SkyscraperCity banner

781 - 800 of 812 Posts

·
Registered
Joined
·
2,425 Posts
Discussion Starter #784
ஸ்மார்ட் ஆக மாறிய கோவை நகரம்


கோவை,

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவுபெறும் நிலையில் உள்ளது. இந்த பணிகள் முடிந்து அனைவரையும் கொள்ளை கொள்ளப்போகுது கோவை அழகு என்கிற நிலைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்களை பொறுத்தவரை உக்கடம் பெரிய குள பகுதியில் 1.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.39.74 கோடி மதிப்பீட்டிலும், பேஸ் 1 பகுதியில் 4.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.62 கோடி மதிப்பீட்டிலும் புனரமைத்து, சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

குளத்தை சுற்றிலும் உள்ள கரைகளை பலப்படுத்தும் பணிகள் முடிந்து, இவற்றில் இயற்கை முறையில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், மிதிவண்டி பாதை அமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், சிற்றுண்டி உணவகம் அமைத்தல், மிதக்கும் நடைபாதைகள் அமைப்பதற்கான பணிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட விளையாட்டு தளங்கள் அமைத்தல், பாதசாரிகள் பாதை அமைத்தல், வண்ண விளக்குகள் அமைத்தல், நீர்வழிப்பாதை மேம்படுத்துதல், குளத்திலுள்ள ஆகாயத்தாமரை அப்புறப்படுத்துதல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது.

இதே போல் வாலாங்குளம் பகுதியில் ரூ.48 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. குளக்கரையை அலங்காரப்படுத்தும் இந்த பணிகளும் பெரும்பாலும் முடிவுற்றுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது

கோவை உக்கடம் பெரியகுளம் மற்றும் வாலாங்குளக்கரை பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் சுமார் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. விரைவில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.

அப்போது பொதுமக்கள் குடும்பத்துடன் குதுகலமாக வந்து பொழுது போக்கலாம். சுற்றுப்புறசூழலில் மனதை மயக்கும் அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் கோவை நகரம் ஸ்மார்ட் ஆக மாறியது என்றே கூறலாம் என்றனர்.

இதுபோல் கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோடு மாநகராட்சி சார்பில் மாதிரி சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. இதற்காக தபால் நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அழகுபடுத்தபட்டுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், நாகரீக உச்சத்தில் உள்ள வளர்ந்த நாடுகளில்தான் நகரங்கள் மேம்படுத்தப்பட்டு அதிசயங்களில் ஒன்றாக திகழும். அதுபோல் கோவை நகரமும் மாறிவருது இருப்பது உள்நாட்டிலா வெளிநாட்டிலா என்கிற நிலை உள்ளது.

இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அழகு மட்டும் அல்ல, அனுபவித்து மகிழும் பொழுது போக்குகளும் உள்ளது என்பதை நினைக்கும்போது, கோவைக்கு கிடைத்த வரப்பிரசாதமாக கருதுகிறோம். பணிகள் விரைவில் முடிந்து பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்றனர்.

 

·
Registered
Cbe Citizen
Joined
·
267 Posts
மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது ஸ்மார்ட் சிட்டி

தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூரில் நடந்த நிகழ்ச்சியில், "வரும் 25ம் தேதி உக்கடத்தில், ஸ்மார்ட்சிட்டி மக்கள் பயன்பாட்டுக்கு வரும்,'' என, அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 73வது பிறந்த நாளையொட்டி, கிரிக்கெட் அணிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி, தொண்டாமுத்தூரில் நேற்று நடந்தது.இந்நிகழ்ச்சியில், அமைச்சர் வேலுமணி பேசுகையில், "நடராஜனை போல, கிராமப்புறங்களில் இருந்து பல வீரர்கள் உருவாக வேண்டும். வரும், 25ம் தேதி உக்கடத்தில் ஸ்மார்ட் சிட்டி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். சென்னைக்கு மெரினா போல, கோவைக்கு ஸ்மார்ட் சிட்டி அமைந்துள்ளது," என்றார்.
 

·
Registered
Cbe Citizen
Joined
·
267 Posts
PM to visit Tamil Nadu and Puducherry on 25th February
Prime Minister will lay the foundation stone for development of Integrated Command and Control Centers (ICCC) in nine Smart Cities including Coimbatore, Madurai, Salem, Thanjavur, Vellore, Tiruchirappalli, Tiruppur, Tirunelveli and Thoothukudi. These ICCCs would be developed at a cost of about Rs 107 crore, and would act as a 24x7 support system, providing real time smart solutions for quicker services, with the aim of integrating essential government services and enabling data based decision making.
 

·
Registered
Joined
·
1,331 Posts
Happy to see the transformation of DB road. But also worried about how long these will sustain...
Our people will not help to maintain this for long time..that's my worry as welll
 
781 - 800 of 812 Posts
Top