SkyscraperCity banner

761 - 780 of 812 Posts

·
Registered
Cbe Citizen
Joined
·
267 Posts
ரேஸ்கோர்ஸில் பிரதான குழாய்; மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

கோவை : கோவை, ரேஸ்கோர்ஸ் சுற்றுவட்டச்சாலையில், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தில், பிரதான குழாய் பதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவை ரேஸ்கோர்ஸ் சுற்றுவட்டச்சாலையில், 2.7 கி.மீ., துாரத்துக்கு, 'மாதிரி சாலை' அமைக்கும் பணி நடந்து வருகிறது. முதல்கட்டமாக, அரை வட்ட சுற்றுக்கு மட்டும் வேலை நடந்து வருகிறது.அடுத்த கட்ட பணிகளை துவக்கும் முன், புதிதாக குடிநீர் பிரதான குழாய் பதிக்க வேண்டுமென, பொறியியல் பிரிவினர் வலியுறுத்தினர். ஏனெனில், அரசு அலுவலர்கள் மற்றும் உயரதிகாரிகள் குடியிருப்புகள் மற்றும் தனியார் குடியிருப்புகள் ஏராளமாக இருக்கின்றன.

வீட்டு வசதி வாரியம் சார்பில், புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு வாய்ப்புள்ளது.அதனால், 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் கீழ், ரோட்டின் இருபுறமும் பிரதான குழாய் பதித்தால், எதிர்காலத்தில் ரோட்டை தோண்ட வேண்டிய சூழல் ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன், நேற்று களஆய்வு செய்து, அப்பணியை மேற்கொள்ள அனுமதி அளித்தார்.இதுதொடர்பாக, கலெக்டர் ராஜாமணி கவனத்துக்கு தெரியப்படுத்தியதும், அவரும் ரேஸ்கோர்ஸ் சுற்றுவட்டச்சாலைக்கு வந்து, கள ஆய்வு மேற்கொண்டார்.

 

·
Registered
Cbe Citizen
Joined
·
267 Posts
கிராஸ்கட் ரோடு அழகு திட்டம் 'அவுட்!' மாத்தி யோசிப்பார்களா அதிகாரிகள்?
1057378

கோவை:கோவை, கிராஸ்கட் ரோட்டில், வாகன போக்குவரத்து இடையூறின்றி, பாதசாரிகள் நடந்து செல்ல, தனிப்பாதை உருவாக்க, வர்ணம் பூசப்பட்டது. அவ்வழித்தடத்திலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அத்திட்டம் தோல்வியை சந்தித்துள்ளது.கோவையில் செயல்படுத்தும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்களுக்கு, ஜெர்மனியின், ஜி.ஐ.இசட்., என்கிற அமைப்பினர், தொழில்நுட்ப ஆலோசனை வழங்குகின்றனர்.ரோடு என்பது வாகனங்கள் செல்வதற்கு மட்டுமல்ல; பாதசாரிகள் பாதுகாப்பாக நடந்து செல்ல வேண்டும். நடைபாதை வியாபாரிகளுக்கு இடம் கொடுக்க வேண்டும்.ஓய்வெடுக்க இருக்கை வசதி இருக்க வேண்டும் என்கிற அம்சங்களுடன், 2019ல் பரீட்சார்த்த முறையில், டவுன்ஹாலில், 15 நாட்கள், பாதசாரிகளுக்கு தனிப்பாதை ஏற்படுத்தப்பட்டது. இது, பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.இதேபோல், கிராஸ்கட் ரோட்டில், ஒரு கி.மீ., துாரத்துக்கு ஏற்படுத்த, ரோட்டின் இருபுறமும் வர்ணம் பூசப்பட்டது; பூந்தொட்டிகள் வைக்கப்பட்டன. ஓய்வெடுக்க இருக்கை வசதி செய்யப்பட்டது.இருப்பினும், டவுன்ஹால் போல், பொதுமக்களிடம் வரவேற்பு பெறவில்லை. ரோட்டில் வர்ணம் மட்டுமே பூசியிருந்ததால், ஈர்ப்பு வரவில்லை.நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரோட்டை ஆக்கிரமித்து, இவ்வாறு வேலை செய்வதற்கு யார் அனுமதி கொடுத்தது என்கிற கேள்வி, அத்துறையில் இருந்து எழுந்ததால், தனியார் அமைப்பினர் பின்வாங்கினர்.பாதசாரிகள் செல்வதற்காக ஒதுக்கி, வர்ணம் பூசிய இடத்தின் மீதே, இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. நடந்து மட்டும் செல்ல வேண்டும் என்பதற்காக, வழியேற்படுத்தி, பிரபல ஜவுளிக்கடை முன் பூந்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.ஆனால், அப்பகுதியில் கடைக்கு முன் கார்களை நிறுத்துகின்றனர். அவர்கள் திரும்பி வரும் வரை, கார் நின்று கொண்டிருக்கிறது.வாகனங்களை ரோட்டிலேயே பார்க் செய்வதால், மாநகராட்சியின் பரிசோதனை முயற்சி தோல்வியை சந்தித்துள்ளது. கிராஸ்கட் ரோட்டின் இருபுறமும் குறுக்கு வீதிகள் இருக்கின்றன.மாநகராட்சி சார்பில் வாகன நிறுத்துமிடமும் நடத்தப்படுகிறது. இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை, பார்க்கிங் ஏரியாவிலோ அல்லது குறுக்கு வீதிகளிலோ நிறுத்தினால், ரோட்டில் இடையூறு ஏற்படாது; பாதசாரிகள் நடந்து செல்ல, பாதை கிடைக்கும்.இதற்கு காவல்துறையுடன் இணைந்து, மாநகராட்சி அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும். தனியார் ஓட்டல் முன், அமர்வதற்கு இருக்கை வசதி செய்திருப்பதும், விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.
 

·
Registered
Joined
·
295 Posts
கிராஸ்கட் ரோடு அழகு திட்டம் 'அவுட்!' மாத்தி யோசிப்பார்களா அதிகாரிகள்?
View attachment 1057378

...
WTF did the try to do in Cross Cut Road? Complete failure; an "out" indeed. They have decorated the street like they are going to have some minister visiting or celebrate a marriage function with all sorts are idiotic colors and random "decorative" things. The flower pots and brightly painted old tires specifically are pathetic. Who comes up with all this stupidity? Do they have any professional city planning/design company/architects advising them?

There seems to be confusion at a very basic level - about what the end goal here is.

What we need are clean pedestrian friendly roads, paved end to end, with walkable sidewalks, properly organized vehicular and pedestrian traffic and orderly parking facilities (ideally, multi-level automated parking). That is the purpose of "smart roads". No one needs "decorations" like this. This is a waste of time, effort and money.

If the "officials" don't have a clue, they should hire some professional agencies/consultants and get citizen inputs.
 

·
Registered
Cbe Citizen
Joined
·
267 Posts
New challenges await Coimbatore Corporation on D.B. Road
1081099

Parking should be regulated, space for vendors needs a relook

As the Coimbatore Corporation looks at a February 28 deadline to throw open to traffic the D.B. Road in R.S. Puram, it is set to face challenges, some of which are those it set out to address before executing the model road project.

The Corporation under the Smart Cities Mission has taken up work to redesign the 1.80 km road at ₹ 24.36 crore by providing utility ducts, widened platforms and other pedestrian-friendly facility. The civic body that was supposed to have completed the project in four to six months in 2017, suspended it and resumed work with a new design in 2018.

The challenges that the Corporation is set to face are evident in that stretch of the road where it had completed work and thrown it open to traffic. The first of those is parking. In the absence of regulation, road users continue to park vehicles, both two-wheelers and four-wheelers, the way they did prior to the start of the model road project.

With the carriage way reduced to 14m, the space available for vehicle movement has reduced as parking is unregulated, says a road user. The absence of regulation is also hindering the movement of customers, and carrying of goods to shops rues a shopkeeper.

As per the model road project proposal, the Corporation is supposed to provide on-street parking by clearly delineating parking space.

And, road users are supposed to park vehicles parallel to the street.

The shopkeeper says it remains to be seen if the monthly alternate parking system will return to D.B. Road after the Corporation completes the work.

Another issue that sources say the Corporation has not addressed is that of street vendors. Though the Corporation has built the pavements wide enough to accommodate street vendors, it has not earmarked space for them to do business and this in itself could lead to encroachment of the pavement, fear the shopkeepers on the Road.

Consumer activist K. Kathirmathiyon says the benefit of the ₹ 24.36 crore investment the Corporation has made depends on its ability to work closely with the Coimbatore City Traffic Police to regulate traffic and parking and prevent encroachment of pavements.

If the Corporation failed to regulate street vendors, it will result in a situation where shopkeepers will encroach upon the space in front of their establishments, the street vendors the other side of the pavements, forcing pedestrians on to the road.

This will be undoing of the project, he says.
 

·
Registered
Cbe Citizen
Joined
·
267 Posts
மாறப்போகிறது ரேஸ்கோர்ஸ்!

1083288


கோவை:'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவை ரேஸ்கோர்ஸ் சந்திப்பில், மக்களை கிறங்கடிக்கும் வகையில், 'லைட்டிங் டவர்' அமைக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.கோவை ரேஸ்கோர்ஸ் சுற்றுவட்டச்சாலை, 3.5 கி.மீ., சுற்றளவு கொண்டது; ரோட்டின் இருபுறமும், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், ரூ.40.70 கோடியில் மேம்படுத்தப்படுகிறது.'வாக்கிங்' தளம் சீரமைக்கப்படுவதோடு, நடந்து செல்வோர் எவ்வளவு துாரம் கடந்திருக்கிறோம் என்பதை அறியும் வகையில், 'டிஜிட்டல் மீட்டர்' பொருத்த, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.சிறுவர்களுக்கான விளையாட்டு கூடம், பூங்கா, ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக பிரத்யேக உடற்பயிற்சி கூடங்கள், முதியோர் ஓய்வெடுக்க இருக்கை வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.இதுதவிர, டிஜிட்டல் யோகா சென்டர் உருவாக்கப்படும்; டிஜிட்டல் போர்டில் யோகாசனங்கள் காண்பிக்கப்படும். இதை பார்த்து, எளிய முறையில் பொதுமக்கள் யோகாசனம் செய்ய பழகலாம். ரேஸ்கோர்ஸ் சந்திப்பு பகுதியில், வாகன போக்குவரத்து அதிகமாக இருப்பதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அங்கு, சுதந்திர போராட்ட தியாகி சி.சுப்ரமணியம் சிலை இருக்கிறது; தற்காலிகமாக அகற்றி விட்டு, வெளிநாட்டில் இருப்பதுபோல், 40 அடி உயரத்தில், பிரமாண்டமாக 'லைட்டிங் டவர்' உருவாக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. அனிமேஷன் முறையில் ஒளி அமைப்பு, இயற்கை காட்சிகளை ஒளிக்காட்சியாக தெரியும் வகையில் வடிவமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'ரேஸ்கோர்ஸ் சந்திப்பில் இருந்து தற்காலிகமாக, சி.சுப்ரமணியம் சிலை அகற்றப்படும். லைட்டிங் டவர் அமைத்ததும், மீண்டும் சிலை நிறுவப்படும். சிலையை அகற்ற, கலெக்டரிடம் அனுமதி பெறப்படும். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கும் கடிதம் வாயிலாக, தகவல் தெரிவிக்கப்படும்' என்றனர்.
வரப்போகின்றன இந்த வசதிகள்!
 'வாக்கிங்' துாரம் அறிய 'டிஜிட்டல் மீட்டர்'.
 சிறுவர் விளையாட்டு பூங்கா.
 ஆண், பெண்ணுக்கு தனி ஜிம்.
 முதியோர் ஓய்வெடுக்க இருக்கை வசதி.

 டிஜிட்டல் போர்டில் யோகா பயிற்சி.

 

·
Registered
Cbe Citizen
Joined
·
267 Posts
வண்ண விளக்கொளியில்...

1084786


ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவை ஆர்.எஸ்.புரம், டி.பி.,ரோட்டில் உருவாகும் மாதிரி சாலை பணியின் ஒரு பகுதியாக, பிரிட்டனில் இருப்பதை போல், பார்வையாளர்களை கவரும் வகையில், இரவில் வண்ண விளக்குகளால் ஒளிரும், 'கிளாக் டவர்' அமைக்கப்பட்டுள்ளது.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவை ஆர்.எஸ்.புரம், டி.பி., ரோடு மற்றும் ரேஸ்கோர்ஸ் சுற்றுவட்டச்சாலையை, 'மாதிரி சாலை'யாக்கும் பணியை, மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.மத்திய - மாநில அரசு துறைகள் போதிய ஒத்துழைப்பு கொடுக்காத காரணத்தால், நான்கு ஆண்டுகள் இழுபறிக்கு பின், டி.பி., ரோடு வேலை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.சுக்ரவாரப்பேட்டை சந்திப்பில் இருந்து, போஸ்ட் ஆபீஸ் ரவுண்டானா வரை, நடைபாதை அமைத்து, அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. வருவாய் ஈட்டும் வகையில், டிஜிட்டல் விளம்பர பலகைகளும் மாட்டப்பட்டு உள்ளன.ரவுண்டானா பகுதியில் இருந்த, போக்குவரத்து நிழற்குடையை அகற்றி விட்டு, நான்கு சாலைகளில் இருந்து வருவோரும் பார்க்கும் வகையில், 'கிளாக் டவர்' அமைக்கப்பட்டுள்ளது.பிரிட்டனில் இருக்கும் கடிகார மாடலை காப்பியடித்து, பாரம்பரிய ஸ்டைலில், இங்கு தயாரித்து, பொருத்தப்பட்டு உள்ளது. பார்வையாளர்களை கவரும் வகையில், இரவில் பல வண்ணங்களில் ஒளிரும். ஜி.பி.எஸ்., வசதி இருப்பதால், நேரம் துல்லியமாக அறியலாம் என்கின்றனர், மாநகராட்சி அதிகாரிகள்.மக்களை கவர வேண்டும் என்பதற்காக, ரவுண்டானா பகுதியில் கோபிள் (cobbles stone) கற்கள் பதிக்கப்பட்டு அழகூட்டப்பட்டுள்ளது.லோகோ மிஸ்ஸிங்!கிளாக் டவரில், நான்குபுறமும் பொருத்தியுள்ள கடிகாரத்துக்குள், ஒப்பந்த நிறுவனத்தின் லோகோ ஒட்டப்பட்டுள்ளது. பல கோடி ரூபாயை செலவழிக்கும் மாநகராட்சியின் லோகோ, நிதி வழங்கிய மத்திய - மாநில அரசுகளின் லோகோ இடம் பெறவில்லை. ஒப்பந்த நிறுவனத்தின் லோகோவை அகற்றி விட்டு, அரசு லோகோவை இடம் பெறச் செய்ய வேண்டும்.'ஒரு மாதிரி' சாலைரோட்டிலேயே ஆங்காங்கே இரு சக்கர வாகனங்கள், கார்கள் நிறுத்தப்படுகின்றன. 'மாதிரி சாலை' போலவே தெரியவில்லை. வாகனங்களை, குறுக்கு ரோடுகளில் நிறுத்தி விட்டு, டி.பி., ரோட்டில் பாதசாரியாகவும், ரெட் பஸ்சில் மட்டும் செல்ல அனுமதித்தால் மட்டுமே, எதிர்பார்த்த, 'மாதிரி சாலை'யாக இருக்கும். இல்லையெனில், கோடியை விழுங்கியதாகவே இருக்கும்!
 
761 - 780 of 812 Posts
Top