SkyscraperCity banner

141 - 160 of 360 Posts

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #141
Vote for Renaming of Threads (Sorry, posting again for easy view)

Friends, i think its a good time to split up the discussions on Road Infrastructure and Transportation...........

So, i think we can rename the existing Erode City - Road, Transport & Infrastructure thread into Erode City Buses and Railways Transportation Updates

And we can form a separate thread on Erode Ring Road | Other Roads Projects & Updates.......

Also, I would like to form a thread entitled
Erode Eastern Cauvery Urban Agglomeration - Projects & Discussions for discussing about Pallipalayam, Komarapalayam & Tiruchengode areas.....

And rename the existing Erode - Projects and Developments thread into Erode Western Cauvery Urban Agglomeration - Projects & Discussions for discussing about Core Erode and Bhavani areas.... Then we can delete Bhavani thread..

So, for approaching the moderators, kindly register/post your support here.......
 

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #142
Urge for Erode-Palani Rail Link

Erode MP A. Ganeshamurthi has appealed to Railway Ministry to expedite further work on the creation of a new railway line between Erode and Palani which is a long pending dream of people in Kongu region.

People in Erode and neighbouring districts are prepared to extend their cooperation to the Ministry to acquire land for the project. The State Government should come forward to fix a compensation based on the prevailing market rate of the land and acquire them for the project, the MP said. Mr. Ganeshamurthi met Railway Minister Dinesh Trivedi in New Delhi recently and submitted a petition.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2789125.ece
 

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #143
Special Buses

ஈரோடு : அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டம்-1 மற்றும் கோட்டம்-2 சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 150 சிறப்பு பஸ்களை இயக்கப்படுகின்றன. இவை, நாளை முதல், 19ம் தேதி வரை எட்டு நாட்கள் இயக்கப்படும். ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பண்டிகை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக, கோவை கோட்டம் சார்பில், கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களில் இருந்து, மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கோவை, திருப்பூரில் இருந்து, ஈரோடு வழியாக சேலத்துக்கு மட்டும், 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பொதுமக்கள் கூட்டத்துக்கு ஏற்ப, கூடுதல் டிரிப்களும், வெளியூரில் இருந்து வரும் பஸ்களை அருகில் உள்ள ஊர்களுக்கு கட் டிரிப்பாகவும் இயக்கப்படும். இந்த சிறப்பு பஸ்கள், 12ம் தேதி மதியம் முதல், 19ம் தேதி வரை இயக்கப்படும். இதற்காக "ஸ்பேர்' பஸ்கள் தயார்படுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருவதாக கோவை கோட்ட அதிகாரி தெரிவித்தார்.

150 Special buses will be operated by TNSTC-ERoDE for Pongal Holiday Rush...
http://www.dinamalar.com/district_detail.asp?id=383618
 

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #144
Traffic Rule Violators in the City were taken to task

The police conducted surprise checks and registered over 100 cases against vehicle owners who violated traffic rules in Erode town on Thursday.

The initiative was taken up following widespread complaints from the people that traffic violations in the town had increased sharply.

Violations including signal jumping, driving on the wrong side, speeding, haphazard parking, and overloading has become very common in the town.

The traffic safety in almost all the major roads remains poor, which has led to increase in the number of accidents.

As a result, police have launched an initiative to conduct checks at frequent intervals and book cases against those found violating the road rules. On Thursday, police had deployed a number of teams to conduct checks in different parts of the town. “We will be conducting similar checks everyday in order to bring down the number of traffic violations in the town,” a senior police official said.

“Stern action will be initiated against the vehicle users, who are found violating the traffic rules often,” he added.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2797587.ece
 

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #145
Rapid Increase in use of Motor Vehicles, but no such developments in transport & Road safety infra

ஈரோடு மாவட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில், 2009-10 புள்ளி விபரப்படி, ஆட்டோக்கள் - 2,123, பள்ளி பஸ்கள்-704, ஆம்புலன்ஸ் -75, இலகு ரக வாகனங்கள் - 13 ஆயிரத்து 817, டிராக்டர் - 57, மாநில பர்மிட் லாரி - 6,246, நேஷனல் பர்மிட் - 1,249 உள்பட, 25 ஆயிரத்து 568 கமர்ஷியல் வாகனங்கள் இருந்தன.

பைக் - ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 40, ஸ்கூட்டர் - 39 ஆயிரத்து 86, மொபட் - 93 ஆயிரத்து 555, கார் - 20 ஆயிரத்து 367, ஜூப் - 880, டிராக்டர் - 3,878, மூன்று சக்கர வாகனங்கள் - 26, நான்கு சக்கர வாகனங்கள் - 9,822, ரோடு ரோலர் - 5, இதர வாகனங்கள் - 84 உள்பட இரண்டு லட்சத்து 53 ஆயிரத்து 900 கமர்ஷியல் இல்லாத வாகனங்கள் இருந்தன.

இந்த எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக பெருகி வரும் அளவுக்கு, சாலை பாதுகாப்பு விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்படுவதில்லை.

மாநகர், நகர் பகுதிகளிலேயே இன்னும் கூட முழுமையான அளவு சிக்னல்கள் ஏற்படுத்தவில்லை. முறையான சாலை விதிகள் குறித்து அறிவிப்பு பலகைகள் இல்லை. போக்குவரத்தை சீர்செய்ய போதுமான போலீஸார் இல்லை.
லைசென்ஸ், ஆர்.சி., போன்ற ஆவணங்கள் இல்லாமலும், ஹெல்மட் அணியாமலும் வாகனம் ஓட்டுவோர் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் பல இடங்களில் முறையான சாலை வசதியே இல்லாத அவலம்தான் தொடர்கிறது. சாலை விதிகள் குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறிப்பிடும்படியான நிகழ்ச்சிகளை நடத்த வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதன் காரணமாக சாலை விபத்துக்களும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே, வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதை கருத்தில் கொண்டு, அதற்கேற்றாற் போல் விதிகளை கடைபிடிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

http://www.dinamalar.com/district_detail.asp?id=385544
 

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #146 (Edited)

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #147
Erode City Buses

Here are some of the pics Erode City Bus Route No.42, running b/w Central Bus Stand and Sivagiri via Solar.







Pics were taken during Pongal, when this guy run as a special towards Salem

(Thanks to rejagiri post in TN buses thread)
 

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #148
A strange route bus and the strong route bus

Bus running in strange Route: starting from Kodumudi, near Erode


And the strongest route bus...... ERO-100 NON-STOP SERVICE (Ordinary service in its kind-Non A/C)




Courtesy : tnstc word press and subramaniam in person
 

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #150
Erode - Jolarpet double Carriage Goods Rail project neglected

:சேலம் ரயில்வே கோட்டத்தில், அறிமுகம் செய்யப்படுவதாக இருந்த, இரட்டை சரக்கு ரயில் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. சரக்கு போக்குவரத்தின் மூலம் கூடுதல் வருவாயை எதிர்பார்த்த, அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.ரயில்வே துறைக்கு கிடைக்கும், மொத்த வருவாயின், ஒவ்வொரு ரூபாயிலும், 65 காசுக்கு குறையாமல், சரக்கு போக்குவரத்தின் மூலம் கிடைத்து வருகிறது.கூடுதல் வருவாய் கிடைத்து வருவதால், சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சேலம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட பகுதியில் சேலம் சத்திரம், ஈரோடு, திருப்பூர், இருகூர், கோவை, பீளமேடு ஆகிய இடங்களில் ரயில்வே கூட்ஷெட் உள்ளது.
தெற்கு ரயில்வேக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும், வழக்கமான சரக்கு ரயில்கள் மூலமாகவே சரக்கு போக்குவரத்து நடந்து வந்தது.

இதில், 42 வேகன்கள் பொருத்தப்பட்டிருக்கும். இதன் மூலம், 2,600 டன் சரக்குகளை ஏற்றி செல்ல முடியும்.சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஆண்டு "ஜம்போ' ரக ரேக்குகள் அறிமுகம் செய்யப்பட்டது. இதில், 42 ஆயிரம் டன் சரக்குகளை ஏற்றிச் செல்ல முடியும்.
சரக்கு போக்குவரத்தின் அத்தியாவசியம் மற்றும் வருவாய் ஆகியவற்றை கருத்தில் கொண்டு முக்கிய ரயில்வே கோட்டங்களில், "இரட்டை சரக்கு' ரயில்கள் அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.தற்போது வடமாநிலங்களின் முக்கிய போக்குவரத்து பகுதிகளில், இரட்டை சரக்கு ரயில் மூலம் வர்த்தகம் நடந்து வருகிறது.

சேலம் ரயில்வே கோட்டத்தில், கடந்த ஆண்டு, இரட்டை சரக்கு ரயில் திட்டம், அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டைக்கு இரட்டை சரக்கு ரயில் வெள்ளோட்டம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.மொத்தம், 90 வேகன்கள் மூலம், இரண்டு இன்ஜினை பொருத்தி, இயக்கப்பட்ட ரயில், எந்த சிக்கலும் இல்லாமல், ஜோலார்பேட்டைக்கு சென்றடைந்தது.இரட்டை சரக்கு ரயில் போக்குவரத்தில், அதிகப்பட்சம், 90 வேகன்களை கொண்டு இயக்க முடியும் என்பதால், கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போதுள்ள சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் இரண்டு வேகன்களில் இருந்து, சரக்குகளை இறக்குமதி செய்யும் பட்சத்தில், காலதாமதம் ஏற்படும் என்று, ரயில்வே அதிகாரிகள் கருதினர்.

மேலும், விரைவாக இயக்குவதிலும், சிக்கல் ஏற்படும் என்பதால், சரக்கு ரயில் திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய, ரயில்வே தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது.
எனவே, இரட்டை சரக்கு ரயில் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சரக்கு போக்குவரத்தை எதிர்பார்த்த அதிகாரிகள் மட்டத்தில், ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

http://www.dinamalar.com/district_detail.asp?id=390228
 

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #151
Again the start of protests urging implementation of Erode-Palani Rail Link

ஈரோடு- பழநி ரயில்வே மக்கள் பணிச்சங்க உயர்மட்டக்குழு தலைவர் கொங்கு கொளந்தசாமி, பொதுச்செயலாளர் லிங்கம் சின்னசாமி ஆகியோர் கூறியதாவது: ஈரோடு- பழநி இடையே 91 கி.மீ தூரம் ரயில்பாதை அமைக்கும் திட்டத்துக்காக தொடர்ந்து போராடி வரும் நிலையில், 2005ல் முதன்முறையாக ரூ.2 கோடி சர்வே பணிகளுக்காக மத்திய ரயில்வே அமைச்சகம் நிதி ஒதுக்கியது. 2வது சர்வே முடிக்க ரூ.69 லட்சமும், 2010ல் ரூ.40 கோடியும், 2011ல் ரூ.33 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டது.

மொத்தம் 9 ரயில் நிலையங்களுடன் அமைய உள்ள இத்திட்டத்துக்கு தேவையான நிலத்தை நில உரிமையாளர்களிடமிருந்து கையகப்படுத்தி மாநில அரசு ரயில்வே அமைச்சகத்துக்கு வழங்க வேண்டும். ஆனால் இப்பணி தாமதமாக நடைபெற்று வருகிறது. நில உரிமையாளர்களுக்கு உரிய சந்தை மதிப்பும், வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும்.
சென்னையில் மெட்ரோ ரயில்வே திட்டத்துக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

ஈரோடு- தாராபுரம்- பழநி ரயில்வே திட்டத்திற்கு மொத்தமாகவே சுமார் ரூ.600 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொகையில் ரூ.400 கோடியை மத்திய ரயில்வே அமைச்சகம் வழங்க தயாராக உள்ளது. மீதமுள்ள ரூ. 200 கோடியை மாநில அரசின் பங்களிப்பு தொகையாக தமிழக அரசு வழங்க வேண்டும்.

இத்தொகையை வழங்க மாநில அரசு முன்வரவில்லை. இதுகுறித்து மத்திய உள்துறை செயலகத்திற்கு மனு அனுப்பி போது தமிழக அரசு பங்களிப்புத்தொகை வழங்காததே திட்டம் மிகவும் மெதுவாக நடைபெற காரணம் என உள்துறை அமைச்சக செயலாளர் எம்.ஏ.சித்திக் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். ரயில்வே பணிகளுக்கான நிலத்தை கையகப்படுத்தி வழங்குவதில் தமிழக அரசு சுணக்கம் காட்டி வருவதாலும் பணிகள் தாமதம் ஆகிறது என்றும் கூறியுள்ளார்.

இத்திட்டப்பணிகளுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.500 கோடியும், தமிழக அரசு சார்பில் பங்களிப்புத்தொகை வழங்கவும், நில ஆர்ஜிதப்பணிகளை விரைவில் துவங்கவும் வலியுறுத்தி வரும் 30ம் தேதியன்று பழநியில் பழநி ரயில்வே மக்கள் பணிச்சங்கத் தலைவர் புலிப்பாணி சிவானந்தசுவாமிகள் தலைமையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம்.
உண்ணாவிரதத்தில் திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர்.

http://www.dinakaran.com/District_detail_2011.asp?Nid=36919
 

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #152
Bus bays changed in Central Bus Terminus



Since the opening of Mini-bus terminal for operation inside the complex, the old city-bus bays in PT-5 and 6 got freed-up.....

So, the Gobi-Sathy-Mysore bound buses are relocated to here.......

Hereafter,

Mofussil Terminal
Platform-1 : Western buses halt
Platform-2 : Coimbatore, Tirupur, Dharapuram, Palani, Pollachi, Kerala,...
Platform-3 : Vellakoil, Moolanur, Karur, Madurai, Trichy, Tirunelveli, Kanniyakumari, all south bound buses
Platform-4 : Chennai, Salem, Vellore, Namakkal, Kallakurichi, Villupuram, Perambalur, Cuddalore...
Platform-5 : Mettur, Dharmapuri, Anthiyur, Ammapet, Gobi, Sathy, Mysore,...
Platform-6 : APSRTCs Tirupati, Bangalore, city buses halt,....

City Bus Terminal
Platform-7 : Chithode, BP Agraharam, Soolai, IRTT, Lakshmi Nagar, Bhavani
Platform-8 : Pallipalayam, Komarapalayam, SPB Colony, Tiruchengode, Kokkarayanpet, Solasiramani
Platform-9 : PS Park, Collectorate, Nasiyanur, Thindal, Perundurai, Vellode, Chennimalai
Platform-10 : PS Park, Moolapalayam, Jaycees, Solar, Lakkapuram, Poondurai, Sivagiri, Arachalur
Platform-11 : PS Park, Market, Clock Tower, Junction, Surampatti, GH, Periyar Nagar, Jeeva Nagar, Kasipalayam,.....

Mini-Bus Terminal
Platform-12
Platform-13
 

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #153
Urge for New Mofussil Bus Terminals

ஈரோட்டில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசல், விபத்துகளை குறைக்க, பஸ் ஸ்டாண்டை புறநகர்ப்பகுதிக்கு மாற்ற வேண்டும்.
தேசிய அளவில் நூல், ஜவுளி, மஞ்சள் மார்க்கெட்டுக்கு ஈரோடு புகழ் பெற்றுள்ளது. முக்கிய நகரங்களை இணைக்கும் மையமாகவும் ஈரோடு உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

ஈரோடு பஸ் ஸ்டாண்டுக்கு மட்டும் தினமும் 2000க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. நகரில் உள்ள மெயின் ரோடுகள் அனைத்தும், அடுத்தடுத்து குறுக்கு ரோடுகள் இணையும் வகையில் அமைந்துள்ளன. குறுக்கு ரோடுகளில் இருந்து புகும் வாகனங்களால், மெயின் ரோட்டில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.ஈரோடு மாவட்டத்தில், 2011ல், 550க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கி பலியாகியும், 2,000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஈரோடு நகரில் மட்டும் 3 நாட்களுக்கு ஒருவர் விபத்தால் பலியாவதால், விபத்தை தடுக்க போலீஸ் எத்தனை நடவடிக்கை எடுத்தாலும், விபத்து குறையவில்லை.

இதிலிருந்து விடுபட, நகரின் மையத்தில் செயல்படும் பஸ் ஸ்டாண்டை டவுன் பஸ் ஸ்டாண்டாக மாற்றி, வெளியூர் செல்லும் பஸ்களுக்காக புறநகர்ப்பகுதியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என்பதே நிரந்தர தீர்வாகும்.

ஈரோடு நகருக்கு நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டையில் இருந்து லக்காபுரம், வழியாக ரிங் ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது :nuts::nuts::lol::lol::eek:hno::eek:hno::bash::bash::bash:

இப்பணி நிறைவு பெற்றால், ஈரோடு நகருக்குள் வரும் வாகனங்கள் எண்ணிக்கை குறையும்.

ஈரோடு மாநகராட்சி சார்பில் சூரியம்பாளையம் (Near Chithode), லக்காபுரம் (Near Solar) அருகில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அரசியல்வாதிகள் தலையீட்டால், இத்திட்டம் வெறும் ஆய்வு பணியுடன் நிற்கிறது.அங்கு புதிய பஸ் ஸ்டாண்ட் அமைந்தால், நகருக்குள் வராமல் கொக்கராயன்பேட்டையில் இருந்து வெண்டிப்பாளையம் கதவணை பாலம் வழியாக அனைத்து வெளியூர் பஸ்களும் செல்லும். புதிய பஸ் ஸ்டாண்டையொட்டி வணிக நிறுவனங்கள், புதிய குடியிருப்புகள் தோன்றும்போது, நகரமும் வளர்ச்சி அடையும்.
 

·
Registered
Joined
·
516 Posts
ஈரோடு மாநகராட்சி சார்பில் சூரியம்பாளையம் (Near Chithode), லக்காபுரம் (Near Solar) அருகில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அரசியல்வாதிகள் தலையீட்டால், இத்திட்டம் வெறும் ஆய்வு பணியுடன் நிற்கிறது.அங்கு புதிய பஸ் ஸ்டாண்ட் அமைந்தால், நகருக்குள் வராமல் கொக்கராயன்பேட்டையில் இருந்து வெண்டிப்பாளையம் கதவணை பாலம் வழியாக அனைத்து வெளியூர் பஸ்களும் செல்லும். புதிய பஸ் ஸ்டாண்டையொட்டி வணிக நிறுவனங்கள், புதிய குடியிருப்புகள் தோன்றும்போது, நகரமும் வளர்ச்சி அடையும்.
Only if a BS is moved outside, the Outskirts will see some developments and also the crowd inside the city can be reduced. The Name Corporation is only a Nameshake without any real progress...
 

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #156
Congestion in Central Bus Terminus

ஈரோடு பஸ் ஸ்டாண்டு பிளாட்ஃபாரங்களை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் டூவீலர்களால், பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.ஈரோடு பஸ் ஸ்டாண்டுக்கு நாள்தோறும் 5,000க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன.

வெளியூர் பஸ்களுக்கு மூன்று பகுதி, டவுன் பஸ்ஸுக்கு இரண்டு பகுதி, மினி பஸ்ஸுக்கு தனியாக பஸ் ஸ்டாண்டும் உள்ளன. 13 பிளாட்ஃபாரத்தில் பயணிகள் அமர வசதியாக இரும்பு சேர்கள், ஃபேன்கள் அமைத்துள்ளனர். தவிர, பிளாட்ஃபாரத்தில் டீக்கடை, ஸ்நாக்ஸ் கடை, ஹோட்டல், பழக்கடை மற்றும் பல்வேறு கடைகள் அமைந்துள்ளன.

மாநகராட்சியில் ஏலம் எடுத்த போது கொடுக்கப்பட்ட இடத்தை காட்டிலும், நான்கு முதல் ஆறு அடி நீளம் வரை பிளாட்ஃபாரத்தை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர்.இதுதவிர, கடைக்காரர்களின் வாகனங்களும், பயணிகளுக்கான இடத்தை ஆக்கிரமித்து நிறுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். தவிர, பிளாட்ஃபாரத்தின் மத்தியில் நீண்ட நாட்களாக, இரண்டு பூக்கடைகள் உள்ளன.பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என்ற நோக்கில், போலீஸார் பணியமர்த்தப்பட்டு, பஸ் ஸ்டாண்டினுள் டூவீலர் வருவதை தடுத்து வருகின்றனர். ஆனால், அதையும் மீறி, பிளாட்ஃபாரத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும்.
 

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #157
Central Bus stand stinks! then whats the use several crores' sanitation complex???

The Erode bus stand can be known from its smell, its hallmark being nauseating, stinking heaps of garbage strewn all over and dirty toilets that make one throw up.

Erode Corporation has been unduly careless about the bus stand's proper maintenance, leading to appalling sanitary conditions there.

The bus stand gets hundreds of passengers, and a many buses are being operated from it everyday. But the situation remains utterly chaotic, signifying the total apathy of the local authorities in improving the conditions.

The garbage including huge amount of plastic and polythene waste remain uncollected for days together. “The air is always filled with foul smell from the unclean public toilets and rotting garbage,” say passengers. Most of the bus crew and passengers dare not enter these toilets, and relieve themselves in the open. This has added on to the sanitary problems.

A few weeks ago, civic workers removed the floor tiles on a platform for maintenance works. But they did not replace the tiles properly, forcing the passengers to wait outside the place, under the scorching sun.

Passengers and bus crews have made several pleas to the Corporation to carry out cleaning works frequently. “But no concrete measures have been taken up so far,” passengers say.

Corporation sources, however, blamed the passengers for the garbage problem. “Commuters rarely use the dust bins. They throw used plastic bags, food items and other materials on the floor. They should help us keep the bus stand clean,” they say.

Civic authorities assured that they would take steps to replace the tiles in the platform and improve the sanitary conditions.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2846376.ece
 

·
Registered
Joined
·
516 Posts
There might be another reshufffle in the Bus Stand soon.. Sathy Buses are going to Occupy the old Stand (along with Coimbatore Buses) and Madurai Buses are going to come to Mettur Stand..
 

·
Arvind
Joined
·
667 Posts


Since the opening of Mini-bus terminal for operation inside the complex, the old city-bus bays in PT-5 and 6 got freed-up.....

So, the Gobi-Sathy-Mysore bound buses are relocated to here.......

Hereafter,

Mofussil Terminal
Platform-1 : Western buses halt
Platform-2 : Coimbatore, Tirupur, Dharapuram, Palani, Pollachi, Kerala,...
Platform-3 : Vellakoil, Moolanur, Karur, Madurai, Trichy, Tirunelveli, Kanniyakumari, all south bound buses
Platform-4 : Chennai, Salem, Vellore, Namakkal, Kallakurichi, Villupuram, Perambalur, Cuddalore...
Platform-5 : Mettur, Dharmapuri, Anthiyur, Ammapet, Gobi, Sathy, Mysore,...
Platform-6 : APSRTCs Tirupati, Bangalore, city buses halt,....

City Bus Terminal
Platform-7 : Chithode, BP Agraharam, Soolai, IRTT, Lakshmi Nagar, Bhavani
Platform-8 : Pallipalayam, Komarapalayam, SPB Colony, Tiruchengode, Kokkarayanpet, Solasiramani
Platform-9 : PS Park, Collectorate, Nasiyanur, Thindal, Perundurai, Vellode, Chennimalai
Platform-10 : PS Park, Moolapalayam, Jaycees, Solar, Lakkapuram, Poondurai, Sivagiri, Arachalur
Platform-11 : PS Park, Market, Clock Tower, Junction, Surampatti, GH, Periyar Nagar, Jeeva Nagar, Kasipalayam,.....

Mini-Bus Terminal
Platform-12
Platform-13
Is there service(TNSTC,SETC ot Private) from Erode to Karaikudi ?
 

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #160
There might be another reshufffle in the Bus Stand soon.. Sathy Buses are going to Occupy the old Stand (along with Coimbatore Buses) and Madurai Buses are going to come to Mettur Stand..
Do you mean, Sathy and cbe buses in first section and mdu, mettur buses in third section....????

First of all they have to provide proper notification and sign boards inside the bus stand.....

arch, platform identification boards, regularisation of entry and exit of buses, restriction for entry of private vehicles, etc,.....
 
141 - 160 of 360 Posts
Top