SkyscraperCity banner

21 - 40 of 597 Posts

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #21
Hi,

Nice threads :)
Fine prasanna......

By the way, i think you are new to this forum......

A GREAT WELCOME TO U.......

Anyway, your contributions are also needed heavily so that we can share all our knowledge on our city......
 

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #22
Ring Road regularisation committee - need of the hour

ஈரோடு ரிங்ரோடு ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில், நாளை நடைபயணமாக வந்து, மாவட்ட கலெக்டரிடம் மனு தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு ரிங்ரோடு திட்டத்தை, முதலில் எடுக்கப்பட்ட சர்வே படி நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி, இவ்வியக்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. நாளை, காலை ஆனைக்கல்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து, நடைபயணமாக புறப்பட்டு, பூந்துறை மெயின்ரோடு வழியாக ஈரோடு கலெக்டர் அலுவலகம் வருகின்றனர். அங்கு நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கின்றனர்.
 

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #23
Rally from Anaikalpalayam to Collectorate to implement proper Ring Road

ஈரோடு: ரிங்ரோடு திட்டத்தை நேர்மையாக செய ல்படுத்த கோரி கலெக்டர் அலுவலகம் நோக்கி கிராம மக்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.
ஈரோட்டில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் அமைக்கப்பட உள்ள ரிங்ரோடு திட்டத்தினை நேர்மையான முறையில் செயல்படுத்தக் கோரி லக்காபுரம் பரிசல்துறை, 46புதூர், ஆனைக்கல்பாளையம், சடையம்பாளையம், ரகுபதிநாயக்கன்பாளையம், ரங்கம்பாளையம், அத்தப்பம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகம் நோக்கி நடைபயணம் மேற்கொண்டனர்.
பூந்துறை ரோடு ஆணைக்கல்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து நடைப்பயணம் மேற்கொண்ட கிராம மக்களை நாடார்மேடு முன்பாக தாலூகா போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் நிர்வாகிகளை மட்டும் போலீசார் கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.
இது தொடர்பாக கலெக்டர் சண்முகத்திடம் கோரிக்கை மனுவை அளித்தனர். இந்த நடைபயணத்தில் மதிமுக சார்பில் பூங்கொடிசாமிநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராஜ்குமார், மார்க்சிஸ்ட் விஜயராகவன், பாஜக பழனிச்சாமி, பொரியார் திராவிடர் கழகம் ரத்தினசாமி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

http://www.dinakaran.com/2012_new/District_Detail.asp?Nid=525&cat=504
 

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #24
Bhavani Byepass project sanctioned

புறவழிச் சாலைகள் அமைக்கும் பணிக்கு, நிலங்களை கையகப்படுத்த ரூ.152 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: நகர்ப்புறங்களையும், கிராமப்புறங்களையும் இணைக்கும் பாலமாக சாலை கட்டமைப்பு உள்ளது. அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையின் காரணமாக, சாலைகள் விரைவிலேயே பழுதடைவதை களையும் விதத்திலும், மேலும் நகரங்களின் போக்குவரத்தினை சீரமைக்கும் விதத்திலும் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், நகரங்களில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாகவும், நேர்வழிப் போக்குவரத்து தடையின்றி நடைபெறும் வண்ணமும், ரூ.152 கோடியே 78 லட்சத்து 5 ஆயிரம் செலவில், தென்காசி, சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம், முதுகுளத்தூர், பவானி, நாமக்கல், திருச்செங்கோடு, கடலூர், ஆற்காடு, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய நகரங்களில் புறவழிச் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு நிலங்களை கையகப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.dinakaran.com/2012_new/News_Detail.asp?Nid=703
 

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #25

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #26
Unauthorised Giant Hoardings in almost all corners of Erode

Hundreds of unauthorised hoardings put up at major junctions, roadsides and important places in the town continue to be an eyesore besides eating into the revenue of the civic body and the district administration.

Commercial establishments and political parties have erected many hoardings on roadsides without obtaining approval from the authorities concerned.

Busy arterial roads, including Perundurai Main Road, EVN Road, Mettur Road, Sathyamangalam Road and Chennimalai Road, have hundreds of such hoardings on both sides.

Many of these hoardings cause inconvenience to road users, and a few of them have been erected on and belonging to the State Highways and the Corporation. In some areas, the hoardings obstruct the view of vehicle users.

The civic body and revenue department suffer huge loss due to the proliferation of such hoardings, Corporation sources here say.

The Corporation authorities, despite repeated representations from the people, have remained silent on this issue for long.

On a few occasions, the civic body took up initiatives to remove unauthorised hoardings. But the civic workers managed to remove only the small hoardings and banners put up on the street lamp posts and largely leave the large hoardings untouched, residents say.

People have appealed to the Corporation and the police to initiate sustained efforts to remove all the unauthorised hoardings, which cause inconvenience to pedestrians and distract vehicle drivers.

The revenue authorities and civic officials should come up with an effective monitoring mechanism on this issue, they say. “Otherwise the advertisers will continue to erect more hoardings,” they said.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2843844.ece
 

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #27

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #28 (Edited)
10 New traffic signals implemented in the city powered by Solar energy

For the first time, our city has got the automatic traffic signals powered by solar energy..

At first, this is implemented in 10 new junction places and later it will be extended....

* 5 signals along Perundurai Road
* Kaspapet cross along Muthur Road
* K.Kulam & Soolai jn. along Sathy Road
* and two other places

And also, all the traffic signals in the city will be soon converted into battery power operated signals........

http://www.dailythanthi.com/article.asp?NewsID=705920&disdate=2/1/2012&advt=2
 

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #29
Can we get back the full accessible Old Karur Road

Having to cover a railway-under-bridge, with a long stretch of filthy water flowing by its side, is a nightmare for people commuting between Vendipalayam and Solar.

On the Vendipalayam-Solar road is an overflowing drain carrying sewage from residential colonies, with the waste water stagnated.

The local body has failed to construct the drain properly and ensure smooth flow of sewage. Besides, the drain is heavily silted, as civic workers rarely carry out cleaning.

Shortest route

Since the stretch is the shortest route to access Erode Core city and Bazaar areas, residents from the southern parts of the city and from Namakkal districts frequently use it.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2849359.ece
 

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #30
Struggle @ PS Park still continues

ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு நாளை, 2012 குடம் பாலபிஷேகம் நடக்கிறது.
ஈரோடு பி.எஸ்.பார்க்கில் மேம்பாலம் கட்டும் அரசின் திட்டத்தை கைவிடக் கோரியும், ஆக்கிரமிப்பில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தை மீட்கவும், அரசு கெஜட்டில் வெளியிட்ட 80 அடி சாலை திட்டத்தை நிறைவேற்றவும், 2012 குட பாலபிஷேகம் நடத்துவது என, நில மீட்பு இயக்கம் அறிவித்தது.
நாளை காலை 9.30 மணிக்கு, கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், 2012 பால் குடங்கள் ஊர்வலம் நடக்கிறது. இதில், 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
நிலமீட்பு இயக்க தலைவர் சந்திரசேகர் கூறுகையில், ""2012ல் நடப்பதால், 2012 என்பது வெறும் எண்ணிக்கைக்காக அறிவிக்கப்பட்டது. ஆனால், ஊர்வலத்தில் 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. பால்குட அபிஷேகத்தில் கலந்து கொள்ள விரும்புவோர், 11 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். நாளை ஈஸ்வரன் கோவில் முன் ஒரு குடம் மட்டும் எடுத்து வந்தாலே போதுமானது. ஒரு நபருக்கு இரண்டு லிட்டர் பால், நில மீட்பு இயக்கத்தினரால் வழங்கப்படும்.
""வீட்டுக்கு ஒருவராவது இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் துவங்கும் ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக சென்று, பெரிய மாரியம்மன் கோவிலை வந்தடையும்,'' என்றார்.


http://www.dinamalar.com/district_detail.asp?id=397918

2012 candidates to undergo special prayer at Periya Mariamman temple against the plan for construction of flyover @ PS Park and requesting to recover the encroached lands and to open the 80feet scheme road connecting Brough Road and Railway junction.
 

·
Registered
Joined
·
1,603 Posts
I don't know why Church is so adamant in not giving the land which will help to have a link road connecting Brough road with RS. When they claim they do lot of charity services to the public, they should realise this is also for the public.

During British rule they got all such prime lands. When lot of lands belonging to Hindu temples have been taken by govt for public use, they should also part away this portion of land in the public interest
 

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #32
I don't know why Church is so adamant in not giving the land which will help to have a link road connecting Brough road with RS. When they claim they do lot of charity services to the public, they should realise this is also for the public.

During British rule they got all such prime lands. When lot of lands belonging to Hindu temples have been taken by govt for public use, they should also part away this portion of land in the public interest
Yes, this becomes the big deal over here in heart-piece (PS Park) of the city...

Whenever there comes a protest regarding this, no more resolutions are taken up, since it ends up with religion based problems......
 

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #33
Protests getting strong @ PS Park

Yes, this becomes the big deal over here in heart-piece (PS Park) of the city...

Whenever there comes a protest regarding this, no more resolutions are taken up, since it ends up with religion based problems......
Protestors, including 4,000 women carrying pots of milk, took out a massive procession on Friday, urging the State government to take immediate steps to retrieve the lands belonging to the temple from encroachers.

The protestors were members of the Movement for the Retrieval of Periya Mariamman Temple Land.

Flagged off

The procession was flagged from Kottai Eshwaran Temple premises.

It passed through Thiruvenkatasamy Street and Brough Road before culminating at the Periya Mariamman Temple premises.

Special rituals were held at the temple later.

Apart from demanding the retrieval of lands from encroachers, members also wanted the government to implement the 80-feet-road project to ease traffic congestion in the town.

If implemented, it would establish better road connectivity between the Erode Railway Junction and Brough road, they said. Movement president Chandrasekar led the procession.

http://www.dinamalar.com/district_detail.asp?id=399095

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2859471.ece

People are urging to recover the encroached land of Periya mariamman temple, since the traffic congestion at PS Park gets unimaginably high.......

also, they asked to open the 80 feet scheme road and opposes the construction of the planned flyover at PS Park junction
 

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #34
Central busstand pedestrain walk-over bridge

ஈரோடு பஸ் ஸ்டேண்டில் அமைக்கப்பட்டுள்ள நடைபாலம் இரவு நேரங்களில் மினிபாராக மாறி வரும் அவலம் அரங்கேறி வருகின்றது.
ஈரோடு பஸ் ஸ்டேண்ட் பகுதியில் மேட்டூர் சாலையில் இருந்து பஸ் ஸ்டேண்டிற்குள் பாதசாரிகள் கடந்து செல்லும் வகையில் நடைபாலம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்று வந்த கட்டுமான பணிகள் முடிவுற்று நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த சில நாட்களாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டுள்ளது.
பழனிமலை படிக்கட்டுகள் போல நடைபாலம் படிக்கட்டுகள் இருப்பதால் பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்துவதில்லை. மேலும் நடைபாலத்தின் அருகிலேயே ஆண்கள் இலவச கழிப்பிடம் இருப்பதால் பெண்கள் நடைபாலத்தில் கடந்து செல்வதில் சங்கடமான சூழ்நிலை இருந்து வருகின்றது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சிலர் இரவு நேரத்தில் நடைபாலத்தில் அமர்ந்து மது அருந்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பஸ் ஸ்டேண்ட் வளாகத்திற்குள் புறக்காவல்நிலையம் அமைக்கப்பட்டிருப்பதோடு மாநகராட்சி பாதுகாவலர்களும் பாதுகாப்பு ஈடுபட்டிருந்த போதிலும் சமூக விரோதிகள் மது அருந்த வசதியாக நடைபாலத்தை பயன்படுத்தி வருவது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

http://www.dinakaran.com/2012_new/District_Detail.asp?Nid=5129&cat=504
 

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #35
Rs.84 crores for New Cauvery Bridge Project

ஈரோடு பள்ளிபாளையம் ரோடு காவிரி பாலத்தின் நுழைவு வாயிலில் வாகனம் மோதியதில், தூண் ஒன்று அடியோடு பெயர்ந்து வீழும் நிலையில் உள்ளது.
நாமக்கல் - ஈரோடு மாவட்ட எல்லையாக, ஈரோடு மாநகரை ஒட்டி காவிரி ஆறு செல்கிறது. ஈரோட்டில் இருந்து, பள்ளிப்பாளையம் வழியாக சென்னை, பெங்களூரு, சேலம், தர்மபுரி, நாமக்கல் போன்ற பல ஊர்களுக்கு செல்லும் பஸ் மற்றும் வாகனம் இவ்வழியாக சென்று வருகிறது.
இப்பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. ஈரோடு நகரின் வளர்ச்சியை அடுத்து, வாகனங்கள் அதிகரித்து, தினமும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பஸ் மற்றும் வாகனங்கள் வந்து செல்கின்றன. காலை, மாலை பிரதான நேரத்தில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்தும், ஸ்தம்பிப்பும் ஏற்படும்.
பள்ளிப்பாளையம் மற்றும் குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனை தலமாக உள்ளதால், இப்பாலத்தில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. பாலத்தில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க, இணைப்பு பாலம் கேட்டு, மக்கள் பல ஆண்டாக போராடினர்.
முதல்வர் ஜெயலலிதா, 84 கோடி ரூபாயில் இணைப்பு பாலம் கட்ட உத்தரவிட்டார்.
இணைப்பு பாலம் கட்ட, காவரியில் மண் ஆய்வு உட்பட பல்வேறு ஆய்வுப்பணிகளை முழுவீச்சில் நடக்கிறது. இப்பாலத்தில், ஈரோடு கரை பகுதியில், வாகனம் மோதிய விபத்தில், பாலத்தின் மிகப்பெரிய தூண் அடியோடு பெயர்ந்தது. பாலத்தின் துவக்கத்தில், தடுப்பு சுவர்கள் இடித்து விழும் நிலையில் கிடக்கிறது. தடுமாறும் வாகனங்கள் லேசாக மோதினால், காவிரி ஆற்றுக்குள் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விபத்துக்கள் ஏற்பட்டு பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்படும் முன், பொதுப்பணித்துறையினர் பாலத்தை சீரமைக்கவும், வாகன வேகத்தை குறைக்க ஸ்பீடு பிரேக்கர் அமைக்கவும், விபத்து ஏற்படும்படியான வானகங்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
http://www.dinamalar.com/district_detail.asp?id=400424
 

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #36
Bhavani Road needs immediate attention

ஈரோடு, பவானி மெயின் ரோட்டில், ஏற்கனவே மூலப்பட்டறை வரையில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டிய குழியால் வாகனங்கள் செல்லமுடியவில்லை. தற்போது வீடுபட்ட ரோட்டில் பாதாள சாக்கடை திட்டபணி, தொலைத்தொடர்புத்துறை கேபிள் அமைக்கும் பணி நடப்பதால், வானகங்கள் செல்ல முடியவில்லை.
ஈரோடு மாநகரில் வாகன போக்குவரத்து அதிகமுள்ள ரோடுகளில், பவானி மெயின் ரோடு ஒன்று. வ.உ.சி., பார்க், விளையாட்டு மைதானம், வர்த்தக நிறுவனம், மஞ்சள் மண்டி, லாரி புக்கிங் ஆபீஸ் போன்றவை அங்கு அதிகமுள்ளன. சென்னை, பெங்களூரு, தர்மபுரி, சேலம், நாமக்கல், பவானி என பல ஊர்களில் இருந்து வரும் வாகனங்கள், பவானி மெயின் ரோடு வழியாக வந்து, பஸ் ஸ்டாண்ட் செல்ல முடியும்.
பவானி மெயின் ரோட்டில், பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டிய ரோடுகள் அனைத்தும் குழியாக கிடக்கிறது. ஒரு ஆண்டாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தில் தவிக்கின்றனர். சாலைகள் கொஞ்சம் கொஞ்சாம பெயர்ந்து, தற்போது மூலப்பட்டறை பகுதியில் இரண்டடி அளவுக்கே தார்சாலை உள்ளது.
பஸ், லாரி உட்பட கனரக வாகனங்கள் வந்து செல்வதால், தோண்டப்பட்ட குழிகளில் இருந்து மண் புழுதியாக பறக்கிறது. டூவீலர்களில் வருவோர் கண்களில் தூசி விழுந்து, விபத்துக்குள்ளாகின்றனர்.
பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முழுவதுமாக முடிந்தால் மட்டுமே, புதிதாக தார்ரோடு போடப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துவிட்டனர்.
இந்நிலையில், பவானி மெயின் ரோட்டில், மீதமுள்ள பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் தொலைத்தொடர்புத்துறை கேபிள்கள் பதிக்கும் பணிக்காக, கடந்த ஒரு வாரமாக குழிதோண்டி ஒருவழியை தடுத்துவிட்டனர். ஏற்கனவே, நெரிசல் மிக்க ரோட்டில் விரைந்து பணிகளை முடிக்காமல், பாதுகாப்பின்றி கிடக்கிறது. இதனால், பவானி மெயின்ரோட்டில் மேலும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

http://www.dinamalar.com/district_detail.asp?id=400428
 

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #37
Bhavani Road signal not yet became operational

ஈரோடு பார்க் ரோட்டில், வ.உ.சி., பூங்காவின் பின்புறம் அமைக்கப்பட்ட சிக்னல் பயன்பாட்டுக்கு வராமல் வீணாகிறது.
ஈரோட்டில் தொழில் மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தால் வாகனப் போக்குவரத்து அபரிமிதமாக அதிகரித்து உள்ளது. குறிப்பாக, பவானி மெயின்ரோட்டில், லாரி புக்கிங் அலுவலகங்கள், வர்த்தக கடைகள், மஞ்சள் மண்டி ஆகியவை நிறைந்துள்ளன. இப்பகுதிக்கு பொருட்களை ஏற்றி, இறக்க அதிகப்படியான வாகனங்கள் வந்து செல்வதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகின்றன.
விபத்துகளை குறைக்க, மூலப்பட்டறையில் இருந்து வ.உ.சி., பூங்காவின் பின்புற கேட் வரையிலும் பார்க் ரோட்டில் இருந்த, 15க்கும் மேற்பட்ட பழமையான மரங்கள் அகற்றப்பட்டன. ரோட்டை அகலப்படுத்த இந்த நடவடிக்கை என, நெடுஞ்சாலைத் துறையினர் விளக்கமளித்தனர். சூட்டோடு சூடாக, வடக்கு போக்குவரத்து போலீஸாரும், விளம்பரதாரர் மூலமாக, பூங்காவின் பின்புற கேட் அருகே, சிக்னல் அமைத்து, போலீஸ் கூண்டும் வைத்துச் சென்றனர்.
மரங்களை வெட்டி, சிக்னல் அமைத்ததுடன், தங்கள் பணி முடிந்ததாக சென்றவர்கள், ஒரு மாதமாகியும், இன்று வரை அடுத்த கட்டப் பணிகளை மேற்கொள்ளவில்லை. பாதாள சாக்கடை குழியால் பாதிக்கப்பட்ட ரோட்டை சரி செய்யவோ, சிக்னலில் போலீஸாரை பணியமர்த்தி, வாகனங்களை ஒழுங்குபடுத்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வழக்கம் போல, மீண்டும் இப்பகுதியை ஆக்கிரமித்து, ஆட்டோ ஸ்டாண்டும், டிஃபன் கடைகளும் முளைத்துள்ளன. தாறுமாறாக செல்லும் வகனங்களால் விபத்துகளும் தொடர் கதையாக மாறிவிட்டது. அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, விபத்துக்களை தடுக்க, சிக்னலில் போலீஸாரை பணியமர்த்த வேண்டும்.
 

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #38
Plastics Roads in the city

ஈரோடு மாநகராட்சியில் பழுதடைந்துள்ள சாலைகளை, பிளாஸ்டிக் சாலைகளாக மாற்றவும், பிளாஸ்டிக் கழிவை துண்டாக்கும் இயந்திரம் வாங்கவும், தமிழக அரசு, 28 லட்சம் ரூபாய் மானியமாக ஒதுக்கீடு செய்துள்ளது.ஈரோடு மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகள் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இச்சாலைகளை என்னதான் பராமரித்து, "பேட்ஜ்' வேலைகள் செய்தாலும், மீண்டும் பழுதாகி விடுகிறது. இப்பிரச்னைக்கு நீண்ட கால தீர்வு காணும் வகையிலும், சுற்றுச்சூழலை சீரழிக்கும் பிளாஸ்டிக் கழிவை பயனுள்ளதாக்கும் வகையிலும், பிளாஸ்டிக் கழிவு மூலம் சாலை அமைக்கும் திட்டம், ஈரோடு, ஜெய் நகர் மூன்றாவது வீதியில் துவங்குகிறது.

அதோடு, பல்வேறு இடங்களில் பழுதடைந்துள்ள சாலைகளை பிளாஸ்டிக் கழிவு கொண்டு சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2011-12ல் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிக்கு, 28 லட்சம் ரூபாய் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இத்தொகையோடு மாநகராட்சி பொதுநிதியாக, 28.1 லட்சம் ரூபாய் சேர்த்து கீழ்கண்ட சாலைகள்; பிளாஸ்டிக் சாலையாக்கப்படும்.அவை விபரம்: 21.56 லட்சம் ரூபாய் மதிப்பில் 1.12 கி.மீ., நீள ராஜகோபால் தோட்டம், பச்சியம்மன் கோவில் வீதி மற்றும் ராயல் லே அவுட் சாலைகள் புதுப்பித்தல். 0.36 கி.மீ., நீளம்; நான்கு லட்சம் ரூபாய் மதிப்பில் வார்டு எண் - 47ல் ரைஸ்மில் ரோடு சாலை. 0.16 கி.மீ., நீளம்; இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பில், வார்டு எண் 55ல் புது அக்ரஹார வீதி சாலை.நீளம் - 0.12 கி.மீ., 1.35 லட்சம் ரூபாய் மதிப்பில் வார்டு எண் 55ல் சொக்கலிங்கம் வீதி சாலை. வார்டு எண் 16ல்; 16.5 லட்சம் ரூபாய் மதிப்பில், 1.6 கி.மீ., கங்காபுரம் - கொளத்துப்பாளையம் சாலை புதுப்பித்தல்.இதுதவிர, பிளாஸ்டிக் கழிவை துண்டாக்கும் இயந்திரம் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்குதல், ஆறு லட்சம் ரூபாய் மதிப்பில் பிளாஸ்டிக் கழிவு சேகரம் செய்யும் கிடங்கு அமைத்தல் உள்பட, 52.41 லட்சம் ரூபாய் மதிப்பில் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் கோரப்பட்ட, பணி துவக்கப்பட உள்ளது.
 

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #39
MGR Statue traffic signal in high cause - needs immediate attention

ஈரோடு எம்.ஜி.ஆர்., சிலை சிக்னலில் மின்வெட்டை சமாளிக்க, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை மின் இணைப்பில் இருந்து மின் இணைப்பு வழங்க மின் வாரியத்துக்கு போக்குவரத்து பிரிவு கடிதம் அனுப்பியுள்ளது.ஈரோடு டவுன் சப்-டிவிஷனில் வடக்கு மற்றும் தெற்கு போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. பன்னீர்செல்வம் பார்க் சிக்னல், சவீதா சிக்னல், எம்.ஜி.ஆர்., சிலை, ப்ளூடாட் சிக்னல், கலெக்ட்ரேட் சிக்னல் என மொத்தம், 12 சிக்னல்கள் தெற்கு போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் வருகிறது.தெற்கு போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் எம்.ஜி.ஆர்., சிலை சிக்னல் வருகிறது. ஈரோடு டவுன் எல்லைக்குள் முக்கிய சிக்னலாக இந்த சிக்னல் உள்ளது. 24 மணி நேரமும் பரபரப்பாக உள்ள இந்த சிக்னல் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடக்கின்றன.

தினமும் காலை 8 முதல் இரவு 9 மணி வரை இங்கு அதிக வாகனங்கள் கடந்து செல்லும். இரவு 9 மணிக்கு மேல் வாகனங்களின் எண்ணிக்கை குறையும். தொடர் மின்வெட்டால் இரவு நேரத்தில் எம்.ஜி.ஆர்., சிலை சிக்னல் சமீபகாலமாக இருளில் மூழ்கியது.இதனால், நான்கு திசையில் இருந்து வரும் வாகனங்கள் மோதிக்கொள்ளும் சம்பவம் தினமும் நடக்கிறது. இப்பிரச்னைக்கு முடிவு கட்ட போக்குவரத்து பிரிவு போலீஸார் மாற்று வழிக்கு திட்டம் தீட்டி வருகின்றனர்.அரசு மருத்துவமனைக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது. இந்த சிக்னல், அரசு மருத்துவமனை அருகே உள்ளதால், அங்கிருந்து மின் இணைப்பு பெற்றால் சிக்னல் தடைபடாது, எனக்கோரி மின் வாரிய கோட்ட பொறியாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
 

·
Registered
Joined
·
516 Posts
Encorachments in RKV road become Permenent Shops

ஈரோடு: ஈரோடு டவுன் ஆர்.கே.வி., ரோட்டில், பிளாட்பாரத்தை ஆக்கிரமித்து, தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்தவர்கள், "கவனிக்க' வேண்டியவர்களை கவனித்து, நிரந்தர கடைகளாக மாற்றியுள்ளனர்.
ஈரோடு டவுன் ஆர்.கே.வி., ரோட்டில், மிகப்பெரிய ஜவுளிகடைகள், நகை கடைகள், நேதாஜி காய்கறி மாக்கெட் மற்றும் மளிகை பொருட்கள் மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகள் அமைந்தள்ளது. பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள், மாவட்டத்தின் அனைத்து பகுதியை சேர்ந்த மக்களும் பொருட்களை வாங்க கூடும் இடமாக விளங்குகிறது.
தினமும் ஒரு லட்சம் மக்கள், இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கிறது. இங்கு எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படும்.
குறுகலான ரோடு என்பதால், கிருஷ்ணா தியேட்டர் துவங்கி, டவுன் ஸ்டேஷன் வரையிலும், மார்க்கெட் ரோடு, ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. நேதாஜி காய்கறி மார்க்கெட் ஜவுளிக்கடை முன்பாக, போலீஸார், மாநகராட்சி கவுன்சிலர், அதிகாரிகள் மற்றும் கட்சிக்காரர்களை "கவனித்து' பிளாட்பாரத்தை ஆக்கிரமித்து ஐம்பதுக்கும் மேற்பட்ட கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்.
பிளாட்பாரக்கடைகளுக்கு பாலித்தீன் பைகள் மூலமாக, மேற்கூறை அமைத்தவர்கள், தற்போது நிரந்தரமான கடைகளாக மாற்றி, வியாபாரம் செய்து வருகின்றனர். பண்டிகை விஷேச நாட்களில், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது, தற்காலிக கடைகளாக இருந்தபோது, போலீஸார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்து வந்தனர்.
இரும்பு ஆங்கில் மூலமாக நிரந்தர கடைகளாக மாற்றியுள்ளதால், நெரிசல் ஏற்பட்டாலும், கடைகள் அகற்றப்படுவதில்லை. மாறாக தினமும் 200 ரூபாய்யும், வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை முகூர்த்த நாட்களில் 500 ரூபாய் வரையிலும், "கட்டணம்' வசூலிக்கின்றனர்.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரோடு, அவர்கள் அகற்றவேண்டும் என்றும், ஆர்.கே.வி.,ரோடு, நேதாஜி மார்க்கெட் மாநகராட்சியின் கீழ் வருவதால், அவர்கள்தான் அகற்ற வேணடுமெனக்கூறி, பாக்கெட்டை மட்டும் நிரப்பி வருகின்றனர். இதனால், மாநகராட்சிக்கும், அரசுக்கும் இழப்பு ஏற்படுகிறது.
 
21 - 40 of 597 Posts
Top