SkyscraperCity banner

1201 - 1220 of 1236 Posts

·
Registered
Joined
·
1,090 Posts
பொள்ளாச்சி: மேற்கு புறவழிச்சாலைக்கு நிலம் எடுப்புநில உரிமையாளர்களிடம் கருத்து கேட்பு ஆரம்பிச்சாச்சு!

https://www.dinamalar.com/district_detail.asp?id=2504876

பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலை திட்டத்துக்கு நிலம் எடுப்பது குறித்து, நில உரிமையாளர்களுடனான முதல் கட்ட கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.


பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், சில ஆண்டுகளுக்கு முன் மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.கோவை ரோடு சக்தி மில்லில் இருந்து, சுபாஷ் கல்லுாரி வழியே வடக்கிபாளையம் ரோடு - ஆர்.பொன்னாபுரம் - தாளக்கரை நான்கு முக்கு - நல்லுார் வனத்துறை சோதனைச்சாவடி - கிருஷ்ணா குளம் ரோடு - ஜமீன்ஊத்துக்குளி - மீன்கரை ரோடு வழித்தடத்தில், கிராம ரோடுகளை அகலப்படுத்தி, 9.2 கி.மீ., தொலைவுக்கு இந்த புறவழிச்சாலை அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.


இதன் உத்தேச திட்ட மதிப்பு, 20 கோடி ரூபாயாகும்.புறவழிச்சாலைக்காக, கிராம ரோடுகள் ஒரு வழிப்பாதையில் இருந்து, இருவழிப்பாதையாக அகலப்படுத்தப்படுகிறது. இதற்காக, தேவைப்படும் இடங்களில் நிலம் ஆர்ஜிதம் செய்ய வேண்டியுள்ளது. ஆர்.பொன்னாபுரம், சங்கம்பாளையம், தாளக்கரை, ஜமீன் முத்துார், ஜமீன் ஊத்துக்குளி ஆகிய கிராமங்களில் தனியார் நிலம், 32,224 சதுர மீட்டர்; அரசு நிலம், 54,545 சதுர மீட்டர் அளவுக்கு எடுக்கப்படுகிறது. இத்திட்டத்துக்காக எடுக்கப்படும் நிலங்களின் உரிமையாளர்களுடனான கருத்து கேட்பு கூட்டம் நேற்று தாலுகா அலுவலகத்தில் நடந்தது.


மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் தலைமை வகித்தார். நெடுஞ்சாலை துறை (திட்டங்கள் பிரிவு) உதவிக்கோட்ட பொறியாளர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், திட்டம் குறித்து விளக்கிய அதிகாரிகள், நிலம் எடுப்பு மற்றும் நஷ்ட ஈடு வழங்கும் வழிமுறைகள் குறித்து நில உரிமையாளர்களிடம் விளக்கினர்.


அப்போது, சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, நிலம் கொடுக்க சம்மதிப்பவர்கள், ஆட்சேபணை தெரிவிப்பவர்கள், திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டுவோர்களிடம் இருந்து தனித்தனியே மனுக்கள் பெறப்பட்டன.அடுத்த கட்ட கூட்டத்தில், எந்த நிலத்துக்கு எவ்வளவு நஷ்ட ஈடு வழங்கப்படும் என தெரிவிக்கப்படும். இக்கூட்டத்தில் வழங்கப்பட்ட மனுக்களுக்கும் தீர்வு தெரிவிக்கப்படும் என, அதிகாரிகள் கூறினர்.திட்டத்தில் மாற்றம் தேவை!மேற்கு புறவழிச்சாலை திட்டத்துக்காக, ஆர்.பொன்னாபுரம் பிரதான ரோட்டின் இரு பக்கமும் வசிப்போரின், 30 வீடுகள் இடிக்கப்படுகின்றன. நான்கு பொது ஆழ்குழாய் கிணறுகள், இரண்டு அரசு பள்ளிகள் பாதிக்கப்படுகின்றன. மேலும், நிலம் எடுப்பு செய்யப்படும் பகுதியில் உள்ள கட்டடங்கள், வீடுகளை காலியிடம் என வருவாய் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.இதனால், ஆர்.பொன்னாபுரம் மக்கள் கூறுகையில், 'ரோட்டின் இரண்டு பக்கமும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடம் போதுமான அளவு இருக்கிறது. அதை விரிவாக்கத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். வீடுகள், பொது சொத்துக்கள் பாதிக்கப்படாமல் திட்டப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், மாற்றம் செய்ய வேண்டும்,' என கோரிக்கை விடுத்தனர்.
 

·
Registered
Joined
·
2 Posts
New Flyovers to decongest Coimbatore city center

I suggest below three flyovers to decongest center of Coimbatore city,

1. From Ukkadam to Shanmuga Theater along RG Street
2. From Gandhipark to Marakaddai
3. From Thermutti to Koniyamman Temple

Please comment on the same.
 

·
The Boss
Joined
·
246 Posts
கட்டுப்பாடு தளரும் வரை காத்திருப்பு: மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு

கோவை:ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்திய பிறகு, உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலம் பணியை துவக்கி கொள்ளலாம் என, மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்திருக்கிறது.கோவை மாநகராட்சி சார்பில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணிகள், ரோடு போடுதல், குடிநீர், பாதாள சாக்கடை குழாய் பதித்தல், தெருவிளக்குகளை எல்.இ.டி.,களாக மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நெடுஞ்சாலைத்துறை சார்பில், திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, ஆவராம்பாளையம் ரோடு, பொள்ளாச்சி ரோடு, உக்கடம் - ஆத்துப்பாலம் ஆகிய இடங்களில், மேம்பாலங்கள் கட்டப்பட்டன.ஊரடங்கு சட்டம் அமலில் இருப்பதால், அனைத்து கட்டுமான பணிகளும் முடங்கின. மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்ததும், தேசிய நெடுஞ்சாலைத்துறையினரும், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளும், முன்அனுமதி பெற்று, குறைந்த தொழிலாளர்களை கொண்டு, முக கவசம், கையுறை வழங்கி, மிகவும் பாதுகாப்புடன், பாலம் கட்டுமான பணியை துவக்கியுள்ளனர்.ஆனால், தமிழக அரசு, கட்டுப்பாடுகளை தளர்த்தும் வரை காத்திருக்க, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்திருப்பதால், உக்கடம் பாலம் பணியை துவக்காமல் இருக்கின்றனர்.

More News: கட்டுப்பாடு தளரும் வரை காத்திருப்பு: மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு
 

·
The Boss
Joined
·
246 Posts
உக்கடம் மேம்பாலம் பணி மீண்டும் துவக்கம்

ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, உக்கடம் மேம்பாலம் கட்டுமான பணி நேற்று துவக்கப்பட்டது.'கொரோனா' வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு அமல்படுத்தியதால், கோவையில் அனைத்து விதமான கட்டுமான பணிகளும் முடங்கின.கடந்த, ஏப்., 20ல், மத்திய அரசு அனுமதி கொடுத்ததும், குறைந்த தொழிலாளர்களை கொண்டு, திருச்சி ரோட்டில் மேம்பாலம் கட்டும் பணியை, தேசிய நெடுஞ்சாலைத்துறையும், ஈச்சனாரியில் மேம்பாலம் கட்டும் பணியை, நெடுஞ்சாலைத்துறை ஆணையமும் துவக்கின. உக்கடம் மேம்பாலம் பணியை துவக்க, மாநில நெடுஞ்சாலைத்துறை தயக்கம் காட்டியது. மே 3 வரை காத்திருக்கப் போவதாக, அத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தற்போது, பணி நடக்கும் இடங்களில் தங்கியுள்ள தொழிலாளர்களை கொண்டு, கட்டுமான பணியை தொடரலாம் என, தமிழக அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, உக்கடம் மேம்பாலம் பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறை நேற்று துவக்கியது. கரும்புக்கடை பகுதியில், 'டெக்' அமைக்கும் பணி நேற்று நடந்தது.

Link : உக்கடம் மேம்பாலம் பணி மீண்டும் துவக்கம்
 

·
Registered
Joined
·
2,288 Posts
Discussion Starter #1,209
159282_aarunkumar_ARN_5007_310520153552.jpg


கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு பகுதியில் கட்டப்பட்டு வந்த மேம்பால பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
 

·
Registered
Joined
·
1,969 Posts
Coimbatore: The state highways department has invited tender for the Rs 1,621.3-crore Avinashi Road flyover project. The tender will be finalized on July 18 and the flyover work will be completed in four years. As of now, the state government has allotted Rs 200 crore for the project.
An official source confirmed the tender for the project was floated on May 27, 2020 and that the work would be handed over to only one company, which will be finalized on July 18. The source said there was a need to acquire land to construct ramps to connect the flyover with the main junctions on Avinashi Road.
“The construction of flyover will be completed in four years from the date of commencement of work, which is expected in another four months,” the source said.
As per the data available with the state highways department’s project wing, Avinashi Road used to see around 1.25 lakh vehicles a day in 2017. The stretch usually reports heavy traffic congestion during peak hours of 8am-11am and 4pm-8pm, thanks to the increased vehicle movements.
The flyover – from Uppilipalayam junction to Goldwins on Avinashi Road, covering a distance of 10.01km - is expected to decongest the stretch.

The state highways department has already conducted soil test and prepared a detailed project report, which was accepted by the state government. The state has allotted Rs 200 crore to implement the first phase of the project.
The project entails the state highways department to acquire 18,000sq metres of land to construct down and up ramps on main junctions. According to the source, ramps would be constructed at Anna Statue, Nava India, Hope College and SITRA to help motorists easy access to the destinations within the city.
The flyover, which will be 17.25 metres wide, will have four lanes and 304 pillars.


Source Tender invited for Rs 1,621-cr Avinashi Rd flyover - Times of India

No ramps at Lakshmi Mills?
 

·
Moderator
Joined
·
20,876 Posts
As per the dwg

1. The pillars are 5m+ tall from grade. This means there is no metro provision
2. The main carriage way ramp starts near Raja Bakery - KMCH hospital and ends after 10KM near before Nanjappa Road/Thandu Mariamman Kovil/HQ road.
3. Main carriage way is 4 lane wide
4. There are Up and Down ramps to Airport road Junction from city side
5. There are Up and down ramps to Tidel Park/Hopes from city side (before Vilankurichi road)
6. Up ramp towards Avinashi before PSG Tech
7. Down ramp towards core city before Nava India Junction
8. Up ramp towards Avinashi before Kupusami Naidu hospital Jn
9. Down ramp towards core city before Anna Statue/Stanes school
 

·
Registered
Joined
·
6,355 Posts
The flyover's both main carriageways and ramps are to be built using pre-cast blocks rather than the typical I-beam. It would be a first for CBE.
 

·
Registered
Joined
·
76 Posts
As per the dwg

1. The pillars are 5m+ tall from grade. This means there is no metro provision
2. The main carriage way ramp starts near Raja Bakery - KMCH hospital and ends after 10KM near before Nanjappa Road/Thandu Mariamman Kovil/HQ road.
3. Main carriage way is 4 lane wide
4. There are Up and Down ramps to Airport road Junction from city side
5. There are Up and down ramps to Tidel Park/Hopes from city side (before Vilankurichi road)
6. Up ramp towards Avinashi before PSG Tech
7. Down ramp towards core city before Nava India Junction
8. Up ramp towards Avinashi before Kupusami Naidu hospital Jn
9. Down ramp towards core city before Anna Statue/Stanes school
So we need to forget about Metro in Coimbatore:rolleyes:
 

·
Registered
Joined
·
1,969 Posts
உக்கடம் பாலம் விரிவாக்கம்: ரூ. 265.44 கோடிக்கு 'டெண்டர்'

கோவை:கோவை, உக்கடம் மேம்பாலத்தை ஆத்துப்பாலம் வரை விரிவாக்கம் செய்ய, 265.44 கோடி ரூபாய்க்கு, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.கோவை, பொள்ளாச்சி ரோடு, பாலக்காடு ரோடுகளில் இருந்து வரும் வாகனங்களும், நகரில் இருந்து இவ்விரு ரோடுகளுக்கும் செல்லும் வாகனங்களும் ஆத்துப்பாலத்தில் சந்திக்கின்றன. தினமும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால், உக்கடம் - ஆத்துப்பாலம் வரை, நான்கு வழிச்சாலையாக, மேம்பாலம் கட்ட, மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது.ஆத்துப்பாலத்தில் சுங்கச்சாவடி இருந்ததால், கரும்புக்கடை வரையே மேம்பாலம் கட்ட, மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்தது. இவ்வாறு பாலம் கட்டினால், போக்குவரத்து நெருக்கடி குறையாது; ஆத்துப்பாலத்தை கடக்கும் வகையில் நீட்டித்தால் மட்டுமே, வாகன ஓட்டிகள் பயன்பெறுவர் என, நமது நாளிதழில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. அதையேற்று, பாலத்தை நீட்டிக்க தேவையான நடவடிக்கை எடுக்க, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். அதன் பின், ஆத்துப்பாலம் சந்திப்பு வரை பாலம் நீட்டிக்கப்பட்டது. கூடுதலாக, சுங்கத்தில் இருந்து வாலாங்குளம் ரோட்டில் வருவோரும் பாலத்தை பயன்படுத்தும் வகையிலும், வடிவமைப்பு மாற்றப்பட்டது. இதற்கு, ரூ.265.44 கோடிக்கு விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. தமிழக அரசு நிர்வாக அனுமதி, தொழில்நுட்ப அனுமதி வழங்கியதை தொடர்ந்து, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ரூ.265.44 கோடியில், உக்கடம் பாலம் விரிவாக்கம் செய்ய ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதில், கட்டுமான பணிக்கு ரூ.178 கோடி, நிலம் எடுப்புக்கு ரூ.70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜூலை, 15ம் தேதி, பிற்பகல், 3:00 மணிக்குள் ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 'மொத்தம், 80 துாண்கள் கட்ட வேண்டியிருப்பதால், பணி உத்தரவு வழங்கும் நாளில் இருந்து, 30 மாதங்களுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, பாலம் வேலை முழுமையாக முடிய, 2022, இறுதியாகி விடும்' என்றனர்.

Source: https://www.dinamalar.com/district_detail.asp?id=2552180

Tender called for Ukkadam Bridge extension till Athupalam for INR 265.44 Crores.
 

·
The Boss
Joined
·
246 Posts
தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி துவங்குமா: மக்கள் பிரதிநிதிகள் மனசு வைக்கணும்

'கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு, விரிவான திட்ட அறிக்கை, மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு, ஆறு மாதங்கள் ஆகியும் பணி துவங்கவில்லை.தமிழகத்தின் முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகளில், ஒன்றாக என்.எச். 209 உள்ளது, திண்டுக்கல்லில் துவங்கி, உடுமலை, பொள்ளாச்சி, கோவை, அன்னுார், புளியம்பட்டி, சத்தி வழியாக கர்நாடகா செல்கிறது.சரவணம்பட்டி அடுத்த குரும்பபாளையத்திலிருந்து, கர்நாடக மாநில எல்லை வரை, 96 கி.மீ., துாரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.இந்த விரிவாக்கத்தில், குரும்பபாளையத்திலிருந்து புதிய புறவழிச்சாலை, 19 கி.மீ., துாரம் சென்று, அன்னுாரை அடைகிறது. குரும்பபாளையத்தில் 4 கி.மீ., துாரத்திற்கும், சத்தியமங்கலத்தில், 2.5 கி.மீ., துாரத்திற்கும் புறவழிச்சாலை அமைகிறது. சத்தியிலிருந்து பண்ணாரி வழியாக, கர்நாடக எல்லை வரை இந்த விரிவாக்க பணி நடக்க உள்ளது.நான்கு புறவழிச்சாலைகள் இதில் அமைகிறது. மற்ற இடங்களில், ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தப்படுகிறது. குரும்பபாளையம் முதல் பண்ணாரி வரை, நான்கு வழிச்சாலையும், அங்கிருந்து கர்நாடகா எல்லை வரை இருவழிச்சாலையும் அமைய உள்ளது.பெங்களூரு கன்சல்டன்சி நிறுவனம், விரிவான திட்ட அறிக்கையை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை ஆணையம் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.அன்னுார் நகரில், 20 ஆண்டுகளாக கடும் போக்குவரத்து நெருக்கடி இருந்து வருகிறது

 
1201 - 1220 of 1236 Posts
Top