SkyscraperCity banner

which is easy for transport in trichy city?

  • Train

    Votes: 2 11.1%
  • Bus

    Votes: 16 88.9%
4841 - 4860 of 8561 Posts

·
Registered
Joined
·
25,588 Posts
Highway patrol teams to be sensitised to road safety


The police headquarters in Chennai has issued a circular that the highway patrol police personnel to be sensitised to safety while handling rescue work.— FILE PHOTO: M. SRINATH

Police personnel serving in highway patrol units and in police stations situated along the National and State Highways would be sensitised to road safety measures and the ways to protect themselves while engaged in accident rescue mission.

The State police headquarters has sent a communiqué instructing that road safety training programmes be organised across the State exclusively for police personnel attached to Highway Patrol units and those serving in stations on the highways.


The recent direction from the police top brass was a sequel to the death of three police personnel along with five others in a road accident near Marakkanam in Villupuram district a few days ago.

The police personnel were engaged in a rescue operation along with local people in the late night hours at Alapakkam near Marakkanam following a road accident involving a car and a van when a container lorry hit them causing the death of eight persons on the spot.

Concerned over the fatal accident, the top brass of the State police has directed that training programmes related to road safety be organised at the In-service training centres solely for police personnel serving in Highway Patrol units and those working in stations on the national and State highways.

The objective behind the programme is to sensitise the participants to road safety measures and to protect themselves while being engaged in rescue operations, say police sources. In addition to conducting programmes, top officers have been instructed to ascertain the availability of road safety equipment such as reflective jackets, reflective cones, and baton lights with the Highway Patrol units and in the police stations situated along the national and State highways. The officers have been asked to check whether the road safety apparatus were in working condition and to install scrolling blinking lights atop the highway patrol vehicles to make it more visible.

The Tiruchi Rural police has 11 Highway Patrol units patrolling various stretches along the national and State highways falling within its jurisdiction.
 

·
Registered
Joined
·
25,588 Posts
CCTV Cameras installed at Palakarai

திருச்சி, பாலக்கரை போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில், மூன்று இடங்களில், "சிசிடிவி' கேமரா வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி மாநகரின் இதய பகுதியாகவும், பிஸியான பகுதியாகவும் பாலக்கரை உள்ளது. இந்த போலீஸ் ஸ்டேஷனில், தமிழக அரசு உத்தரவுபடி, ஏற்கனவே, மூன்று "சிசிடிவி' கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஸ்டேஷனில் நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும், இன்ஸ்பெக்டர் அறையில் இருந்து கண்காணிக்கப்படுகிறது.


மேலும், பாலக்கரை போலீஸ் ஸ்டேஷன் பகுதியில், குற்ற சம்பவங்களை தடுக்க, வேர் ஹவுஸ், பீமா நகர், காஜாபேட்டை ஆகிய பகுதிகளில் "சிசிடிவி' கேமரா வைக்கப்பட்டுள்ளது. இதில், வேர்ஹவுஸ் பகுதியில் உள்ள கேமரா மூலம், அனைத்து நடவடிக்கைகளும், ஸ்டேஷனில் இருந்து கண்காணிக்கப்படுகிறது.

மற்ற இரண்டு இடங்களில் உள்ள கேமரா மூலம், செயல்பாடுகள் பதிவு செய்யப்படுகிறது. இதன் மூலம், குற்ற செயல்களை தடுக்கவும், குற்ற செயல்களில் ஈடுபடுகிறவர்களை அடையாளம் காணவும் உதவுகிறது.

இதுகுறித்து பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் கூறியதாவது: போலீஸ் ஸ்டேஷனில் உள்ள, மூன்று "சிசிடிவி' கேமராக்கள் அரசு செலவில் வைக்கப்பட்டுள்ளது. மற்ற மூன்று இடங்களில் தனியார் பங்களிப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இதை தவிர முதலியார் சத்திரம், மேல புதூர், எடத்தெரு, துரை சாமிபுரம் உள்ளிட்ட இடங்களில் கேமரா வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இன்னும், ஒரு மாதத்தில் கேமரா வைக்கப்பட்டு விடும், என்றார்.
ஏற்கனவே, பாலக்கரை போலீஸ் ஸ்டேஷனில் சிறுவர், சிறுமிகளுக்காக விளையாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது, பாலக்கரை பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க "சிசிடிவி' கேமராக்கள் வைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
 

·
Registered
Joined
·
6,366 Posts
It will be nice if you brief a little about this technology please.

Google gets GPS info from mobile and other devices and calculates congestion by the speed at which it is moving on that stretch...in major cities(chennai,Coimbatore,Madurai in TN), the server is kept live and is refreshed every second...in others, it is updated every half hour
 

·
Fan of TN-45
Joined
·
4,315 Posts

·
Registered
Joined
·
25,588 Posts
^^And current the system is not live in Trichy, we could see this updates, because Google is now giving updates for all the National Highways in India, have a close look only the NH roads inside the City is covered and many artillery roads will not have traffic updates.
Friend

Live updates means the Traffic speed in Green,Orange and Red Colours??--Isnt it?

That means it is available for many arterial roads in and around Trichy City---I saw for Bharathidasan Road ,Bharathiyar Road , Vayalur Roads, Thillai Nagar Roads,Bishop Roads, etc

I saw this fully today evening

Wanted to put images--But not much time---will try to put tommorrow

If that is the case,I am correct---If live update means different from the colour coded info, then It may be different
 

·
Registered
Joined
·
6,366 Posts
Friend

Live updates means the Traffic speed in Green,Orange and Red Colours??--Isnt it?

That means it is available for many arterial roads in and around Trichy City---I saw for Bharathidasan Road ,Bharathiyar Road , Vayalur Roads, Thillai Nagar Roads,Bishop Roads, etc

I saw this fully today evening

Wanted to put images--But not much time---will try to put tommorrow

If that is the case,I am correct---If live update means different from the colour coded info, then It may be different

Colourhasnothing to do with live update...for Trichy, colour shows the intensity of traffic at the time of updation...also,few roads along with the NH are also equipped with traffic....major coverage will be done when live updation is added to Trichy like done with CBE and MDU...earlier, every CBE had very few coverage, now almost all roads have coverage
 

·
Registered
Joined
·
6,366 Posts
Moreover, in live update cities, if Google gets enough data from even a small street, traffic can be shown...for others, it will show only in selected roads...when Google is unable to get enough data from a road, say at night, traffic will not be shown.
 

·
Registered
Joined
·
25,588 Posts
An Article on the Traffic Problems in and around Big Bazaar Street and NSB Road




திருச்சி என்றாலே தமிழகத்தின் மத்திய பகுதி என்பதும், வானுயர எழுந்து நிற்கும் மலைக்கோட்டையும்தான் எல்லோரின் நினைவிலும் முதலில் வந்து நிற்கும்.

அத்தகைய மலைக்கோட்டை தாயுமானசுவாமி மற்றும் உச்சிப்பிள்ளையார் கோவிலின் நேர் பார்வையில் இருக்கிறது பெரிய கடை வீதி.


மலைக்கோட்டையில் தொடங்கி காந்தி மார்க்கெட் அருகில் உள்ள கமான் வளைவு வரை சுமார் 1½ கிலோ மீட்டர் நீளத்திற்கு இருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த சாலைதான் பெரிய கடைவீதி.

ஒரு வழிப்பாதை
திருச்சி நகரில் எத்தனையோ கடைவீதிகள் இருந்தாலும் பெரிய கடைவீதியில் கிடைக்காத பொருளே இல்லை என்று சொல்லலாம். அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்க வேண்டுமானால் பெரிய கடைவீதிக்குதான் செல்ல வேண்டும்.

எனவே இந்த பெரிய கடைவீதி சாலையில் எப்போதுமே வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் மிகுந்து காணப்படும். இதனால் ஏற்படும் பிரச்சினைகள், கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காகத்தான் இந்த சாலை ஒருவழிப்பாதையாக அறிவிக்கப்பட்டது.

பல ஆண்டு காலம் இந்த ஒருவழிப்பாதை திட்டம் சிறப்பாக போலீசாரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்த திட்டம் காற்றில் பறந்து விட்டது. இதனால் கடைவீதிக்கு வரும் மக்கள் வாகன நெருக்கடியில் சிக்கி தவிப்பது அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது.

காந்தி மார்க்கெட் கமான் வளைவில் இருந்து மலைக்கோட்டை பகுதிக்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ, கார்கள், சரக்கு வேன்கள் போன்ற வாகனங்கள் செல்ல எந்த கட்டுப்பாடும் கிடையாது.

ஆனால் மலைக்கோட்டை பகுதியில் இருந்து பெரிய கடைவீதி வழியாக காந்தி மார்க்கெட்டை நோக்கி வருவதற்கு கார், வேன் போன்ற 4 சக்கர வாகனங்களுக்கு மட்டும் இன்றி இருசக்கர வாகனங்களில் கூட செல்வதற்கு அனுமதி கிடையாது.

அதனால்தான் இது ஒரு வழிப்பாதையாகும். ஆங்கிலேயர் ஆட்சி காலம் தொட்டு நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் இருந்தே இந்த ஒரு வழிப்பாதை நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.

போலீசார் மெத்தனம்
ஆனால் தற்போது பெரிய கடைவீதி சாலை பெயரளவிற்குத்தான் ஒரு வழிப்பாதையாக உள்ளதே தவிர முழுக்க, முழுக்க இருவழிப்பாதையாக மாறிவிட்டது. ஒரு வழிப்பாதையை அமல்படுத்த வேண்டிய போலீசாரும் இதனை கண்டு கொள்வதே கிடையாது.

இதனால் காலை, மாலை நேரங்களிலும் ஏன்? இரவிலும் கூட பெரிய கடைவீதிக்கு பல்வேறு பொருட்களை வாங்குவதற்காக வரும் பொதுமக்கள் நெருக்கடியில் சிக்கி பல தொல்லைகளை அனுபவிக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு இருப்பதற்கு முழு காரணம் போலீசாரின் மெத்தனப்போக்கே ஆகும்.

அத்தனை பொருட்களும் ஒரே இடத்தில்
பெரிய கடை வீதியின் இரு பகுதியிலும் 25-க்கும் மேற்பட்ட தெருக்களும் அதனை சார்ந்துள்ள இன்னும் ஏராளமான தெருக்களும் உள்ளன. தங்கம், வெள்ளி, வைரம் ஆபரணங்களை விற்பனை செய்யும் நகை கடைகள் மட்டும் இன்றி மொத்த வியாபார மளிகை கடைகள் உள்பட சுமார் 2 ஆயிரம் கடைகள் உள்ளன.

அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்க வேண்டும் என விரும்புபவர்களின் ஆசை பெரிய கடைவீதிக்கு வந்தால் சில மணி நேரங்களில் நிறைவடைந்து விடும். ஆனால் இந்த பொருட்களை வாங்கி விட்டு செல்வதற்குள் போதும்... போதும் என்றாகி விடுகிறது. இதற்கு காரணம் முறையற்ற போக்குவரத்து விதிமுறைகள்தான்.

மேலும் பெரிய கடைவீதியில் சொர்ண பைரவர் கோவில், கைலாச நாதர் கோவில், பூக்குளம் அங்காள பரமேஸ்வரி கோவில், கன்னிகா பரமேஸ்வரி கோவில், வரதராஜ பெருமாள் கோவில், மூன்று பிள்ளையார் கோவில் ஆகிய பிரசித்தி பெற்ற கோவில்களும் உள்ளன. இந்த கோவில்களுக்கு வரும் பக்தர்களும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கிறார்கள்

போலீஸ் நடவடிக்கை இல்லை
பெரிய கடைவீதியின் பெரும்பகுதி கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்குள்ளும், மீதி பகுதி காந்தி மார்க்கெட் போலீஸ் நிலைய எல்லைக்குள்ளும் வருகின்றன. கோட்டை போலீஸ் நிலையத்தில் மட்டும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் உள்பட 54 போலீசார் உள்ளனர்.

இவர்களில் பெரும்பகுதி போலீசார் முன்பெல்லாம் பெரிய கடை வீதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில்தான் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். முக்கிய சாலை சந்திப்புகள், தெருக்களுக்குள் பிரியும் இடங்களில் போலீசார் நின்று கொண்டு மலைக்கோட்டை பகுதியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் யாராவது வந்தால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி இது ஒரு வழிப்பாதை இறங்கி தள்ளிக்கொண்டு செல்லுங்கள் அல்லது திரும்பி போய் விடுங்கள் என அறிவுரை கூறி அனுப்பி விடுவார்கள்.

திடீர்... திடீர் என ஏதாவது ஒரு இடத்தில் நின்று கொண்டு விதிமுறைகளை மீறி செல்லும் வாகன ஓட்டுனர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிப்பதும் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கும். பெரிய கடைவீதியின் நடுப்பகுதியில் போலீசார் இல்லை என்றாலும் காந்தி மார்க்கெட் கமான் வளைவு அருகில் நிற்கும் போலீசார் கண்ணில் தப்பி செல்ல முடியாது. அவர்கள் மடக்கி பிடித்து விடுவார்கள். போலீசாரின் இந்த நடவடிக்கை காரணமாக சைக்கிளில் கூட யாரும் செல்ல முடியாத நிலை இருந்து வந்தது.

போக்குவரத்து நெருக்கடி
ஆனால் இப்போதோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இரு சக்கர வாகனங்களே ஒரு வழிப்பாதை வழியாக செல்ல முடியாமல் இருந்த நிலை மாறி ஆட்டோ, கார்கள், சரக்கு வேன்கள் என எந்த வித பாகுபாடும் இன்றி அனைத்து விதமான வாகனங்களும் மலைக்கோட்டை பகுதியில் இருந்து காந்தி மார்க்கெட் நோக்கி சர்... சர்... என அணிவகுத்து செல்கின்றன. இதனை தடுத்து நிறுத்த எந்த ஒரு இடத்திலும் போலீசார் நிற்பதே இல்லை. இதனால் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அனைத்து வாகனங்களும் தங்கு தடையின்றி செல்கின்றன.

இப்படி செல்லும் வாகனங்கள் எதிரே மலைக்கோட்டை நோக்கி வரும் வாகனங்களுடன் மோதி அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்றன. மேலும் பெரிய வாகனங்கள் நேருக்கு நேர் வரும்போது அவை ஒன்றை ஒன்று கடந்து செல்ல முடியாமல் உரசிக்கொள்கின்றன. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இந்த நெருக்கடியில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சிக்கிகொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.

அறிவிப்பு பலகை
இந்த பிரச்சினையை தீர்க்க பெரிய கடை வீதி ஒரு வழிப்பாதை விதிமுறையை போலீசார் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். ஒரு வழிப்பாதை தொடங்கும் இடத்தில் இருந்து முடியும் இடம் வரை இது ஒருவழிப்பாதை, வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்ற வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டும். மேலும் போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் போலீசார் முக்கிய இடங்களில் நிறுத்தி ஒரு வழிப்பாதை விதிமுறையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

என்.எஸ்.பி. சாலையில் ஆட்டோக்களால் பிரச்சினை



திருச்சி நகரில் மக்கள் அதிக அளவில் கூடும் கடைவீதி என்றால் பெரிய கடைவீதியையும், என்.எஸ்.பி. சாலையையும் பிரித்து பார்க்க முடியாது. இவை ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புடன் இருப்பதால் பெரிய கடைவீதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி என்.எஸ்.பி சாலையிலும் அவ்வப்போது எதிரொலிக்கும்.

என்.எஸ்.பி. சாலையில் முன்பெல்லாம் ஆட்டோக்கள் செல்வதற்கு அனுமதி கிடையாது. ஆனால் தற்போது இந்த சாலையில் ஆட்டோக்கள் இயக்கப்படுவதால் கடைவீதிக்கு பொருட்கள் வாங்குவதற்கு வரும் பொதுமக்களுக்கு பல இன்னல்கள் ஏற்படுகிறது. பயணிகளை இறக்கி விடுவதுபோல் அப்படியே ஸ்டாண்டில் நிற்பது போல் நின்று விடுகிறார்கள். இதனால் கார்கள், இருசக்கர வாகனங்கள் செல்ல முடிவது இல்லை. இதன் காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இந்த சாலையின் இருபுறமும் தரைக்கடைகள் சரமாரியாக வைக்கப்பட்டு உள்ளன.

தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் மாநில அரசுகள், உள்ளாட்சி நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என உச்சநீதி மன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பை தங்களுக்கு சாதகமாக வைத்துக்கொண்டு தரைக்கடை வியாபாரிகள் தொடர்பான பல்வேறு அமைப்புகள் உரிமைகள் கோரி வருகின்றன. மக்கள் நடந்து கூட செல்வதற்கு வழி இல்லாமல் அமைக்கப்படும் தரைக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என எந்த சட்டத்திலும் கூறப்படவில்லை.

எனவே தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அவற்றை ஒழுங்குபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பெரிய கடைவீதியை போல் என்.எஸ்.பி சாலை போக்குவரத்து பிரச்சினைக்கு மாநகர போலீசாரும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து அவற்றை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

என்.எஸ்.பி சாலை, பெரிய கடைவீதிகளில் போக்குவரத்து நெருக்கடியினால் அதிகம் பாதிக்கப்படுவது திருச்சி மாநகர, மாவட்ட மக்கள் மட்டும் அல்ல. திருச்சிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகள், வெளிமாநில பயணிகள் மலைக்கோட்டையை பார்க்காமல் செல்வது இல்லை என்பதால் இந்த போக்குவரத்து நெருக்கடியில் அவர்களும் பல நேரங்களில் சிக்கி மன வேதனையுடன் தங்களது அனுபவங்களை பதிவு செய்து விட்டு செல்கிறார்கள் என்பதை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கண்காணிப்பு கேமரா’ பொருத்தி போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படுமா?
திருச்சி பெரிய கடைவீதி போக்குவரத்து நெருக்கடி மற்றும் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தடுக்க கமான் வளைவில் இருந்து பெரிய கடைவீதி முடிவடையும் மலைக்கோட்டை வரை முக்கிய இடங்களில் சி.சி.டி.வி.

எனப்படும் சுழலும் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் பொருத்த வேண்டும். கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை போலீசார் அதற்கென தனி கட்டுப்பாட்டு அறை உருவாக்கி கண்காணிக்க வேண்டும். இதனை நடைமுறைக்கு கொண்டு வந்தால் எந்த இடத்தில் வாகன ஓட்டுனர்கள் ஒருவழிப்பாதை விதிமுறைகளை மீறுகிறார்கள் என்பதை எளிதாக கண்டுபிடித்து அந்த இடத்திற்கு ரோந்து போலீசாரை அனுப்பி போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் உடனுக்குடன் தீர்க்கலாம்.

மேலும் இந்த சாலை கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது என்பதை அறிந்தாலே பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதற்கு தயங்குவார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் இதே போல் கண்காணிப்பு கேமரா பொருத்தி போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே முறையை திருச்சி பெரிய கடைவீதியிலும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கலாம்.


மேலும் பெரிய கடைவீதியில் தற்போது இருசக்கர வாகனங்களை நிறுத்துவதிலும் பெரிய அளவில் குளறுபடி ஏற்பட்டு உள்ளது. ஒரு மாதத்தில் 15 நாட்கள் இடதுபுறம் நிறுத்தினால் அடுத்த 15 நாட்கள் வலதுபுறத்தில் நிறுத்த வேண்டும் என போலீசார் அறிவித்து உள்ளனர். போலீசாரின் இந்த அறிவிப்புபடி எல்லா வாகனங்களும் நிறுத்தப்படுவது இல்லை.

பல கடைக்காரர்கள் தங்களது வாகனங்களை தங்களது வசதிக்கேற்ப நிறுத்திக்கொள்கிறார்கள். இதனால் சாலையின் இருபுறமும் நிறுத்தப்படும் வாகனங்களாலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனையும் ஒழுங்குபடுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
4841 - 4860 of 8561 Posts
Top