SkyscraperCity Forum banner

Tirunelveli - General News

124772 Views 881 Replies 29 Participants Last post by  JOHNSON KENNADY
Dear Tirunelveli forumers
Lets discuss about the General news happened in Tirunelveli.

Please make contribute and support:)
21 - 40 of 882 Posts
Same news.

தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பேரணி


நெல்லை

நெல்லையில் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பேரணி நடத்தினார்கள்.

பேரணி

தாமிரபரணியை பாதுகாக்க வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி தொடர் பிரசார இயக்கம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் அம்பாசமுத்திரத்தில் இருந்து நெல்லை வரை பேரணியை தொடங்கினார்கள். பேரணிக்கு கட்சியின் மாநில தலைவர் தெகலன் பாக்கவி தலைமை தாங்கினார்.

பேரணி நேற்று பத்தமடையில் இருந்து மேலப்பாளையத்தை வந்தடைந்தது. தொடர்ந்து சந்தை முக்கு, வீரமாணிக்கபுரம் ரவுண்டானா, வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி வழியாக பாளையங்கோட்டை மார்க்கெட்டை அடைந்தது. பேரணியில் மாநில பொதுச் செயலாளர் உஸ்மான்கான் மற்றும் ஏராளமானோர் சீருடையுடன் கலந்து கொண்டார்கள். அவர்கள் வழி எங்கும் தாமிரபரணி பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்கள்.

பொதுக்கூட்டம்

பேரணி முடிவில் பாளையங்கோட்டையில் பொதுக்கூட்டம் நடந்தது. நெல்லை மாவட்ட தலைவர் பிஸ்மி காஜா தலைமை தாங்கினார். ல் மாநில தலைவர் தெகலன் பாக்கவி பேசுகையில், ‘‘தாமிரபரணி ஆற்றின் முகத்துவாரங்களில் நடைபெற்று வரும் ஆக்கிரமிப்புளாலும், செங்கல் சூளைகளாலும் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க வேண்டும். ஆற்றில் கலக்கும் சாக்கடை கழிவு நீரை தடுக்க வேண்டும். இல்லை என்றால் கழிவு நீரை சுத்திகரித்து விட வேண்டும். தாமிரபரணி ஆற்றுத்தண்ணீரை கூடங்குளம் அணுஉலைக்கு கொண்டு செல்லக்கூடாது. கங்கைகொண்டான் தனியார் குளிர்பான ஆலைக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்த வேண்டும்’’ என்றார்.

கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் நெல்லை முபாரக், செயற்குழு உறுப்பினர் உஸ்மான்கான் மற்றும் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
See less See more
Twins of tirunelveli :)

பாளையங்கோட்டையில் இரட்டை குழந்தைகள் ஒரே இடத்தில் கூடிய சங்கமம் விழா

நெல்லை,

பாளையங்கோட்டையில் இரட்டை குழந்தைகள் ஒரே இடத்தில் கூடிய அதிசய விழா நேற்று நடைபெற்றது.

இரட்டை குழந்தைகள்

கடவுளில் படைப்பில் பல அதிசய நிகழ்வுகள் நாளுக்கு நாள் புதிது புதிதாக தோன்றத்தான் செய்கின்றன. அதில் மனித குலத்தில் பெண்கள் ஒரு பிரசவத்தில் ஒரு குழந்தை மட்டும் பெற்றெடுப்பது ஒன்றும் புதுமையானது அல்ல. ஆனால் சில நேரங்களில் இரட்டை குழந்தைகளும், அதிர்ஷ்டவசமாக அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான குழந்தைகளும் பிறக்கும் அதிசய நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

இவ்வாறு பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வெளிநாடுகளில் சிறப்பாக விழா நடத்துவது வாடிக்கையானது. இதே போல் நெல்லை மாவட்டத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு பாளையங்கோட்டையில் நேற்று விழா நடத்தப்பட்டது.

ஒரே இடத்தில் கூடினர்

பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் பாலபாக்யா ஓட்டலில் ‘‘இரட்டை குழந்தைகள் சங்கமம்’’ விழா நேற்று நடைபெற்றது. இதில் நெல்லை மாவட்டத்தில் பிறந்த சுமார் 32 ஜோடி இரட்டை குழந்தைகள் விழாவில் கலந்து கொண்டார்கள். அதில் தற்போது பிறந்த குழந்தை முதல் சுமார் 6 வயது வரையிலான குழந்தைகள் பெற்றோருடன் வந்து பங்கேற்றார்கள். இதுதவிர கே.டி.சி. நகரை சேர்ந்த ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளாக பிறந்த சிவா, ராமா, கிருஷ்ணன் ஆகியோரும், இரட்டையராக கல்லூரி மாணவிகள் 2 பேரும் கலந்து கொண்டார்கள்.

தொடக்கத்தில் இரட்டை குழந்தைகளின் அறிமுக விழா நடைபெற்றது. தொடர்ந்து குழந்தைகளுக்கான வித்தியாசமான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறுதியில் அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கி மகிழ்விக்கப்பட்டனர்.

டாக்டர் விளக்கம்

விழாவுக்கு தலைமை தாங்கிய குழந்தைகள் நல டாக்டர் செந்தில்குமரன் கூறுகையில், ‘‘இரட்டை குழந்தைகள் பிறப்பது அதிசய நிகழ்வுதான். இது மரபு ரீதியாகவும், இயற்கையாகவும் பிறக்கும். பெரும்பாலான நேரங்களில் மகப்பேறுக்காக சிகிச்சை பெறும் போது 2 முதல் 4 கருக்கள் உருவாகி விடும். நெல்லை மாவட்டத்தில் ஏராளமான இரட்டை குழந்தைகள் உள்ளனர். இவர்களை ஒரே இடத்தில் கூடி மகிழ்ச்சியுடன் கொண்டாடவே இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது’’ என்றார்.

விழாவில் டாக்டர்கள் மரகதவல்லி, முகமது தம்பி, திருமலைக்கொழுந்து, தேவிகலா, ரமோலா உள்ளிட்டோர் இரட்டை குழந்தைகளை பேணி வளர்ப்பது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கி பேசினர். முடிவில் வினோத்சிங் நன்றி கூறினார்.
See less See more
  • Like
Reactions: 1
New Building for veterinary hospital in sankarankoil.

சங்கரன்கோவிலில் கால்நடை ஆஸ்பத்திரிக்கு புதிய கட்டிடம் முத்துசெல்வி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் புதுமனை தெருவில் கால்நடை ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் பழமையாக இருந்ததால் ரூ.15 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டு அனைத்து வசதிகளுடன் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. புதிய ஆஸ்பத்திரி கட்டிடத்தை முத்து செல்வி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

நகரசபை தலைவர் கண்ணன், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் கெங்காராஜ், நகர செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை டாக்டர் பாலமுருகன் வரவேற்றார். கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகள் அளிக்கப்பட்டன.
See less See more
Tirunelveli is now freeing from Flex boards, banner, Wall painting.. etc by politicians. All are cleared by Collection due to Loksabha election rules..

Now city looks clean..:cheers:
Great :) If possible post some snaps. :cheers:
No news about industrialisation which is much needed in tirunelveli. Especially gangaikondan IT park and nanguneri IT park :eek:hno:

Mr.Aravind kejriwal strongly opposed kudankulam and there is a news that udayakumar will contest for AAP in kanniyakumari district..

But this guy is saying that he will upgrade kudankulam to a research centre.

yaaru kita viduringa da reelu :bash:
Tirunelveli MP ramasubbu explaining about the schemes and benefits provided by him in the last 5 years.

https://www.youtube.com/watch?v=TYIdLSCINJc
Extremely happy to see good rain in nellai. Hope it will reduce the water scarcity. :)
  • Like
Reactions: 2
I don't think this news is relavant to this thread. My kind request mr.livingston pls avoid this irrelavant news.
  • Like
Reactions: 1
Nellai MP ramasubbu lost very badly. The sad thing is he dint even gets his deposit :(
Ramasubbu contributed a lot to nellai constituency but people forgot his contribution.
நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா: தேர்களை அலங்காரம் செய்யும் பணி மும்முரம்


நெல்லை,

நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழாவையொட்டி தேர்களை அலங்காரம் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

ஆனித்திருவிழா
நெல்லையப்பர் கோவிலில் ஆனித்தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்து வருகின்றன.

நெல்லையப்பர் கோவிலில் நெல்லையப்பர், காந்திமதி அம்மாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் என 5 தேர்கள் உள்ளன. வருகிற 27–ந் தேதி (புதன்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.

தேர்கள் தயார் செய்யும் பணி
தேரோட்டத்துக்கு தேர்கள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தேரோட்டத்தின் போது தேர்கள் வேகமாக செல்வதை தடுக்க மரக்கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மரக்கட்டைகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தேர்களுக்கு அழகான திரைச்சீலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், தேர்களில் அலங்கரித்து வைக்கப்படும் பொம்மைகள் தேரில் பொருத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. தேரோட்டத்துக்கு அனைத்து தேர்களும் தயாராகி வருகிறது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்
விழாவின் 5–ம் நாளான நேற்று காலை 8.30 மணிக்கு வெள்ளி ரி*ஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டத்தையொட்டி நெல்லையப்பர் கோவிலில் 4 ரதவீதிகளிலும் குடிதண்ணீர், மருத்துவ வசதி உள்ளிட்டவைகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

தேரோட்டத்தையொட்டி 4 ரதவீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன. கடை முன்பு உள்ள ஆக்கிரமிப்புகள் எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது. இதற்கு ஒரு சில கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
See less See more
நெல்லை மாவட்டத்தில் உலக யோகா தின விழா


நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் உலக யோகா தின விழா நடந்தது.

பல்கலைக்கழகம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உலக யோகா தின விழா நடந்தது. பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு தலைமை தாங்கி பேசினார். உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு துறை தலைவர் சேது வரவேற்று பேசினார். சமுதாய சேவா சங்க மண்டல தலைவர் அண்ணாமலை யோகாசனம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கி கூறினார்.

தொடர்ந்து யோகாசன செய்முறை பயிற்சி வகுப்பு நடந்தது. பல்வேறு யோகாசனங்களை மாணவ-மாணவிகள் செய்தனர். பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பல்கலைக்கழக இளைஞர் நலத்துறை இயக்குனர் வெள்ளியப்பன் நன்றி கூறினார்.

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் நூலகத்துறை சார்பில், உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி தொடக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் சுந்தரம் தலைமை தாங்கினார். அண்ணாதுரை வரவேற்று பேசினார். யோகா பயிற்சியாளர்கள் அழகு ஆறுமுகம், கணேஷ், பாக்கியராஜ், ராம்ராஜ், வேல்முருகன், மணிகண்டன் ஆகியோர் பல்வேறு யோகாசன பயிற்சிகளை வழங்கினர்.

கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் நடராஜன், சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் அழகப்பன், மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில், பாலச்சந்திரன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் பழனிகுமார், உதவி நூலகர்கள் பாரதி, சந்தானசங்கர் ஆகியோர் செய்து இருந்தனர்.

தெற்கு விஜயநாராயணம்

தெற்கு விஜயநாராயணம் ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படை தளத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் நடந்த யோகா நிகழ்ச்சியை கடற்படை தள கமாண்டிங் அதிகாரி விஷால் குப்தா தொடங்கி வைத்தார். அறக்கட்டளை அமைப்பைச் சேர்ந்த சந்திரன், வெங்கடேஷ் ஆகியோர் நிகழ்ச்சியை நடத்தினர்.

நாங்குநேரி யூனியன் பட்டர்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த யோகா நிகழ்ச்சியை டி.வி.எஸ். அதிகாரிகள் அந்தோணி தங்கராஜ், ராமலட்சுமி ஆகியோர் நடத்தினர். பள்ளி தலைமை ஆசிரியர் விஜயராணி, ஆசிரியர் லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த யோகா நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அகஸ்டினா ஜெபமணி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ஜோதிவேல் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரிய கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் செய்து இருந்தனர்.

வீரவநல்லூர்

வீரவநல்லூர் பஞ்சாயத்து அலுவலகம் அருகே உள்ள கலையரங்கத்தில் முக்கூடல் பொதிகை மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் உலக யோகா தின விழா நடந்தது. ராஜன் வரவேற்று பேசினார்.

முக்கூடல் பூவிஜேஷ் மெட்ரிகுலேசன் பள்ளி மற்றும் வீரவநல்லூர் பாரதியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் யோகாசனம் செய்தனர். பூமி பாலகன், டோமினிக் வின்சென்ட், வேல்முருகன், மனவளக்கலை மன்றத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பரமசிவம் நன்றி கூறினார்.

அம்பை அருகே உள்ள அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் இன்டர்நேஷனல் பள்ளி, சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் கடையம் ரெயில் நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் யோகாசனங்களை செய்து காட்டினார்கள். மாணவர்களை பள்ளி தாளாளர் ராபர்ட், முதன்மை முதல்வர் ஆனி மெட்டில்டா ஆகியோர் பாராட்டினார்கள்.

பாளையங்கோட்டை கதீட்ரல் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டினார்கள். ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் சுவாமிநாதன் டேனியல், தேசிய மாணவர் படை ஆசிரியர் மெல்கி ஆகியோர் செய்து இருந்தனர்.
See less See more
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் இன்று தேரோட்டம்


திருநெல்வேலி நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் கோயிலின் தேர்த் திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது.

திருநெல்வேலியின் அடையாளங்களில் ஒன்றான நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலின் ஆனித்தேர் திருவிழா கடந்த 19- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் காலையிலும்மாலையிலும் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சுவாமி- அம்மாள் பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு தினமும் அருள்பாலித்தார்கள்.

இந்நிலையில் ஆனித்திருவிழாவான இன்றுகாலை 9.30 மணிக்குதேரோட்ட கோலாகலமாக தெடங்கியது. இந்த தேரானது 4 ரத வீதிகளில் வலம் வரும் . முன்பெல்லாம் தேரை இழுத்து நிலைக்கு கொண்டு வர இரண்டு நாட்கள் முதல் ஒரு வாரம் வரையில் ஆகும். ஆனால் தற்போதுஒரே நாளில் தேர் இழுக்கப்படுகிறது.

மேலும் தேரோட்டத்திற்கு எல்லா பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவதால், பாதுகப்பு பணிகளுக்காக 1,200 காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க வாகனங்கள் வேறு பாதையில் மாற்றிவிடப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கண்காணிப்புக் கோபுரங்கள் அமைத்து போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட இருக்கிறார்கள். அத்துடன், சிசிடிவி கேமராக்கள் ரதவீதிகளில் அமைக்கப்பட்டிருப்பதால் அதன் வாயிலாகவும் காவல்துறையினர்பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளகின்றனர். மேலும், நெல்லையப்பர் கோயில் தேர்திருவிழாவையொட்டி நெல்லை நகரில் உள்ள 8 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள், இலவச கழிப்பறைகள், நடமாடும் கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கூடுதலாக துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
See less See more
பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் தீவிபத்து; மாணவர்கள் உடனடியாக வெளியேற்றம்!

தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் இருந்து, மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 3 மாடிகள் கொண்ட ரோஸ் மேரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று பிற்பகல் 12.15 மணியளவில், இரண்டாவது மாடியின் ஸ்மார்ட் வகுப்பறையில் இருந்து கரும் புகை வெளியேறியது. இதைக் கண்ட ஆசிரியர்கள் உடனடியாக மாணவர்களை பள்ளி கட்டடத்தில் இருந்து வெளியேற்றினர்.

பின்னர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி யு.ரமேஷ் கூறுகையில், பிற்பகல் 12.30 மணியளவில் தீ குறித்து தகவல் கிடைத்தது. உடனே 2 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் உடனே வெளியேற்றப்பட்டு, தீயை அணைக்க அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறைந்த நேரத்தில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஸ்மார்ட் வகுப்பறையில் மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக தீப்பிடித்திருப்பதாக கூறினார்.

அந்த தளத்தில் தீ அணைக்கும் கருவிகள் இருந்தும் பயன்படுத்தப்படவில்லை என்று குறிப்பிட்டார். மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதிஷ், காவல்துறை துணை இயக்குநர் சுகுணா சிங், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விரைந்து ஆய்வு செய்தனர்.

பின்னர் பேசிய ஆட்சியர், பள்ளி மீது ஏதேனும் தவறுகள் இருந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
See less See more

bro do you know the estimated time to complete the new bridge which is being constructed parallel to this bridge ??
I think the plan would be to connect south bye pass road with new western ring road.

South and north bye pass roads should be renamed as they are no more byepass roads 🤷🏻‍♂️
  • Like
Reactions: 1

The low electricity consumption shows the less number of industries ( jobs ) in Tirunelveli. And with no doubt , Coimbatore region tops the list because of their huge amount of industries.
  • Like
Reactions: 2
21 - 40 of 882 Posts
Top