SkyscraperCity banner

141 - 160 of 183 Posts

·
Registered
Joined
·
15 Posts
காரமடை மேம்பாலம் திறந்தும்;போக்குவரத்து நெரிசல்

மேட்டுப்பாளையம் அருகே காரமடை மேம்பாலம் சர்வீஸ் சாலை அமைக்கும் முன் திறக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கித் தவித்து வருகின்றனர்.

மேட்டுப்பாளையம் அருகே காரமடை ரயில்வே மேம்பாலம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 550 மீட்டர் தூரத்துக்கு ரூ. 41.67 கோடி மதிப்பில் கட்டும் பணி துவங்கப்பட்டது. இதனால் கோவை - மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் காரமடையில் இருந்து குறுகிய சாலையான கண்ணார்பாளையம், மத்தம்பாளையம் வழியாக கோவை சாலைக்கு திருப்பிவிடப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி பாலம் திறக்கப்பட்டு கனரக வாகனங்கள் மட்டும் இயக்கப்பட்டது. பாலத்தின் பணிகள் முழு அளவில் முடிந்து திறக்கப்பட்டாலும் பாலத்தை ஒட்டி சர்வீஸ் சாலை மட்டும் அமைக்கவில்லை.இந்நிலையில் காரமடை பேருந்து நிலையத்தில் இருந்து மேம்பாலம் செல்லும் வரை கடுமையான போக்குவரத்து நிலவி வருகிறது. இதனால் சுமார் அரை மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்படுவதால் வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

More News:https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/sep/03/காரமடை-மேம்பாலம்-திறந்தும்-போக்குவரத்து-நெரிசல்-வாகன-ஓட்டிகள்-அவதி-3226869.html
One of the worst and the poorly planned flyover. If the flyover was planned more prudently it would have served its purpose. The flyover had to start from LOA petrol bunk it would have entirely decongested karamadai. But now the the flyover ens right at the four road junction causing a traffic jam .
Poorly planned flyover
 

·
The Boss
Joined
·
246 Posts
One of the worst and the poorly planned flyover. If the flyover was planned more prudently it would have served its purpose. The flyover had to start from LOA petrol bunk it would have entirely decongested karamadai. But now the the flyover ens right at the four road junction causing a traffic jam .
Poorly planned flyover
I think this bridge constructed only for crossing the railway track but you are right they should have planned properly with proper ramps for bus stand
 

·
The Boss
Joined
·
246 Posts
பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் ரூ. 55.17 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம்

பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் ரூ. 55.17 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை வகித்தார். முன்னாள் மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கிருஷ்ணகுமார், பொள்ளாச்சி நகர கூட்டுறவு வங்கித் தலைவர் விஜயகுமார், கோட்டாட்சியர் ரவிகுமார், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், தம்பு, சிறுபான்மைப் பிரிவு மாவட்டச் செயலாளர் ஜேம்ஸ் ராஜா, தொழில் வர்த்தக சபைத் தலைவர் ஜி.டி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பூமி பூஜை செய்து பணியைத் துவக்கி வைத்தார்.
பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் ரயில்பாதை குறுக்கிடும் பகுதியில் 810.25 மீட்டர் நீளத்துக்கு 16.20 மீட்டர் அகலத்துக்கு நான்கு வழித்தடங்கள் கொண்ட மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. மேலும் 257 மீட்டர் நீளத்துக்கு அணுகு சாலையும்,

More News:
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/sep/06/பொள்ளாச்சி-பாலக்காடு-சாலையில்-ரூ-5517-கோடியில்-மேம்பாலம்-அமைக்க-பூமி-பூஜை-3228727.html
 

·
The Boss
Joined
·
246 Posts
முள்ளுப்பாடியில் இரும்பு அரைவட்ட பாலம்: வரும், 28ல் வாகனங்கள் அனுமதிக்க முடிவு
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள முள்ளுப்பாடி ரயில்வே கேட் பகுதியில், மேம்பாலத்தின் ஒரு பக்க பணிகள் முடிவடையுள்ளதால், வரும், 28ம் தேதி முதல் வாகனங்களை அனுமதிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.கிணத்துக்கடவு அடுத்துள்ள முள்ளுப்பாடி ரயில்வேகேட் பகுதியில், 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அரைவட்ட இரும்பு மேம்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது.
இதில், பொள்ளாச்சி - கோவை செல்லும் பகுதியில் அரைவட்ட இரும்பு பாலம் கான்கிரீட் துாண்களுக்கு மேல் வைக்கப்பட்டு, ரோடு போடப்பட்டுள்ளது.அரைவட்ட இரும்புபாலம் 11 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படுகிறது. அதில், எட்டு மீ., அகலத்திற்கு வாகனங்கள் செல்வதற்காக கான்கிரீட் ரோடும், மூன்று மீ., அகலத்துக்கு பாதசாரிகள் நடந்து செல்வதற்கு பாதையும் அமைக்கப்படுகிறது. அரை வட்ட பாலத்தின், வடக்கு பகுதியில் அணுகுபாலம், தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு பகுதியில், அரைவட்ட பாலமும் அணுகுபாலமும் இணைக்கும் பணி நிலுவையில் உள்ளது. இப்பணி ஒரு வாரத்திற்குள் முடிக்கப்பட்டு, மேம்பாலத்தின் ஒரு பகுதியில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவுள்ளது.


More News:
https://www.dinamalar.com/news_detail.asp?id=2372443
 

·
The Boss
Joined
·
246 Posts
மேட்டுப்பாளையம் ரோட்டில் சரக்கு வாகனத்துக்கு தடை!

பெ.நா.பாளையம்:கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில், இரண்டு மேம்பாலங்களுக்கான கட்டுமான பணி தீவிரமடைந்துள்ளதால், போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க, காலை முதல் இரவு வரை லாரி, சரக்கு வாகனங்கள் செல்ல, போலீசார் தடை விதித்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம் சந்திப்பில், 66 கோடி ரூபாய் செலவில் மேம்பாலமும், 41 கோடி ரூபாய் செலவில் ஜி.என்.மில்ஸ் பிரிவில் ஒரு மேம்பாலமும் கட்ட, கடந்த, மார்ச் 5ல், பூமி பூஜை நடந்தது. தற்போது பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.கவுண்டம்பாளையம் சந்திப்பில் நான்கு வழி மேம்பாலம், ஹவுசிங் யூனிட் முதல் ராமசாமி கல்யாண மண்டபம் வரை, 1,000 மீட்டர் நீளத்தில், 17.20 மீட்டர் அகலத்தில், 29 துாண்களுடன் அமைக்கப்படுகிறது.இதே போல, ஜி.என்.மில்ஸ் சந்திப்பில் மேம்பாலம், ஜான்போஸ்கோ பள்ளியில் இருந்து ஸ்ரீவத்சா கார்டன்ஸ் வரை, 670 மீட்டர் நீளத்தில், 17.20 மீட்டர் அகலத்துடன், 15 துாண்களுடன் அமைக்கப்படுகிறது.தற்போது, கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில், ஹவுசிங் யூனிட் அருகே மேம்பாலம் கட்ட, மண்ணின் உறுதி தன்மையை பரிசோதிக்கும் வகையில், கோபுரம் போன்று நுாற்றுக்கணக்கான மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.இதே போல, ஜி.என்.மில்ஸ் பிரிவிலும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் சாலை குறுகலாகி, கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஊர்ந்து ஊர்ந்து, மெதுவாக செல்கின்றன

More News:
https://www.dinamalar.com/news_detail.asp?id=2368947
 

·
The Boss
Joined
·
246 Posts
புதுசா போட்ட கான்கிரீட் ரோட்டில் ஓடுதளத்தில் குழி

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு அருகே, கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி செல்லும் கான்கிரீட் ரோட்டில் ஓடுதளத்தில் குழி ஏற்பட்டுள்ளதால் விபத்து அபாயம் உள்ளது.

பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலை ரோடு, நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டு கான்கிரீட் ரோடு போடப்பட்டது.கிணத்துக்கடவு அருகே, கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி செல்லும் கான்கிரீட் ரோட்டின் ஒரு பகுதி கான்கிரீட் ஓடுதளத்தில், விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது.கான்கிரீட் ரோட்டில் சிமென்ட் கலவை உதிர்ந்து, குழியாக மாறிவிட்டது. இவ்வழியாக வரும் வாகனங்கள், 80 - 120 கி.மீ., வேகத்தில் செல்கின்றன.கான்கிரீட் ரோட்டில் குழி இருப்பது தெரியாமல், இருசக்கர வாகனங்கள் தடுமாறி

More News: https://www.dinamalar.com/news_detail.asp?id=2375389
 

·
The Boss
Joined
·
246 Posts
முள்ளுப்பாடி ரயில்பாதை கடக்க இரும்பு பாலம் திறப்பு

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள முள்ளுப்பாடி ரயில்வே கேட் பகுதியில், அமைக்கப்படும் மேம்பாலத்தின் ஒரு பக்க பணிகள் நிறைவடைந்து, நேற்று முதல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.பொள்ளாச்சி - கோவை இடையே நான்கு வழிச்சாலையில், கான்கிரீட் ஓடுதளம் அமைக்கும் பணி இரு ஆண்டுக்கு முன் துவங்கியது. பொள்ளாச்சி ஆச்சி பட்டியில் இருந்து, கோவை ஈச்சனாரி கற்பகம் கல்லுாரி வரையிலும் அமைக்கப்படுகிறது.

இத்திட்டத்தில், கிணத்துக்கடவு, ஒத்தக்கால்மண்டபத்தில் மேம்பாலம் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. கிணத்துக்கடவு அடுத்துள்ள முள்ளுப்பாடி ரயில்கேட் பகுதியில், 42 கோடி ரூபாய் மதிப்பில் அரைவட்ட இரும்பு மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது.இதில், பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்லும் பகுதியில் அரைவட்ட இரும்பு பாலம் கான்கிரீட் துாண்களுக்கு மேல் வைக்கப்பட்டு, கான்கிரீட் ரோடு போடப்பட்டுள்ளது.அரைவட்ட இரும்புபாலம், 11 மீட்டர் நீளம், 8 மீட்டர் அகலத்தில் வாகனங்கள் செல்வதற்காக கான்கிரீட் ரோடும், 3 மீட்டர் அகலத்தில் பாதசாரிகள் நடந்து செல்வதற்கும் பாதை அமைக்கப்படுகிறது.



தெற்கு பகுதியில், அரைவட்ட பாலத்தை இணைக்கும் பணி நேற்றுடன் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து, அரைவட்ட பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.இதனால், முள்ளுப்பாடி ரயில்வே கேட் பகுதியை வாகனங்கள் எளிதாக கடந்து சென்றன.தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட அலுவலர் உதயசங்கர் கூறியதாவது

More News:
https://www.dinamalar.com/district_detail.asp?id=2377586
 

·
The Boss
Joined
·
246 Posts
கான்கிரீட் ஓடுதளத்தில் விரிசல் ரோடு வெட்டி எடுத்து சீரமைப்பு

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு தனியார் பொறியியல் கல்லுாரி அருகே, கான்கிரீட் ரோட்டில் ஏற்பட்ட சேதத்தை சீரமைக்க கான்கிரீட் ஓடு தளம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி - கோவை நான்கு வழிச்சாலையில், கான்கிரீட் ரோடு போடப்பட்டுள்ளது. இதில், கிணத்துக்கடவு தனியார் பொறியியல் கல்லுாரி அருகே, பொள்ளாச்சி செல்லும் ஓடுதளத்தில் சேதம் ஏற்பட்டது.ரோட்டில் ஏற்பட்ட பள்ளத்தில், வாகனங்கள் சிக்கி தடுமாறின. பைக், கார் போன்ற வாகனங்களின் டயர் பஞ்சர் ஆனது.

இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செப். 30ல் படத்துடன் செய்தி வெளியானது.இதனை தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கான்கிரீட் ரோட்டில் ஏற்பட்ட சேதத்தை தற்காலிமாக சீரமைத்தனர்.ஆனாலும், சேதம் ஏற்பட்ட இடத்தைச் சுற்றிலும், ரோடு விரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் தொடர்ந்து வேகமாக இயக்கப்படும் நிலையில்,

அதிர்வு காரணமாக கான்கிரீட் ரோடு சிதலமடையும் வாய்ப்புள்ளது.இதனால், சேதமடைந்த ஓடுதளம் நேற்று பொக்லைன் மூலம், 12 மீட்டர் நீளம், 4.5 மீட்டர் அகலத்திற்கு 1.5 அடி ஆழத்தில் வெட்டி எடுக்கப்பட்டது.இதனை தொடர்ந்து, புதிதாக கான்கிரீட் ஓடுதளம் அமைக்கப்படவுள்ளது. பணி நடக்கும் இடத்தில், வாகனங்கள் பாதுகாப்பாக வளைந்து செல்வதற்காக, தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

Source:https://www.dinamalar.com/news_detail.asp?id=2381568
 

·
The Boss
Joined
·
246 Posts
முள்ளுப்பாடியில் பொருத்தியாச்சு இரும்பு பாலம்!நான்குவழிப்பாதை பணிகள் தீவிரம்
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அருகே, முள்ளுப்பாடி ரயில்வே கேட் பகுதியில், இரண்டாவது அரைவட்ட இரும்பு பாலம், கான்கிரீட் துாண் மேல் முழுமையாக நகர்த்தப்பட்டுள்ளது.
கோவையை தென்மாவட்டங்களுடன் இணைக்கும், பொள்ளாச்சி வழித்தடம், தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்ட பிறகும், விரிவுபடுத்தப்படாமல் இருந்தது.வாகன பெருக்கத்துக்கு ஏற்ப, ரோடு விரிவுபடுத்தப்படாததால், விபத்துகள் அதிகரித்தது. பல தரப்பு வலியுறுத்தலுக்கு பின், பொள்ளாச்சி - கோவை ரோடு நான்கு வழிப்பாதையாக விரிவுபடுத்தும் திட்டம் துவங்கப்பட்டது.ஆச்சிபட்டி முதல், ஈச்சனாரி வரையிலும், 414.90 கோடி ரூபாயில், கான்கிரீட் ஓடுதளத்தில் நான்கு வழிப்பாதை அமைக்கும் பணி, கடந்த, 2016, டிச.,ல் துவங்கப்பட்டது.இத்திட்டத்தில், முள்ளுப்பாடியில் ரயில்வே மேம்பாலம், கிணத்துக்கடவு, ஒத்தக்கால்மண்டபத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது. முதற்கட்டமாக, கிணத்துக்கடவில் இரு வழி மேம்பால பணியும் நிறைவு பெற்று, போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.அதேபோன்று, ஒத்தக்கால்மண்டபத்திலும் இரு வழி மேம்பால பணி நிறைவடைந்து, போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.கிணத்துக்கடவு அடுத்துள்ள முள்ளுப்பாடி ரயில்கேட் பகுதியில், 42 கோடி ரூபாய் செலவில் அரைவட்ட இரும்பு மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இதில், பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்லும் பாதையில், அரைவட்ட இரும்பு பாலம் பணி நிறைவடைந்து கடந்த செப்., 28ல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து, கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி செல்லும் பாதையில் மற்றொரு அரைவட்ட இரும்பு பாலம் பொருத்துவதற்கு வசதியாக, கான்கிரீட் துாண்களுக்கு இணையான உயரத்துக்கு 'லிப்ட்' செய்யப்பட்டுள்ளது.கான்கிரீட் துாண்களுக்கு இடையே இரும்பு கர்டர் வைக்கப்பட்டு, அதன் மேல் ரயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டு, அரைவட்ட இரும்பு பாலம் நகரும் வகையில் சக்கரம் அமைத்து, மெதுவாக நகர்த்தும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடந்தது.

More news:
https://www.dinamalar.com/news_detail.asp?id=2384496
 

·
The Boss
Joined
·
246 Posts
பொள்ளாச்சி அருகே பாலாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழை மூலம் பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். மலை அடிவாரத்தில் நல்லாத்துமுடக்கு என்ற இடத்தில் தொடங்கும் பாலாறு சமத்தூர், பூவலபருத்தி, அர்த்தநாரிபாளையம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சென்று அம்பராம்பாளையம் ஆழியாற்றில் கலக்கிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே அமணலிங்காபுரத்தில் இருந்து அங்கலகுறிச்சி சாலைக்கு செல்ல பாலாற்றின் குறுக்கே சிறியதாக பாலம் கட்டப்பட்டது.

இந்த பாலத்தின் வழியாக விவசாயிகள் தோட்டங்களுக்கு செல்வதும், விளைபொருட்களை மார்க்கெட்டுக்கு வாகனங்களில் கொண்டு சென்றும் வருகின்றனர். இதை தவிர அங்கலகுறிச்சி, ஆழியாறு போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஆண்டுதோறும் பெய்யும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். மேலும் மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சிறு பாலம் தண்ணீரில் மூழ்கி விடும்.

இதன் காரணமாக அமணலிங்காபுரத்தில் இருந்து அங்கலகுறிச்சி செல்லும் சாலை வரை மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பிரதம மந்திரியின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி துறை அமைச்சகம் மேம்பாலம் கட்டுவதற்கு ரூ.3 கோடியே 88 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து பாலம் கடடுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

More News & Pictures:
https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/10/12004551/Near-Pollachi--The-construction-work-of-the-bridge.vpf
 

·
The Boss
Joined
·
246 Posts
கோவையில் 'கரூர் எக்ஸ்பிரஸ்' சாலை: விரைவில் பணி துவக்க எதிர்பார்ப்பு

அன்னுார்;கோவை மாவட்டத்தில் கரூர் எக்ஸ்பிரஸ் ஆறு வழிச்சாலை பணி விரைவில் துவங்குமா என, அன்னுார், கோவில்பாளையம் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.கரூரிலிருந்து, கோவைக்கு, புதிதாக எக்ஸ்பிரஸ் சாலை அமைய உள்ளது. இந்த சாலை ஆறுவழிச்சாலையாக, 200 அடி அகலத்தில், சர்வீஸ் சாலையுடன் அமைய உள்ளது. கரூர் மாவட்டம் ஈமூரிலிருந்து, கோவை மாவட்ட எல்லை வரை 99.9 கி.மீ., துாரத்திற்கு சாலை அமைகிறது. அங்கிருந்து, கோவை க்கு வடக்கே, 43 கி.மீ., தொலைவில், கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் நரசிம்ம நாயக்கன்பாளையம் அருகே இந்த சாலை இணைகிறது.கோவைக்கு தெற்கே, 38 கி.மீ., தொலைவில் ஒத்தக்கால்மண்டபம் அருகே இந்த சாலை இணைகிறது.இந்த சாலையால் கோவை, கரூர் ஆகிய இரு தொழில் நகரங்கள் இணையும். இருநகரங்களுக்கு இடையிலான வாகனங்களின் பயண நேரம் குறையும். எரிபொருள் மிச்சமாகும். இதற்காக கரூர் மாவட்டத்தில், 617 ஏக்கர் நிலமும், திருப்பூர் மாவட்டத்தில், 1,270 ஏக்கர் நிலமும், கோவை மாவட்டத்தில், 1,110 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளது.அன்னுார் தாலுகாவுக்கு உட்பட்ட மசக்கவுண்டன் செட்டிபாளையம், குன்னத்துார், காட்டம்பட்டி என, ஐந்து ஊராட்சிகள் வழியாக இந்த எக்ஸ்பிரஸ் சாலை செல்ல உள்ளது.குன்னத்துார்புதுார் மக்கள் கூறியதாவது:எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டால், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டத்திலிருந்து, கோவை நகருக்குள் நுழையாமல், கோவை -- அவிநாசி ரோடு, கோவை - திருச்சி ரோட்டை எளிதில் அடையலாம்

More news:
https://www.dinamalar.com/district_detail.asp?id=2388709
 

·
The Boss
Joined
·
246 Posts
பொள்ளாச்சி-பாலக்காடு ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நேற்று துவங்கியது
பொள்ளாச்சி-பாலக்காடு ரோட்டில் பல ஆண்டுகளாக எதிர்பார்ப்பில் இருந்த ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நேற்று துவங்கியது.பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், வடுகபாளையம் பிரிவு அருகே பொள்ளாச்சி - போத்தனுார் ரயில் வழித்தடம் குறுக்கிடுகிறது. ரயில்பாதையை கடந்து செல்ல, மேம்பாலம் அமைக்காமல், ரயில்வே கேட் செயல்பாட்டில் உள்ளது.இதனால், ரயில்கள் கடந்து செல்லும் வரை, ரயில்வே கேட் அடைக்கப்பட்டு, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது.

இப்பிரச்னைக்கு தீர்வாக, மேம்பாலம் அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக வலியுறுத்தப்படுகிறது. ஆய்வு செய்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், நான்கு வழி மேம்பாலம் அமைக்க நில ஆர்ஜிதம் செய்ய வேண்டியுள்ளது. நிலம் எடுப்பு முடிந்தவுடன் கட்டுமான பணிகள் துவங்கப்படும் என அறிவித்தனர்.இதையடுத்து, அப்பகுதியில் உள்ள நில உரிமையாளர்களிடம் வருவாய் துறையினர் பேச்சு நடத்தி, இழப்பீடு அளித்து நிலம் எடுத்து நெடுஞ்சாலை துறை வசம் வழங்கினர்.நெடுஞ்சாலை துறை (திட்டப்பிரிவு) மூலம் மேம்பால கட்டுமான பணி நேற்று துவங்கப்பட்டது. லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே மேம்பால துாண் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு, போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.ரயில் பாதையை கடக்கும் வகையில் அமைக்கப்படும் மேம்பாலம், 810 மீட்டர் நீளம், 17.2 மீட்டர் அகலம், 6.5 மீட்டர் உயரத்தில் (தண்டவளத்தின் மேல்) நான்கு வழி மேம்பாலமாக அமைக்கப்படுகிறது.இரண்டு பக்கமும் சர்வீஸ் ரோடுகள், மழைநீர் வடிகால் அமைக்கப்படும். ரோட்டின் நடுவே, 1.2 மீட்டர் அகலத்தில் 'சென்டர் மீடியன்' அமைக்கப்படும். பாலத்தின் திட்ட மதிப்பு, 40 கோடி ரூபாய். வரும், 2021, செப்., மாதத்துக்குள் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.கட்டுமான பணிகளால் போக்குவரத்து பாதிக்கப்படும் நிலையில், உள்ளூர் போக்குவரத்துக்காக, தற்போதுள்ள ரோட்டின் பக்கவாட்டில், மண்ணை கெட்டிப்படுத்தி தற்காலிக மாற்றுப்பாதை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.நெடுஞ்சாலை துறை (திட்டப்பிரிவு) அதிகாரிகள் கூறுகையில், 'ரோட்டின் பக்கவாட்டில் 'கிராவல்' மண் கொட்டி, மாற்றுப்பாதை அமைத்து தரப்படும். உள்ளூர் எதிர்கால நன்மை கருதி, கட்டுமான பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,' என்றனர்.பல ஆண்டுகளாக எதிர்பார்ப்பில் இருந்த ரயில்வே மேம்பால பணிகள், துவங்கப்பட்டுள்ளது அனைத்து தரப்பினரிடையேயும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வாகன போக்குவரத்து மாற்றம்மேம்பாலம் கட்டும் பணிக்காக, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாலக்காட்டில் இருந்து வரும் கனரக வாகனங்கள், மண்ணுார், ராமபட்டிணம், ஆர். பொன்னாபுரம், வடக்கிப்பாளையம் பிரிவு வழியாகவும்; பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் ஜமீன் ஊத்துக்குளி, மார்க்கெட் ரோடு, திருவள்ளுவர் திடல் வழியாக பொள்ளாச்சிக்கு இயக்கப்படுகிறது

More News & Pictures:
https://www.dinamalar.com/news_detail.asp?id=2391533
 

·
The Boss
Joined
·
246 Posts
கிராமங்கள் வழியே மாற்றுப்பாதை

பொள்ளாச்சியை அடுத்துள்ள கிராமங்களை இணைக்கும் ரோடு, பாலக்காட்டு ரோடு - கோவை ரோட்டை இணைக்கும் மாற்றுப்பாதையாக மாற்ற, இரண்டு கோடி ரூபாயில் அகலப்படுத்தப்படுகிறது.இரு மாநில இணைப்பு சாலையான பொள்ளாச்சி - பாலக்காட்டு ரோட்டில், வடுகபாளையம் ரயில்வே கேட்டை அகற்றி விட்டு, 40 கோடி ரூபாயில் நான்கு வழி மேம்பாலம் அமைக்கப்படுகிறது. பாலம் கட்டுமான பணிகள் துவங்கி விட்டதால், பாலக்காட்டு ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பாலக்காட்டு ரோட்டில் இருந்து பொள்ளாச்சி வரும் வாகனங்களுக்கு மாற்றுப்பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஆனால், பொள்ளாச்சி வழித்தடத்தில் கோவை ரோட்டை இணைக்க சரியான மாற்றுப்பாதை இல்லை. இதனால், கிராமங்களை இணைக்கும் ரோட்டை அகலப்படுத்தி, மாற்றுப்பாதை ஏற்பாடு செய்ய, நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது.பாலக்காடு ரோடு ஜமீன்முத்துார் - டி.நல்லிக்கவுண்டன்பாளையம் ரோடு, இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது, மூன்று கி.மீ., துாரம், 5.5 மீட்டர் அகலமுள்ள இந்த ரோடு, நெடுஞ்சாலை துறை மூலம், ஏழு மீட்டர் அளவுக்கு அகலப்படுத்தப்படுகிறது.

More News: https://www.dinamalar.com/district_detail.asp?id=2393359
 

·
The Boss
Joined
·
246 Posts
முள்ளுப்பாடி ரயில்வே கேட் கம்பி கட்டும் பணி தீவிரம்

கிணத்துக்கடவு, முள்ளுப்பாடி 'ரயில்வே கேட்' பகுதியில், மற்றொரு அரைவட்ட பாலம் நகர்த்தி வைக்கப்பட்டது. அதன் மேல் கான்கிரீட் ரோடு போடுவதற்காக, கம்பி கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கிணத்துக்கடவு அடுத்துள்ள முள்ளுப்பாடி ரயில்கேட் பகுதியில் 42 கோடி ரூபாய் செலவில், அரைவட்ட இரும்பு மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. தெற்கு பகுதியில் உள்ள ரேம் பகுதியும், அரைவட்ட பாலத்தை இணைக்கும் பணி, கடந்த செப். 28ல் முடிக்கப்பட்டு, அரைவட்ட பாலத்தின் மேல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.



இதனை தொடர்ந்து, மற்றொரு அரைவட்ட இரும்பு பாலம் கான்கிரீட் துாண்களின் உயரத்திற்கு இணையாக உயர்த்தப்பட்டு, கான்கிரீட் துாண்களுக்கு மேல் அரை வட்ட இரும்பு பாலம் நகர்த்தி வைக்கப்பட்டது. இதன் மேல், கான்கிரீட் ரோடு போடுவதற்காக கம்பி கட்டும் பணிகள், தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

More News:
https://www.dinamalar.com/district_detail.asp?id=2393337
 

·
The Boss
Joined
·
246 Posts
'லிப்ட்' வசதியுடன் நடை மேம்பாலம்: கட்டுமான பணிகள் துவக்கம்
பொள்ளாச்சியில் தேசிய நெடுஞ்சாலையில், 'லிப்ட்' வசதியுடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்க, கட்டுமான பணிகள் துவங்கியுள்ளது.பொள்ளாச்சி -- உடுமலை தேசிய நெடுஞ்சாலையில், மரப்பேட்டை முதல் ஊஞ்சவேலம்பட்டி வரையிலான பகுதி, நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டது.இப்பகுதியில், சென்டர்மீடியன், சர்வீஸ் ரோடு, இரும்பு கம்பியிலான தடுப்புகள் அமைக்கப்பட்டன.
இதனால், ரோட்டின் ஒரு பகுதியில் இருந்து, மறுபகுதிக்கு கடந்து செல்வது சவாலாக மாறியுள்ளது.குறிப்பாக, பி.ஏ.பி., அலுவலகத்துக்கு எதிரே அமைந்துள்ள நாச்சிமுத்து பாலிடெக்னிக் மற்றும் மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.அப்பகுதியில், பாதுகாப்பாக ரோட்டை கடக்க, நடை மேம்பாலம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி, மேம்பாலத்தில் 'லிப்ட்' வசதியுடன் அமைப்பதாக, தேசிய நெடுஞ்சாலை துறை அறிவித்தது.அறிவித்து ஆறு மாதங்களுக்கு பின், கடந்த மாதம் பூர்வாங்க பணிகள் துவங்கப்பட்டன. தற்போது, பாலத்துக்காக ரோட்டின் மையத்திலும், இரு பக்கங்களிலும் துாண்கள் அமைக்க கட்டுமான பணி துவங்கியுள்ளது

More News: https://www.dinamalar.com/news_detail.asp?id=2392899
 

·
The Boss
Joined
·
246 Posts
கவுண்டம்பாளையத்தில் போக்குவரத்து நெருக்கடி

கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில், மேம்பால கட்டுமான பணி துவங்கியுள்ளதால், மாற்றுப்பாதையில் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதை வாகன ஓட்டிகள் பின்பற்றாததால், கவுண்டம்பாளையத்தில் போக்குவரத்து நெருக்கடி தொடர்கிறது.கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம் சந்திப்பில், 66 கோடி ரூபாய் செலவில் மேம்பாலமும், 41 கோடி ரூபாய் செலவில் ஜி.என்.மில்ஸ் பிரிவில் மேம்பாலமும் கட்ட, கடந்த, மார்ச், 5ல் பூமி பூஜை நடந்தது.தற்போது பணிகள் முழு வீச்சில் துவங்கியுள்ளன. இதில், கவுண்டம்பாளையம் சந்திப்பில் நான்குவழி மேம்பாலம் கட்டப்படுகிறது. ஹவுசிங் யூனிட் முதல் ராமசாமி கல்யாண மண்டம் வரை ஆயிரம் மீட்டர் நீளத்தில், 17.20 மீட்டர் அகலத்தில், 29 துாண்களுடன் அமைக்கப்படுகிறது. தற்போது, கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் ஹவுசிங் யூனிட் அருகே மேம்பாலம் கட்ட, துாண்களுக்கான குழி தோண்டும் பணி நடந்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் ரோட்டில் காலை முதல் மாலை கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையை சமாளிக்க, மேட்டுப்பாளையம் ரோட்டில், துடியலுாரில் இருந்து கோவை செல்லும் நபர்கள் வெள்ளக்கிணறு, மணியகாரம்பாளையம், கணபதி வழியாக கோவை செல்லவும்; அதே போல, கோவையில் இருந்து துடியலுார் வரும் நபர்கள் கணபதி, மணியகாரம்பாளையம், வெள்ளக்கிணறு வழியாக துடியலுார் வரலாம் எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால்

More News: https://www.dinamalar.com/news_detail.asp?id=2399953
 

·
The Boss
Joined
·
246 Posts
நான்கு வழிச்சாலைக்கு நிலம் எடுப்பில்...இழப்பீடு என்னாச்சு!

மத்திய அரசின், 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தில், பொள்ளாச்சி - திண்டுக்கல்லை இணைக்கும் வகையில் நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டம் கடந்தாண்டு அறிவிக்கப் பட்டது.பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் இருந்து, திண்டுக்கல் கமலாபுரம் வரையில், 131.96 கி.மீ.,க்கு அமைக்கப்படும் சாலையில், 106.693 கி.மீ., (80 சதவீதம்) புறவழிச்சாலையாக அமைக்கப்படுகிறது. ஒட்டுமொத்த திட்ட மதிப்பு, 3,649 கோடி ரூபாய்.இந்த பணிக்கான பூமி பூஜை, கடந்த மார்ச் மாதம் லோக்சபா தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் நடந்தது.

அதன் பின், பணியில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.இந்தப் பணிக்காக, பொள்ளாச்சி தாலுகாவுக்கு உட்பட்ட, 10 கிராமங்களில், 259 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதில், பெரும்பாலும் விவசாய நிலமாகும்.கையகப்படுத்தும் இடங்களில், 10,095 தென்னைகள் உட்பட, 11,936 மரங்கள், 100க்கும் மேற்பட்ட வீடுகள், தொழிற்சாலைகள், கட்டடங்கள் அகற்றப்பட உள்ளன.

நிலம் மற்றும் சொத்துகளின் உரிமையாளர்களுக்கு, இதுவரை இழப்பீடு வழங்காத நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் வருவாய் துறை நில எடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கையில் வெளிப்படை தன்மையில்லை என நில உரிமையாளர்கள் நேற்று சப் - கலெக்டர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., ரவிக்குமாரிடம் மனு அளித்தனர்.

நில உரிமையாளர்கள் கூறியதாவது:திட்டம் அறிவிக்கப்பட்டு, நில உரிமையாளர்கள் கருத்துக் கேட்பு கூட்டம் மற்றும் தொடர்ந்து நடந்த சந்திப்புக்களில், எடுக்கப்படும் நிலத்துக்கு, சந்தை மதிப்பிலான விலை வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.மேலும், ஒரு தென்னை மரத்துக்கு, 64,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றனர். ஆனால், இது வரை நிலத்துக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமான உறுதி வழங்கவில்லை.

More News: https://www.dinamalar.com/district_main.asp?id=287
 

·
The Boss
Joined
·
246 Posts
நான்கு வழி மேம்பால பணி திட்டமிடல் பெரும் குழப்பம்

பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் நான்கு வழி மேம்பால பணியை, திட்டமிட்டு மேற்கொண்டால், பொதுமக்களுக்கு பாதிப்பு குறையும்.பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் குறுக்கிடும் ரயில் பாதையை கடக்க, 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு வழி மேம்பாலம் அமைக்கப்படுகிறது.கட்டுமான பணியின் துவக்கமாக, ரயில்வே கேட்டின் மேற்கு பகுதியில், கான்கிரீட் துாண்கள் அமைக்க அஸ்திவார குழி தோண்டப்பட்டது.அங்கு கட்டுமான பணி துவங்கும் முன்பே, ரயில்வே கேட்டின் கிழக்கு பகுதியிலும் பள்ளம் தோண்டப்படுகிறது. முதலில் ஒரு பகுதியில் பணியை முடித்து விட்டு, மறு பகுதியில் துவங்குவது போக்குவரத்து பாதிப்பை குறைக்கும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.கோவை ரோட்டில் மேம்பாலங்கள் கட்டும் போது, ஒரு பகுதியில் பணியை முழுமையாக முடித்து விட்டு, மறு பகுதியில் துவங்கினர். இதனால், போக்குவரத்து ஒரு பகுதியில் வழக்கம் போல இயங்கியது.அதே முறையை கையாண்டு, ரயில்வே கேட்டுக்கு மேற்கு பகுதியில் கட்டுமானத்தை நிறைவு செய்த பிறகு, கிழக்கு பகுதியில், பணியை துவங்குவது நல்லது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

More News:https://www.dinamalar.com/news_detail.asp?id=2412722
 

·
The Boss
Joined
·
246 Posts
வாகன ஓட்டிகளுக்கு ஏற்ற வசதியில்லை அச்சத்தை ஏற்படுத்தும் ரயில்வே மேம்பாலங்கள்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலங்களில், வாகன ஓட்டிகளின் அச்சத்தை போக்க உரிய வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி நகரில் இருந்து பிரிந்து செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளில் அவ்வப்போது பேட்ஜ் ஒர்க் என்ற பெயரில் சாலை சீரமைப்பு பணி நடந்தாலும், இன்னும் பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அதிலும் வாகன போக்குவரத்து மிகுந்த பல்லடம் ரோடு, வால்பாறை ரோடு, பாலக்காடு ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளின் சில இடங்களில் பள்ளமாக இருப்பதால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர்.

இதில் நகரிலிருந்து பிரிந்து செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒன்றான, கோட்டூர் ரோடு ரயில்வே மேம்பாலம் வழியாக, பகல் இரவு என தொடர்ந்து வாகன போக்குவரத்து உள்ளது. சமத்தூர், கோட்டூர், நா.மூ.சுங்கம், அங்கலக்குறிச்சி, ஆழியார், வால்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் பெரும்பாலான வாகனங்கள், இந்த மேம்பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டியதாக உள்ளது. இந்த பாலம் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வரபெற்றது. ஆனால் சில ஆண்டுகளில், அந்த பாலத்தின் மேல் பகுதி ரோட்டில் கான்கிரீட் பெயர்ந்து ஆங்காங்கே பள்ளமாக ஆரம்பித்தது. இருப்பினும், சேதமான ரோட்டை சீர்படுத்த எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் போனதால், நாள்போக்கில் பெரிய அளவில் குழி ஏற்பட துவங்கியது.

தற்போது கோட்டூர் ரோடு ரயில்வே மேம்பாலத்தின் சில இடங்களில், ரோடு சேதமாகி ஜல்லி பெயர்ந்து பெரிய அளவில் குழி ஏற்பட்டுள்ளதால், அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் அச்சமடைவதுடன், விபத்து நேரிடும் அபாயம் உள்ளதாக பீதியடைந்துள்ளனர். இதற்கு காரணம், தரமற்ற முறையில் ரோடு செப்பனிடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, வாகன போக்குவரத்து மிகுந்த இந்த பாலத்தின் அகலம் குறைவாக இருப்பதால், எதிர் எதிர் திசையில் வரும் வாகனங்கள் தொட்டவாறு செல்கிறது.

சில வாகன ஓட்டிகள் விரைந்து செல்வதற்காக, வேகமாக இயக்கும்போது விபத்து உண்டாகிறது. மேலும், பாலத்தின் இருபுறமும் உள்ள தடுப்பு சுவரின் உயரம் மிகவும் குறைவாக உள்ளது. சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு, இந்த பாலத்தில் சென்ற காரும் பைக்கும் மோதி ஏற்பட்ட விபத்தில், பைக்கிலிருந்து சரிந்தவர் பாலத்தின் மேலிருந்து கீழே விழுந்து பலியான சம்பவம் நடந்துள்ளது. இதுபோல், கோவை ரோடு ரோட்டிலிருந்து வடக்கிபாளையம் செல்லும் வழியில் ஆ.சங்கம்பாளையத்தில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் தடுப்பு சுவர் குறுகலாக இருப்பது வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. மேலும், இந்த மேம்பாலத்தில் மின்விளக்கு வசதி போதியளவு இல்லாததால் வளைவான இடத்தில் அடிக்கடி விபத்து உண்டாகிறது. சில மாதத்திற்கு முன்பு, இந்த பாலத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானபோது, பைக்கிலிருந்து சரிந்து பாலத்திலிருந்து கீழே விழுந்த வாலிபர் ஒருவர் இறந்த சம்பவமும் நடந்துள்ளது

More News & Pictures:http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=542781
 
141 - 160 of 183 Posts
Top