடிவு செய்து, அங்கு அத்திட்டம் செயல்படுத்தப்படும். ஓரிரு நாளில் இந்த ஆய்வு தொடங்கப்பட உள்ளது.
மேலும், மேற்கண்ட இடங்களில் தடுப்புச் சுவர்களின் உயரம் குறைவாக இருப்பதால், அதன் மீது ஏறிச் சாலையைத் தாண்டுகின்றனர். எனவே, மேற்கண்ட பகுதிகளில் தடுப்புச் சுவர்களின் மீது 3 அடி உயரத்துக்குத் தடுப்புக் கம்பங்கள் அமைக்கப்படும். விபத்துகளின் எண்ணிக்கையை மேலும் குறைக்கத் தேவையான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்'' என்றார்.

 

·
Registered
Cbe Citizen
Joined
·
145 Posts
Minar Group plans to invest in Coimbatore
Kerala-based Minar Group of Companies plans to invest in a TMT steel products making facility here.


A. Mohammed Shafi, Managing Director of the group, told The Hindu on Thursday that it planned to invest ₹150 crore in a plant here, depending on the market response to its products.

Minar would launch its TMT steel bars here on Friday. It proposed to have 70 to 80 dealers in the district. If the products got encouraging response, the group would invest in a production facility with an annual manufacturing capacity of two lakh tonnes. It would be used to meet the demand in Kerala and Tamil Nadu. The plant would come up on the Tamil Nadu-Kerala border in Coimbatore district and generate employment for nearly 500 people, he said.

Minar has two plants in Kanjikode and a rolling unit in Kozhikode. It plans to expand in Tamil Nadu by extending initially to districts near Coimbatore.

 

·
Registered
Joined
·
2,388 Posts
இது ரொம்ப புதுசு! தொழில்நுட்ப மையம் அமைத்துகோவைக்கு உதவுது மத்திய அரசு

மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், கோவையில் 200 கோடி ரூபாய் செலவில், ஒரு புதிய தொழில்நுட்ப மையம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.தொழில் துறையினருக்கு ஏற்படும் சிக்கல்களை களையவும், புதிய திட்டங்களை வகுக்கவும் கோவையில் ஒரு சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான மையம் செயல்பட்டு வருகிறது.

தொழில் வளர்ச்சிக்கு தேவையான வழிகாட்டுதல்களை அளித்து வரும் இந்த நிறுவனம், புதிய தொழில்நுட்ப மையத்துக்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், இந்திய அளவில், 10 இடங்களில் புதிய தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்படுகின்றன. புதுச்சேரியில் இம்மையத்துக்கான பணிகள் முடிந்து விட்டன.கொச்சியில் இதற்கான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. கோவையில், 20 ஏக்கர் நிலப்பரப்பில், 200 கோடி ரூபாய் செலவில், இந்த தொழில்நுட்ப மையம் ஏற்படுத்தப்படுகிறது.அப்படி என்ன ஸ்பெஷல் கோவையில் அமையவுள்ள இந்த புதிய தொழில்நுட்ப மையத்தில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து வாங்க முடியாத, அதிநவீன கருவிகள் அமையவுள்ளன.

தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பொருட்களின் மாதிரிகளையும், அதற்கான பரிசோதனைகளையும் இங்கு செய்து கொள்ளலாம். புதிய தொழில் முனைவோர், புதிய பொருட்களை உருவாக்க தேவையான, ஆய்வு வசதிகள் இருக்கும்.கோவையை சுற்றிலும் உள்ள ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இப்பகுதியில் உள்ள கல்லுாரி மாணவர்கள், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், ஆய்வுகள் மேற்கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.புதிய தொழில்நுட்ப மையத்துக்கு, 20 ஏக்கர் நிலம் தேவை. கோவையில் உள்ள அரசூரில், இதற்காக 14 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டுள்ளது. மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ.,வசம், நிலம் ஒப்படைக்கப்பட்டவுடன், பணிகள் துவங்க உள்ளன.தொழில் துறையினருக்கு அழைப்புபுதிய தொழில்நுட்ப மையத்தில் அமைக்க வேண்டிய கருவிகள், வசதிகள் குறித்து ஆலோசனைகள் வழங்க, கோவையில் உள்ள பல்வேறு தொழில் அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன அமைச்சகத்துக்கு, இணைய வழியில் தொழில் துறையினர் ஆலோசனை தெரிவிக்கலாம்.கோவையில் ராணுவ தளவாட உற்பத்தி மையங்கள் அமைய உள்ள நிலையில், இந்த புதிய தொழில்நுட்ப மையம் பெரும் பயனுள்ளதாக இருக்கும். நிலம் ஒப்படைப்பதில் உள்ள காலதாமதம், மையத்தை துவக்குவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது.கோவை ராம்நகரில் உள்ள எம்.எஸ்.எம்.இ., மையத்தின் இயக்குனர் (பொறுப்பு) விஜயக்குமார் கூறுகையில், ''கோவையில் அமையவுள்ள புதிய தொழில்நுட்ப மையத்துக்கான நிலத்தை, மாநில அரசு ஒப்படைத்ததும் பணிகள் துவக்கப்படும். பொதுமக்கள், அரசு பங்களிப்பு முறையில் அமையவுள்ள இந்த மையத்தில், பல்வேறு தொழில்துறையினர் தங்களுக்கு தேவையான வசதிகளை பெற முடியும்.

அதிநவீன சிஎன்சி இயந்திரங்கள் முதல், அதிக விலையுள்ள இயந்திரங்கள் வரை இருக்கும். திறன் மேம்பாட்டு பயற்சியும் வழங்கப்படும். தொழில்கள் மேம்பட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்,'' என்றார்.கோவையில் ராணுவ தளவாட உற்பத்தி மையங்கள் அமைய உள்ள நிலையில், இந்த புதிய தொழில்நுட்ப மையம் பெரும் பயனுள்ளதாக இருக்கும். நிலம் ஒப்படைப்பதில் உள்ள காலதாமதம், மையத்தை துவக்குவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது. தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பொருட்களின் மாதிரிகளையும், அதற்கான பரிசோதனைகளையும் இங்கு செய்து கொள்ளலாம். புதிய தொழில் முனைவோர், புதிய பொருட்களை உருவாக்க தேவையான, ஆய்வு வசதிகள் இருக்கும்.-

இது ரொம்ப புதுசு! தொழில்நுட்ப மையம் அமைத்துகோவைக்கு உதவுது மத்திய அரசு
 

·
Registered
Joined
·
1,308 Posts
 

·
Registered
Cbe Citizen
Joined
·
145 Posts
Auto firm launches experience centre
CK Motors, a Tiruppur-based automobile company that is into electric vehicles, has launched an experience centre in Coimbatore. Electric two-wheelers and patented lithium batteries will be available at the centre. The company plans to expand to Gobichettipalayam and Pollachi soon. The centre will offer after-sales service across Coimbatore district, according to a media statement from CK Motors.
 

·
Registered
Cbe Citizen
Joined
·
145 Posts

·
Registered
Joined
·
1,777 Posts
Any near plans/proposals to expand Coimbatore corporation limits?
I think Vellalore was not included earlier. May be it will be included because of bustand, Dump yard and truck terminal.and growing faster in terms of population growth.
 
19981 - 20000 of 20059 Posts
Top