கோவையின் தொழில் வளர்ச்சி... இது, அடுத்த கட்டம்! ரெடியாகிறது ராணுவ தளவாட உற்பத்தி!
கோவை:கள்ளப்பாளையத்தில் ராணுவ தளவாடங்களை உருவாக்கும் பொது வசதி மையம், இன்குபேஷன் சென்டர் உள்ளிட்டவை 45 கோடி ரூபாய் செலவில் அமையவுள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இது, கோவையின் அடுத்தகட்ட வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க, தமிழகத்தில் கோவை, ஒசூர், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களை உள்ளடக்கிய, ஒரு மண்டலம் உருவாக்கப்பட்டது.
கோவையில் கொடிசியாவுடன் இணைந்து, ராணுவ பொது வசதி மையம், இன்குபேஷன் சென்டர் போன்றவை துவங்க திட்டமிடப்பட்டது.நிர்மலா சீதாராமன் ராணுவ அமைச்சராக இருந்தபோது, முதல் கட்டமாக பொது வசதி மையம் ஒன்றை ஏற்படுத்த, 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார். தற்போது இதற்கான பணிகள், கொடிசியா தொழில்நுட்ப பூங்காவில் துவங்கப்பட்டுள்ளன.கொடிசியா தொழில்நுட்ப பூங்கா, கள்ளப்பாளையத்தில் 120 ஏக்கர் பரப்பளவிலும், மோப்பிரி பாளையத்தில், 225 ஏக்கர் பரப்பளவிலும் அமைக்கப்பட்டுள்ளது.
300க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் அமையவுள்ள இப்பூங்காவில், தொழில் துவங்குவோருக்கு நிலம் ஒதுக்கி, ஓரிரு நிறுவனங்கள் உற்பத்தியையும் துவங்கி விட்டன.15 முதல் 20 நிறுவனங்களுக்கான கட்டுமான பணிகளுக்கு அப்ரூவல் பெறப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்ப பூங்காவை, சுற்றுச்சூழலுக்கு மாசற்ற வகையிலான, 'பசுமை' பூங்காவாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.கள்ளப்பாளையத்தில் அமையவுள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்திற்கென, 20 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.கொடிசியா தொழில்நுட்ப பூங்காவில், ராணுவ தளவாட பொருட்களை உருவாக்கும் தொழில் நிறுவனங்கள், அதிகளவில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.
'இன்குபேஷன் சென்டர்' அமைக்க, கொடிசியா சார்பில் 10 கோடி ரூபாயும், அரசின் பங்காக 10 கோடி ரூபாயும் செலவிடப்படுகிறது.இடம் மற்றும் கட்டடங்களில், கொடிசியா 5 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. இங்கு கட்டுமான பணிகள் நிறைவு பெறும் வரை, ராணுவ தளவாட வசதி மையம், கொடிசியா வளாகத்தில் செயல்படும் என, கொடிசியா தலைவர் ராமமூர்த்தி தெரிவித்தார்.இதுவரை நுால் மில்கள், பம்ப்செட், கிரைண்டர் உற்பத்திக்கென அறியப்பட்ட கோவை, இனி ராணுவ தளவாட தயாரிப்பு எனும், அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. இது, நம் கோவை தொழில் வளர்ச்சியின் அடுத்தகட்டமாக பார்க்கப்படுகிறது.
கோவையில் ராணுவ தளவாட பொது வசதி மையம், கள்ளப்பாளையத்தில் உள்ள கொடிசியா தொழில் பூங்காவில், அமைக்க திட்டமிடப்பட்டு செயலுக்கு வந்துள்ளது. 45 கோடி ரூபாய் செலவில் பொது வசதி மையம், ஆய்வகம், கட்டுமான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. கொடிசியா தொழில்நுட்ப பூங்காவில், நிலம் ஒதுக்கீடு செய்யும் பணி நிறைவு பெற்றுள்ளது. கட்டுமான பணிகளுக்கான அப்ரூவல் பெறப்பட்டுள்ளது. கள்ளப்பாளையம், மோப்பிரிபாளையத்தில் மின்சாரம், தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது.-ராமமூர்த்திதலைவர், கொடிசியா
கோவை:கள்ளப்பாளையத்தில் ராணுவ தளவாடங்களை உருவாக்கும் பொது வசதி மையம், இன்குபேஷன் சென்டர் உள்ளிட்டவை 45 கோடி ரூபாய் செலவில் அமையவுள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இது, ...
www.dinamalar.com