SkyscraperCity banner

181 - 185 of 185 Posts

·
Registered
Joined
·
2 Posts
பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை பணிமூன்று மாதத்தில் துவங்கும் என அதிகாரிகள் உறுதி

உடுமலை:பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பணி, மூன்றுமாதத்தில் துவங்கும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) மூலம், பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை (என்.எச்., 83), 136 கி.மீ., நீளம் உள்ள ரோடு, 2,500 கோடி ரூபாய் செலவில், நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலையில், பிரதான ரோடுகளான, மாநில, மாவட்ட சாலைகள் இணையும் பகுதியில், 60 இடங்களில், சுரங்க மற்றும் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படுகின்றன.அமராவதி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலமும், உடுமலை நகருக்கு, தற்போதுள்ள ரோட்டுடன், புதிதாக ஒரு ரோடு அமைகிறது.இதற்கான அணுகுச்சாலைகள், மூணாறு ரோடு, ஆனைமலை ரோடு, திருப்பூர் ரோடு, தாராபுரம் ரோடு என ரோடுகளை, புற நகரப்பகுதியிலேயே, இணைக்கும் வகையில் ரோடுகள் அமைகின்றன.புதிதாக அமையவுள்ள ரோட்டிலிருந்து, நகர பகுதிக்குள் வரவும், இணைப்பு ரோடுகள் அமைக்கப்படுகிறது. இதற்காக, ரோட்டின் இருபுறமும், 2,429 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிட்டு, சர்வே பணிகளும், நிலத்திற்கான இழப்பீடு, நிலைப்பயிர்கள், கிணறு, போர்வெல் மற்றும் கட்டடங்களுக்கு மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டு, நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கும் பணி நடந்து வருகிறது.

More News:
பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை எப்போது? பணிமூன்று மாதத்தில் துவங்கும் என அதிகாரிகள் உறுதி
இழப்பீடு எப்போது வழங்கப்படும்?
 

·
The Boss
Joined
·
249 Posts
துறை சார்ந்த பல்வேறு திட்டப் பணிகள் முடங்குமா; தொடருமா?கட்டுப்பாடுகளால் ஒப்பந்ததாரர் திணறல்

அரசின் கட்டுமான பணிகளை மேற்கொள்ள, பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதை கடைபிடித்து, பணிகளை தொடர்வது நடைமுறையில் சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.பொள்ளாச்சி நகராட்சி, நெடுஞ்சாலைகள், ஊராட்சிகளில் அத்தியாவசியம் கருதி கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அரசு மேற்கொண்டுள்ளது.கோவை நான்கு வழிச்சாலை, பாலக்காடு ரோடு ரயில்வே பாலம், உடுமலை ரோடு லிப்ட் மேம்பாலம், நகரில் பாதாள சாக்கடை திட்டம், கிராமங்களை இணைக்கும் ஒன்றிய ரோடு பணிகள் நடந்தன.இந்நிலையில், திடீரென ஏற்பட்ட கொரோனா பரவல், ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றதால், வளர்ச்சி திட்ட கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.இந்நிலையில், வளர்ச்சி திட்டங்களில் முக்கியத்துவம் கருதி, கட்டுமான பணிகளை தொடர அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது.அரசு அறிவுறுத்தலில் கூறியிருப்பதாவது:கொரோனா பரவல் தீவிரமாக உள்ள பகுதிகளில் பணிகள் துவங்க கூடாது. நெடுந்தொலைவு செல்லும் வழித்தடமாக உள்ள ரோடுகளில் நடக்கும் கட்டுமானங்கள், நிறைவடையும் நிலையில் உள்ள பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மேற்கொள்ளலாம்.பணிகளை மாவட்ட கலெக்டர் தேர்வு செய்து அனுமதி கொடுக்க வேண்டும். கலெக்டர் ஒப்புதல் இன்றி பணி துவங்க கூடாது.உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நோக்கில், அந்தந்த பகுதியில் இருந்து தொழிலாளர்களை பணியில் அமர்த்த வேண்டும்.சம்பந்தப்பட்ட துறை பொறியாளர்கள் கண்காணிப்பில், ஒப்பந்ததாரர்கள் பணியை மேற்கொள்ள வேண்டும். அதுவும், சிறு, சிறு பணிகளை மட்டுமே ஆரம்பத்தில் துவங்க வேண்டும்.தொழிலாளர்களிடையே, கொரோனா தொற்று, பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு முகக்கவசம் வழங்கி, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். பணித்தளத்தில் சோப் மற்றும் தண்ணீர் வழங்கி, கை கழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும்.தொழிலாளர்களை வாகனங்களில் கூட்டமாக அழைத்து வரக்கூடாது. உணவு, குடிநீரை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கக்கூடாது.பணியாளர்கள் விபரங்கள் அடங்கிய பட்டியலை தயாரித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும்.தொழிலாளர்களில் யாருக்காவது, இருமல், சளி, லேசான காய்ச்சல் இருந்தாலே அவர்களை தனிமைப்படுத்தி, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

More News:https://www.dinamalar.com/news_detail.asp?id=2533623
 

·
The Boss
Joined
·
249 Posts
ரூ.1.30 கோடி மதிப்பில் சந்திப்பு பகுதி மேம்பாடு

பொள்ளாச்சி - கோவை ரோட்டில், விபத்து அபாயமுள்ள முக்கிய சந்திப்புகளை மேம்படுத்த, 1.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடக்கிறது.தேசிய நெடுஞ்சாலையான, பொள்ளாச்சி - கோவை ரோட்டில், வடக்கிபாளையம் பிரிவு பகுதி, முக்கிய சந்திப்பாக உள்ளது. அப்பகுதியில், விபத்துகளை தவிர்க்க, சாலை பாதுகாப்பு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டு, மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.வடக்கிபாளையம் பிரிவில் இருந்து, கோவை வழித்தடத்தில், 450 மீட்டர்; பொள்ளாச்சி வழித்தடத்தில், 450 மீட்டருக்கு, நான்கு வழிச்சாலையின் ஒரு பகுதி, 7.5 மீட்டர் அகலத்தில் இருந்து, 10 - 12 மீட்டர் அகலத்துக்கு விரிவுபடுத்தப்படுகிறது. மேலும், ரோடுகள் சந்திப்பில், வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்து ஏற்படாத வகையில், 'சென்டர் மீடியன்' அமைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மதிப்பீடு, 1.30 கோடி ரூபாய் என, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்



Source:ரூ.1.30 கோடி மதிப்பில் சந்திப்பு பகுதி மேம்பாடு
 

·
The Boss
Joined
·
249 Posts
வடுகபாளையத்தில் பாலம் ரூ.4.83 கோடி ஒதுக்கீடு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி - - கிணத்துக்கடவு இடையே, வடுகபாளையம் ரயில்வே கேட்டில், பாலம் அமைக்க, 4.83 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி -- பாலக்காடு நெடுஞ்சாலை, கேரளாவுக்கு செல்லும் முக்கிய சாலை. இந்த சாலையில், பொள்ளாச்சி -- கிணத்துக்கடவு இடையே, வடுகபாளையம் அருகே ரயில்வே, 'கேட்' உள்ளது. ரயில் போக்குவரத்திற்காக, 'கேட்' அடிக்கடி மூடப்படுவதால், வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே, இந்த பகுதியில், 40 கோடி ரூபாயில், சாலை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில், ரயில் பாதையின் மீது, தெற்கு ரயில்வே பாலம் கட்டவேண்டும். மேலும், பாதசாரிகள் செல்ல வசதியாக, 3 மீட்டர் அகலத்தில், 2.75 மீட்டர் உயரத்தில், சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். ரயில் பாதையின் மீது மேம்பாலம் மற்றும் அருகில் சுரங்கப்பாதை அமைக்க, 4.83 கோடி ரூபாயை, தெற்கு ரயில்வே ஒதுக்கியுள்ளது. இந்த பணிகளை, ஓராண்டில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது

Source : வடுகபாளையத்தில் பாலம் ரூ.4.83 கோடி ஒதுக்கீடு
 

·
The Boss
Joined
·
249 Posts
பழநியில் நான்கு வழிச்சாலை பணிகள் துவக்கம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மூலம் பொள்ளாச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரூ.3 ஆயிரத்து 648 கோடி மதிப்பில் நடைபெறும் இப்பணிகள் நடைபெறுகிறது. தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் (நகாய்) மூலம் பொள்ளாச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை (என்.எச்-83)யில் இப்பணி 131.95 கி.மீ. தூரத்திற்கு நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது.

திண்டுக்கல், கமலாபுரம் முதல் ஒட்டன்சத்திரம் வரை 36.50 கி.மீ. தூரம் ஒரு பகுதியாகவும், ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழநி வழித்தடத்தில் மடத்துக்குளம் வரை 45.38 கி.மீ. தூரம் வரை ஒரு பகுதியாகவும், மடத்துக்குளத்தில் இருந்து பொள்ளாச்சி வரை 50.07 கி.மீ. தூரம் ஒரு பகுதி என 3 பகுதிகளாக டெண்டர் விடப்பட்டு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக அமைய உள்ள நான்கு வழிச்சாலை க்கு குறுக்கே வரும் மாநில ஊரகச் சாலைகள் பாதிக்கப்படாமல் இருக்க 60 இடங்களில் கீழ் பாலங்களும், சண்முகநதி மற்றும் அமராவதி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலமும் அமைக்கப்பட உள்ளது.

நான்கு வழிச்சாலையில் இருந்து நகரங்களுக்குள் நுழைவதற்கு வசதியாக அணுகு சாலைகளும் அமைக்கப்பட உள்ளன. நான்கு வழிச்சாலை பணிக்காக 2 ஆயிரத்து 429 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விவசாய நிலங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஆங்காங்கு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

309272


More News & Source:
பழநியில் நான்கு வழிச்சாலை பணிகள் துவக்கம்: பொதுமக்கள் மகிழ்ச்சி
 
181 - 185 of 185 Posts
Top