SkyscraperCity banner

1181 - 1200 of 1236 Posts

·
Registered
Joined
·
1,090 Posts
ஆத்துப்பாலம் வரை நீளுமா?

https://www.dinamalar.com/district_detail.asp?id=2488921

கோவை:கோவை, உக்கடம் மேம்பாலத்தை ஆத்துப்பாலம் வரை நீட்டிக்க, மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகத்தின் அனுமதிக்காக, தமிழக நெடுஞ்சாலைத்துறை காத்திருக்கிறது.கோவையில் உக்கடம் பஸ் ஸ்டாண்ட் முதல் கரும்புக்கடை வரை, மாநில நெடுஞ்சாலைத்துறை உயர்மட்ட பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதை ஆத்துப்பாலம் வரை நீட்டிக்கவும், வாலாங்குளம் பைபாஸில் வருவோர், பாலத்தில் ஏறும் வகையிலும், வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்து, ரூ.265.44 கோடிக்கு கூடுதல் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதற்கு, மாநில அரசு அனுமதி வழங்கி விட்டது.இதில், கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் வரையிலான ரோடு, தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகத்திடம் தடையின்மை சான்று பெற வேண்டும். இதற்கான கோப்பு, துறை செயலர் கையெழுத்துக்காக காத்திருக்கிறது. இச்சான்று பெற்றால் மட்டுமே, டெண்டர் கோரி, ஒப்பந்ததாரர் இறுதி செய்ய முடியும்.மார்ச் முதல் வாரத்துக்குள் அனுமதி பெறப்படும் என, மாநில நெடுஞ்சாலைத்துறை நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.அவர்கள், மேலும் கூறியதாவது: இரு வாரத்துக்குள் மத்திய அரசு அனுமதி பெற்றாலும், டெண்டர் இறுதி செய்ய, இரு மாதங்களாகி விடும். பாலத்தை நீட்டிக்கவும், 60 துாண்கள் வரை கட்ட வேண்டியிருப்பதால், 18 முதல், 24 மாதங்களாகும்.உக்கடம் - பேரூர் பைபாஸ் ரோட்டில் துப்புரவு தொழிலாளர், சலவை தொழிலாளர்கள் குடியிருப்புகளை மாநகராட்சி அகற்றிக் கொடுக்காமல் இருக்கிறது.ஆக்கிரமிப்பு அகற்றுவது, இழப்பீடு வழங்கி, நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு வேலை இருப்பதால், உக்கடம் மேம்பாலம் பயன்பாட்டுக்கு வர, 2022 ஆகி விடும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.நிலத்துக்குள் மின் ஒயர்உக்கடம் பகுதி வாலாங்குளம் பைபாசில் உயரழுத்த மின்கோபுரங்கள் இருப்பதால், பாலம் கட்டுவதற்கு சிக்கல் ஏற்பட்டது. அதனால், நிலத்துக்குள் மின் ஒயர்களை கொண்டு செல்ல முடிவு செய்து, 8 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. உக்கடம் குளத்துக்குள் உள்ள மின்கோபுரத்தை, கரை ஓரத்தில் மாற்றி அமைத்து, துணை மின் நிலையம் வரை, 3 கி.மீ., நீளத்துக்கு நிலத்துக்குள் மின் ஒயர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்கான பணி துவங்கியுள்ளது.
 
·
Registered
Joined
·
1,090 Posts
Coimbatore: The highways department on Tuesday assured the commuters on Mettupalayam Road to restore the width of road after the construction of flyovers at Kavundampalayam and GN Mills. The officials said the flyover pillars would occupy only 2m of the 23m-22m wide road.

It would now take at least 15-18 minutes to cross the Sanganoor Canal-Vellakinar Pirivu stretch, where flyover construction is taking place, during peak hours. Kirubashankar, a resident of Periyanaickenpalayam, said, “The stretch, which is hardly 5km long, is nightmarish between 5pm and 7.30pm and again from 9am to 10.30pm. The road has become too narrow in Kavundampalayam Junction area and hardly a car and a two-wheeler could drive side by side.”

T Shankar, a driver, said the road was not only too narrow but also bumpy with potholes.
The highways department told TOI that the situation would improve once the flyover work was over. An official said the flyovers would occupy only 2m of road space at the centre, leaving 20m of the 22m to 23m wide road for vehicles.

Selvakumar, divisional engineer, national highways, said “It will be like the Gandhipuram flyovers, where cars can drive beneath them comfortably. With the flyover carrying a sizeable portion of the traffic, the road below can accommodate its traffic.”

A section of residents and activists in the area said the the service road on either side of the upcoming flyover could be extended by at least 15ft. Mariappan, a resident of Kavundampalayam, said, “This will be beneficial. Even now it plays a major role in easing traffic congestion to a large extent. However, the space is being encroached by some sho ps"

Read more at:
http://timesofindia.indiatimes.com/articleshow/74309048.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst
 
·
The Boss
Joined
·
246 Posts
2022! வடிவமைப்பில் மாற்றம் செய்தது மாநில நெடுஞ்சாலைத்துறை ..உக்கடம் சந்திப்பு மேம்பாலம்பாலம் பணி முடியும் ஆண்டு

உக்கடம் மேம்பாலத்தை ஆத்துப்பாலம் வரை நீட்டிப்பது; பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வடிவமைப்பு மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், பாலம் வேலை முழுமையாக முடிய, 2022 ஆகி விடும் என்கின்றனர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்.

கோவை, பொள்ளாச்சி ரோடு, பாலக்காடு ரோட்டில் வரும் வாகனங்களும், நகர் பகுதியில் இருந்து இவ்விரு ரோட்டுக்கும் செல்லும் வாகனங்களும் ஆத்துப்பாலத்தில் சந்திப்பதால், தினமும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண, உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் கட்ட, மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது.இந்த ரோடு, தேசிய நெடுஞ்சாலைத்துறை வசமிருப்பதால், தடையின்மை சான்று கேட்டு, விண்ணப்பித்தது. அதற்கு, ஆத்துப்பாலம் அருகே சுங்கச்சாவடி இருப்பதால், கரும்புக்கடை வரை மட்டுமே அனுமதி தர முடியும். சுங்கச்சாவடிக்கான அவகாசம் முடிந்ததும், பாலத்தை நீட்டித்துக் கொள்ளலாம் என கூறி, மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் அனுமதி கொடுத்தது.

அதன்படி, கரும்புக்கடை - உக்கடம் வரை, மேம்பாலம் கட்டப்படுகிறது. கடந்தாண்டு ஏப்., மாதம் வேலை துவங்கியது; இன்னும், 8 'டெக்' மற்றும் மழை நீர் வடிகால் கட்ட வேண்டியிருக்கிறது. மே மாதத்துக்குள் இப்பணி முடிந்து விடும் என்கின்றனர், மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்.தற்போதுஆத்துப்பாலம் வரை பாலம் நீட்டிக்கப்பட்டு, வாலாங்குளம் பைபாஸில் வருவோரும் பாலத்தில் ஏறும் வகையில், வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது.

டவுன்ஹாலில் இருந்து வருவோர், நாஸ் தியேட்டர் முன்பிருந்து பாலத்தில் ஏறும் தளம் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது.ரோட்டின் மையத்தில் உள்ள கோவிலையும், ஏராளமான கடைகளையும் இடிக்க வேண்டியிருந்ததால், உக்கடம் பஸ் ஸ்டாண்டுக்குள் இரண்டு துாண்கள் கட்டி, பாலத்தில் ஏறும் வகையில் வடிவமைப்பு மாற்றப்பட்டு உள்ளது. இதற்கு ஒப்புதல் கேட்டு, மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகத்துக்கு, மாநில நெடுஞ்சாலைத்துறை கோப்பு அனுப்பியுள்ளது.

மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆத்துப்பாலம் சந்திப்பு, உக்கடம் சந்திப்பு மற்றும் பேரூர் பைபாஸில் இறங்கு தளம் மற்றும் பெரிய குளத்துக்குள் இருக்கும் உயர்மின் கோபுரங்களை இடம் மாற்றி, வாலாங்குளம் துணை மின் நிலையம் வரை, மின் புதை வடம் கொண்டு செல்ல வேண்டியிருப்பதால், பணிகள் முடிவடைய, வரும், 2022ம் ஆண்டு இறுதியாகி விடும்' என்றனர்.உக்கடம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்துக்குள் இரண்டு இடங்களில் துளையிட்டு, துாண்கள் அமைத்து, இறங்குதளம்/ ஏறு தளம் அமைக்க, மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.

More News & Pictures: https://www.dinamalar.com/news_detail.asp?id=2489683
 
·
Coimbatore Well-Wisher
Joined
·
4,882 Posts
https://www.thehindu.com/news/cities/Coimbatore/corporation-to-ease-traffic-bottlenecks-in-city/article30925840.ece

Corporation to ease traffic bottlenecks in city

Seeks ₹ 20.92 crore from the Local Planning Authority to acquire lands

To ease traffic bottlenecks in the city by widening motorable space, the Coimbatore Corporation has sought ₹ 20.92 crore from the Local Planning Authority (LPA).

Sources familiar with the development said the civic body had sought the money that the LPA had under the infrastructure development fund meant for city development. The Corporation had proposed to use to the funds to acquire lands at five places to ease to widen the motorable space – carriage way – or construct new roads so as to form new scheme roads.

The locations identified were two in the East Zone – the ‘S’ bend on Vilankurichi Road and Sowripalayam Road, two in South Zone – Kulathupalayam Road and near Selvachinthamani Tank, and one in North Zone – Ganapathy bus terminus.

To kick start the process in the five places, the sources said the Commissioner Sravan Kumar Jatavath visited the Ganapathy bus terminus recently. There, the Corporation proposed to acquire around 5,242 sq.ft. land north of the terminus to widen the road to establish a link to Old Sathyamangalam Road, where the Corporation had a year go demolished encroachments.

The problem at present was that for vehicles proceeding north from the terminus the road was not straight as they would have to swerve right to move ahead. The land acquisition and development of the area to widen the carriage way would make the exit easy and also give an alternative way for those proceeding to Maniakarampalayam, the sources pointed out.

The cost of the project ₹ 2.76 crore as the Corporation had proposed to pay 2.25 times the guideline value.

As part of this project, the Corporation had also proposed to acquire 2,345 sq.ft. near the Avarampalayam Junction on Sathyamangalam Road (Moore Market) at ₹ 85 lakh to widen the carriage way.

The project on Sowripalayam Road was to widen the carriage way from 12 feet for a 200m stretch from Mariamman Temple to Mahalakshmi Temple. This was a bus route and therefore saw congestion almost several times a day.

The Corporation proposed to acquire more than 8,000 sq.ft. at an estimated cost of ₹ 4.31 crore, the sources said.

Likewise, in near the Selvachinthamani Tank the Corporation proposed to acquire land to construct a new road to establish a scheme road that connected Thadagam Road to Perur Road through Selvapuram North Housing Unit.

In Vilankurichi too, the Corporation proposed to acquire 11 properties that were right in the middle of a four-way junction on Thanneerpandal Road. The move would help movement of vehicles on all the four directions. In the South Zone in Kuniamuthur, the Corporation proposed to establish a link in Kulathupalayam.

Though the Corporation had written to the LPA a year ago, there had been no forward movement on this project. Now, the Corporation proposed to revive the project by getting the funds first as it was a prerequisite for acquiring lands, they added.

To ease congestion at Ganapathy bus terminus on Sathyamangalam Road the civic body looks to straighten the road by acquiring land. | Photo Credit: S. Siva Saravanan
 
·
Gokul_Bas
Joined
·
380 Posts

Good and great move to widen Ganapathy area. It is the major traffic area especially at night... The encroachments in the link road were removed a year ago in order to shift and built a bus terminus in ganapathy. But still not done anything and don't know what happened to that plan.... Anyway they are executing the expansion of the Ganapathy bus stop area which is the need of the hour....
 
·
Registered
Coimbatore / Chennai
Joined
·
9,612 Posts
https://www.thehindu.com/news/cities/Coimbatore/corporation-to-ease-traffic-bottlenecks-in-city/article30925840.ece

Corporation to ease traffic bottlenecks in city

Seeks ₹ 20.92 crore from the Local Planning Authority to acquire lands

To ease traffic bottlenecks in the city by widening motorable space, the Coimbatore Corporation has sought ₹ 20.92 crore from the Local Planning Authority (LPA).

Sources familiar with the development said the civic body had sought the money that the LPA had under the infrastructure development fund meant for city development. The Corporation had proposed to use to the funds to acquire lands at five places to ease to widen the motorable space – carriage way – or construct new roads so as to form new scheme roads.

The locations identified were two in the East Zone – the ‘S’ bend on Vilankurichi Road and Sowripalayam Road, two in South Zone – Kulathupalayam Road and near Selvachinthamani Tank, and one in North Zone – Ganapathy bus terminus.
One more location should be included on the Pollachi road between Kurichi Lake and Sundarapuram.

Vehicles towards Pollachi takes a left turn one-way road to merge again with Pollachi road. The road here can be easily widened using a portion of dry lake. Hardly about 200 meters road widening is to be done to make it a 4 lane road.
 
·
Registered
Joined
·
2,288 Posts
Discussion Starter #1,189
Flyover work not to affect vehicle movement on Trichy RoadThe ₹ 250-crore project is scheduled to be completed by end of March next year
The State Highways Department is taking efforts to ensure that traffic flow is not affected as it continues the flyover work on Trichy Road at Sungam junction and Ramanathapuram junction.

An official of the Department said that construction of the flyover, which started last March, was scheduled to be completed by end of March next year. The ₹ 250-crore project was to have a four-lane flyover for 3.15 km on Trichy Road till Stock Exchange building, covering Sungam and Ramanathapuram junctions. It would have 121 pillars in total, including nine pillars for the down ramp, and 120 spans. Nearly 40 % of the work was over, the official said.

The Department had also written to the Coimbatore Corporation to remove the encroachments on Ukkadam bypass road so that the down ramp works could start.

“We have marked the encroachments. These need to be removed,” the official said.

On regulating traffic on Trichy Road, the official added that vehicle movement would not be stopped at the Sungam junction. When the span work would be on at the junction, traffic would be regulated to use the road where the work was over.

When works were taken up at the Ramanathapuram junction, vehicle movement would have to be blocked for a couple of days. But it would be done only later.

A couple of road users said the motorable space had shrunk because of the flyover work. The waste on the roadsides should be cleared and parking should not be permitted so that moving vehicles would get a little more space to use.

https://www.thehindu.com/news/cities/Coimbatore/flyover-work-not-to-affect-vehicle-movement-on-trichy-road/article30946546.ece
 
·
The Boss
Joined
·
246 Posts
சூலூரில் செல்லும் திருச்சி ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

கரூர் -- கோவை இடையிலான தேசிய நெடுஞ்சாலை (என்.எச் 81) கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால், காங்கேயம்பாளையம் முதல் சிந்தாமணிபுதூர் வரையுள்ள, ஏழரை கி.மீ., விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது. சூலுார் சுற்று வட்டார மக்களின் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு, கடந்தாண்டு விரிவாக்கம் செய்யும் பணி துவங்கியது.காங்கேயம்பாளையம் முதல் பாப்பம்பட்டி பிரிவு வரை முதல் கட்டமாகவும், பாப்பம்பட்டி பிரிவு முதல் சிந்தாமணிப்புதூர் வரை இரண்டாம் கட்டமாகவும் விரிவாக்கம் செய்யப்படும் என, தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்திருந்தது. அதன்படி முதல் கட்ட பணிகள் பல்வேறு தடைகளுக்கு இடையே நடந்து முடிந்துள்ளன.பாப்பம்பட்டி பிரிவு முதல் காங்கேயம்பாளையம் வரை விரிவாக்கம் செய்யப்பட்டு சென்டர் மீடியன்கள் வைக்கப்பட்டுள்ளன.

திருச்சி ரோட்டில் தினமும் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் அதிகரித்து வந்ததால் விரிவாக்கம் அவசியம் என, கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்று, பல கோடி ரூபாய் செலவில் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், சூலுார் நகரப் பகுதியில், இதுவரை போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. மாறாக நெரிசல் அதிகரித்துள்ளது.ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், இருக்கும் இடத்தில் சாலை அமைத்து, சென்டர் மீடியன்கள் வைக்கப்பட்டுள்ளன. ரோடு நெடுகிலும் உள்ள கடைகளுக்கு முன்பாக, இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தப்படுவதால், நான்கு வழிச்சாலை, இருவழி சாலையாக மாறியுள்ளது. பஸ் அல்லது லாரி செல்லும்போது ஒதுங்க கூட இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், முன்பு இருந்ததைவிட போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. பல கோடி ரூபாய் செலவு செய்தது வீணாகி விட்ட நிலை ஏற்பட்டுள்ளது.அதனால், ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். ரோட்டை ஒட்டி இருபுறமும் வாகனங்களை நிறுத்த தடை விதிக்க வேண்டும். அப்போதுதான் போக்குவரத்து நெரிசல் குறையும்.இவ்வாறு, பொதுமக்கள் கூறினர்.

More News & Pics:
https://www.dinamalar.com/news_detail.asp?id=2492551
 
·
Registered
Joined
·
2,288 Posts
Discussion Starter #1,194

·
The Boss
Joined
·
246 Posts
கோவை மேற்குப் புறவழிச்சாலை திட்டம்: மாற்று இடம் தோ்வு செய்ய வலியுறுத்தி விவசாயிகள் மனு

கோவை மாவட்டத்தில் மதுக்கரை முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32.43 கிலோ மீட்டா் மேற்குப் புறவழிச்சாலை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 355 ஏக்கா் விவசாய நிலங்களும் கையகப்படுத்தப்படவுள்ளன.

இப்பகுதியில் தென்னை, பாக்கு, வாழை, மஞ்சள், கரும்பு உள்பட பலவகையான பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதனை நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளும், விவசாயக் கூலித்தொழிலாளா்களும் உள்ளனா். மேற்குப் புறவழிச்சாலைக்கு விவசாய நிலத்தை கையகப்படுத்துவதால் விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும். எனவே, விவசாயிகளைப் பாதிக்காத வகையில் புறவழிச்சாலை அமைப்பதற்கு மாற்று இடத்தை தோ்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

More News:https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/mar/03/கோவை-மேற்குப்-புறவழிச்சாலை-திட்டம்-மாற்று-இடம்-தோ்வு-செய்ய-வலியுறுத்தி-விவசாயிகள்-மனு-3372518.html
 
·
Registered
Joined
·
2,288 Posts
Discussion Starter #1,196
ரூ.250 கோடியில் நடைபெறும் திருச்சி ரோடு மேம்பால பணிகளை ஒரு ஆண்டுக்குள் முடிக்க திட்டம்ரூ.250 கோடியில் நடைபெறும் திருச்சி ரோடு மேம்பால பணிகளை ஒரு ஆண்டுக்குள் முடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
பதிவு: மார்ச் 04, 2020 14:12 PM
ரூ.250 கோடி மேம்பாலம்

கோவை- திருச்சி ரோட்டில் போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்காக ரூ.250 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இது, ரெயின்போ பகுதியில் இருந்து பங்கு சந்தை அலுவலகம் வரை 3.15 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படுகிறது.
இதற்காக 121 கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட உள்ளன. 4 வழி பாதையாக மேம்பாலம் அமைக்கப்படுகிறது.

மேம்பால பணிகள் குறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

மார்ச் மாதம் முடிக்க திட்டம்
திருச்சி ரோடு சுங்கம் பகுதியில் கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பைபாஸ் சாலை பகுதியில் சில ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட வேண்டியது உள்ளது. கான்கிரீட் தூண்களுக்கு இடையே தளம் அமைக்கும் பணிகளும் நடைபெறுகிறது. மேம்பால பணிகள் முழுவதையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

திருச்சி சாலையில் மேம்பால பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கான்கிரீட் தூண்களின் மேல் மேல்பகுதியில் தளம் அமைக்கும் போது அசம்பாவிதம்ஏற்படாமல் தடுக்க போக்குவ ரத்து மாற்றம் செய்யப்படும்’ என்று போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

போக்குவரத்து நெரிசல்
மேம்பால பணி காரணமாக திருச்சி சாலையில் அடிக்கடி போக்குவ ரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை ஒழுங்குபடுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://www.dailythanthi.com/News/Districts/2020/03/04141223/The-Trichy-Road-Improvement-Project-to-be-completed.vpf
 
·
Registered
Joined
·
469 Posts
வருமா? அவிநாசி ரோடு மேம்பாலம்...ஒதுக்கப்ப&#297

கோவை:கோவை, அவிநாசி ரோட்டில், 9.5 கி.மீ., துாரத்துக்கு மேம்பாலம் கட்டுவதற்கு, முதல்கட்டமாக, ரூ.200 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், நிர்வாக அனுமதி, வரைபட அனுமதி இன்னும் வழங்கப்படாமல் இருப்பதால், திட்ட செயலாக்கம் தாமதமாகி வருகிறது.கோவை - அவிநாசி ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம் வரை, 9.5 கி.மீ., துாரத்துக்கு, ரூ.950 கோடியில், மேம்பாலம் கட்டுவதற்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, கடந்த, 2016, நவ., 30ல் தமிழக அரசு உத்தரவிட்டது.மொத்தம், 170 இடங்களில் மண் பரிசோதனை செய்யப்பட்டது. எங்கெங்கு ஏறுதளம்/ இறங்கு தளம் அமைப்பது, சுரங்க நடைபாதை ஏற்படுத்துவது உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது.வரைபடம் தயாரித்து, தொழில்நுட்ப ஆலோசனை பெற்று, அரசின் நிர்வாக அனுமதிக்கு, மாநில நெடுஞ்சாலைத்துறை (திட்டம்) அதிகாரிகள் அறிக்கை அனுப்பியுள்ளனர்.நிர்வாக அனுமதியும், வரைபட அனுமதியும் இன்னும் கிடைத்தபாடில்லை. திட்டம் அறிவித்து, மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அனுமதி பெறுவதற்கே கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.ரூ.950 கோடி திட்டம் என்பதால், சர்வதேச டெண்டர் கோர வேண்டும்; 45 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும்.ஆவணங்களை மதிப்பீடு செய்து, ஒப்பந்த நிறுவனத்தை இறுதி செய்ய, ஒரு மாதமாகி விடும். அதன்பின், 'ஒர்க் ஆர்டர்' வழங்கி, பணியை துவக்குவதற்குள், பல மாதங்களாகி விடும். ஒதுக்கிய நிதியை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும் என்பதால், திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டால், 'அரசின் அனுமதிக்கு காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்தால், டெண்டர் கோரி, அடுத்தடுத்த பணிகள் துவக்கப்படும்' என்கின்றனர்.மாற்றினால் வேகமெடுக்கும்!மாநில நெடுஞ்சாலைத்துறையில், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, திட்டம், கிராம சாலைகள் என, பல பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொரு பிரிவுக்கும் வேலைகள் பிரித்துக் கொடுக்கப்படும். அவிநாசி ரோடு மேம்பால பணி, சவாலானது. ஏராளமான சந்திப்புகள், குறுக்கு ரோடுகள் வருகின்றன.இப்பணி, திட்டம் பிரிவினருக்கு வழங்கப்பட்டு உள்ளது. மண் பரிசோதனை, 2018ல் முடிந்தது.திட்ட அறிக்கை, வரைபடம் தயாரித்து, சமர்ப்பிக்க, ஓராண்டாகி விட்டது. இனி, அனுமதி பெற்று, டெண்டர் இறுதி செய்து, வேலையை துவக்க வேண்டும்.தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் மிக முக்கியமான ரோடு என்பதால், போக்குவரத்து நெருக்கடியை சமாளித்து, கட்டுமான பணி மேற்கொள்ள வேண்டும். அதனால், அனுபவமுள்ள அதிகாரிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும் அல்லது மாநில நெடுஞ்சாலைத்துறையில் வேறு பிரிவினருக்கு இத்திட்ட பொறுப்பை மாற்றினால், பணி வேகமெடுக்கும் என்கின்றனர், அத்துறையை சேர்ந்த வல்லுனர்கள்.

https://www.dinamalar.com/district_detail.asp?id=2501847
 
1181 - 1200 of 1236 Posts
Top