SkyscraperCity banner

1 - 20 of 360 Posts

·
Epitome of Enterprise
Joined
·
2,522 Posts
Discussion Starter #1 (Edited)
Hi Guys, here lets start a new thread for our yellow city, dedicated to the City Transportation Projects Updates & Developments (like City Buses, Railways, Ferry etc,..) regarding these....

We are having the following threads on Erode
.....................................................

* Erode Western Cauvery UA - Discussions-I to discuss about Core City, Bhavani, Perundurai areas.

* Erode Eastern Cauvery UA - Discussions-II to discuss about Pallipalayam, Komarapalayam and Tiruchengode areas

* Erode City Buses | Railways Updates to discuss about Bus and Rail transport infrastructure in the City.

* Erode Ring Road | Other Road Infrastructure to discuss about the Ring Road and other Road infrastructure Projects and Updates

* Erode Perundurai Road - Projects & Updates to discuss about infrastructure, developments and project updates about the Perundurai Road

* Erode - Shopping | Entertainment | Hospitallity to discuss about Retail, Shopping Complexes, Malls, Branded Showrooms, Malls, Multiplexes, Theaters, Fun Zones, Hotels and Hospitality

* Erode - SEZ | SIPCOT Industrial Complexes Megaprojects

* Erode in Memory and History

* Erode - Wishlists | Suggestions | Future Projects
........................................................
 

·
Epitome of Enterprise
Joined
·
2,522 Posts
Discussion Starter #2
Lets start with the needs of our city

Cross-posted from Erode-Projects & Developments thread

I have prepared a detailed map of the requirements and developments have to be implemented for our City, inorder to go-in-hand with the development of City, increasing trade, traffic and population.........

 

·
Epitome of Enterprise
Joined
·
2,522 Posts
Discussion Starter #3
Prestigious Perundurai Road - Everlasting Pride of Erode

Perundurai Road, named after the connectivity of the sub-urban locality of Perundurai with the city of Erode.......

It is the major, busiest, high thoroughfare, arterial road of the city, named for a stretch on SH-96... It is about 18.2kms in distance...

Actual SH-96 starts at Clock Tower junction and ends at Kangeyam via Perundurai...

The Road between Clock Tower near PS Park and MGR Statue Junction is called as Brough Road and the remaining stretch till Perundurai 4Roads is called as '''Perundurai Road'''

Due to its Geographic location, Connectivity, dimension, thoroughfare, economic and educational importance, its been called as the '''Mount Road of Erode'''

Just like that of Chennai's Mount Road (Anna Salai),......
Coimbatore's Avinashi Road,........

its for Erode... Perundurai Road,.........

It act as the major road link connecting Erode with the western cities like CBE, TUP, POY, MTP, OOTY and exits to KERALA through National Highway-47.... It joins the 6-laned NH-47 near SIPCOT Industrial Park covering a stretch of about 23kms....

 

·
Epitome of Enterprise
Joined
·
2,522 Posts
Discussion Starter #4 (Edited)
Integrated Transit Terminal

Hi everybody,.... This is just an idea.... Don't get afraid of seeing the topic...

It may be an essential need in future for such a developing city like Erode....

Instead of asking for a single Bus stand, why dont we strive for an Integrated Transit Terminal/Mobility Hub.....???? Nothing but just like the Vytilla Mobility Hub in Kochi...

Why cant we get such a thing in the Solar-Lakkapuram area.... Ofcourse, the location was geographically suitable for developing a combined Transit node...

We can have an Integrated Transit Hub here with
*World-class Bus Terminal
*Railway Station(the rly line connecting Erode-Karur pass through here)
*Ferry Station (Inland-across R.Cauvery already available here)
*Airport (If possible for Erode in future, plan now itself)
*Shopping place
*Park/Garden
*Open-air theater
*Public Utility Complex(comprising all counters)
*Scenic drive/Walkways along the shore of R.Cauvery
 

·
Epitome of Enterprise
Joined
·
2,522 Posts
Discussion Starter #6
Urginig to fasten the completion of Ring road

ஈரோட்டுக்கான ரிங் ரோடு பணிகளை விரைவுபடுத்த கோரி, பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிறுவனங்கள் சார்பில், கலெக்டர் காமராஜிடம் மனு கொடுத்தனர். ஆணைக்கல்பாளையம், தாமரை நகர், எல்.ஐ.ஸி., நகர்ப்பகுதி மக்கள், தங்கராஜ் என்பவர் தலைமையில் வழங்கிய மனு: ஈரோட்டில் அமைந்து வரும் ரிங் ரோடு, வளர்ந்து வரும் நகரத்துக்கும், மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், தொலை தூரம் செல்பவர்களுக்கும் மிகச்சிறந்த திட்டம். தற்போது சர்வே செய்து ரிங்ரோடு அமைந்து வரும் பகுதி, பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பரிசல்துறை முதல் பூந்துறை மெயின்ரோடு வரை மொத்தம் ஏழு ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற அனைத்து நிலங்களும் அரசு புறம்போக்கு நிலங்கள்.

குடியிருப்புக்கள், வர்த்தக நிறுவனங்கள் என எதற்கும், எந்த பாதிப்பும் இல்லை. சிலர் பண ஆதாயத்துக்காக 1,500க்கும் மேற்பட்ட வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், போர்வெல், அங்கன்வாடிகள் பாதிக்கப்படுவதாக கூறி வருகின்றனர். பொய்யாக மனுக்கள் கொடுத்தும், உண்ணாவிரதம் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் எங்களுக்கும் எவ்வித பிரச்னையும் இல்லை. எனவே, அரசும், மாவட்ட நிர்வாகமும் ரிங் ரோடு பிரச்னையை எவ்வித பாரபட்சமும் இன்றி விரைந்து முடிக்க வேண்டும். அவ்வாறு முடிக்கப்படாததால், போக்குவரத்து சிரமங்கள் ஏற்படுகிறது, என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
 

·
Epitome of Enterprise
Joined
·
2,522 Posts
Discussion Starter #7
Need of Service Roads

The residents and road users of Erode around Chithode area are highly in need of Service roads connecting other roads with newly-laid 4-laned NH-47 bypass......

ஈரோடு : சேலம் - கோவை நான்கு வழிச்சாலையில், ஈரோடு சித்தோட்டில் சர்வீஸ் ரோடு இன்றி மக்கள் விபத்து அபாயத்துடன் ரோட்டை கடந்து செல்கின்றனர்.

சித்தோடு, லட்சமி நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் உள்ளது. வழியோர கிராமங்களில் இருந்து வரும் வாகனங்கள் நான்கு வழிச்சாலையில் ஏறவும், அதுபோல், நான்கு வழிச்சாலையில் வரும் வாகனங்கள் பிரிந்து கிராமங்களுக்குள் செல்லவும், சர்வீஸ் ரோடுகள், சில இடங்களில் நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு, பவானியில் இருந்து கோவை செல்லும் பிரதான சாலையில் நான்கு வழிச்சாலையில் வாகனங்கள் செல்லும் வகையில் எந்த இடத்திலும் சர்வீஸ் ரோடு இல்லை. மண்ணால் ஆன நடைபாதை, கிராமத்துக்கு திரும்பும் பழைய மெட்டல் சாலைகள், அல்லது கிராம மக்களால் வெட்டிவிடப்பட்ட பாதைகள் வழியாக தேசிய நெடுஞ்சாலையை அடைகின்றனர்.

சித்தோடு அருகே மட்டும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மக்களே ஏற்படுத்திய தற்காலிக, பாதுகாப்பற்ற பாதைகள் உள்ளன. இவ்வழியைத்தான் டூவீலர், நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் பயன்படுத்துகின்றன. சர்வீஸ் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

·
Hyperactive User
Joined
·
6,631 Posts
சிலர் பண ஆதாயத்துக்காக 1,500க்கும் மேற்பட்ட வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், போர்வெல், அங்கன்வாடிகள் பாதிக்கப்படுவதாக கூறி வருகின்றனர். பொய்யாக மனுக்கள் கொடுத்தும், உண்ணாவிரதம் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் எங்களுக்கும் எவ்வித பிரச்னையும் இல்லை. எனவே, அரசும், மாவட்ட நிர்வாகமும் ரிங் ரோடு பிரச்னையை எவ்வித பாரபட்சமும் இன்றி விரைந்து முடிக்க வேண்டும். அவ்வாறு முடிக்கப்படாததால், போக்குவரத்து சிரமங்கள் ஏற்படுகிறது, என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
Good move by the people against the real estate brokers who stop development by giving false petitions.... Hats off to Erode people...:)
 

·
Registered
Joined
·
516 Posts
The residents and road users of Erode around Chithode area are highly in need of Service roads connecting other roads with newly-laid 4-laned NH-47 bypass......

ஈரோடு : சேலம் - கோவை நான்கு வழிச்சாலையில், ஈரோடு சித்தோட்டில் சர்வீஸ் ரோடு இன்றி மக்கள் விபத்து அபாயத்துடன் ரோட்டை கடந்து செல்கின்றனர்.

சித்தோடு, லட்சமி நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் உள்ளது. வழியோர கிராமங்களில் இருந்து வரும் வாகனங்கள் நான்கு வழிச்சாலையில் ஏறவும், அதுபோல், நான்கு வழிச்சாலையில் வரும் வாகனங்கள் பிரிந்து கிராமங்களுக்குள் செல்லவும், சர்வீஸ் ரோடுகள், சில இடங்களில் நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு, பவானியில் இருந்து கோவை செல்லும் பிரதான சாலையில் நான்கு வழிச்சாலையில் வாகனங்கள் செல்லும் வகையில் எந்த இடத்திலும் சர்வீஸ் ரோடு இல்லை. மண்ணால் ஆன நடைபாதை, கிராமத்துக்கு திரும்பும் பழைய மெட்டல் சாலைகள், அல்லது கிராம மக்களால் வெட்டிவிடப்பட்ட பாதைகள் வழியாக தேசிய நெடுஞ்சாலையை அடைகின்றனர்.

சித்தோடு அருகே மட்டும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மக்களே ஏற்படுத்திய தற்காலிக, பாதுகாப்பற்ற பாதைகள் உள்ளன. இவ்வழியைத்தான் டூவீலர், நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் பயன்படுத்துகின்றன. சர்வீஸ் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The entire streach from Sankari to Chenngapalli formed by IVRCL doesn't have proper Service road, One example in Sankari is, if we need to get down into Omalur Road from New NH47, then there is no proper service road.
 

·
Epitome of Enterprise
Joined
·
2,522 Posts
Discussion Starter #11
The entire streach from Sankari to Chenngapalli formed by IVRCL doesn't have proper Service road, One example in Sankari is, if we need to get down into Omalur Road from New NH47, then there is no proper service road.
Ya... really......

But with this condition, they are going to implement the North-South Corridor along this stretch........

And the Coimbatore-Erode-Salem Industrial Corridor......... What a bad scenario//////......
 

·
Epitome of Enterprise
Joined
·
2,522 Posts
Discussion Starter #12
Scam in Ring Road Project

ஈரோடு: "ரிங் ரோடு திட்டத்தில் நடந்த மோசடியை மறைக்க, அதில் ஈடுபட்டவர்கள் தவறான தகவலை தருகின்றனர். மோசடி நடந்தது குறித்து ஆதாரங்கள் கலெக்டரிடம் தரப்பட்டுள்ளது' என, ரிங் ரோடு ஊழல் எதிர்ப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.இயக்கத் தலைவர் பிரகாஷ், செயலாளர் அசோக்குமார், பொருளாளர் குப்புசாமி ஆகியோர் கூறியதாவது:ரிங் ரோட்டில் நடந்த மோசடியை வெளிக்கொணர பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்திய பிறகு, ஆர்.டி.ஓ., தலைமையில் விசாரணைக்குழு அமைத்து கலெக்டர் காமராஜ் உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில், நேராக சென்ற சாலையை பணம் கொடுத்து வளைத்து, ஆதாயம் அடைந்த நிறுவனம் மற்றும் நில உரிமையாளர்கள், அதற்கு உதவிய அதிகாரிகள் கூட்டணி அமைத்து, தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.வெறும் ஏழு ஏக்கர் நிலம் தான் தனியாரிடமிருந்து கையகப்படுத்துவதாகவும், மீதி அனைத்தும் புறம்போக்கு நிலம் எனவும் உண்மைக்கு புறம்பான தகவலை கலெக்டரிடம் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அரசு நிலம் எடுக்கும் கணக்குபடி, 46 புதூர் அ, ஆ கிராமத்தில் குடியிருப்பு வாசிகள், விவசாயிகள் என, 125 பேரிடம் இருந்து எட்டு லட்சத்து 12 ஆயிரத்து 402 சதுர அடி நிலம் (ஏறக்குறைய 19 ஏக்கர்) கையகப்படுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.லக்காபுரம் கிராமத்தில், 46 நில உரிமையாளர்களிடமிருந்து ஐந்து லட்சத்து 33 ஆயிரத்து 658 சதுரஅடி நிலம் (12.5 ஏக்கர்) கையகப்படுத்தவும் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.மேலும், பரிசல்துறையை ஒட்டியுள்ள காசிபாளையம் கிராமத்திலும் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மொத்தம் 45 ஏக்கர் நிலம் அரசு எடுத்து கொள்ள உள்ளது.

இதுவே உண்மை நிலை. வளைந்து செல்லும் ரிங் ரோடு திட்டத்தால், மோசடி நபர்களின் 100 ஏக்கருக்கும் அதிகமான நிலம் பயனடைகிறது.ஆனைக்கல்பாளையம் ஊர் பொது மயானம், மகளிர் கழிப்பிடம், கோவில், குடிநீர் தொட்டி மற்றும் குடியிருப்புக்குள் சாலை வருவதால், 1,500 குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. வளைந்து செல்லும் ரிங் ரோடு திட்டம் வேண்டும் என்று கூறுபவர், ஊர் பொது மயானத்துக்கும், மகளிர் கழிப்பிடத்துக்கும் அவர்களது நிலத்தை தர ஒப்புக் கொள்வரா? இதில் நடந்த மோசடிகள் குறித்து பல்வேறு ஆதாரங்களை திரட்டி கலெக்டரிடம் வழங்கியுள்ளோம். விசாரணைக்கு பிறகு உண்மை வெளிவரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

·
Epitome of Enterprise
Joined
·
2,522 Posts
Discussion Starter #13 (Edited)
City Buses bypassing PS Park

ஈரோடு மாநகராட்சி பஸ் ஸ்டாண்டிலிருந்து கவுந்தப்பாடிக்கு இயக்கப்படும் பெரும்பாலான டவுன் பஸ்கள், இரவில் பி.எஸ்.பார்க் வராததை கண்டித்து, நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

பஸ் ஸ்டாண்டிலிருந்து பி.எஸ்.பார்க், திங்களூர், நல்லாம்பட்டி வழியாக கவுந்தப்பாடிக்கு டவுன் பஸ்கள் (ரூட் நெம்பர் 8) இயக்கப்பட வேண்டும்.

அதேபோல், தடம் எண் 12க்குரிய அனைத்து டவுன் பஸ்களும் ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வழியாகத்தான் இயக்கப்பட வேண்டும்.

தடம் எண் 5க்குரிய அனைத்து டவுன் பஸ்களும் சூரம்பட்டி வரை செல்ல வேண்டும். இரவு 7 மணியை கடந்து விட்டால் இவை இவ்வாறு இயக்கப்படுவதில்லை.

தடம் எண் 8, 12 ஆகியவை பன்னீர் செல்வம் பார்க், ரயில்வே ஸ்டேஷனை தவிர்த்து, சவீதா பஸ் நிறுத்தம் வழியாக கவுந்தப்பாடிக்கு செல்கின்றன. இதை எதிர்த்து ஆடிட்டர் கார்த்திகேயன் என்பவர் போக்குவரத்து பொது மேலாளரிடம் புகார் செய்தார். அவர் விசாரித்து, டவுன் பஸ்களை கண்காணிப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால், டவுன் பஸ்கள் மீண்டும் சவீதா பஸ் நிறுத்தம் வழியாகவே திரும்பி சென்றன. அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும், ரூட் படி பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு கவுந்தப்பாடி செல்லும் பஸ்ஸில், ஈரோடு பஸ் ஸ்டாண்டில் ஏறிய பயணிகள், அந்த பஸ் பன்னீர் செல்வம் பூங்கா செல்லாமல், சவீதாவில் திரும்பியதும் பஸ்ஸை நிறுத்தி, பஸ் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து கழக ஆய்வாளர் மோகன் நேரில் வந்து பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு பயணிகள் பஸ் மறியலை கைவிட்டு பஸ்ஸில் சென்றனர்.
 

·
Registered
Joined
·
516 Posts
ஈரோடு: "ரிங் ரோடு திட்டத்தில் நடந்த மோசடியை மறைக்க, அதில் ஈடுபட்டவர்கள் தவறான தகவலை தருகின்றனர். மோசடி நடந்தது குறித்து ஆதாரங்கள் கலெக்டரிடம் தரப்பட்டுள்ளது' என, ரிங் ரோடு ஊழல் எதிர்ப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.இயக்கத் தலைவர் பிரகாஷ், செயலாளர் அசோக்குமார், பொருளாளர் குப்புசாமி ஆகியோர் கூறியதாவது:ரிங் ரோட்டில் நடந்த மோசடியை வெளிக்கொணர பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்திய பிறகு, ஆர்.டி.ஓ., தலைமையில் விசாரணைக்குழு அமைத்து கலெக்டர் காமராஜ் உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில், நேராக சென்ற சாலையை பணம் கொடுத்து வளைத்து, ஆதாயம் அடைந்த நிறுவனம் மற்றும் நில உரிமையாளர்கள், அதற்கு உதவிய அதிகாரிகள் கூட்டணி அமைத்து, தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.வெறும் ஏழு ஏக்கர் நிலம் தான் தனியாரிடமிருந்து கையகப்படுத்துவதாகவும், மீதி அனைத்தும் புறம்போக்கு நிலம் எனவும் உண்மைக்கு புறம்பான தகவலை கலெக்டரிடம் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அரசு நிலம் எடுக்கும் கணக்குபடி, 46 புதூர் அ, ஆ கிராமத்தில் குடியிருப்பு வாசிகள், விவசாயிகள் என, 125 பேரிடம் இருந்து எட்டு லட்சத்து 12 ஆயிரத்து 402 சதுர அடி நிலம் (ஏறக்குறைய 19 ஏக்கர்) கையகப்படுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.லக்காபுரம் கிராமத்தில், 46 நில உரிமையாளர்களிடமிருந்து ஐந்து லட்சத்து 33 ஆயிரத்து 658 சதுரஅடி நிலம் (12.5 ஏக்கர்) கையகப்படுத்தவும் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.மேலும், பரிசல்துறையை ஒட்டியுள்ள காசிபாளையம் கிராமத்திலும் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மொத்தம் 45 ஏக்கர் நிலம் அரசு எடுத்து கொள்ள உள்ளது.

இதுவே உண்மை நிலை. வளைந்து செல்லும் ரிங் ரோடு திட்டத்தால், மோசடி நபர்களின் 100 ஏக்கருக்கும் அதிகமான நிலம் பயனடைகிறது.ஆனைக்கல்பாளையம் ஊர் பொது மயானம், மகளிர் கழிப்பிடம், கோவில், குடிநீர் தொட்டி மற்றும் குடியிருப்புக்குள் சாலை வருவதால், 1,500 குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. வளைந்து செல்லும் ரிங் ரோடு திட்டம் வேண்டும் என்று கூறுபவர், ஊர் பொது மயானத்துக்கும், மகளிர் கழிப்பிடத்துக்கும் அவர்களது நிலத்தை தர ஒப்புக் கொள்வரா? இதில் நடந்த மோசடிகள் குறித்து பல்வேறு ஆதாரங்களை திரட்டி கலெக்டரிடம் வழங்கியுள்ளோம். விசாரணைக்கு பிறகு உண்மை வெளிவரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Innum Work yae arambam agalae, athukulla ullala... This should not slowdown the progress of work,

Also I could not see any progress in this project. I just heard that Land Marking has been done in Thindal - Sathy Road segment. Can you post status updates
 

·
Epitome of Enterprise
Joined
·
2,522 Posts
Discussion Starter #15
Pasur-Solasiramani Barrage Bridge

ஈரோடு காவிரி ஆற்றின் குறுக்கே, தடுப்பணை அமைத்து, மின்சாரம் தயாரிக்க கட்டப்பட்ட பாலத்தின் மீது, பொதுமக்கள் நடந்தும், டூவீலர் மூலம் செல்ல, தடை விதிக்கப்பட்டதால், அப்பகுதியை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு - நாமக்கல் மாவட்டம் இடையே காவிரியாறு செல்லுகிறது. தமிழக அரசு மின் பற்றாக்குறையை சமாளிக்க, கடந்த 2005ம் ஆண்டு இறுதியில், ஈரோடு மாவட்டத்தில், 497 கோடி ரூபாய் மதிப்பீட்டில், காவிரி ஆற்றின் குறுக்கே, தடுப்பணையை அமைத்து, 30 மெகாவாட் மின் உற்பத்தி செய்வது என முடிவு செய்தது.இத்திட்டப்படி, ஈரோடு வெண்டிபாளையத்திலும், பாசூரிலும், காவிரியின் குறுக்கே புதிதாக, 18 கண்கள் பிரமாண்ட பாலம் கட்டப்பட்டது. இங்கு குரேஷியாவில் இருந்து இறக்குமதி செய்த, பல்ப் தொழில் நுட்ப இயந்திரம் மூலம் மின் உற்பத்தி செய்வற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. பாலம் பணிகள் முடிக்கப்பட்டதும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், சோழசிராமணி வழியாக தடுப்பணையை கடந்து, பாசூர் வழியாக ஈரோடு வந்து சென்றனர். இப்பாலம் கட்டும் முன், சோழசிராமணில் இருந்து ஈரோடு வரவேண்டியவர்கள் பரமத்தி வேலூர், பள்ளிபாளையம் சுற்றி வந்தனர்.

பரிசல் மூலமாக, பாசூரில் இருந்து, சோழசிராமணிக்கு காவிரி ஆற்றை கடந்து, சென்று வந்தனர். மின் உற்பத்திக்கு பாலம் கட்டினாலும், மறுபுறம் மக்களுக்கு பாலம் பயன்பட்டதால் வரவேற்றனர். பாலம் வழியாக மக்கள் வந்து சென்றதால், ஏற்கனவே இங்கிருந்த பரிசல் போக்குவரத்து ஜூலை மாதத்துடன் நிறுத்தப்பட்டது.இந்நிலையில் மின்துறையினர், அதிரடியாக பாலத்தில் கான்கிரீட் பணிகள் நடக்க உள்ளதால், மக்கள் நடந்து செல்லவும், டூவீலரில் செல்ல காலவரையின்றி அனுமதி மறுக்கப்பட்டது. பாசூர் - சோழசிராமணி இடையேயான தொடர்பு மீண்டும் துண்டிக்கப்பட்டது. பாலத்தை நம்பி, நிறுத்தப்பட்ட பரிசல் போக்குவரத்தும், தற்போது இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, பாசூர், சோழசிராமணி மக்களின் வேண்டுகோளை ஏற்று, கலெக்டர் நடவடிக்கை எடுத்து, மீண்டும் பேரேஜ் பாலம் மீது, மக்கள் நடந்தும், டூவீலரில் செல்ல அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
 

·
Epitome of Enterprise
Joined
·
2,522 Posts
Discussion Starter #16
Rush for increasing Buses to Sastri Nagar

The Residents of Sastri Nagar are highly in need of additional bus facilities....

Sastri Nagar, geographically located inbetween Chennimalai Road and Poondurai Road near Railway Colony, needs more Transit Facility.......

Currently only two minibuses and City bus Route No.3 were plying inside here.

http://www.dinamalar.com/district_detail.asp?id=316567
 

·
Epitome of Enterprise
Joined
·
2,522 Posts
Discussion Starter #17
Innum Work yae arambam agalae, athukulla ullala... This should not slowdown the progress of work,

Also I could not see any progress in this project. I just heard that Land Marking has been done in Thindal - Sathy Road segment. Can you post status updates
It happened..... I think works stopped temporarily....

ஆக்கிரமிப்பாளர்கள் கொடுக்கும் தொடர் புகாரால், "ரிங் ரோடு' பணி தாமதம் ஏற்படுகிறது. அரசு திட்டமிட்டபடி பணியை விரைந்து முடிக்க வேண்டும், எனக்கோரி பல்வேறு பகுதி மக்கள் மனுக்கொடுத்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில், திட்ட இயக்குனர் வித்யாசாகரிடம், ஈரோடு ஆணைக்கல்பாளையம், ரகுபதிநாயக்கன்பாளையம், பெரியகடையம்பாளையம், ரெங்கம்பாளையம் பகுதி மக்கள் அளித்த மனுவில் கூறியதாவது: ஈரோடு நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், கனரக வாகனங்கள் நகருக்குள் வராமல், விரைவாக செல்லும் வகையிலும் கொக்கராயன்பேட்டையில் இருந்து ரிங் ரோடு அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது. அரசு நிலம் மற்றும் தனி நபர்களின் நிலம் மற்றும் ஆக்ரமிப்பு நிலங்கள் என அனைத்தும் கணக்கீடு செய்து, மார்க் செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டு, ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இப்பணிக்கு இடையூறு செய்தால் அரசு அதை கண்டு கொள்ளாமல் இருப்பதுடன், அவர்கள் மீது கைது நடவடிக்கையும் எடுக்கலாம், என விதி உள்ளது. சமீப காலமாக பல்வேறு பெயர்களில் அமைப்புகள், தனி நபர்கள் போன்றோர் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலங்கள் பறி போய்விடும் என்பதற்காக, ஒவ்வொரு வாரமும் கலெக்டர், தேசிய நெடுஞ்சாலைத் துறையினரிடம் மனுக்கொடுத்து வருகின்றனர். ஒவ்வொரு மனு வந்ததும், மாவட்ட நிர்வாகம் சார்பில் அளவீடு செய்யவும், அதை ஆய்வு செய்யவும் ஆட்களை அனுப்புகின்றனர். இதனால், பணி நடக்காமல், தாமதம் ஏற்படுகிறது. உண்மையாக நிலம் வாங்கி, அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள், எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அரசிடம் நிலத்தை ஒப்படைத்துள்ளனர். வேறு நிலங்களை அவர்கள் வாங்கி அதே பகுதியில் குடியிருந்து வருகின்றனர்.

தற்போது யார் மனுக்கொடுத்தாலும், அம்மனு மீது பரிசீலனை, ஆய்வு என்ற பெயரில் இழுத்தடிப்பதால் ரிங் ரோடு பணி நிறுத்தப்பட்டுள்ளதுடன், திட்டமும் பல்வேறு இடங்களில் மாற்றம் செய்யப்பட்டு புதிது, புதிதாக பலர் பாதிக்கப்படும் நிலை தொடர்கிறது. இதை தவிர்த்து ஏற்கனவே திட்டமிட்டபடி ரிங் ரோடு பணியை விரைந்து முடிக்க வேண்டும். மனுக்கள் வழங்கும் நபர்களின் உண்மையான காரணத்தை அறிந்து, அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
 

·
Epitome of Enterprise
Joined
·
2,522 Posts
Discussion Starter #18
Controversies in TNSTC's Covai-Erode-Salem Riders.......

கோவை - சேலம் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பஸ் ஊழியர்களின் நலனில் நிர்வாகம் பாரபட்சம் காட்டுவதாக அதிருப்தி எழுந்துள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கோவை மண்டலத்துக்குட்பட்ட உப்பிலிபாளையம் கிளையில் இருந்து கோவை - சேலம் இடையே 13 பஸ்களை இயக்குகிறது. இவை, கோவை - சேலம் இடையேயான 166 கி.மீ., தூரத்தை 60 முதல் 65 கி.மீ., வேகத்தில் 4 மணி நேரத்தில் சென்றடைகின்றன. அனைத்து பஸ்களிலும் எக்ஸ்பிரஸ் கட்டணம் 55 ரூபாய் வசூலிக்கப்படுகிறது (சாதாரண பஸ் கட்டணம் 46 ரூபாய்). கோவையில் இருந்து புறப்பட்டு கருமத்தம்பட்டி, அவிநாசி, செங்கப்பள்ளி, விஜயமங்கலம், ஈரோடு, சங்ககிரி வழியாக சேலம் சென்றடையும் இந்த பஸ்கள், மேற்குறிப்பிட்ட அனைத்து ஊர்களிலும் நின்று செல்கின்றன. எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலித்துவிட்டு அனைத்து ஊர்களிலும் நிறுத்தி செல்வதால், அதிருப்தி அடையும் பயணிகள் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். பஸ் ஊழியர்கள் ஒரு ஷிப்டுக்கு நான்கு சிங்கிள் (கோவை - சேலம், சேலம் - கோவை, கோவை - சேலம், சேலம் - கோவை) என மொத்தம் 664 கி.மீ., தூரம் பணியாற்றுகின்றனர். கிளையிலிருந்து பஸ் "ஷெட் அவுட்' காலை 7.30 மணிக்கு செய்தால் மறுநாள் அதிகாலை 4.00 மணிக்கு "ஷெட் இன்' செய்கின்றனர். ஒரு நாள் பணிக்கு சென்றால் மறுநாள் "டி.ஆர்.,'(டியூட்டி ரெஸ்ட்) ஓய்வு கிடைக்கிறது.

ஈரோடு மண்டலத்திலிருந்து கோவை - சேலம் வழித்தடத்தில் 20 பஸ்கள் இயக்கப்படுகின்றன; கட்டணம் 55 ரூபாய். ஆனால், ஈரோடு மண்டல அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஒரு ஷிப்டுக்கு இரண்டு சிங்கிள் மட்டுமே ஓட்டுகின்றனர். ஈரோட்டிலிருந்து புறப்பட்டு கோவை வந்து, கோவை - சேலம், சேலம் - கோவை என மொத்தம் 550 கி.மீ., தூரம் மட்டுமே பணியாற்றுகின்றனர். இவர்களது பணி நேரம் 13 மணிநேரத்தில் முடிந்துவிடுகிறது. கோவை மண்டல ஊழியர்கள் 20 மணி நேரத்துக்கும் மேல் பணியாற்றுகின்றனர். அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் இருமண்டலங்களில் இயக்கப்படும் இந்த பஸ்களில் கோவை, ஈரோடு மண்டலங்கள் இடையே பாரபட்சம் காட்டப்படுவது ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சார்பில் நிர்வாகத்துக்கு ஒரு டி.ஆர்.,(டியூட்டி ரெஸ்ட்) சேர்த்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்; இதுவரை நடவடிக்கை இல்லை. இப்பிரச்னை குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட கோவை மண்டல அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.இதுகுறித்து, ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க பொதுச் செயலாளர் சண்முகம் கூறுகையில், ""கோவை, ஈரோடு மண்டலங்கள் சார்பில் கோவை - சேலம் இடையே இயக்கப்படும் பஸ்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கிடையே பாரபட்சம் காட்டப்படுகிறது. கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு டி.ஆர்.,(டியூட்டி ரெஸ்ட்) சேர்த்து வழங்க கடந்த மே மாதத்தில் நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தினோம். நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்; இதுவரை எடுக்கவில்லை,'' என்றார்.
 

·
Epitome of Enterprise
Joined
·
2,522 Posts
Discussion Starter #19
Cross-link Roads Closed

ஈரோடு மாநகரில் போக்குவரத்தை சீரமைக்கும் நோக்கில், மேட்டூர் ரோடு, கருங்கல்பாளையம்-பள்ளிபாளையம் செல்லும் மெயின் ரோட்டில் உள்ள குறுக்கு தெருக்களின் வழிகளை போக்குவரத்து போலீஸார் அடைத்துள்ளனர். இதையே சாதகமாக பயன்படுத்திய கடைக்காரர்கள், தெருக்களை முழுவதுமாக ஆக்கிரமித்து தங்கள் பொருட்களை வைத்துள்னர்.

ஈரோடு மாநகரட்சி மத்திய பஸ் ஸ்டாண்டை ஒட்டிய, மேட்டூர் ரோடு, அகில்மேடு வீதி, மூலப்பட்டறை, திருநகர் காலனி, கருங்கல்பாளையம் ஆகிய பகுதிகள் நெரிசல் மிக்கவை. பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியேறும் வாகனங்கள், அகில்மேடு வழியாக பிரப்ரோட்டுக்கு செல்லவும், எம்.ஜி.ஆர்., சிலையில் இருந்து, வரும் வாகனங்கள், மேட்டூர் ரோடு வழியாக பஸ் ஸ்டாண்டுக்கு வரும்படி, போக்குவரத்து போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படியே பஸ், லாரிகள் வந்து செல்கின்றன.

காவிரி பாலத்தில் இருந்து, பஸ் ஸ்டாண்டு வரும் வாகனங்கள், கருங்கல்பாளையம், திருநகர் காலனி, மூலப்பட்டறை வழியாக வந்து செல்கின்றன. பஸ்கள் வரவும், போகவும் தனித்தனியே ரோடுகள் பிரிக்கப்பட்டு, "ஒன்வே' அமலில் உள்ளது.

மேட்டூர் ரோடு மற்றும் அகில்மேடு, பவானி மற்றும் சத்தி ரோடுகளையும் இணைக்கும் வகையில் பல இடங்களில் குறுக்கு தெருக்கள் உள்ளன.ஒரு ரோட்டில் இருந்து மற்றொரு ரோட்டை அடைய, பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மற்றும் டூவீலர்கள் குறுக்கு தெருக்களை பயன்படுத்தி வந்தன. குறுக்குத் தெருக்கள் மெயின்ரோட்டில் இணையும் இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்பட்டதால், தடுப்பு வைத்து குறுக்கு தெருக்கள் மூடப்பட்டன. டூவீலர்கள் செல்லும் அளவுக்கு மட்டுமே வழி விட்டுள்ளனர்.

குறுக்கு தெருக்குள் ஒவ்வொன்றும் 30 அடி முதல் 40 அடி அகலம் கொண்டவை. மேட்டூர் ரோடு - அகில்மேடு இடையேயான குறுக்கு தெருக்களில், டூவீலர் ஃபைனான்ஸ் கடைக்காரர்கள் தங்களிடம் உள்ள டூவீலர்களை ÷ஷாரும் போல நிறுத்தியுள்ளனர்.

திருநகர் காலனி பகுதியில் உள்ள குறுக்கு தெருக்களில் காலி மதுபாட்டில்களை பழைய இரும்பு கடைக்காரர்கள் குவித்து வைத்துள்ளனர்.ஆரம்பத்தில் கடைக்கு முன் பகுதியை மட்டும் ஆக்கிரமித்தவர்கள், இப்போது 80 சதவீதம் ரோட்டை ஆக்கிரமித்து, தங்கள் கடைகளை நீட்டிப்பு செய்துள்ளனர். கடைக்காரர்களின் ஆக்கிரமிப்பில் சிக்கிய பகுதியின், தற்போதைய வெளி மார்க்கெட் மதிப்பு, பல கோடி ரூபாய்.மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, வீணாக உள்ள இடங்களில், கடைகள் அல்லது கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுத்தால், மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும்.
 

·
Registered
Joined
·
516 Posts
Ban on Lorry Traffic in the City during peak Hours

ஈரோடு: ஈரோடு நகர் பெருந்துறை ரோடு, மேட்டூர் ரோடு, பிரப் ரோடு பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். காலை 8 முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 முதல் இரவு 9 மணி வரை ஈரோடு நகருக்குள் புறநகர் பகுதிகளில் இருந்து லாரிகள் வருவதை தடை செய்ய ஈரோடு கலெக்டர் காமராஜ், போலீஸாருக்கு உத்தரவிட்டார். பெருந்துறை ரோட்டிலிருந்து லாரிகள் நகருக்குள், லாரிகள் நகருக்குள் வருவதை தடை செய்ய போலீஸ் எஸ்.பி., ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாநகர போக்குவரத்து டி.எஸ்.பி., ராஜ் மேற்பார்வையில் தெற்கு போலீஸ் எஸ்.ஐ., சதாசிவம் தலைமையில் போக்குவரத்து போலீஸார் மாற்று வழியில் லாரிகளை அனுப்பி வைக்கின்றனர். பெருந்துறையில் இருந்து ஈரோடு நோக்கி வரும் லாரிகள் வீரப்பம்பாளையம் பிரிவில் மாற்றுவழியில் திருப்பிவிடப்படுகின்றன. லாரிகள் வீரப்பம்பாளையம் பிரிவு வழியாக சத்தி ரோட்டிலுள்ள கனிராவுத்தர் குளம் பகுதியை வந்து சேரும், அங்கியிருந்து பி.பி.அக்ரஹாரம் வழியாக பவானி ரோட்டை அடைய வேண்டும். நகரை கடந்து செல்ல வேண்டிய லாரிகள், தடை செய்யப்பட்ட நேரத்தில் வந்ததால், நகருக்கு வெளியே நிறுத்திவிட்டு அனுமதிக்கப்பட்ட நேரத்தில் நகருக்குள் வர வேண்டும். தடை செய்யப்பட்ட நேரத்தில் லாரிகள் வந்துவிடமால் தடுக்க வீரப்பம்பாளையம் பிரிவு பகுதியில் போக்குவரத்து போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். முதல் கட்டமாக பெருந்துறை ரோட்டில் மேற்கொள்ளப்படும் இப்பணிகள் விரைவில் நகரின் அனைத்து நுழைவாயில் பகுதிகளிலும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
 
1 - 20 of 360 Posts
Top