SkyscraperCity banner

8121 - 8140 of 8177 Posts

·
Registered
Joined
·
367 Posts
PM Modi visiting Coimbatore on Feb 25, 2021. Any Government projects (especially infrastructure projects) expected for inauguration or laying of foundation on that day ? Any guess, please.
It will be great if he flags off the Coimbatore - Rameswaram daily overnight express (Via. Pollachi) train and Coimbatore - Bengaluru daily overnight express train (Via. Salem).

மீண்டும் பிப்.25 கோவை வருகிறார் பிரதமர் மோடி...

இந்நிலையில் பிரதமர் மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் தேதி கோவை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாஜகவின் தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி இந்த தகவலை தெரிவித்துள்ளார். அரசு மற்றும் பாஜக விழாவில் கலந்துகொள்ள பிப்ரவரி 25-ஆம் தேதி பிரதமர் கோவை வர உள்ளார்.
 

·
The Boss
Joined
·
274 Posts
தண்ணீர் பந்தல் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்படுகிறது

கோவை அவினாசி சாலை ஹோப் காலேஜ் சிக்னலில் இருந்து தண்ணீர் பந்தல், விளாங்குறிச்சி வழியாக சரவணம்பட்டி சென்றடையும் சாலையில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இந்த சாலையில் உள்ள ரயில்வே கேட் நாள்தோறும் 38 முறை மூடப்படுகிறது. இதனால் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் ரயில்வே கேட் அருகே பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், நுகர்வோர் அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து தண்ணீர்பந்தல் சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்பணி மந்த கதியில் நடந்து வருகிறது. இந்நிலையில், ஹோப் காலேஜ் சிக்னலில் இருந்து மகேஸ்வரி நகர் வரை மேம்பாலம் அமைக்க சாலையின் இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட உள்ளது.

இதற்காக நெடுஞ்சாலை துறையினர் நபார்டு திட்டத்தின் கீழ் சாலையின் இருபுறமும் உள்ள 30க்கும் மேற்பட்ட வீட்டு உரிமையாளர்களிடம் நிலம் கையகப்படுத்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான, ஆலோசனை கூட்டம் ஹோப் காலேஜ் பகுதியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், தற்போது உள்ள சாலையை தவிர்த்து சாலையின் இரு புறமும் 12 அடி நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறையினர் நில உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ரயில்வே பாலத்தில் இருந்து தெற்கே 280 மீட்டர், ரயில் பாலத்தின் வடக்கு பகுதியில் 350 மீட்டர் நீளத்திற்கு பாலம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர். பாலத்தின் இருபுறமும் பொதுமக்கள் செல்வதற்கு வசதியாக சர்வீஸ் சாலை அமைக்கப்பட உள்ளதாகவும், இதற்கு நில உரிமையாளர்களுக்கு சதுரடிக்கு ரூபாய் 4 ஆயிரம் வரை வழங்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டனர்.

இதற்கு பொதுமக்கள் ஒரு சதுரடிக்கு ரூ.4 ஆயிரம் என்பது குறைவு எனவும், ரூ.6 ஆயிரம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். மேலும், நுகர்வோர் அமைப்பினர் மேம்பாலத்தை தண்ணீர் பந்தலில் உள்ள குறுகிய வளைவு வரை விரிவுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், ரயில்வே மேம்பால பணிகள் வேகம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source:
தண்ணீர் பந்தல் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்படுகிறது | கோயம்புத்தூர் - Dinakaran
 

·
The Boss
Joined
·
274 Posts
பேரூர் ஆற்றில் பாலம் கட்டும் பணி மீண்டும் துவக்கம்

கோவை பேரூர் அருகேயுள்ள படித்துறையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே பழமையான தரைப்பாலம் இருந்தது. நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தரைப்பாலத்தை கடந்து தண்ணீர் செல்லும். இதனால், பேரூரில் இருந்து வேடப்பட்டிக்கு செல்ல சுமார் 10 கிலோ மீட்டர் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து தரைப்பாலத்திற்கு பதிலாக உயர்மட்ட பாலம் கட்ட கோரிக்கை விடுகப்பட்டது.

அதன்படி, கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு பாலம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டது. இதன் அருகில் வாகனங்கள் செல்லும் வகையில் தற்காலிக தரைப்பாலம் ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு பருவமழையின்போது நொய்யல் ஆற்றில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து 5 மாதங்களுக்கு மேல் ஆற்றில் தண்ணீர் சென்றது.

இதனால் தற்காலிக தரைப்பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. மேலும், தொடர் மழை மற்றும் ஆற்றில் தண்ணீர் வரத்து இருந்ததை தொடர்ந்து உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ள நிலையில், மீண்டும் பேரூர் ஆற்றில் பாலம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இப்பணிகளை அடுத்த பருவமழைக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Source:
பேரூர் ஆற்றில் பாலம் கட்டும் பணி மீண்டும் துவக்கம் | கோயம்புத்தூர் - Dinakaran
 

·
Cbe Lover
Joined
·
1,312 Posts
தண்ணீர் பந்தல் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்படுகிறது

கோவை அவினாசி சாலை ஹோப் காலேஜ் சிக்னலில் இருந்து தண்ணீர் பந்தல், விளாங்குறிச்சி வழியாக சரவணம்பட்டி சென்றடையும் சாலையில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இந்த சாலையில் உள்ள ரயில்வே கேட் நாள்தோறும் 38 முறை மூடப்படுகிறது. இதனால் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் ரயில்வே கேட் அருகே பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், நுகர்வோர் அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து தண்ணீர்பந்தல் சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்பணி மந்த கதியில் நடந்து வருகிறது. இந்நிலையில், ஹோப் காலேஜ் சிக்னலில் இருந்து மகேஸ்வரி நகர் வரை மேம்பாலம் அமைக்க சாலையின் இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட உள்ளது.

இதற்காக நெடுஞ்சாலை துறையினர் நபார்டு திட்டத்தின் கீழ் சாலையின் இருபுறமும் உள்ள 30க்கும் மேற்பட்ட வீட்டு உரிமையாளர்களிடம் நிலம் கையகப்படுத்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான, ஆலோசனை கூட்டம் ஹோப் காலேஜ் பகுதியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், தற்போது உள்ள சாலையை தவிர்த்து சாலையின் இரு புறமும் 12 அடி நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறையினர் நில உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ரயில்வே பாலத்தில் இருந்து தெற்கே 280 மீட்டர், ரயில் பாலத்தின் வடக்கு பகுதியில் 350 மீட்டர் நீளத்திற்கு பாலம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர். பாலத்தின் இருபுறமும் பொதுமக்கள் செல்வதற்கு வசதியாக சர்வீஸ் சாலை அமைக்கப்பட உள்ளதாகவும், இதற்கு நில உரிமையாளர்களுக்கு சதுரடிக்கு ரூபாய் 4 ஆயிரம் வரை வழங்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டனர்.

இதற்கு பொதுமக்கள் ஒரு சதுரடிக்கு ரூ.4 ஆயிரம் என்பது குறைவு எனவும், ரூ.6 ஆயிரம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். மேலும், நுகர்வோர் அமைப்பினர் மேம்பாலத்தை தண்ணீர் பந்தலில் உள்ள குறுகிய வளைவு வரை விரிவுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், ரயில்வே மேம்பால பணிகள் வேகம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source:
தண்ணீர் பந்தல் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்படுகிறது | கோயம்புத்தூர் - Dinakaran
Railways have already completed its portion long back right?

Just now state highway dept started talks
 

·
Registered
Joined
·
156 Posts
Not yet started. Nothing except the yellow marking on stone
Thanks for the update, from the markings, do you know if its going to be 4 lane ? Or how wide is the road going to be? Assuming this is final marking, do you know if it has been marked all the way to end ?
 

·
Registered
Joined
·
2,425 Posts
8121 - 8140 of 8177 Posts
Top