SkyscraperCity banner

161 - 180 of 183 Posts

·
The Boss
Joined
·
246 Posts
புறவழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த பரிந்துரை:கோட்ட பொறியாளர் தகவல்

அன்னுார் மக்களின், 25 ஆண்டு கால கோரிக்கையான, கிழக்கு புறவழிச்சாலைக்கு, அன்னுார் பேரூராட்சி மற்றும் அ.மேட்டுப்பாளையத்தில், நிலம் கையகப்படுத்த, அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலைக்கும், மேட்டுப்பாளையம் - அவிநாசி நெடுஞ்சாலைக்கும், அன்னுார் மையமாக உள்ளது. தினமும் பல ஆயிரம் வாகனங்கள் அன்னுார் வழியாக, சத்தி, பண்ணாரி மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு செல்கின்றன.கிழக்கு மாவட்டங்களிலிருந்து, ஏராளமான வாகனங்கள் அன்னுார் வழியாக, நீலகிரி மாவட்டத்திற்கு செல்கின்றன. இதனால் தினமும் காலை, மாலை வேளையில், அன்னுார் நகரில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக முகூர்த்த நாட்கள், பண்டிகை நாட்களில், வாகனங்கள் கி.மீ., கணக்கில் நிற்கின்றன.இதற்கு தீர்வாக, கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில், புறவழிச்சாலை அமைக்க, அனைத்து கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும், 25 ஆண்டுகளாக போராடி வந்தன.இந்நிலையில், கோவை ரோட்டில், அன்னுாருக்கு, நான்கு கி.மீ., முன் உள்ள கரியாம்பாளையத்தில் துவங்கி, ஆலாம்பாளையம், சொக்கம்பாளையம், நாகமாபுதுார், சாணாம்பாளையம் வழியாக, சத்தி ரோட்டை, அய்யப்பரெட்டிபுதுார் பிரிவில் அடையும்படி, மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் கிழக்கு புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இது, 8.5 கி.மீ., தொலைவுக்கு, 150 அடி அகலத்தில் அமைய உள்ளது. இந்த புறவழிச்சாலையை எதிர்த்து, சில விவசாயிகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் அலுவலராக கோவை மாவட்ட வருவாய் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.மாநில நெடுஞ்சாலைத்துறை, 2018, அக்டோபரில் வெளியிட்ட அறிவிப்பில், 'அன்னுார் தாலுகா, கரியாம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த, 43 பேரின் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன' என தெரிவித்தது. இந்நிலையில் மேலும் இரு ஊர்களில் நிலம் கையகப்படுத்த பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவித்து வரும் அன்னுார் மக்களுக்கு அதிகாரியின் பதில் மகிழ்ச்சி அளிக்கிறது

More News: https://www.dinamalar.com/news_detail.asp?id=2418972
 

·
The Boss
Joined
·
246 Posts
கிழக்கு புறவழிச்சாலை குறித்த கருத்துகேட்பு கூட்டத்தில் சலசலப்பு!

அன்னுார்:அன்னுார் மக்களின், 25 ஆண்டு கால கோரிக்கையான, கிழக்கு புறவழிச்சாலைக்கு, நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, நேற்று, நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலைக்கும், மேட்டுப்பாளையம் அவிநாசி நெடுஞ்சாலைக்கும், அன்னுார் மையமாக உள்ளது. தினமும் பல ஆயிரம் வாகனங்கள் அன்னுார் வழியாக, சத்தி, பண்ணாரி மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு செல்கின்றன.கிழக்கு மாவட்டங்களிலிருந்து, ஏராளமான வாகனங்கள் அன்னுார் வழியாக, நீலகிரி மாவட்டத்திற்கு செல்கின்றன. இதனால், தினமும் காலை, மாலையில், அன்னுார்நகரில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதற்கு தீர்வாக, கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில், புறவழிச்சாலை அமைக்க, அனைத்து கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும், 25 ஆண்டுகளாக போராடி வந்தன.இந்நிலையில், கோவை ரோட்டில், அன்னுாருக்கு, நான்கு கி.மீ., முன் உள்ள கரியாம்பாளையத்தில் துவங்கி, ஆலாம்பாளையம், சொக்கம்பாளையம், நாகமாபுதுார், சாணாம்பாளையம் வழியாக, சத்தி ரோட்டை, அய்யப்பரெட்டிபுதுார் பிரிவில் அடையும்படி, மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் கிழக்கு புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இது, 8.5 கி.மீ., தொலைவுக்கு, 150 அடி அகலத்தில் அமைய உள்ளது. இதற்காக 92 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. கையகப்படுத்தப்பட உள்ள நில உரிமையாளர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நேற்று அன்னுார், தாசபளஞ்சிக மண்டபத்தில் நடந்தது. தாசில்தார் சந்திரா முன்னிலை வகித்தார்.மாநில நெடுஞ்சாலை (திட்டங்கள்) துறை அதிகாரிகள் பேசுகையில், 'கையகப்படுத்தப்படும் நிலம், கிணறு, கட்டடங்களுக்கு, அரசு விதிகளின்படி இழப்பீடு வழங்கப்படும். இந்த நெடுஞ்சாலை திட்டத்தால், பல லட்சம் பேர் பயன் பெறுவர். இத்திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்' என்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பேசுகையில், 'அன்னுார் கடைவீதிக்கு, 100 மீட்டர் தொலைவு வரை, ரோடு 100 அடி அகலம் உள்ளது. அன்னுார் கடைவீதி, சத்தி ரோடு உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிப்பு உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினால், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைத்து விடும். புறவழிச்சாலை அமைக்க தேவையில்லை. விவசாயத்தை அழித்து, பாதை அமைப்பது தேவையற்றது.ஆக்கிரமிப்புகளை அகற்றலாம் அல்லது உயர்மட்ட மேம்பாலம் அமைக்கலாம். நாங்கள் நிலத்தை தர மாட்டோம்' என்றனர்.ஒரு சில விவசாயிகள், 'நெடுஞ்சாலைக்கு நிலம் தருவதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் சந்தை விலையில் இரண்டு மடங்கு தர வேண்டும். பல தலைமுறையாக வாழ்ந்த நிலத்தை விட்டு தரும் விவசாயிக்கு அதற்கு ஏற்ற இழப்பீடு தர வேண்டும்' என்றனர்.சில விவசாயிகள், அதிகாரிகளை முற்றுகையிட்டு, 'நிலத்தை கையகப்படுத்தக்கூடாது' என, வாக்குவாதம் செய்தனர்

More News:https://www.dinamalar.com/news_detail.asp?id=2422128
 

·
The Boss
Joined
·
246 Posts
பொள்ளாச்சியில் மேம்பாலங்களுக்கு சர்வீஸ் ரோடு இல்லவே இல்லை

பொள்ளாச்சியில் கட்டப்பட்டுள்ள ஒரு மேம்பாலத்துக்கு கூட இது வரை சர்வீஸ் ரோடு அமைக்காததால், மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால், அதிகாரிகள் மீது, கடும் அதிருப்தி நிலவுகிறது. உள்ளாட்சி தேர்தலில், பாதிப்புக்குள்ளாகும் கிராமங்களில் அரசியல் கட்சியினர் நுழைய முடியாத நிலை உருவாகியுள்ளது.
பொள்ளச்சி வேகமாக வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. அதிகரிக்கும் மக்கள் தொகை, வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியுள்ளது.அதன் ஒரு பகுதியாக, ரயில்வே கேட்டுகளை அகற்றி மேம்பாலம் அமைக்கும் நடவடிக்கை துவங்கப்பட்டது. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், வால்பாறை ரோட்டில் குறுக்கிடும் பொள்ளாச்சி - திண்டுக்கல் அகல ரயில் பாதையை கடக்க மேம்பாலம் கட்டப்பட்டது.நான்கு ஆண்டுகளுக்கு முன், வடக்கிபாளையம் ரோடு ஆ.சங்கம்பாளையத்தில், பொள்ளாச்சி - போத்தனுார் ரயில் பாதையை கடக்க மேம்பாலம் கட்டப்பட்டது. அதே ஆண்டு, மீன்கரை ரோடு சீனிவாசபுரத்தில் பொள்ளாச்சி - பாலக்காடு ரயில் பாதையை கடக்க சுரங்க பாலம் அமைக்கப்பட்டது.
தற்போது, பாலக்காடு ரோட்டில் பொள்ளாச்சி - போத்தனுார் ரயில் பாதையை கடக்க நான்கு வழி மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேம்பாலங்கள் கட்டுமான பணிகள், நெடுஞ்சாலை துறையின் திட்டப்பிரிவு மூலம் மேற்கொள்ளப்பட்டது. மேம்பாலம் கட்டும் பணி துவங்கும் போதே, பாலத்தை சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகள், கிராம வழித்தடங்களை அணுக வசதியாக சர்வீஸ் ரோடுகள் அமைத்து தருவதாக உறுதியளிக்கப்பட்டது.
ஒவ்வொரு பாலமும் கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கும் வழங்கப்பட்டது. ஆனால், ஆண்டுகள் கடந்தும், பாலத்தின் பக்கவாட்டில் சர்வீஸ் ரோடுகள் மட்டும் அமைக்கப்படவே இல்லை.இதனால், பாலங்களின் பக்கவாட்டில் வசிக்கும் குடியிருப்புவாசிகள், கிராம மக்கள் வாகனங்களை இயக்க முடியாமலும், மழைக்காலங்களில் நடந்து செல்லக்கூட முடியாமலும் தவிக்கின்றனர்.பாலம் அமைக்கும் பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்க கூடுதலாக நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கிறது.
நிலம் கையகப்படுத்தி, நெடுஞ்சாலை துறையிடம் வழங்க வேண்டிய பணி, வருவாய் துறையை சேர்ந்ததாகும்.வருவாய் துறை நில ஆர்ஜிதம் செய்யும் பணியை ஆண்டுக்கணக்கில் இழுத்தடிப்பதால், சர்வீஸ் ரோடுகள் அமைக்க முடியாமல் இருப்பதாக நெஞ்சாலை துறையினர் புலம்புகின்றனர்.பணிகள் முழுமையடையாமல் உள்ளதால், பாலங்கள் உள்ளூர் நெடுஞ்சாலை துறை வசம் ஒப்படைக்கப்படாமல், திட்டப்பிரிவின் வசமே இன்னும் உள்ளன. இதனால், வழக்கமான பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாமல், பாலங்கள் பலவீனமடைந்து வருகின்றன.மழைக்காலத்தில், மேம்பாலங்களின் அருகில் வசிக்கும் பொதுமக்கள், சர்வீஸ் ரோடு அமைத்து தரக்கோரி போராட்டங்கள் நடத்துவதும், அதிகாரிகள் விரைவில் அமைத்து தருவதாக உறுதியளித்து, சமாதானப்படுத்துவதும் தொடர்கதையாகி உள்ளது

More News:https://www.dinamalar.com/news_detail.asp?id=2430745
 

·
The Boss
Joined
·
246 Posts
மக்கள் - ரயில்வே, இருதரப்பும் பயனடையலாம்: மூன்றாம் கட்ட கருத்துக் கேட்பில் எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி - சென்னை இடையே, தற்போது பழநி, திண்டுக்கல் வழித்தடத்தில் இயங்கும் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னையை அடைய, 12 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. பொள்ளாச்சியில் புறப்படும் நேரமும் உகந்ததாக இல்லை என்பதால், சென்னை செல்வோருக்கு பெரிதாக பயனளிப்பதில்லை.அதற்கு மாற்றாக, கோவை - சென்னை இடையே இயங்கும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலை (எண், 12673/ 12674) பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும். அல்லது, பொள்ளாச்சி - சென்னை இடையே கோவை வழித்தடத்தில் புதிய ரயில் இயக்க வேண்டும்.மன்னார்குடி - கோவை இடையே இயங்கும் செம்மொழி எக்ஸ்பிரஸ், கோவையில், 20 மணி நேரம் காத்திருக்கிறது. அந்த ரயிலை, போத்தனுார் வழித்தடத்தில் பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும்.இதன் மூலம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதி மக்களுக்கு ஈரோடு, கரூர், திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு செல்ல இரவு நேர ரயில் வசதி கிடைக்கும். அவ்வாறு இயக்கும் பட்சத்தில், கோவை ரயில்வே ஸ்டேஷனில் செம்மொழி எக்ஸ்பிரஸ் தற்போது நிறுத்தப்படும் பகுதியை பயனுள்ள வகையில் மாற்ற, கோவை - பொள்ளாச்சி - பழநி, திண்டுக்கல் - திருச்சி - காரைக்கால் வழித்தடத்தில் பகல் நேர அதிவேக பயணிகள் ரயிலாக இயக்கலாம்.தற்போது, பொள்ளாச்சி வழித்தடத்தில் இயங்கும் மதுரை - கோவை பயணிகள் ரயில், மதுரை - பழநி இடையே ஒரு எண்ணிலும், பழநி - கோவை இடையே வேறொரு எண்ணிலும் இரண்டு ரயில்களாக கணக்கில் கொண்டு இயக்கப்படுகிறது. இது, பயணிகளிடையே மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதை ஒரே ரயிலாக மாற்றுவது மிகவும் அவசியம்.மேட்டுப்பாளையம் - கோவை இடையே இயங்கும் பயணிகள் ரயில்களை, பொள்ளாச்சி வரை நீட்டித்தால், பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு நாள் முழுக்க ரயில் வசதி கிடைக்கும்; ரயில்வே வருவாய் அதிகரிக்கும்.மீட்டர் கேஜ் காலத்தில் செயல்பாட்டில் இருந்து கோவில்பாளையம் ரயில்வே ஸ்டேஷனை மீண்டும் திறந்தால், சுற்றுப்பகுதியில் உள்ள, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், 25க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பயனடைவர்

More News:https://www.dinamalar.com/news_detail.asp?id=2432724
 

·
The Boss
Joined
·
246 Posts
சாக்கடை அமைக்கும் பணி தீவிரம்: ஐந்தாண்டு பிரச்னைக்கு விமோச்சனம்

மேட்டுப்பாளையம்:காரமடை மேம்பாலத்தின் இரு புறமும் சாக்கடையும், 'சர்வீஸ்' சாலையும் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால், நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவுள்ளது.கோவை - மேட்டுப்பாளையம் மெயின் சாலை காரமடையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, 33.74 கோடி ரூபாய் செலவில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் துவங்கின. 12 மீட்டர் அகலத்தில், 524 மீட்டர் நீளத்துக்கு, 16 இடங்களில் பில்லர்களும், இரு பக்கம் அபர்ட்மென்ட் சுவர்களும் அமைக்கப்பட்டன.
துவக்கத்தில் வேகமாக நடந்த பணிகள் பின் தொய்வடைந்தன. இரண்டு ஆண்டுகளில் முடிக்க வேண்டிய கட்டுமான பணிகள், ஐந்து ஆண்டுகள் ஆகியும் இன்னும், முழுமையடையாமல் உள்ளன.பாலப் பணி துவங்கியதில் இருந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேம்பாலம் மட்டும் கட்டி, போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. ஆனால், பாலத்தின் இருபுறமும் 'சர்வீஸ்' சாலையும், சாக்கடையும், மின் கம்பங்களும் அமைக்க வில்லை.இதற்கு தேவையான இடத்தை நில ஆர்ஜிதம் செய்ய, இடத்தின் உரிமையாளர்கள் தடையாக இருந்தனர். அரசு வழங்கும் தொகையை விட கூடுதலாக வேண்டும் எனக்கோரி, பலரும் நீதி மன்றத்தில் வழங்கு தொடுத்தனர்.
இதனால், பாலத்தின் இருபுறமும் உள்ள வங்கி, கடைகளுக்கு வருபவர்கள், தங்கள் வாகனங்களை நிறுத்த இடமின்றி மேம்பாலத்தின் மீது நிறுத்தினர். இதனால் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்படத் துவங்கியது.இந்நிலையில் அரசு அதிகாரிகள் இடத்தின் உரிமையாளரிடம் பேச்சு நடத்தி நில ஆர்ஜிதம் செய்தனர்.
இதையடுத்து, 3.75 மீட்டருக்கு 'சர்வீஸ்' சாலையும், ஒரு மீட்டரில் சாக்கடையும், அமைக்கும் பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் துவக்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளர்

More News & Pics : https://www.dinamalar.com/news_detail.asp?id=2435023
 

·
The Boss
Joined
·
246 Posts
பொள்ளாச்சி - கோவை ரோட்டில் ஜல்லி கற்களால் விபத்து அபாயம்

பொள்ளாச்சி - கோவை ரோட்டில், பேட்ஜ் ஒர்க் போடப்பட்ட இடத்தில் இருந்து பரவும், தார் கலந்த பொடி கற்களால், விபத்துகள் அபாயம் ஏற்பட்டுள்ளது.பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. சி.டி.சி., மேட்டில் இருந்து ஆச்சிப்பட்டி வரையுள்ள ரோட்டில், ஆங்காங்கே குழிகளாக இருந்ததால், வாகன ஓட்டுனர்கள் சிரமப்பட்டனர்.மேலும், குழி தெரியாமல் வேகமாக செல்பவர்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் இருந்தது. இந்நிலையில், குழி மற்றும் ரோடு சேதமாகிய இடங்களில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பேட்ஜ் ஒர்க் செய்தனர்.இந்த இடங்களில் பரவிக்கிடக்கும், தார் கலந்த பொடி ஜல்லி கற்கள், வாகன ஓட்டுனர்களை நிலை தடுமாறச் செய்கின்றன. வேகமாக வரும் வாகன ஓட்டுனர்கள் தடுமாறி கீழே விழுந்து, விபத்துக்குள்ளாகும் அபாயமும் உள்ளது.வளைவான பகுதிகளில், இதுபோன்று கற்கள் அதிகம் சிதறி கிடக்கின்றன.



More news: https://www.dinamalar.com/news_detail.asp?id=2440594
 

·
Registered
Joined
·
3 Posts
Data Conversion Service | ebook conversion service | Document Conversion

DES (Data Entry Solution) – leading pros in providing all Data Solutions and Back Office Solutions. We have a team of highly experienced professionals and leading-edge technologies to convert any data format to another without any data loss and strict data security. We have more than a decade of experience in the Data Solutions industry and have clients across the world. We know the reality and importance of converting data in a business. Our Data Entry Solution Data Conversion expert team uses well equipped modern tools and capable of converting any type of small or large data to the required format which sets us apart from our competitors.

Website: https://www.dataentrysolution.com/services/data-services/data-conversion-services/
 

·
Registered
Joined
·
1,090 Posts
DES (Data Entry Solution) – leading pros in providing all Data Solutions and Back Office Solutions. We have a team of highly experienced professionals and leading-edge technologies to convert any data format to another without any data loss and strict data security. We have more than a decade of experience in the Data Solutions industry and have clients across the world. We know the reality and importance of converting data in a business. Our Data Entry Solution Data Conversion expert team uses well equipped modern tools and capable of converting any type of small or large data to the required format which sets us apart from our competitors.



Website: https://www.dataentrysolution.com/services/data-services/data-conversion-services/

This forum is not a place for ads. It’s been moderated and viewed by many people. Kindly avoid in future.
 

·
The Boss
Joined
·
246 Posts
பொள்ளாச்சி - பல்லடம் ரோடு ரூ.12.70 கோடியில் விரிவாக்கம்

பொள்ளாச்சி - பல்லடம் ரோடு முதல் கட்டமாக, சுல்தான்பேட்டையில் இருந்து, 8.12 கி.மீ.,துாரத்துக்கு, விரிவுபடுத்தப்படுகிறது.பொள்ளாச்சி - பல்லடம் ரோடு அகலப்படுத்தும் பணி துவங்கியுள்ளது. இதற்காக, பொள்ளாச்சி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கியது.பொள்ளாச்சி உட்கோட்ட எல்லைக்கு உட்பட்ட, ஏழு மீட்டர் அகல ரோடு, கள்ளிப்பட்டி பிரிவு அருகே நிறைவடைகிறது.வாகனங்களின் வேகம் மற்றும் பாரத்துக்கேற்ப ரோடு விரிவுபடுத்தப்பட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதனை தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பரிந்துரையில், ரோட்டின் அகலம் கூடுதலாக, 3.5 மீட்டருக்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு, 12.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதனால், பொள்ளாச்சி - பல்லடம் ரோடு, 10.5 மீ., அகலத்துக்கு விரிவுபடுத்தப்படுகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடக்கிறது.முதல் கட்டமாக பொள்ளாச்சி உட்கோட்டம், ராசக்காபாளையம் அடுத்த கரப்பாடி பிரிவில் உள்ள வளைவான ரோடு அகலப்படுத்தப்படுகிறது.இதேபோல, சுல்தான்பேட்டை உட்கோட்டத்திலும், ரோடு விரிவுபடுத்தப்படுகிறது.இதற்காக, ரோட்டின் இரு பக்கமும் தலா, 1.75 மீட்டர் அகலத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டு, கான்கிரீட் கலவை கொட்டப்பட்டு, சமப்படுத்தும் பணி நடக்கிறது.

More News:
https://www.dinamalar.com/news_detail.asp?id=2455406
 

·
The Boss
Joined
·
246 Posts
திண்டுக்கல்-பொள்ளாச்சி 4 வழிச்சாலையில்மேம்பாலம் கட்டும் பகுதியில் மண் ஆய்வு

திண்டுக்கல்லில் இருந்து ஒட்டன்சத்திரம், அரசப்பபிள்ளைபட்டி, காவேரியம்மாபட்டி, விருப்பாச்சி, வீரலப்பட்டி, சத்திரப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, தாளையூத்து, மடத்துக்குளம் வழியாக பொள்ளாச்சி வரை நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அரசு மற்றும் தனியாா் நிலங்களில் எல்லைக் கற்கள் நடும் பணி சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

இதனிடையே, ஒட்டன்சத்திரம் நகராட்சி பழனிக்கவுண்டன்புதூா் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள புறவழிச் சாலையில் இருந்து மடத்துக்குளம் வரை 40 கிலோ மீட்டருக்கு நான்கு வழிச்சாலை அமைக்க, ஹைதராபாத்தைச் சோ்ந்த கேஎன்ஆா்சிஎல் என்ற நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒட்டன்சத்திரத்தில் இருந்து மடத்துக்குளம் வரை 12 பாலங்கள் அமைக்கப்படுகின்றன. அதற்காக, பாலங்கள் அமையவுள்ள இடத்தில் தொழிலாளா்கள் மண் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதில் முதல் கட்டமாக, பழனிக்கவுண்டன்புதூா் புறவழிச் சாலையில் மண் ஆய்வுப் பணி தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதத்துக்குள் நான்குவழிச் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுவிடும் என்று, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

More News & Pictures: https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2020/jan/19/திண்டுக்கல்-பொள்ளாச்சி-4-வழிச்சாலையில்மேம்பாலம்-கட்டும்-பகுதியில்-மண்-ஆய்வு-3334869.html
 

·
The Boss
Joined
·
246 Posts
நெடுஞ்சாலையில் நெரிசல் கண்டுகொள்ளாத போலீசார்

கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை நகர எல்லையில், விதிமுறைகளை மீறி, கனரக வாகனங்களையும், கார் உட்பட நான்கு சக்கர வாகனங்களையும், நிறுத்திச்செல்கின்றனர்.குறிப்பாக ரோட்டோரத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு முன்பு இத்தகைய வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. ராகல்பாவி பிரிவு முதல் அந்தியூர் வரை, ரோட்டின் இருபுறங்களிலும், தற்காலிகக்கடைகள் அதிகளவு அமைக்கப்பட்டுள்ளன.கடைகளை ஒட்டி, நெடுஞ்சாலையின் மீது வாகனங்களை நிறுத்துவதால், பிற வாகனங்கள் விலகிச் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவதும் அதிகரித்துள்ளது.நெடுஞ்சாலையில், போக்குவரத்து விதிகளை கண்காணித்து, விபத்துகளை குறைப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் எடுப்பதில்லை. விதிமுறைகளை மீறி, அமைக்கப்படும் கடைகளையும், அங்கு நிறுத்தப்படும் வாகனங்களையும் போலீசார் கண்டுகொள்வதில்லை.இதனால், பல கி.மீ., தொலைவுக்கு நெரிசல் தொடர்கதையாக உள்ளது.

More News: https://www.dinamalar.com/news_detail.asp?id=2463484
 

·
The Boss
Joined
·
246 Posts
ஐந்தாண்டு அவதி! நெரிசலில் சிக்கி சீரழியும் காரமடை மக்கள்



காரமடை மேம்பால பணிகள், ஐந்து ஆண்டுகளாகியும் முடியாததால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி, மக்களும், பயணிகளும் தவியாய் தவிக்கின்றனர்.காரமடை, கோவை சாலையில், ரயில் பாதையின் குறுக்கே, 33 கோடி ரூபாய் செலவில், ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு துவங்கின.இப்பணிகளை இரண்டு ஆண்டுகளில் முடிக்க, காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.
கோவை சாலையில், ஆர்.வி., கல்லுாரி முன்பு துவங்கிய மேம்பாலம், காரமடை ஐந்து சாலைகள் சந்திக்கும் இடத்தில் முடியும் வகையில் திட்டமிடப்பட்டது. மொத்தம், 18 துாண்கள் அமைக்கப்பட்டன. மேம்பாலத்தில், 12 மீ., சமதள பகுதியில், 20 மீட்டருக்கு சாலையும் அமைக்க திட்டமிடப்பட்டது.கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன்பு, மேம்பால பணிகள் முடிவடைந்தன. ஆனால், இருபுறமும் சர்வீஸ் சாலைகளும், சாக்கடை அமைக்கவும், நில ஆர்ஜிதம் செய்ய கால தாமதம் ஏற்பட்டது. இதனால், பாலம் கட்டியும் பயனில்லாமல் இருந்தது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, வாகனங்கள் செல்லும் வகையில், சாலைகள் அமைத்தது. கடந்த ஆண்டு, பாலத்தில் போக்குவரத்து துவங்கியது.ஆனால், நில ஆர்ஜிதம் முடியாததால் பாலத்தின் இருபுறமும், சர்வீஸ் ரோடுகள் அமைக்க முடியவில்லை. ஆளும் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்பின், பாலத்தின் இரு பக்கமும் உள்ள, 97 நபர்களிடம் நில ஆர்ஜிதம் செய்து, அரசு அவர்களுக்கு, உரிய தொகை வழங்கியது.தற்போது, நெடுஞ்சாலைத்துறை சார்பில், கட்டடங்கள் இடிக்கும் பணி நடக்கிறது. மேலும், சாலையின் இரு பக்கமும் சாக்கடைகளும், கழிவு நீர் வெளியேற சிறு பாலமும் அமைக்கப்பட்டு வருகிறது.சரியாக திட்டமிட்டு பணிகள் செய்யாததால், இரண்டு ஆண்டுகளில் முடிக்க வேண்டிய, இந்த ரயில்வே மேம்பால பணிகள், ஐந்து ஆண்டுகளாகியும் முடியவில்லை. தற்போது, பாலத்தின் இருபக்கமும் சாலை வேலையும், கட்டடங்களை இடிக்கும் பணிகளும் நடப்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மேலும், மேட்டுப்பாளையம், கோவை, ரயில்வே ஸ்டேஷன், கண்ணார பாளையம், அரங்கநாதர் கோவில் ஆகிய ஐந்து சாலைகள் சேரும் இடத்தில், சாலைகள் குறுகியதாக உள்ளன.

More News : https://www.dinamalar.com/news_detail.asp?id=2467949
 

·
The Boss
Joined
·
246 Posts
மின் கம்பங்களை அகற்றினால் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு

காரமடை சாலையின் மையப்பகுதியில் உள்ள மின் கம்பங்களை அகற்றினால், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும் என, வாகன ஓட்டுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.காரமடையில், கோவை - மேட்டுப்பாளையம் மெயின் சாலையில், 33 கோடி ரூபாய் செலவில், ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது பாலத்தின் இருபக்கமும், சர்வீஸ் சாலைகள் அமைக்க, 5 ஆண்டுகளுக்குப் பிறகு, அரசு இடங்களை ஆர்ஜிதம் செய்துள்ளது. அந்த இடங்களில் உள்ள கட்டடங்களை, இடித்து விட்டு சர்வீஸ் சாலைகளும், கழிவுநீர் செல்ல சாக்கடையும் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.இந்நிலையில், 20 மீட்டர் அகலத்துக்கு சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தற்போது சாலையின் மையப்பகுதியில், மின் கம்பங்கள் உள்ளன. இந்த மின் கம்பங்களால், காலையும், மாலையும் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுகிறது. சாலையின் மையப்பகுதியில் உள்ள மின்கம்பங்களை அகற்றி, கழிவு நீர் செல்லும் சாக்கடை அருகே மாற்றி அமைத்தால், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்குமென, வாகன ஓட்டுனர்கள் கருத்து தெரிவித்தனர்.

More News: https://www.dinamalar.com/news_detail.asp?id=2473489
 

·
The Boss
Joined
·
246 Posts
மீன்கரை ரோடு விரிவாக்க பணி : முதற்கட்டமாக, ரூ.9.19 கோடி ஒதுக்கீடு

பொள்ளாச்சி பகுதியில் இருந்து, கேரளாவுக்கு காய்கறிகள், மாடுகள், மளிகை பொருட்கள், கொண்டு செல்லப்படுகிறது. அதேபோல், தினமும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். கொச்சின், கர்நாடகா பகுதிகளுக்கு அதிகளவில் கனரக சரக்கு வாகனங்கள் செல்கின்றன.இதுதவிர, பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் இருப்போர், பொருட்களை கொண்டு செல்ல பொள்ளாச்சி - மீன்கரை ரோடு வழியாக கேரளா சென்று வருகிறது.பொள்ளாச்சியில் இருந்து மீனாட்சிபுரம் வரையில், 20 கி.மீ., தொலைவுக்கு, இரண்டு வழிச்சாலை உள்ளது. போக்குவரத்து நிறைந்து காணப்படும் இந்த ரோட்டில், அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுகிறது. வாகன விபத்துக்களை தடுக்க, நெடுஞ்சாலைத்துறையினர் ரோட்டை விரிவுபடுத்த திட்டமிட்டனர்.இதையடுத்து, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை பகுதிகளில், பணிகள் தீவிரமாக நடக்கிறது. ஆனைமலை நெடுஞ்சாலைத்துறையினர், 9.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரோடு விரிவாக்க பணியை செயல்படுத்தி வருகின்றனர்.ரோடு விரிவுபடுத்தும் பணி முழுமையாக நடந்து முடிந்தால், போக்குவரத்து பாதிப்பது மற்றும் விபத்துக்கள் நடப்பது குறைய வாய்ப்பு உள்ளது

More News: https://www.dinamalar.com/news_detail.asp?id=2473448
 

·
The Boss
Joined
·
246 Posts
அன்னூர்:சென்டர் மீடியன் அமைப்பு

அன்னூர் நகரில் பல ஆண்டுகளாக கடும் போக்குவரத்து நெரிசலும், அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இதற்கு தீர்வான மாநில நெடுஞ்சாலை துறையின் கிழக்கு புறவழிச்சாலையும், தேசிய நெடுஞ்சாலை துறையில் மேற்கு புறவழிச்சாலையும், பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கின்றன. இந்நிலையில், அன்னூரில், அவிநாசி ரோட்டில், நேற்று முன்தினம், ஆனந்தா தியேட்டர் முதல், சிஎஸ்ஆர் பிரிவு வரை 150 மீட்டருக்கு, நெடுஞ்சாலைத் துறையினர் சென்டர் மீடியன் அமைத்தனர். இதனால் விபத்துகளும் நெரிசலும் குறையும் வாய்ப்பு உள்ளது.

நெடுஞ்சாலைத்துறையினர், இந்த சென்டர் மீடியன்களை, மெயின் ரோடு வரை நீட்டிக்க வேண்டும். கோவை ரோட்டில், கே. ஜி., கார்னர் வரையும், மேட்டுப்பாளையம் ரோட்டில் ஆயிமாபுதூர் பிரிவு வரையும், சத்தி ரோட்டில் அல்லி குளம் பிரிவு வரையிலும் சென்டர் மீடியன் அமைக்க வேண்டும்.அப்படி அமைத்தால், நிச்சயம் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் குறையும். நெடுஞ்சாலை துறையினர், இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மக்கள் தெரிவித்தனர்.

More Pictures & News: https://www.dinamalar.com/news_detail.asp?id=2474182
 

·
The Boss
Joined
·
246 Posts
நெடுஞ்சாலை ரோடு விரிவாக்கத்திற்காக அரசு கட்டிடங்கள் இடிப்பு

பொள்ளாச்சி நகர் வழியாக கோவை, திருப்பூர், பழனி மற்றும் தென்மாவட்டங்களுக்கும், கேரள மாநில பகுதிக்கும் வாகன போக்குவரத்து அதிகளவில் உள்ளன. மேலும், நகரில் இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்களின் போக்குவரத்து நாளுக்கு, நாள் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதில், வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த, நகர் பகுதி ரோடுகளை விரிவுப்படுத்த நெடுஞ்சாலைத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் வாகன போக்குவரத்து மிகுந்த, காந்தி சிலை மற்றும் மத்திய பஸ் நிலைய பகுதி, நியூஸ்கீம்ரோடு-பல்லடம் ரோடு சந்திப்பிலிருந்து உடுமலைரோடு மின்நகர் வரையிலும். மரப்பேட்டை பாலத்திலிருந்து தலைமை தபால் நிலையம் வழியாக பஸ் நிலையம் வரையிலும் உள்ள ரோட்டை விரிவுப்படுத்த 5 ஆண்டுக்கு முன்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 3 ஆண்டுக்கு முன்பு, ரோடு விரிவாக்கத்திற்கு தேவையான அரசு மற்றும் தனியார் நிலங்களை கையகப்படுத்த, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, ரோடு விரிவுபடுத்த சாலை அருகே இருந்த வணிக வளாகம் மற்றும் வீடுகள், காலிமனையிடம், அரசு நிலம் உள்ளிட்ட நிலங்கள் கணக்கெடுக்கப்பட்டது. இதையடுத்து, தனியார் நிலம் கையகப்படுத்துவது குறித்து, அந்தந்த நில உரிமையாளர்களிடம் கருத்துகேட்பு மற்றும் ஆட்சேபனை ஆலோசனை கூட்டம் அவ்வப்போது நடந்தது. இந்த நிலையில், கையகப்படுத்தப்பட்ட தனியார் இடத்துக்கான இழப்பீட்டுதொகை மொத்தம் ரூ.33.70 கோடியின் ஒரு பகுதி தொகையை பிரித்து, உரிய நபர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த மாதம், உடுமலைரோட்டில் கையகப்படுத்தப்பட்ட தனியார் கடைகளை இடிக்கும் பணி துவங்கப்பட்டது. ரோடு விரிவாக்கத்திற்காக தலைமை தபால் நிலையம், வருவாய்துறை, அரசு மருத்துவமனைக்குட்பட்ட ஒரு பகுதி கட்டிடங்கள் என பெரும்பாலும் அரசுத்துறைக்குட்பட்ட கட்டிடங்கள் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது

More News:http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=986330
 

·
The Boss
Joined
·
246 Posts
மாற்றுப்பாதையில் ரயில்வே மேம்பாலம்! நெரிசல் குறையும்; போக்குவரத்து எளிதாகும்

பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், ரயில் பாதையை கடந்து செல்லும் வகையில், 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு வழி மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதனால், பிரதான ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.தற்போது, பாலக்காடு ரோட்டில் வரும் கனரக வாகனங்கள், நல்லுாரில் இருந்து, ஜமீன்ஊத்துக்குளி, மீன்கரை ரோடு வழியாக இயக்கப்படுகின்றன.இருசக்கர, கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள், பாலக்காடு ரோடு, காந்தி நகர், வடுகபாளையம், குமரன் நகர் ரோடு ரயில்வே கேட் வழியாக வாகனங்கள் இயக்கப்படுகின்றன.கோவை ரோடு செல்லும் வாகனங்கள், வடுகபாளையம், ஏ.எஸ்.டி., புரம், போக்குவரத்து கழக டிப்போ வழியாக கோவை ரோட்டில் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.இதற்காக, அந்த வழித்தடத்தில் ரோடும் அகலப்படுத்தப்பட்டுள்ளது. நல்ல மாற்றுப்பாதையாக இருந்தாலும், ஒரே ஒரு பிரச்னை மட்டும் சிக்கலை ஏற்படுத்துகிறது.வடுகபாளையம் - போக்குவரத்து கழக டிப்போ ரோட்டுக்கு இடையே, ரயில் வழித்தடம் குறுக்கிடுகிறது. அங்கு, ரயில்வே கேட் செயல்படுகிறது.மேலும், அப்பகுதி குறுகலாகவும், 'எஸ்' வளைவாகவும் இருப்பதால், பெரிய வாகனங்கள் திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டு, போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. வளைவுகள் குறுகலாகவும், மின்கம்பம் இருப்பதாலும், வாகனங்கள் வளைந்து செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.இப்பிரச்னைக்கு தீர்வு காண, அப்பகுதியில் தண்டவாளத்தை கடக்க மேம்பாலம் அமைப்பதன் மூலம் தீர்வு காண முடியும் என்கின்றனர் மக்கள்

வடுகபாளையம் ரோட்டில் இருந்து, ஏ.எஸ்.டி., புரம் ரோட்டுக்கு, ரயில்பாதையை கடந்து செல்லும் வகையில் நேருக்கு நேர் மேம்பாலம் அமைக்கலாம். இதன் மூலம், 'எஸ்' வளைவுகளில் வாகனங்கள் வளைந்து வருவது தவிர்க்கப்படும். ரயில்வே கேட்டும் அகற்றப்படும். அப்பகுதியில், ஓரிரு வீடுகள் மட்டுமே நில ஆர்ஜிதம் செய்ய வேண்டி இருக்கும்.அப்பகுதி ரோடுகள் பெரும்பாலும் நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், ரயில்வேயின் பங்களிப்போடு, நகராட்சி மூலம் மேம்பாலம் அமைக்கலாம்.

More News & Pics: https://www.dinamalar.com/news_detail.asp?id=2491020
 

·
The Boss
Joined
·
246 Posts
கோவில்பாளையம்- காரமடை சாலைக்கு நிதி தேவை... நாலு கோடி ரூபாய்!!

கோவை- -- சத்தி, தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச்., 209), முக்கிய மையமாக அன்னுார் உள்ளது. கோவை, அவிநாசி ரோடு, பீளமேட்டில் விமான நிலையம் உள்ளது.பல்நோக்கு மருத்துவமனை, கண் மருத்துவமனை, பிரபல பள்ளி, கல்லுாரிகள் உள்ளன. எனவே, ஊட்டி, கூடலுார், குன்னுார், கோத்தகிரியிலிருந்தும், மேட்டுப்பாளையம், காரமடையிலிருந்தும், அதிக அளவில் வாகனங்கள், கோவை, அவிநாசி ரோட்டுக்கு வருகின்றன.

ஆனால், இந்த வாகனங்கள், கோவை நகரிலுள்ள அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக மேட்டுப்பாளையம், அன்னுார், கோவில்பாளையம், காளப்பட்டி வழியாக, அவிநாசி ரோட்டை அடைகின்றன. இதனால் மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னுார் வரையிலும், அன்னுாரிலிருந்து கோவில்பாளையம் வரையிலும், அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

குறிப்பாக, அன்னுாரில் வாகனங்கள் பல கி.மீ., துாரத்திற்கு நீண்ட வரிசையில் நிற்கின்றன. இதற்கு தீர்வாக மேட்டுப்பாளையத்திலிருந்து பீளமேட்டுக்கு குறுகிய துாரத்தில், விரைவில் செல்ல பாதை உள்ளது. இந்த பாதையை தரமுயர்த்தினால், கோவையின் வடக்கு பகுதி மக்களுக்கும், நீலகிரி மாவட்ட மக்களுக்கும், பயன் கிடைக்கும் என, மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து குப்பேபாளையம் மக்கள் கூறியதாவது:கோவையில், பீளமேட்டிலிருந்து, காளப்பட்டி வழியாக குரும்பபாளையம் வரை, ரோடு தரமாக உள்ளது. குரும்பபாளையத்தை அடுத்த கோவில்பாளையத்திலிருந்து கவையகாளியம்மன் கோவில் வழியாக, போடி திம்மம்பாளையம், குப்பேபாளையம், செங்காளிபாளையம் ஒன்னிபாளையம், கண்ணார்பாளையம் வழியாக, காரமடையை எளிதில் அடையலாம்.இந்த வழித்தடத்தால், மேட்டுப்பாளையத்திலிருந்து, பீளமேடு செல்லும் வாகனங்களுக்கு 15 கி.மீ., துாரம் மிச்சமாகும்.

இதில், கோவில்பாளையத்திலிருந்து ஒன்னிபாளையம் வரை, எட்டு கி.மீ., துாரத்திற்கு, நான்கு ஆண்டுகளுக்கு முன் புதிய ரோடு, ஒரு கோடியே 10 லட்சம் ரூபாயில் போடப்பட்டது. ஆனால், தரம் குறைவாக ரோடு போடப்பட்டதால், ஒரே ஆண்டில், பல இடங்களில் தார் கரைந்து, ஜல்லி கற்கள் பெயர்ந்து விட்டது. ரோட்டில் பல இடங்களில், பள்ளம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, மக்கள் தெரிவித்தனர்.

More News:https://www.dinamalar.com/news_detail.asp?id=2494121
 

·
The Boss
Joined
·
246 Posts
வடிகால் அடைப்பு; நெடுஞ்சாலையில் வினோதம்

பொள்ளாச்சி - கோவை நான்கு வழிச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால், பாதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால், பயன்பாட்டை இழந்துள்ளது.பொள்ளாச்சி - கோவை ரோடு ஆச்சிபட்டி முதல் ஈச்சனாரி வரை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து, மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடக்கிறது.மழைக்காலங்களில், பிரதான ரோட்டில் வெள்ள நீர் பெருக்கெடுத்து, போக்குவரத்து பாதிப்பு, விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில், ரோட்டின் இரண்டு பக்கங்களிலும் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. பிரதான ரோட்டில் இருந்து, கிளை ரோடுகள் பிரியும் இடங்களில், இந்த கால்வாய்கள் மீது சிறிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஆனால், பாலத்தின் இருபக்கமும் தண்ணீர் ஓட வழியின்றி கல், மண்ணை கொட்டி அடைத்துள்ளனர். இதனால், மழைக்காலங்களில் மழைநீர் கால்வாயிலேயே தேங்கி, பெருக்கெடுத்து போக்குவரத்தை பாதிக்கும் வாய்ப்புள்ளது. இப்படி அடைத்து வைத்துள்ளதால், வடிகால் அமைக்கப்பட்ட நோக்கமே பாழ்பட்டுள்ளது.அடைப்புகளை நீக்கி, கால்வாயில் சேகரமாகும் மழைநீரை, ஆங்காங்கே உள்ள நீர்நிலைகள், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளில் கொண்டு சேர்க்கும் வகையில் மாற்றியமைப்பது அவசியம்.

More News:https://www.dinamalar.com/news_detail.asp?id=2502699
 
161 - 180 of 183 Posts
Top