SkyscraperCity banner

41 - 60 of 597 Posts

·
Registered
Joined
·
516 Posts
Widening of Erode - Karur Road

ஈரோடு :விபத்தை தடுக்கும் வகையில், ஈரோடு - கரூர் மெயின் ரோட்டில், ரோட்டை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.ஈரோட்டில் இருந்து கரூர், திருச்சி செல்லும் பிரதான ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதுடன், இந்த ரோட்டில் பல இடங்களில் பெரிய அளவில் மேடு, பள்ளங்களும், பெரிய வளைவுகளும் உள்ளன. தவிர, கரூர் பகுதியில் இருந்து மணல் ஏற்றி வரும் லாரிகளும், கரூரை நோக்கி மணல் ஏற்றச் செல்லும் லாரிகளும் அசுர வேகத்தில் செல்வதாலும், அடிக்கடி விபத்து நடக்கிறது.இதை கட்டுப்படுத்த, ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு முன்பாக, ரோட்டில் மிகப்பெரிய மேடான பகுதி உள்ளதால், இரு புறங்களில் இருந்து வரும் வாகனங்கள் தெரியாமல், விளக்கு வெளிச்சத்தை கூட பார்க்க முடியாத நிலையில், அடிக்கடி விபத்து ஏற்பட்டது. தற்போது, இந்த இடத்தில் உள்ள மேடான பகுதியை வெட்டி, இரு புறமும் வரும் வாகனங்கள், எதிரெதிரே பார்க்கும் அளவுக்கு ரோட்டை சமன் செய்யும் பணி நடந்து வருகிறது.

இதற்கிடையில், சோளங்காபாளையம் பகுதியில், நெடுஞ்சாலைத்துறை மூலம், சாலைப் பாதுகாப்பு மேம்பாட்டு நிதி, 50 லட்சம் ரூபாய் செலவில் ரோடு அகலமாக்கும் பணி நடக்கிறது. இப்பகுதி குறுகலான, வளைவான ரோடாக இருப்பதாலும், பாதுகாப்பற்ற திருப்பமாக உள்ளதாலும், இங்கு ரோட்டை அகலப்படுத்தி, சிறிய அளவிலான பாலத்துடன், ரோடு அமைக்கும் பணி நடக்கிறது.
கொடுமுடி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சேகர், ""சாலை பாதுகாப்பு மேம்பாட்டு நிதி, 50 லட்சம் ரூபாய் செலவில் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, இரண்டு பஸ்கள் செல்லும் அளவிலான ரோட்டை, மூன்று பஸ்கள் சாதாரணமாக செல்லும் வகையில், மேடு, பள்ளங்கள் இல்லாத வகையில் அமைக்கப்படுகிறது. ஏழு மீட்டராக உள்ள ரோட்டின் அகலம், பத்து மீட்டராக்கப்படுகிறது. இதனால், வாகன விபத்து வெகுவாக குறையும். போக்குவரத்து விதிகள் குறித்து, அறிவிப்பு பலகை, எச்சரிக்கை பலகை போன்றவை அமைக்கப்படும். இப்பணி மே இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.
 

·
Registered
Joined
·
516 Posts
Protest against 80Feet Road

ஈரோடு: ஈரோடு மாநகரில் அமையவுள்ள, 80 அடி சாலைத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, சி.எஸ்.ஐ., கிறிஸ்தவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஈரோடு பிரப் ரோடு பகுதியில், 80 அடி சாலை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றி, நிதி ஒதுக்கீடு செய்தது. இத்திட்டம் தங்கள் நிலத்தில் அமைகிறது என்றும், திட்டத்தை கைவிட வேண்டுமென சி.எஸ்.ஐ., திருச்சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று காலை, 11 மணிக்கு ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு சி.எஸ்.ஐ., காம்பவுண்ட் கமிட்டி நிர்வாகிகள், ஆல்ட்ரின் ராஜேஸ்குமார், ஜோசப் மற்றும் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் வந்தனர். அலுவலக வாயிலை முற்றுகையிட்டு, 80 அடி சாலை திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மக்கள் குறைதீர் கூட்டத்திலிருந்த டி.ஆர்.ஓ., கணேஷ், அவர்களிடம் விசாரித்தார். அவரிடம் அளிக்கப்பட்ட மனு:
ஈரோடு பிரப் ரோட்டின் மையப் பகுதியில் சி.எஸ்.ஐ., திருச்சபைக்கு சொந்தமான பட்டா பூமியில் (புல எண் 586, 587 - 12.66 ஏக்கர்), பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன. 90 ஆண்டுகளாக பல சமய மக்கள் பயன்பெறும் வகையில், 100 சதவீத அரசு நிதியுதவியுடன் நடந்து வருகிறது.
சில நாட்களுக்கு முன், ஈரோடு மாநகராட்சியில், 80 அடி சாலை திட்டத்துக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றி, அதற்கென நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் சி.எஸ்.ஐ., நிர்வாகத்திடம், 80 அடி சாலை திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.மேற்கண்ட சாலை அமையவுள்ள இடத்துக்கு கிழக்கே, 200 மீட்டரில் காந்திஜி ரோடும், மேற்கே, 300 அடியில் எஸ்.கே.சி., ரோடும் பயன்பாட்டில் உள்ளது. எனவே, 80 அடி சாலை தேவையற்றது. எனவே, 80 அடி சாலைத் திட்டத்தை உடனே ரத்து செய்து, சிறுபான்மை மக்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.டி.ஆர்.ஓ., ""கலெக்டர் மற்றும் அரசிடம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கிறோம்,'' என்றார். இதையடுத்து, கிறிஸ்தவர்கள் கலைந்து சென்றனர்.
 

·
Registered
Joined
·
1,603 Posts
ஈரோடு: ஈரோடு மாநகரில் அமையவுள்ள, 80 அடி சாலைத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, சி.எஸ்.ஐ., கிறிஸ்தவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஈரோடு பிரப் ரோடு பகுதியில், 80 அடி சாலை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றி, நிதி ஒதுக்கீடு செய்தது. இத்திட்டம் தங்கள் நிலத்தில் அமைகிறது என்றும், திட்டத்தை கைவிட வேண்டுமென சி.எஸ்.ஐ., திருச்சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று காலை, 11 மணிக்கு ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு சி.எஸ்.ஐ., காம்பவுண்ட் கமிட்டி நிர்வாகிகள், ஆல்ட்ரின் ராஜேஸ்குமார், ஜோசப் மற்றும் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் வந்தனர். அலுவலக வாயிலை முற்றுகையிட்டு, 80 அடி சாலை திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மக்கள் குறைதீர் கூட்டத்திலிருந்த டி.ஆர்.ஓ., கணேஷ், அவர்களிடம் விசாரித்தார். அவரிடம் அளிக்கப்பட்ட மனு:
ஈரோடு பிரப் ரோட்டின் மையப் பகுதியில் சி.எஸ்.ஐ., திருச்சபைக்கு சொந்தமான பட்டா பூமியில் (புல எண் 586, 587 - 12.66 ஏக்கர்), பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன. 90 ஆண்டுகளாக பல சமய மக்கள் பயன்பெறும் வகையில், 100 சதவீத அரசு நிதியுதவியுடன் நடந்து வருகிறது.
சில நாட்களுக்கு முன், ஈரோடு மாநகராட்சியில், 80 அடி சாலை திட்டத்துக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றி, அதற்கென நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் சி.எஸ்.ஐ., நிர்வாகத்திடம், 80 அடி சாலை திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.மேற்கண்ட சாலை அமையவுள்ள இடத்துக்கு கிழக்கே, 200 மீட்டரில் காந்திஜி ரோடும், மேற்கே, 300 அடியில் எஸ்.கே.சி., ரோடும் பயன்பாட்டில் உள்ளது. எனவே, 80 அடி சாலை தேவையற்றது. எனவே, 80 அடி சாலைத் திட்டத்தை உடனே ரத்து செய்து, சிறுபான்மை மக்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.டி.ஆர்.ஓ., ""கலெக்டர் மற்றும் அரசிடம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கிறோம்,'' என்றார். இதையடுத்து, கிறிஸ்தவர்கள் கலைந்து சென்றனர்.
CSI group would have got this much land during British Period. Since their intention is to do "Public service", why can't they donate some land for forming this 80 ft road which is vital for the town
 

·
Registered
Joined
·
516 Posts
CSI group would have got this much land during British Period. Since their intention is to do "Public service", why can't they donate some land for forming this 80 ft road which is vital for the town

Erode will not get any Infrastructures because of the agitation by our own people..:bash:

Everyday we have seen agitations on Ring Road and we are not seeing any progress on that...
 

·
Registered
Joined
·
516 Posts
Damaged Roads to be Laid soon

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் அரசின் பல்வேறு திட்ட நிதி, 31.69 கோடி ரூபாய் மதிப்பில், 82.88 கி.மீ.,க்கு பழுதடைந்த பாதாள சாக்கடைத் திட்ட சாலைகள் சீரமைக்கப்பட்ட உள்ளது.
ஈரோடு மாநகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் பல இடங்களில் நிறைவுபெற்றுள்ளன. இதுவரை, 135.62 கி.மீ., தூரத்துக்கு குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. குழாய் பதிக்கப்பட்ட பகுதிகளில் தோண்டப்பட்ட குழிகளால், பெரும்பாலான இடங்களில் சாலைகள் பெரிதும் பழுதடைந்துள்ளன.
தார் சாலைகள் மண் சாலையாக மாறி காட்சியளிக்கின்றன. இவ்வாறு பழுதடைந்த, 82.88 கி.மீ., சாலைகளை பல்வேறு அரசு திட்ட நிதிகள் மூலம் சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அதன்விபரம் வருமாறு:
நகர்ப்புற சாலை உட்கட்டமைப்புத் திட்டம், 2011-12ன் கீழ், 58.72 கி.மீ., சாலை, 22 கோடியே 17 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த நகர்ப்புற அபிவிருத்தி திட்ட இயக்கத்தின் கீழ், 10.18 கி.மீ., சாலை, நான்கு கோடியே ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பிலும், சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் 11.38 கி.மீ., சாலைகள், 5.1 கோடி ரூபாய் மதிப்பிலும், பிளாஸ்டிக் சாலைகள் திட்டத்தில், 2.6 கி.மீ., சாலை, 31.95 லட்சம் ரூபாய் மதிப்பிலும் சீரமைக்கப்பட உள்ளது.
மொத்தம், 82.88 கி.மீ., நீள சாலைகள், 31 கோடியே 69 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணி நடக்கவுள்ளது. முதற்கட்டமாக மண்டலம்-3ல் நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டம், 2011-12யின் கீழ் சீரமைப்பு பணிகள் நேற்று துவங்கியது. பிற இடங்களிலும் விரைவில் பணிகள் துவங்கவுள்ளது.
 

·
Registered
Joined
·
516 Posts
Center Median has been installed in Perundurai Road. This will reduce the number of Accidents and also the traffic jam.:applause::applause:

But roads are very narrow for two vechicles to travel parallely. Hopefully roads will be laid soon and also encroachments will be removed on both sides.
 

·
Registered
Joined
·
516 Posts
Slow Progress of GH Roundana

ஈரோடு: ஈரோடு எம்.ஜி.ஆர்., சிலை சிக்னல் பகுதியில், ரவுண்டானா அமைக்கும் திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும்.ஈரோடு எம்.ஜி.ஆர்., சிலை சிக்னல் பகுதியில், பகல் வேளையில், 100 மீட்டர் தூரம் வாகனங்கள் காத்திருந்து செல்ல வேண்டியுள்ளது. அரசு மருத்துவமனை பகுதியில் இருந்து பிரப்ரோடு, ஈ.வி.என்.,ரோடு, மேட்டூர் ரோடு, இடையன்காட்டுவலசு ரோடு, பெருந்துறை ரோடு சந்திப்பு முக்கிய பகுதியாக இருப்பதால், இப்பகுதியை கடந்து செல்லவே ஐந்து நிமிடங்களுக்கு மேலாகிறது. பெருந்துறை ரோட்டில் பெட்ரோல் பங்க் வரையும், ஈ.வி.என்., ரோட்டில் இ.பி., வரையும் வாகனங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பதால் இடையில் உள்ள ரோடுகளில் இருந்து வரும் வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அனைத்து ரோடுகளும் அடைபட்டு, நாலாபுறமும் வாகனங்கள் நிற்க வேண்டியுள்ளது. அருகிலேயே ஜி.ஹெச்., இருப்பதால், ஆம்புலன்ஸ் வாகனங்களும், சிக்னலில் சிக்கி விடுகின்றன.அரசு மருத்துவமனை அருகே மேம்பாலம் அல்லது ரவுண்டானா அமைக்க மாவட்ட நிர்வாகம் முயற்சித்தது. கடைசியில், 100 மீட்டர் சுற்றளவுக்கு ரவுண்டானா அமைக்க முடிவு செய்து, அதற்கான பணிகள் துவங்கியது. அப்பகுதியில் தேவையான நிலமும், தனியாரிடம் இருந்து பெறப்பட்டது. நிலத்துக்கான இழப்பீடு தொகை நிர்ணயம் செய்ய டி.ஆர்.ஓ.,விடம் கோப்புகள் உள்ளன. இப்பணிகள் முடிக்கப்பட்டால் நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு ரோட்டை விரிவுபடுத்தவும், ரவுண்டானா அமைக்கவும் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்வர்.ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட இழப்பீடு தொகையில் மாற்றம் செய்து, தற்போதைய நில மதிப்பீடுக்கு கணக்கிட வேண்டியிருப்பதால், மீண்டும் ஆர்.டி.ஓ., மற்றும் தாசில்தாருக்கு அறிக்கை கேட்டு, கோப்புகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. ஆகவே, ரவுண்டானா அமைய இன்னும் ஆறு, ஏழு மாதங்கள் ஆகலாம் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.டி.ஆர்.ஓ., கணேஷ், ""அரசு மருத்துவமனை அருகே ரவுண்டானா அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்க போதுமான அறிக்கை கிடைக்கவில்லை. மீண்டும் அறிக்கை தாக்கல் செய்ய, தாசில்தாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.
 

·
Registered
Joined
·
516 Posts
Heard that Deputy Mayour KCP is pressing hard to get a Bus Stand on the western part of Erode City (Might be in Periya Semur or Chittode). As he is from that area, hope that atleast a new BS is formed for West,South-West & North-West Bound Buses near Chittode in this period.
 

·
Registered
Joined
·
516 Posts
Center Median in Sathy Road

ஈரோடு: வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் விபத்தை தடுக்கும் நோக்கில், 60 மீட்டர் நீளத்துக்கு, சென்டர் மீடியன் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் நேற்று துவக்கினர்.
மக்கள் நெருக்கம் அதிகம் கொண்ட வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே சத்தி சாலையில், மண்டல அலுவலகம், மாரியம்மன் கோவில், அரசு பள்ளி, வங்கி ஆகியவை அடுத்தடுத்து உள்ளன. போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. நெடுஞ்சாலைத் துறையினர் கேட்டுக் கொண்டதால், மாரியம்மன் கோவில் நிர்வாகத்தினர், கோவிலை சற்று தள்ளி அமைத்துக் கொண்டனர்.
ஏற்கனவே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, 26 மீட்டர் அகலத்துக்கு ரோடு விரிவாக்கம் செய்ய, நிலம் தயார்படுத்தி, இரண்டு மாதத்துக்கு முன், 31 கோடி ரூபாய் நிதி மூலமாக, இரு புறமும், 13 அடி அகலத்தில், 300 அடி நீளத்துக்கு நான்கு வாகனங்கள், ஒருசேர செல்லும் வகையில், ரோட்டை அகலப்படுத்தினர். பாதாள சாக்கடை குழாய்கள் ரோட்டோரம் மாற்றி அமைக்கப்பட்டன.
ரோடு அகலமானதால், வாகனங்கள் கடுமையான வேகத்தில் வர ஆரம்பித்தன. அடிக்கடி விபத்து ஏற்படத் துவங்கியது. இதை அடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர், விரிவாக்கம் செய்த ரோட்டின் மையத்தில், ஒரு அடி அகல, இரண்டு அடி உயரம் கொண்ட, சென்டர் மீடியன்களை தடுப்பாக வைத்தனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறுகையில், ""வீரப்பன்சத்திரத்தில் நெடுஞ்சாலைத் துறை சார்பில், ரோடு அகலப்படுத்த, 31 கோடி ரூபாயில், 300 அடி நீளத்துக்கு புதிய ரோடும், வாகன விபத்தை தடுக்கும் வகையில், ரோட்டின் மையப்பகுதியில், 60 அடி நீளத்துக்கு, சென்டர் மீடியனும் அமைத்து வருகிறோம்,'' என்றார்.
 

·
Registered
Joined
·
516 Posts
^^^^^^

Would be Good if Center Median is constructed for the entire Stretch of SathyRoad from Bharthi Theatre Bus Stop to ThannerPandhal Palayam. This will avoid accidents and also will regulate traffic flow..
 

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #51
Ring Road project again takes-of in full swing.......

Seems RPP Infra is carrying out the project. So definitely they will do it...

 

·
ERO 100+ NANJIL
Joined
·
1,588 Posts
ரிங்ரோடு பணிகளுக்காக நிலம் கையகப்படுத்த ரூ22 கோடி ஒதுக்கீடு

ஈரோடு, : ரிங்ரோடு பணிகளுக்காக நிலங்களை கையகப்படுத்த 22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
நிலங்கள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு கொடுத்த பிறகு பணிகளை தொடங்கவுள்ளனர். ரிங்ரோடு பணிகள் அனைத்தும் இன்னும் 6 மாத காலத்திற்குள் முழுமையாக முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஈரோடு மாநகரில் நாளுக்கு நாள் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.ஜவுளி,மஞ்சள் வர்த்தகம் அதிக அளவில் நடைபெற்று வரும் மாநகரபகுதிகளில் லாரிகள் அதிகமாக வந்து செல்வதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் மாநகர பகுதிக்குள் வராமல் நகரின் ஒதுக்குப்புறமாக செல்லும் வகையில் ரிங்ரோடு அமைக்க முடிவு செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டை, பாப்பம்பாளையம் வழியாக ஈரோடு மாவட்டத்தில் லக்காபுரம் பரிசல்துறை, 46புதூர், ஆனைக்கல்பாளையம், சடையம்பாளையம், ரகுபதிநாயக்கன்பாளையம், ரங்கம்பாளையம் கலைக்கல்லூரி பின்பறம், அத்தப்பம்பாளையம் பிரிவு வழியாக திண்டலில் பெருந்துறை ரோட்டுடன் இணைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ரிங்ரோடு பணிகளுக்காக காவேரி ஆற்றின் குறுக்கே 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. 15 கி.மீட்டர் தூரத்திற்கு இந்த ரிங்ரோடு பணி அமைக்கப்படுகிறது.

தற்போது 7.6 கி.மீட்டர் தூரத்திற்கு பணிகள் செய்ய வேண்டியது உள்ளதால் இதற்காக 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியை பொருத்தவரை விவசாய நிலங்களும், பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளும் உள்ளதால் நிலங்களை கையகப்படுத்த வேண்டியது உள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகத்திற்கு 22 கோடி ரூபாய் பணத்தை நெடுஞ்சாலைத்துறையினர் செலுத்தியுள்ளனர்.

இந்த பகுதியில் ரிங்ரோட்டிற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் மற்றும் வீடுகளுக்கான மதிப்பீடுகள் செய்யப்பட்ட பிறகே நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க திட்டமிட்டுள்ளனர். மேலும் காவேரி ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதனால் ரிங்ரோடு பணிகள் எப்போது முடியும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ரிங்ரோடு அமைப்பதற்காக பெரும்பாலான இடங்களில் ரோடுகள் அமைப்பது, சிறிய பாலங்கள் அமைப்பது போன்ற பணிகள் முடிவடைந்துள்ளது. தற்போது 7.6 கி.மீட்டர் தூரத்திற்கு பணிகளை செய்ய வேண்டியது உள்ளது. இதில் காவேரி ஆற்றில் பாலம் கட்டும் பணியும் உள்ளடக்கியுள்ளது. இதற்காக 24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. ரிங்ரோடு பணிகளுக்காக கொக்கராயன்பேட்டை, பாப்பம்பாளையம், புஞ்சை லக்காபுரம், நஞ்சை லக்காபுரம், வெண்டிபாளையம், நஞ்சை ஊத்துக்குளி, 46 புதூர், வடமுகம்வெள்ளோடு ஆகிய பகுதிகளில் சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் நிலங்களை கையகப்படுத்த வேண்டியது உள்ளது.

நாங்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் 22 கோடி ரூபாய் பணம் செலுத்தியுள்ளோம். நிலங்களின் மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்கிய பிறகு எங்களுக்கு உத்தரவு வரும். அதற்கு பிறகே நிலங்களை கையகப்படுத்த தொடங்குவோம். காவேரி ஆற்றில் தண்ணீர் வருவதால் பாலம் கட்டுவது சிரமமான நிலையில் உள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. ரிங்ரோடு பணிகள் அனைத்தும் இன்னும் 6 மாத காலத்திற்குள் நிறைவு பெற்று விடும் என்று தெரிவித்தார்.

Source Dinakaran

above in english

Rs 22 cr has been allotted for land acquisition for Erode ring road project. This is the project which involves construction of bridge across river Cauvery.

http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=120804&cat=504
 

·
Registered
Joined
·
3 Posts
Friends, Any idea about Erode ring road project. From the previous post it looks like Kokarayanpettai to Thindal is progressing slowly. Any information about Phase 2 From Thinadal to Bahavi road. Is the route/map finalized. Has they started work?
 

·
Banned
Joined
·
381 Posts
Outer Ring Road for ERODE Townfrom 2/200 KM To 7/450 KM
Components :
*. Slab culvert : 3 Nos.
*. Retaining wall :2 Nos
*. Storm water Drain : 1Km long
*. Pipe Culvert 1000mmdia : 28 Nos
Items of works:
Earth filling : 21728 cu.m.
Gravel filling : 52606 cu.m.
Granular sub-base : 14868 cu.m.
Wet Mix Macadam : 9581 MT.
Bitumen Road : 38325 sq.m.
(Prim. Coat, tack coat & bitumen : concrete)
Cement concrete : 3890 cu.m.
Reinforcement steel : 18.55 MT
RCC hume pipe 1000 mm dia : 490 m.
Value : Rs 783.78 Lakhs.
Client : Tamilnadu Highways Department (state Govt.)http://www.renaatus.com/outer-ring-road-erode.htm
 

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #57

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #58
This is what we need from our Erode district side...



Yellow - available Highways
Red - Proposed ROB
Green - ROB needed
Brown - New Connectivity needed...
 

·
Epitome of Enterprise
Joined
·
2,529 Posts
Discussion Starter #59
Ring Road Status!

Progress near Lakkapuram on Sivagiri Road....


So, this must be the alignment of Phase-I under progress..
It is partly ready to connect Kokkarayanpet - Karur Road - Sivagiri Road - Palani Road...

No idea about the status of Cauvery Bridge...
 
41 - 60 of 597 Posts
Top