SkyscraperCity banner

1 - 20 of 2326 Posts
Joined
·
274 Posts
Discussion Starter #4
Why do we need this thread? Can this not be merged with TN AA?
TN AA has wider range of audience , wider range of issues. Some people like me ( who don't visit other city threads ) can use this for local arattai issues and we also can't expect people from other cities to comment on local CBE infra issues. In that case I feel this is a better option
 

·
Registered
Joined
·
2,691 Posts
No wrong approach. It is better other people know your issues even if they like it or not is different. Someone know about that problem can give solution to your issue.
 

·
Registered
Joined
·
2,658 Posts
No wrong approach. It is better other people know your issues even if they like it or not is different. Someone know about that problem can give solution to your issue.
Kamal madiri kolappama pesureenga. Indha threadu venumngareengala vendamngareengala? :)

@Leo, R2Ic

indha thread-oda mudakki pottu samadhi kattiralamnu parthenngala? :lol:
 

·
Registered
Joined
·
10,348 Posts
There is no harm in having a Discussion Thread like Artattai Arangam for CBE region.

All news which can not be covered by existing threads in CBE region can be discussed here.

But my request to you all is PLEASE DO NOT DISCUSS TN KERALA MATTERS here.

Apart from that you can use it for Mokkai.

KT kku mood vandha Viswaroopam eduthu Virumandi madhiri Pinni Pedal eduthuruvaru.

Mokkai podarathukku oru thread irundha nalladhuthan. Time Pass amidst tension.

Pl keep it light & ENSOY.
 

·
Coimbatore Well-Wisher
Joined
·
4,882 Posts
http://timesofindia.indiatimes.com/city/coimbatore/Tattoo-parlour-makes-a-splash-in-Coimbatore/articleshow/11237637.cms

Tattoo parlour makes a splash in Coimbatore

COIMBATORE: If fashion is the yardstick to measure a city's hipness quotient, then Coimbatore has perhaps arrived. The city now has a new tattoo parlour. "The best part of Coimbatore is that 90% customers come in knowing what they want," says Krishnan Vaidyanathan, who runs the studio.

The parlour is known as 'Irezumi', meaning an ink mark on the skin in Japanese. Actors like Khushboo, Trisha and Vikram have been tattooed at the parlour's Chennai wing. Many fashion models are also regulars. The studio has professionals certified in Thailand.

The studio's first customer was an officer from the defence services. The parlour sees customers between the age group of 14 and 62. "We do not tattoo kids below the age of 18 unless they are accompanied by a parent," says Krishnan.
 

·
Registered
Joined
·
2,658 Posts
Wishing you all a happy and prosperous 2012. Hope this year is filled with fun and joy for the members.

Also hoping that it's an eventful year for the city.
 

·
Registered
Joined
·
2,658 Posts
Rumor or truth? Article talks about degradation of police in Kongu belt, specifically CBE and Erode citing three different incidents. Could be related to individuals involved too. But article as such blames police in the entire region.

Source - Vikatan

கொங்கு போலீஸ் கெட்டுப் போச்சுண்ணே!

மிஸ்டர் க்ளீன்’ என்று இமேஜ் இல்லாவிட்டாலும், ஏடாகூடப் புகார்களில் அதிகம் சிக்காமல் இருந்தது. மேற்கு மண்டல போலீஸ். ஆனால், கடந்த சில வாரங்களில், இந்த மண்டல போலீஸ் அதிகாரிகள் சிலர் பற்றி முதல்வரின் தனிப்பிரிவுக்கு போய் விழுந்திருக்கும் புகார்களின் நெடி ரொம்பவே ஓவர்.

டபுள் மீனிங்... டிரிபிள் மீனிங்!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சட்டமன்றத் தொகுதியை கண்காணிக்கும் அதிகாரி அவர். அவரைப் பற்றி முதல்வருக்கு பக்கம் பக்கமாக புகார் அனுப்பி இருக்கிறார் ஒரு பெண். ஆதங்கமும், அழுகையும் புரண்டோடும் அந்தக் கடிதத்தின் சில வரிகள் இங்கே அப்படியே.

''பொது இடத்தில் என்னைப் பார்த்து, தானாகவே வலிய வந்து பேசினார். 'நீ என்ன ஜாதி?’னு கேட் டார். நான் சொன்னேன். உடனே 'அட! நம்ம ஜாதி. சரி... நான் யாருன்னு தெரியுமா? இந்த ஏரியாவே என் கன்ட்ரோல்தான்’ என்று சொன்னவர், வற்புறுத்தி என்னுடைய மொபைல் நம்பரை வாங்கிட்டுப் போனார். அதற்குப் பிறகு சும்மா சும்மா போன் பண்ணி தொந்தரவு கொடுத்துட்டே இருந்தார். 'என்னடா குட்டி எப்படி இருக்கே? எப்போ நம்ம ஆபீஸுக்கு வரப்போறே? உன்னைப் பார்க்கணும் போல இருக்குதுடா. நீ என் ஆபீஸுக்கு வந்துட்டுப் போறது தெரிஞ்சாலே ஊருக்குள்ளே உன்கிட்ட எவனும் வம்பு தும்பு பண்ண மாட்டான். என்னால உன்னைப் பார்க்காம இருக்க முடியலடா!’-னு ஆரம்பிச்சு எழுத முடியாத அளவுக்கு ரொம்பக் கேவலமா பேசுவார். இந்த ஒரு மாசத்தில் மட்டும் 42 தடவை போன் பண்ணியிருக்கார். திடீர்னு வீட்டுக்கு முன்னாடி வண்டியைக் கொண்டாந்து நிப்பாட்டிட்டு போன் பண்ணுவார் 'வெளியில வந்து நிற்காட்டியும் ஜன்னல் வழியாகப் பாரு. உன் முகத்தைப் பார்த்துட்டு சந்தோஷமா கிளம்பிடுறேன்’ அப்படின்னு டார்ச்சர் கொடுப்பார். என்ன பேசுனாலும் டபுள் மீனிங், டிரிபிள் மீனிங்காவே இருக் கும். அவர்கிட்டே இருந்து என்னை காப்பாத்துங்கம்மா'' என்று எழுதி அனுப்பி இருக்கிறார்.

முதல்வரின் தனிப்பிரிவுக்கு கடிதம் எழுதியது தெரியவந்ததும், அந்தப் பெண்ணுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரியின் தரப்பில் இருந்து கடும் நெருக்கடி வந்திருக்கிறது. அதனைச் சமாளிக்க முடியாமல் மூட்டை முடிச்சுகளோடு, தன் கணவர் பணிபுரியும் தீவு நோக்கி கடல் கடந்து பறந்து விட்டாராம் அந்தப் பெண்மணி.

மறுபடியும் முதல்ல இருந்து!

ஏக எதிர்பார்ப்புகளுக்கு இடையில் கோவைக்கு மாறி வந்தார் அந்த அதிகாரி. கள்ளச்சாராயம், திருட்டு லாட்டரி, பங்களா விபசாரம் போன்றவற்றை மனிதர் அழித் தொழிப்பார் என்று காவல்துறையே இவர் மேல் அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்தது. ஆனால், மனிதரோ தனது பழைய தோழியின் மயக்கத்தில் கரைந்து போனதுதான் கொடுமை. நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணி டம் பல வருடங்களாக மனதைப் பறிகொடுத்து பின் மீண்டவர், தற்போது மறுபடியும் பழைய நட்பை முதலில் இருந்து ஆரம்பித்திருக்கிறார்.

இரவு பகலாக போனிலே நட்பு பாராட்டிக் கொண்டிருந்தவர் சில நாட்களுக்கு முன், கார் அனுப்பி தோழியை கோவைக்கே வரவழைத்து விட்டாராம். கடுப்பாகிப் போன அந்தப் பெண்ணின் கணவர் இந்தக் கொடுமையை எல்லாம் விளக்கி முதல்வருக்குக் கடிதம் எழுதி விட்டார். இந்த விஷயத்தை ஸ்மெல் பண்ணிய அதிகாரி, கொங்கு மண்டலத்தில் ஆளும் கட்சியில் பெரும் செல்வாக்குடன் இருந்த நபரிடம் தஞ்சம் புகுந்தார். விளைவு முதல்வரின் தனிப்பிரிவுக்கு போன புகார்... அதிகாரியின் கைகளுக்கே வந்தது. ஆபத்பாந்தவன் இருந்த தைரியத்தில் தோழியின் கணவரை மிரட்டிப் பார்த்த அதிகாரிக்கு இப்போது செம ஷாக். காரணம், அந்த ஆபத்பாந்தனுக்கே அம்மா ஆப்பு வைத்து அனுப்பி விட்டதுதான். தோழியின் கணவர் மீண்டும் புகாரை தட்டிவிட்டு, நடவடிக்கைக்காக காத்திருக்கிறார்.

ஒய் திஸ் பண வெறி?

கோவை மாவட்டத்தில் பணிபுரியும் பெண் போலீஸ் அவர். 'சம்பளமே வாங்காமல் சேவையாக இந்தப் பணியை செய்கிறேன்’ என்று போஸ்டர் ஒட்டாத குறையாக படு பவ்யமாக, பாங்காக நடந்து கொள்பவர். ஆனால், சமீபத்தில் உளவுத்துறைக்கு இவரைப் பற்றி கன்னாபின்னா தகவல்கள் வந்து விழுந்திருக்கிறது. சற்றே அகழ்வாராய்ச்சி செய்தவர்கள், மிரண்டே போனார்களாம். தனது கவனத்துக்கு வந்து விழும் சிவில் பிரச்னைகளில் ஹைடெக்காக கட்டப்பஞ்சாயத்து பண்ணி, ஏகத் துக்கும் பணம் பண்ணுகிறாராம் மனுஷி. 'உங்க பிரச்னை முழுசும் மேடத்துக்கு தெரியும். இதுதான் ஃபீஸ். கொடுத்தீங் கன்னா வேலையை முடிச்சுக் கொடுத்துடுறோம்’ என்று இவருக்காக கேன்வாஸ் செய்து காரியத்தை நிறைவேற்றி கொடுக்க பெரிய புரோக்கர் டீமே இருக்கிறதாம். ராங் ரூட்டில் அம்மணி போவதைப் பார்த்து நொந்து போன கணவர், 'ஒய் திஸ் பண வெறி?’ என்று பலமுறை கேட்டும் இவர் மனம் மாறவும் இல்லை... பாதையை மாற்றவும் இல்லை. கட்டப்பஞ்சாயத்து மூலம் இவர் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கள் பற்றி நீளமான ரிப்போர்ட் ஒன்றை முதல்வருக்குத் தட்டி விட்டிருக்கிறது உளவுத்துறை.

கொங்கு மண்டலத்தில் இருந்து எட்டிப் பார்த்திருக்கும் மூன்று புகார்களுக்கும், காவல்துறையைக் கைகளில் வைத்திருக்கும் முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்?
 

·
Registered
Joined
·
2,658 Posts
Rumor or truth? Article talks about degradation of police in Kongu belt, specifically CBE and Erode citing three different incidents. Could be related to individuals involved too. But article as such blames police in the entire region.
Contradicting news from Dinamalar. Says all is well on law and order front :)

http://www.dinamalar.com/district_detail.asp?id=377611

கோவையில் 2011ல் அமைதி: குற்றங்கள் குறைந்தன :போலீஸ் - பொதுமக்கள் கைகோர்ப்பால் வெற்றி

கோவை : கோவை மாநகரில் ஓராண்டில் மூன்று கமிஷனர்கள் பணியில் இருந்தாலும், போலீஸ் துறை சுணக்கமின்றி செயல்பட்டு, குற்ற எண்ணிக்கை குறைந்துள்ளது. கோவையை பொறுத்தவரை, அமைதியான ஆண்டாகவே 2011 நிறைவுக்கு வந்துள்ளது. கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது, கோவை மாநகரம் சமூக விரோத செயல்கள், அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்கள், பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் இல்லாமல், அமைதியான ஆண்டாகவே கருதப்படுகிறது. முதல் ஐந்து மாதங்கள் சைலேந்திரபாபு போலீஸ் கமிஷனராக இருந்தார். அதற்கு பின் கமிஷனராக பொறுப்பேற்ற அமரேஷ் புஜாரி ஆறரை மாதங்கள் பணியில் இருந்தார். கடந்த வாரம், புதிய கமிஷனராக சுந்தரமூர்த்தி பொறுப்பேற்றுள்ளார். ஓராண்டில் மூன்று கமிஷனர்கள் பணியில் இருந்தாலும், ஒவ்வொருவரின் அணுகுமுறை கோவையில் குற்ற எண்ணிக்கை குறைய காரணமாக இருந்துள்ளது. சட்ட - ஒழுங்கு பிரச்னைகள் பெரிய அளவில் தலைகாட்டாமல் இருக்க, கடந்த ஆண்டிலேயே போலீசார் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர். 2010 அக்டோபரில், பள்ளி குழந்தைகள் முஸ்கன், ரித்திக் ஆகியோரை கடத்திக் கொலை செய்த, மோகனகிருஷ்ணன் போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டான். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை, சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவியது. சைலேந்திரபாபுவுக்கு பின் கமிஷனராக அமரேஷ் புஜாரி பொறுப்பேற்ற பின், அவர் அறிமுகப்படுத்திய "அருகாமை போலீஸ் திட்டம்' போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவை வலுவூட்டியது. நாட்டிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட அருகாமை போலீஸ், அருகாமை கண்காணிப்பு குழு ஆகியவை குற்ற எண்ணிக்கை 20 சதவீதம் வரை குறைய காரணமாக அமைந்தன. அருகாமை போலீஸ் திட்டத்தின்படி, ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் சிறப்பு எஸ்.ஐ.,கள் பணியில் அமர்த்தப்பட்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை உயர் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி, பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. இதனால், போலீஸ் - பொதுமக்கள் இடையே இடைவெளி குறைகிறது. மாநகரில் உள்ள 15 போலீஸ் ஸ்டேஷன்களிலும், மொத்தம் ஆயிரம் போலீசாரை கொண்ட 91 அருகாமை கண்காணிப்புக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. போலீஸ் ரோந்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தகவல் தொடர்புத்துறையின் வளர்ச்சிக்கு ஏற்றபடி, சமூக வலைதளங்கள் வழியாகவும் கோவை மாநகர போலீஸ் பொதுமக்களை எளிதில் நெருங்க முடிந்தது. நேரடியாக போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் தர தயங்கிய பலரும், வீட்டில் இருந்தபடியே போலீஸ் நிர்வாகத்தை அணுக முடிந்தது. கடந்த 2010ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது,கொலை, கற்பழிப்பு, மானபங்கப்படுத்துதல், கடத்தல், வரதட்சணை சாவுகள், 2011ல் குறைந்துள்ளன. புதிய உத்வேகத்துடன் போலீசாரின் செயல்பாடு மட்டுமின்றி, தன்னார்வ குழுக்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், கல்லூரி மாணவர்கள், கண்காணிப்பு குழுக்கள் என பொதுமக்களின் ஒத்துழைப்பும் இருந்ததால், குற்ற எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுவே, 2011ல் அமைதியை நிலைநாட்ட காரணமாக அமைந்தது.
 
1 - 20 of 2326 Posts
Top